இரண்டு நாள்களுக்கு முன், என் வீட்டில் ஒரு கணினியில் உபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளத்தை நிறுவினேன். அந்தக் கணினி என் மகளுடையது. அதில் பழையகாலக் குறுவட்டுகள் பலவும் செயல்படவேண்டும் என்ற காரணத்தால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 98-ஐத் தாண்டி வேறு ஒன்றையும் நிறுவியதில்லை. ஆனால் வரவர என் மகளுக்கு அந்தக் குறுவட்டுகள்மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள், ஃபயர்ஃபாக்ஸ் உலாவி போன்றவை விண்டோஸ் 98-ஐப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன. எனவே வேறு வழியின்றி, புதிய இயக்குதளம் ஒன்றை நிறுவிவிடலாம் என்று முடிவுசெய்தேன்.
மைக்ரோசாஃப்ட் வழியே செல்லலாமா அல்லது லினக்ஸுக்குத் தாவலாமா? கணினியைப் பயன்படுத்தப்போவது நான் அல்ல. என் மகள்தான். அவளுக்கு வசதியானதாக இருக்கவேண்டும். ஒலி, ஒளி, திரைப்பட விசிடி/டிவிடி ஆகியவை சரியாக இயங்கவேண்டும். சரி, எதற்கும் உபுண்டுவை நிறுவிப் பார்த்து, சரியாக இருந்தால் விட்டுவைக்கலாம்; இல்லாவிட்டால் மைக்ரோசாஃப்ட் இயக்குதளம் ஒன்றை வாங்கிவிடலாம் என்று முடிவெடுத்தேன்.
1992 முதலேயே அவ்வப்போது கணினியில் லினக்ஸ் இயக்குதளங்களை நிறுவி, பயன்படுத்தி வந்துள்ளேன். ஸ்லாக்வேர், டெபியன், ரெட் ஹேட், மாண்ட்ரேக், ஃபெடோரா எனப் பலவற்றைப் பயன்படுத்தியுள்ளேன். அவை அனைத்திலும் எனக்கு ஏதேனும் குறைகள் தென்பட்டபடியே இருந்துவந்தன. ஆனால் உபுண்டு 9.10 அனைத்தையும் மாற்றிவிட்டது. இணையம் மூலமாகவே சுமார் 700 MB நிறுவுபடிமத்தை இறக்கிக்கொண்டேன். அதை குறுவட்டு ஒன்றில் எழுதி, கணினியில் நிறுவத்தொடங்கினேன். அதிக நேரம் எடுக்கவில்லை. மைக்ரோசாஃப்ட் போல வெட்டித்தனமான படங்காட்டுதல்கள் குறைவு.
இயக்குதளத்தை முழுவதுமாக நிறுவிமுடித்ததும், புதிய மென்பொருள் பொதிகளை இறக்கி, நிறுவுவது அத்தனை எளிதாக உள்ளது. முதலில் ஒலி சரியாக இயங்கியது. இசைக் குறுவட்டுகளைச் சரியாக இயக்க ஒரு பொதியைத் தேடி நிறுவினேன். நன்றாக வேலை செய்தது. விசிடி சரியாக இயங்கவில்லை. வி.எல்.சி பிளேயரை நிறுவியபின் ‘திருவிளையாடல்’ சினிமாப் படத்தைப் போட்டுப் பார்த்தேன். சரியாக வரவில்லை. கோடுகளாகவே தெரிந்தது. ஒலியும் தெளிவாக இல்லை. இதைமட்டும் பின்னர் கவனிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். ஃபயர்ஃபாக்ஸ் 3.5 இருந்தது. அதில் அடோபி ஃபிளாஷ் நிறுவவேண்டி இருந்தது. அதுவும் மிக எளிதாக நிறுவிக்கொண்டது. முன்னெல்லாம் தனியாக இறக்கி, ஷெல்லிலிருந்து சில காரியங்களைச் செய்யவேண்டும். அப்படியான தேவைகள் ஏதும் இன்றி உபுண்டுவின் ‘பொதி நிறுவி’ மிக அழகாக இதைக் கையாளுகிறது.
இதைத் ‘தமிழ்க் கணினி’யாக நான் நிறுவவில்லை. தமிழ் படிக்கமுடிந்தால் இப்போதைக்குப் போதும். அது முடிகிறது. ஆனால் கிரந்த எதிரியாக உள்ளது. ‘ஷ’ முன்னால் உள்ள எழுத்து ஒன்றின்மேல் ஏறி நின்றுகொண்டிருக்கிறது. அதைத் தவிர உபுண்டு உடன் வரும் தமிழ் எழுத்துரு அதிகப் பிரச்னை தரவில்லை. தமிழில் எழுதுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை இனிதான் கவனிக்கவேண்டும். இந்தக் காரணத்துக்காகவாவது என்.எச்.எம் ரைட்டர் மென்பொருளை, லினக்ஸ் மற்றும் உலாவியில் வேலை செய்யுமாறு மாற்றவேண்டியிருக்கும்:-)
ஈமாக்ஸ் 23-ஐ நிறுவினேன். சில ‘சி’ நிரலிகளை எழுதிப்பார்க்க வசதியாக இருக்கும். வெகு நாள்களுக்குப் பிறகு சில ‘சி’ புரோகிராம்களை எழுதி கம்பைல் செய்து, இயக்கிப் பார்த்தேன். கொஞ்சம் ஞாபகம் இருக்கத்தான் செய்கிறது. ஈமாக்ஸ் எடிட்டரில் நிறைய மாறுதல்கள் இருந்தாலும் அடிப்படைக் கட்டளைகள் மாறவில்லை.
எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் சிறுவர்களது கணினிக்கும் உபுண்டு 9.10 இயக்குதளத்தை சிபாரிசு செய்வேன். மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களை விட எளிமையாக, இயல்பாக வேலை செய்யும் வகையில், குறைந்த திறன் கொண்ட கணினிகளையும் இயக்கும் வகையில் உருவாகியுள்ளது உபுண்டு 9.10. வீடியோ சிடிக்களை இயக்குவதில் என்ன பிரச்னை என்பதை மட்டும் கொஞ்சம் ஆராயவேண்டி உள்ளது. அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.
சென்னையில் இருக்கும் யாருக்காவது உபுண்டு 9.10 வேண்டும் என்றால், நகல் எடுத்துத் தரத் தயாராக உள்ளேன்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
14 hours ago
உபுண்டுவைச் சிபாரிசு செய்ததன்மூலம், மைக்ரோசாஃப்ட்டின்மீது சரியான குண்டு போட்டுவிட்டீர்கள். எப்படியோ அமெரிக்க முதலீட்டிய ஏகாதிபத்தியம் ஒழிந்து பிற ஆதிக்கங்களுக்கு வழிவிட்டால் பலருக்கும் மகிழ்ச்சியே.
ReplyDeleteநான் "சபயான்" எனது கணினியில் partition செய்து நிறுவியுள்ளேன். ஆனால் பயன் படுத்தவில்லை மேலோட்டமாக பார்த்ததில் User Interface விஸ்டாவை விட நன்றாக இருப்பது போல தோன்றுகிறது
ReplyDelete//தமிழில் எழுதுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை இனிதான் கவனிக்கவேண்டும். இந்தக் காரணத்துக்காகவாவது என்.எச்.எம் ரைட்டர் மென்பொருளை, லினக்ஸ் மற்றும் உலாவியில் வேலை செய்யுமாறு மாற்றவேண்டியிருக்கும்:-)//
ReplyDeleteஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்ய ibus உள்ளது. system--> preference --> iBus
இதற்காக NHM ரைட்டரை லினக்ஸில் கொண்டு வராமல் விட்டு விடாதீர்கள்
வி எல் சி பிளேயரில் VCD ஓட ஏதோ Code ஐ போடனும் என்று ஞாபகம்...3 வருடத்துக்கு முயற்சித்தது.
ReplyDeleteநான் என்னுடைய லினக்ஸை 8.04 யில் இருந்து அப்படியே அப்கிரேட் பண்ணினேன்.
தமிழில் தட்டச்சு செய்ய SCIm இருக்கிறது.
Problem with Ubuntu is it is very difficult to uninstall.
ReplyDeleteTry Kubuntu also. It is basically the Ubuntu and on top of it provides the nice desktop version (the development team is the same, i guess). Almost everything is plug and play (iPod is an issue though). Both Ubuntu and Kubuntu releases are simultaneous.
ReplyDeleteI partitioned my laptop and installed it. Installation was a breeze.
After I started working on it, I missed the NHM writer there, so you got one more customer who is looking for the linux version of the writer :).
எனக்கு வேண்டும் உபுண்டு 9.10. தொடர்பு கொள்வது எப்படி?
ReplyDeleteஷிர்டி சாயிதாசன்: ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் அலுவலகம் வந்தால் ஒரு குறுவட்டைப் பெற்றுக்கொண்டு செல்லலாம். ஒருவர், இருவர் என்றால் என்னால் அஞ்சலில் அனுப்பமுடியும். அதற்குமேல் என்றால் அலுத்துவிடும்! என் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
ReplyDeletelink for seeing vcd
ReplyDeleteஉபுண்டு vlc ல் vcd
ஃபயர் ஃபாக்ஸ்-ல் மட்டும் தமிழில் தட்டச்ச்சு செய்ய தமிழ்விசை Addon-ஐப் பயன்படுத்தலாம். IBUS-ல் தமிழில் தட்டச்சு செய்ய போனடிக், தமிழ்99 என ஆறு உள்ளீடு முறைகள் உள்ளன. Language Support-ல் தமிழை (System | Administration | Language Support | Install/Remove Languages...) நிறுவிய பிறகு 'ஷ' எழுத்தைக் காண்பிப்பதில் உள்ள குறைபாடு நீங்கியதாக ஞாபகம்.
ReplyDeleteநான் உபுண்டுவில் விசிடி/டிவிடி-ஐப் பயன்படுத்த முயற்சிக்கும் போது "Cannot read from source" என error message வருவதால் பயன்படுத்த முடிவதில்லை.
மிகப் பழைய கம்ப்யூட்டர்களில் Xubuntu-ஐப் பயன்படுத்தலாம்.
>>எனக்கு வேண்டும் உபுண்டு 9.10. தொடர்பு கொள்வது எப்படி?
ReplyDeleteஉபுண்டு வலைதளத்தில் பதிவு செய்யுங்கள். நெதர்லாண்ட்ஸிலிருந்து சி டி இரண்டு வாரத்துக்குள் வீடு வந்து சேரும்
எளிமையாக இருக்கும் nhm writer -னை உபுண்டுவுண்டுக்கும் தயாரித்து அளிக்கவும்.
ReplyDeleteSCIM input method என்று தேடிப்பாருங்கள். தானாக முரசு, ரெமிங்க்டன் ஸ்டைல் தட்டச்சு முறைகள் கூடவே வரும். அது மட்டுமல்லாது, இது Synaptic லேயே கிடைத்துவிடும். 3rd party மென்பொருள் தேவையில்லை.
ReplyDeletehttp://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd
ReplyDeleteஎன்ற முகவரியில் இலவச உபுண்டு வட்டுகளை வேண்டலாம்.
நீங்கள் குறிப்பிட்ட ஷ கிரந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ReplyDeleteவிவரங்களுக்கு, TamilFOSS தளம் பார்க்கவும்.
நன்றி.
அன்பு பத்ரி, உபண்டு மற்றும் ஏனைய லினக்ஸ் OS-களுக்கு C+ போன்ற புரோகிராமிங் அறிவு சிறிதளவு தேவை என்பது உண்மையா? நான் லின்க்ஸ் வெர்சன் முயற்சித்த போது ஏனைய disk drive, internet connection போன்றவை இணைக்க முடியவில்லை. விண்டோஸ் போல இதனை தொழில்நுட்ப ஞானமில்லாதவர்கள் உபயோகபடுத்த இயலுமா?
ReplyDeleteதமிழில் எழுதுவது / விசைப்பலகை இயக்கிகள் உபுண்டு 9. 10 இனைப்பொறுத்தவரை மிக மிக இலகுவானது. அநேகமான தமிழ் விசைப்பலகை இயக்கிகள் முன்னிருப்பாகவே கிடைக்கிறது. system -> preferences -> iBus preferences இற்கு போனால் போதுமானது.
ReplyDeleteNHM Writer இன் தேவை வின்டோசில் அதிகம் லினக்சில் மிகமிகக்குறைவு. ஒருவேளை NHM Writer இன் கட்டற்ற பதிப்பை லினக்சுக்கு உருவாக்கினால், நூறு பூக்கள் மலர வேண்டிய ஆரோக்கியமான காரணத்தால் அதற்கு என் ஆதரவு.
VLC Player அநேகமாக உங்கள் அத்தனை பேரின் வீடியோ தேவைகளையும் பூர்த்தி செய்துவிடும். terminal ஐ திறந்து பின்வரும் இரு ஆணைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வழங்குங்கள். எல்லாப்பிரச்சினையும் தீரும்.
sudo apt-get update
sudo apt-get install vlc
>எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் சிறுவர்களது கணினிக்கும் உபுண்டு 9.10 இயக்குதளத்தை சிபாரிசு செய்வேன்.
ReplyDeleteஆஹா, ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை?
>மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களை விட எளிமையாக, இயல்பாக வேலை செய்யும் வகையில், குறைந்த திறன் கொண்ட கணினிகளையும் இயக்கும் வகையில் உருவாகியுள்ளது உபுண்டு 9.10.
“இயக்கும் வகையில்” என்பது சரிதான். ஆனால் பயன்பாட்டுக்கு அது போதுமா? இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே...
>வீடியோ சிடிக்களை இயக்குவதில் என்ன பிரச்னை என்பதை மட்டும் கொஞ்சம் ஆராயவேண்டி உள்ளது. அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.
Codec. free software என்பதால் உபுண்டுவுடன் சம்பந்தப்பட்ட codec வருவதில்லை. அதனைத் தனியாக நிறுவமுடியும் என்றாலும், free software விரதம் இருப்பதால் உபுண்டுவை நேரடியாகப் பயன்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன. “ஒரே ஒரு முறை நிறுவினால் போதும்” என்ற நோக்கில் உபுண்டுவை அணுகுவது சரிதான் என்றாலும், ஒரே ஒரு முறை நிறுவுவது எல்லோருக்கும் எளிதானதல்ல. மேலும் ஒவ்வொருவருக்கும் இதுபோல் ஒவ்வொரு மென்பொருள் தினசரிப்பயன்பாட்டிற்குத் தேவைப்படும். ஒவ்வொன்றையும் தேடித்தேடி நிறுவிக்கொண்டிருப்பது R&Dக்கு நல்ல தீனி என்றாலும் நிச்சயம் நேர விரயம்.
எனவே, எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், உபுண்டு அடிப்படையில் அமைந்த ஏதாவதொரு பிரத்யேகமான லினக்ஸ்தான் சரியான தீர்வு.
உதாரணமாக, என்னுடைய அரத்தப்பழசான ஒரு கணினியில் (ஹார்ட்டிஸ்க் கிடையாது, சிடி ட்ரைவ் கிடையாது) நான் linux mint பயன்படுத்துகிறேன். ஜாவா இயக்க முறைமை, flash, mp3 codec/players, ஆடியோ/வீடியோ போன்ற அத்யாவசியத்தேவைகள் எல்லாம் உள்ளடக்கிய ஒரு ரெடிமேட் குறுவட்டு இது. thumbdriveக்குள் அடங்கும் (இதர லினக்சுகளைப்போலவே, live bootஉம் சாத்தியம்). NHM online tools எல்லாம் அப்படியே பயன்படுத்தலாம். என் அம்மா கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டது முழுக்க முழுக்க இதில்தான்.
இன்னும் நிறையத் தட்டச்சிட முடியும் என்றாலும், பொதுவான வலைப்பதிவில் பொதுவான மறுமொழியிடுவதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்கிற அதே நேரத்தில் விண்டோஸ் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போதே லினக்ஸ் பற்றிப் புகழ்ந்து இடும் மறுமொழி அதே பின்னூட்டத்தாக்கத்துடனே இயைந்து செல்லும் நோக்கில் நீண்டுகொண்டே போவதாக என் கண் முன்னே விரிந்து ஒரு காட்சி உருவாகிக்கொண்டிருக்கின்றது என்பதால் இத்துடன் நிறுத்திவிட முடிவு செய்வதே இப்பொழுது நான் உங்களுக்குச் செய்யும் பெரிய உபகாரமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்பதை நீங்கள் பாராட்டவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
firefox இல் எழுத்துருவை சூரியன் எழுத்துருவிற்கு மாற்றினால் இந்த சிக்கல் தீர்கிறது. எழுத்துருவும் அழகாக இருப்பதாகத் தெரிகிறது..
ReplyDeletehttp://img.photobucket.com/albums/v739/sajee/Screenshot-24.png
//இசைக் குறுவட்டுகளைச் சரியாக இயக்க ஒரு பொதியைத் தேடி நிறுவினேன்//
ReplyDeleteநிரல் தந்தீர்கள் என்றால் எங்களுக்கு தேடும் வேலை குறையும் அல்லவா
ungalaudaya pazaya system ram evvalu ubuntu ku 256mb ram minimum avasiyam illaya
ReplyDeleteநீங்கள் NHM Writer - ஐ லினக்ஸ்க்கும் மேக் கம்ப்யூட்டருக்கும் உருவாக்கலாம்........
ReplyDeleteTo Install ubuntu easily download Wubi Ubuntu Installer. It will install automatically when you run the software. If you donot like Ubuntu just uninstall Wubi as any other software. Whenever the computer is started it will give the option of running with Windows/xp or Ubuntu.
ReplyDelete//புருனோ Bruno said...
ReplyDelete//இசைக் குறுவட்டுகளைச் சரியாக இயக்க ஒரு பொதியைத் தேடி நிறுவினேன்//
நிரல் தந்தீர்கள் என்றால் எங்களுக்கு தேடும் வேலை குறையும் அல்லவா
//
http://www.videolan.org/vlc/