Monday, April 19, 2010

பிரபாகரனின் தாய், நாடுகடத்தப்பட்டது

சென்ற வாரம் விடுதலைப் புலிகள் தலைவர் (மறைந்த) பிரபாகரனின் தாய், 81 வயதான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே மடக்கி மீண்டும் மலேசியா அனுப்பிய செய்கை வருந்தத்தக்கது, கடுமையாகக் கண்டிக்கவேண்டியது.

ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம்தான் குடியேறல் துறைக்குப் பொறுப்பு. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் பார்வதிக்கு விசா வழங்கியுள்ளது. அது எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின்கீழ் வருகிறது. நாட்டுக்கு உள்ளே வர அனுமதியற்றோர் பட்டியலில் பார்வதியின் பெயர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதுவே முதல் அபத்தம். அந்தப் பட்டியல் பற்றித் தெரியாமல் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விசா வழங்கியது இரண்டாவது அபத்தம். தமிழக அரசின் வேண்டுகோள் காரணமாகவே (எந்த அரசு? ஜெயலலிதா தலைமையிலானதா, கருணாநிதி தலைமையிலானதா?) உள்துறை அமைச்சகம் பார்வதியின் பெயரையும் அவரது கணவர் (மறைந்த) வேலுப்பிள்ளையின் பெயரையும் ‘எச்சரிக்கைப் பட்டியலில்’ சேர்த்தது என்கிறார்கள். இதையும் ஆராயவேண்டும்.

சிதம்பரம் கட்டாயம் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும். காங்கிரஸ் அரசும் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும். திமுக இதனைப் பிரச்னையாக எழுப்பாவிட்டால் கருணாநிதியும் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

மனிதாபிமானமற்ற செயல் இது.

11 comments:

  1. எங்கள் வீட்டு பாத்ரூமில் வைத்திருந்த சோப் கவர் எங்கோ பறந்துபோய் விட்டது. இதற்கும் நிச்சயம் திமுக அரசு பதில்சொல்லியே ஆகவேண்டும்.

    ReplyDelete
  2. wat absolute rubbish? why shd she come all the way to tn when she cld hv hopped into s'pore?

    r is tat particular treatment available only in tn?

    she ws not exactly stranded in no-man's land. even if yes, then red cross vl rescue her.

    u b more indian first, than a fanatic tamil, ok?

    india is not responsibl fr sri lankans, or paks or any other country citizens.

    ReplyDelete
  3. நிச்சயமாகவே கண்டிக்கப்பட வேண்டிய செயல். மனிதாபிமானமற்ற மடையர்களை தலைவர்களாகக் கொண்டது தமிழகத்தின் சாபக்கேடு

    ReplyDelete
  4. அனானி,

    இதைக் கண்டிப்பதற்கு இந்தியனாக இருக்க வேண்டியதில்லை. பெரிய கருணை உள்ளமும் தேவையில்லை. சாதாரண மனிதனாக இருந்தால் போதும்.

    //u b more indian first, than a fanatic tamil, ok?//

    அதே நேரத்தில், இந்தியனாக இருந்தால் ஒரு வயதான பெண்மணியை சிகிச்சைக்காக இந்த நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் நிச்சயமாக மடையர்களாகத்தான் இருக்க முடியும். அது அரசாங்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி! அனானியாக இருந்தாலும் சரி!!


    மேலும், ஒரு சில மடையர்கள் எடுக்கும் அபத்தமான முடிவிற்கு ஒட்டு மொத்த இந்தியாவின் மேல் அதிருப்தி கொள்வதும் அதை விட மடத்தனமானது.

    ReplyDelete
  5. பத்ரி ,திருமா ஆ.வியில் ஜெ தான் 2002 ஆம் ஆண்டு பிரபாகரனின் பெற்றோர்கள் வர தடை செய்ய கோரியதாக குற்றம் சாட்டியுள்ளார்

    ReplyDelete
  6. தலைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபாகரனின் தாய், நாடு கடத்தப்பட்டாரா அல்லது பிரபாகரனின் தாய்நாடே கடத்தப்பட்டுவிட்டதா?

    ReplyDelete
  7. முதலில் குழப்பமான தலைப்பை சரி செய்யவும் சார்.

    இந்த விசயத்தில் நீங்கள் தான் உருப்படியான கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள்.
    மத்தியில் தி.மு.க கை ஓங்கியிருக்கும் போதே இப்படி சொதப்புபவர்களை நம்பியா இவ்வளவு நாள் தனித் தமிழ் இயக்கத்தினர் வேலை செய்தனர் ?

    இதற்கு அவர்கள் தாமாகவே போய் சிங்களவர்களிடம் கேட்டு ஆப்படித்துக்கொண்டிருக்கலாம்.

    ReplyDelete
  8. Badri shesadri yenna kavalai yenru theriyavillai..

    itharu yengal ooril oru pazhamoli ullathu..

    Aadu nanaigirathe yenru oonai varutha pattutham...

    ReplyDelete
  9. மருதன் உங்கள் பார்வை அற்புதம்?

    ReplyDelete
  10. //
    Badri shesadri yenna kavalai yenru theriyavillai..

    itharu yengal ooril oru pazhamoli ullathu..

    Aadu nanaigirathe yenru oonai varutha pattutham...
    //

    கருணநிதி தானே அந்த O-நாய் ?

    ReplyDelete
  11. தயவு செய்து (மறைந்த) பிரபாகரனின் ) இதை திருத்தவும் தலைவன் வருவான் அவன் தமிழனுக்கு விடிவுவராமல் மறைய மாடன்.

    ReplyDelete