Monday, April 26, 2010

பொன் முட்டை இடும் வாத்து - 0

கிரிக்கெட் உரிமங்கள் பற்றி மிக விரிவாக என் ஆங்கில வலைப்பதிவில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை அதிகம் யாரும் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். இப்போது ஐ.பி.எல் ஊழல் மிகப் பெரிதாகப் பேசப்படுவதாலும் இன்று மதியம் போட்ட தூக்கம் காரணமாக இரவில் தூக்கம் வரவில்லை என்பதாலும் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளேன். (ஏற்கெனவே ஆரம்பித்த தொடர்கள் எல்லாம் என்ன கிழித்தன என்று கேட்கிறீர்களா? இப்போது எழுதிவைக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்ற நிலை. எனவே, நிறைய தொடரும்... போட்டு வரிசையாக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவிடப்போகிறேன்.)

***

விளையாட்டுகளைப் பணமாக மாற்றும் வித்தையை பலர் புரிந்திருக்கின்றனர். சமீபத்திய உதாரணம் லலித் மோதியும் ஐ.பி.எல்லும். ஆனால் தேன் எடுப்பவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்ற திருவாக்கின்படி மோதி கொஞ்சம் அதிகமாகவே நக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆதியோடு அந்தமாக கிரிக்கெட்டில் உள்ள பணத்தைப் புரிந்துகொள்ள சில முக்கியஸ்தர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். மார்க் மெக்கார்மாக் என்ற அமெரிக்கர். மைக்கல் வாட் என்ற நியூசிலாந்துக்காரர். மார்க் மாஸ்கரானஸ் என்ற இந்தியர். ரூப்பர்ட் மர்டாக், கெர்ரி பேக்கர், சுபாஷ் சந்திரா, ஹரீஷ் தவானி, ஷேமஸ் ஓபிரையன், சித்தார்த் ரே போன்றோர். ஜக்மோகன் தால்மியா, இந்தர்சிங் பிந்த்ரா, ஏ.சி.முத்தையா, சரத் பவார், என்.சீனிவாசன், லலித் மோதி போன்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தினர். சில ஐசிசி ஆள்கள், வெவ்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள், இந்தியாவின் கிரிக்கெட் மார்க்கெட்டிங்கில் விளையாடிய சிறிய, பெரிய தலைகள்...

பணம் என்றாலே மோசம், வியாபாரம் என்றாலே தில்லுமுல்லு, ஊழல் என்பதைத் தாண்டி, ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் என்பதில் தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

இந்த அறிமுகத்துடன்,

தொடரும்...

4 comments:

 1. என்ன சார், ஆரம்பிச்சதும் முடிச்சிட்டீங்க. சீக்கிரம் வந்து விரிவா எழுதுங்க.

  ReplyDelete
 2. "ஆங்கில வலைப்பதிவில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை அதிகம் யாரும் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்"

  சரியாய் சொன்னீங்க... ஆங்கில கட்டுரைகளை நெட்டில் படிப்பது போன்ற கொடுமை உலகில் எதுவும் இல்லை.... எங்களுக்கு ஏற்றார் போல தமிழில் எழுதுங்கள் ..படிக்க காத்து இருக்கிறோம்


  "எனவே, நிறைய தொடரும்... போட்டு வரிசையாக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவிடப்போகிறேன்.)"
  நல்ல முடிவு

  "ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் என்பதில் தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன."
  எழுதுங்கள்,,,, தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம்...

  ReplyDelete
 3. Sir,
  Please publicise the fact that, BCCI is not a national sports body.
  India does not have an apex body for cricket.

  BCCI is just a private society(equal to "mana magizh manram" ) that is registered in chennai.

  Bcci themselves, has accepted this fact.

  Reference : http://www.expressindia.com/news/fullstory.php?newsid=36740

  So, it follows that, the concessional lease fee for grounds, electricity,income tax rebates are all against law and against national interest.

  Sir, please publicise these.

  Thanks,
  venkat

  ReplyDelete
 4. I have been watching Test cricket from the days of Pankaj Roy and Vinoo Mankad ( u remember the historic first wicket partnership at chennai? )
  Far from being a pure technical game, the present day cricket (T20 in particular) has descended into hitherto unknown low levels and presently more a mind game rather than depending on the technical skills. In my days ( 1950s and 1960s ) the present day hits were called agricultural shots. I wonder whether Bradman or Boycott would have played such shots as do the present players.
  The game of cricket has landed itself unknowingly into the hands of speculators. And that is not good for the game of cricket.

  ReplyDelete