இன்று அதிகாலை கடற்கரைக்குச் சென்று நடந்துவிட்டுத் திரும்பினேன். நான் செல்லும்போது, சுமார் ஐந்து மணி அளவில், சாலை அமைதியாகவே இருந்தது. தெருவில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். சுமார் 7 மணிக்கு நான் திரும்பி வந்தபோது தெருவில் கூட்டம். காவலர்கள். சிலைகள் இருந்த இடத்தில் ஒன்றும் காணோம்.
உடனே அருகில் இருந்த மக்களிடம் பேசினேன்.
காவலர்களும் மாநகராட்சி ஊழியர்களும் அதிகாலை வந்து தெருவில் இருப்பவர்களை அடித்து விரட்டிவிட்டு, சிலைகளைப் பெயர்த்து வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். சிலைகளை ஒன்றும் செய்யமாட்டோம் என்று உறுதி கொடுக்கப்பட்டது என்றும் ஆனாலும் இன்று காலை சிலைகள் பெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மக்கள் முதலமைச்சர் வீட்டுக்குப் போய் கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் அதிகம் பேசினால், அவர்களும் காவலர்களால் தூக்கி எடுத்துச் செல்லப்படுவர் என்றதும் மக்கள் திரும்பி வந்துவிட்டனர். மீதியை அவர்களிடமிருந்தே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
சாலை விஸ்தரிப்புக்காக சுவாமியை நடைபாதை இல்லாத இடத்தில் வைக்கலாமே! இதை நாமே செய்து விட்டால் அவர்கள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது இல்லையா!
ReplyDeleteசாலை ஓர சாமியை மட்டுமல்ல, சாலையில் எங்கும் விரவி கிடக்கும் சாதி மற்றும் அரசியல் தலைவர்கள் சிலைகளையும் தூக்கினால் அது வரவேற்க கூடியதாக இருக்கும்.
ReplyDeleteநன்றி
ReplyDeleteஇன்னும் போனால் "நான் தான் இறைவன்; என்னைத் தான் அனைவரும் வணங்க வேண்டும்" என்று சட்டமன்றத்தில் ஒருமித்த சட்டம் கொண்டு வருவார்கள் போலிருக்கிறதே.
ReplyDelete"ஹிரன்யாய நமஹ" என்று ஒரு அசுரன் அனைத்து ரிஷிகளையும் இம்ஸித்த கதை நினைவுக்கு வருகிறது.