கடந்த சில நூற்றாண்டுகளில், சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. முன்னர் பற்றாக்குறை இருந்தாலும், அதுவும் பரவலாக இருந்தது. ஆனால் இப்போது பற்றாக்குறை ஒரு சிலருக்கும், வசதி வாய்ப்புகள் ஒரு சிலருக்கும் என்று ஆகியுள்ளது. இதனால் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு, இரு வெவ்வேறு மனித species-இனம் உருவாகக்கூடுமா என்பதைப் பற்றிப் பேசுகிறது மேலே குறிப்பிட்ட செய்தி.
அது எப்படி நிகழும்? உணவுப் பற்றாக்குறை உள்ள ஒரு சமூக அமைப்பை எடுத்துக்கொள்வோம். அந்த நிலையில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் இறந்துவிடும். ஆனால் ஏதோ மரபணு மாற்றம் (genetic variation) உள்ள ஒருசில குழந்தைகள் மட்டும் கிடைக்கும் மிகக்குறைந்த உணவை உட்கொண்டு உயிர்வாழும் திறன் படைத்ததாக இருக்கும். குறைந்த உணவில் காலம் தள்ள ஏதுவாக, உடலில் வளங்கள் அதிகம் தேவைப்படும் சில பாகங்களை அந்த மாறிய மரபணுக்கள் குறைவாக உருவாக்கவேண்டியிருக்கும். அப்படிச் செய்வதன்மூலம்தான் அந்த உயிர் வளர்ந்து நீடிக்கமுடியும். அதிக வளங்கள் தேவைப்படும் பகுதி ஒன்று மூளை. எனவே மூளையைச் சற்றே சிறிதாக்க அந்த மரபணு முற்படலாம். அத்துடன் எலும்புக்கூட்டைச் சிறிதாக்க. இதனால் குறைந்த உணவைக் கொண்டு உடலைப் பராமரிக்கமுடியும். ஆனால் உடல் சிறியதாக, மூளை சிறியதாக இருக்க நேரிடும்.
இப்படியே பல தலைமுறைகள் - 10,000 முதல் 20,000 ஆண்டுகள் இதே நிலை தொடரத் தொடர, உணவு குறைவாகக் கிடைக்கும் இந்தச் சமூகம் உணவு அதிகம் கிடைக்கும் குழுவிலிருந்து நல்ல உடல் வேறுபாட்டைக் காண்பிக்கக் கூடும். மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் (100,000, 500,000) தாண்டத் தாண்ட, அதிகபட்ச மரபணு மாற்றங்களுடன் இரு வெவ்வேறு மனித இனங்கள் (homo
ஒரே மனித இனமாக, 99.9% மரபணுக்கள் ஒத்தவையாக இருக்கும் நிலையிலேயே, மனித இனக்குழுக்கள் ஒருவரை ஒருவர் நசுக்குவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமூக அமைப்பிலேயே இப்படி உள்ளது என்றால், மரபணு ரீதியில் இரு ஸ்பீஷிஸ் என்றால் தொடர்ச்சியான போர் நடக்கும். ஒருவரை மற்றவர் அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
விரைவில் இந்நிலை மாறவேண்டும் என்றால் பசிப் பிணியை உடனடியாகப் போக்கவேண்டும்.
மனிதர்களுக்கு எல்லாமே கால தாமதமாகத்தான் புரிகிறது. எதிர் காலத்தில் நிகழப் போகும் மிகப்பெரிய மனித அழிவுக்கு இயற்கை காரணமாக இருக்கப்போவதில்லை. மனிதனே காரணமாவான். நம் சந்ததியினருக்கு நாம் பயங்கரங்களை விதைத்து விட்டு போகிறோம்.
ReplyDeletePlausible theory, but the genetic drift of such a population will face stiff challenge from the fact that reproductive fitness is unfavourably influenced by under-nutrition and will require multiple other adaptations of the genome to unwire reproduction itself from nutritional cues.
ReplyDelete--Ravikumar (Badri.. we previously met in Newcastle, UK!)
vilayanur ramachandran speech ? waiting
ReplyDelete