Friday, April 02, 2010

எழுத்தாளர்கள், மொழிமாற்றுனர்கள் தேவை

NHM நிறுவனத்தின் பல்வேறு இம்பிரிண்டுகளுக்கு கீழ்க்கண்ட திறமை உள்ளவர்கள் (பகுதி நேரம் - ஃப்ரீலான்ஸ்)தேவைப்படுகிறார்கள்:

1. ஆங்கிலத்தில் non-fiction புத்தகங்கள் எழுதவிரும்புபவர்கள்
2. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்ற விரும்புபவர்கள்
3. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்ற விரும்புபவர்கள்

மொழிமாற்றல் என்றால் புத்தகங்களை டிரான்ஸ்லேட் செய்தல். பக்கத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று professional மொழிமாற்றம் வேலை செய்பவர்களுக்குக் கட்டுப்படியாகாது! நிச்சயம் சன்மானம் உண்டு. அது ராயல்டியாகவோ அல்லது ஒரு வேலைக்கு இவ்வளவு என்பதாகவோ இருக்கலாம்.

உடனடியாகத் தொடர்புகொள்ளவும். எனக்கு அஞ்சல் அனுப்பாமல் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்: vaidehi@nhm.in

.

18 comments:

  1. பத்ரி, ஃபரீ லான்ஸா அல்லது முழுநேர வேலையா? அதை மட்டும் கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.

    ReplyDelete
  2. //பக்கத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று professional மொழிமாற்றம் வேலை செய்பவர்களுக்குக் கட்டுப்படியாகாது! நிச்சயம் சன்மானம் உண்டு.//

    பரிவுத்தொகை வழங்கப்படும் என்பதைச் சற்று கௌரவமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். வாழ்க!

    ReplyDelete
  3. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் திருச்சி அருகில் உள்ளார். அந்த காலத்து PUC. நன்றாக இங்கிலீஷ் தெரியும். நிறைய படிப்பார். ஆனால் அங்கே இருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கே இருந்து கொண்டு எதாவது tranlsation work செய்ய முடியுமா ?

    ReplyDelete
  4. மின்னஞ்சல் அனுப்பினேன் ஏதும் பதிலில்லை.

    ReplyDelete
  5. சுப.தமிழினியன்: என்ன என்று பார்க்கச் சொல்கிறேன்.

    ReplyDelete
  6. http://twitter.com/bseshadri/status/18489831021 உங்களின் இந்த ட்விட்டர் பார்த்தேன். ஏற்கனவே இரு முறை மின்னஞ்சல் அனுப்பியும் ஏதும் பலணில்லை, அந்த இரு புத்தகங்களின் பக்கங்களின் எண்ணிக்கை மட்டுமே என்னை மலைக்கச் செய்கிறது, அதனால் தயங்குகிறேன், என்னால் முடியுமா என்று முயன்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. நான் குர்சரன் தாஸின் விசிறி! அவர் புத்தகங்களை மொழி மாற்ற கர்சீப் போட்டு வச்சுக்கிறேன். இப்ப பன்ற புத்தகம் முடியட்டும்!

    ReplyDelete
  8. பத்ரி,

    இன்றுதான் இதைப் படித்தேன். மின்னஞ்சல் செய்திருக்கிறேன், பார்க்கலாம்.

    ReplyDelete
  9. I would like to translate the book World Leaders assassinations. Please read my blog - I wrote few with hurry few months back. Please let me know - can I write for you? There is a book in English called World Assassinations which inspired this series.

    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_31.html
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_8417.html
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_26.html
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/i.html
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_25.html
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/08/blog-post_04.html
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/08/blog-post_02.html

    ReplyDelete
  10. Badri, We are acquainted with each other during the intercept days. We had some design discussions on creating an adserver.

    I want to introduce a friend to you who is based out of chennai. He might be a good person to translate. Want to connect you with him you. Can you tell me your mail id

    ReplyDelete
  11. Dear Murali,

    My email ID is badri@nhm.in

    ReplyDelete
  12. அருமையான வாய்ப்பு. நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. அருமையான முயற்சி பத்ரி...வாழ்த்துக்கள் !
    எனது நீண்ட நாள் கனவு - பெயின்மானின் அருமையான இயற்பியல் புத்தகம்'lectrues in physics' தமிழில் தமிழ் குழந்தைகளுக்கு பள்ளியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது . மொழிபெயர்க்க உதவ தயார்

    ReplyDelete
  14. "Indira" by Katherine Frank

    தமிழ் ஆக்கம் கிடைக்குமா?

    ReplyDelete
  15. அன்புள்ள பத்ரி அவர்களுக்கு,
    பியூ சின்னப்பா பற்றி கிழக்கில் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லையென நினைக்கிறேன். என்னுடைய விருப்பமும் அதுவே. பாகவதருக்கு போட்டிருக்கிறீர்கள். அவரைப்பற்றிய செய்திகள் கொஞ்சம் சேகரித்து வைத்திருக்கிறேன். மேல்விவரங்கள் ஏதும் தெரிவித்தீர்களானால் எழுத எளிதாக இருக்கும். என் இமெயில்: kuppa.ashok@gmail.com

    மீண்டும் பேசும்வோம்.
    முன்நன்றிகளுடன்
    கே.ஜே.அசோக்குமார்.

    ReplyDelete
  16. அன்பு பத்ரிக்கு,
    நல்ல முயற்சி.தொடருங்கள்.email முலம் தொடர்பு கொள்கிறேன்.
    nagarajan

    ReplyDelete
  17. hello sir,
    sorry for posting this message here. but i want to share with u something. your contribution through NHM Writer To write in various Indian languages is very high. i have a doupt sir. is it work in android model tablet PC. Because govt will provide Tablet PC for the students in subsidised rate. so shall we use your NHM Writer in this PC? if not please try to modify that software to use in android Tablet PC also.

    Yors Truely
    Raj

    ReplyDelete
  18. In 2007 five thamil publication printed same tehalka report.You only printed positive book on modiji ! i bought Modi's Gujarat book in Kizhakku publication during Chennai Book Fair .Congrats ! thanks !

    ct.ramkumar

    ReplyDelete