மத்திய ரசாயனத் துறை அமைச்சர் (அதாங்க, அழகிரி) அவர்களது புதல்வர் தயாநிதி அழகிரி சென்னையில் கேபிள் வழியாக தொலைக்காட்சி சிக்னல்களைத் தரும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தமிழ்ப் புத்தாண்டு அன்று கோலாகலமாகக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம்.
இதுநாள்வரையில் சென்னையில் தான் வைத்ததுதான் சட்டம் என்று கோலோச்சி வந்த எஸ்.சி.வி-க்கு கொஞ்சம் அல்லு பெயரும் என்பது பொதுமக்களுக்கு நல்ல செய்திதான். கருணாநிதி - மாறன்கள் பனிப்போர் சமயத்தில் அரசு கேபிள் என்றொரு கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு அது இப்போது உடைப்பில் போடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஹாத்வே போன்றவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விரட்டப்பட்டனர். பின் பனிப்போர் காலத்தில் மீண்டும் உள்ளே நுழைய முயற்சி செய்த ஹாத்வே மீண்டும் ஓடிப்போனது.
இப்போது போட்டி குடும்பத்தின் உள்ளிருந்தே வந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது. அடாவடிக்கு பதில், அடாவடியாகவே இருக்கும்.
சினிமாத்துறையில் தயாநிதி அழகிரி, மாறன் பிரதர்ஸ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தத்தம் எல்லைகளை வரையறுத்துக்கொண்டிருப்பதுபோல, கேபிள் டிவி பிசினஸிலும் அப்படியே ஆகுக, ததாஸ்து! விரைவில் உதயநிதி ஸ்டாலின் பூஜை போட்டு ஆரம்பிக்க இருக்கும் கேபிள் டிவி விநியோக நிறுவனத்தை வாழ்த்தி வணங்கி மகிழும் கோபாலபுரம் பத்ரி சேஷாத்ரி...
Subscribe to:
Post Comments (Atom)
Ippo ellam "Murpagal seyyin" romba speed :)
ReplyDeleteஅல்லு பெயரும் // இந்த பதப்பிரயோகத்தை ரொம்ப ரசித்தேன் பத்ரி!
ReplyDelete//தமிழ்ப் புத்தாண்டு அன்று கோலாகலமாகக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம்//
ReplyDeleteநான் முடிவெடுத்துட்டா, அதை என் குடும்பத்தில் யாருமே கேட்க மாட்டங்க
- Anand
கோபாலபுரம் பத்ரி சேஷாத்ரி,
ReplyDeleteதொடர்ந்து கோபாலபுரத்துல இருக்கோணுமா வேணாமா ?
நீங்கள் சொன்னது போல இவர்களுக்குள் விரைவில் எல்லை அமைத்துக் கொள்வது உறுதி..
ReplyDeleteபத்ரி
ReplyDeleteசமீப போஸ்ட்களில் (IPL/CABLE TV) ‘ஜாக்கிசான் தமிழ்/சுட்டி டிவி தமிழ் அதிகம் உபயோகிக்கிறீர்களே - என்ன ஆச்சு?
எல்லைகளை கடந்தவர்களுக்கு குறிப்பிட்ட எல்லையா? இதென்ன சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பு?
ReplyDeleteவேடிக்கை காட்டிக்கொண்டுருப்பவர்கள் காட்டுக்குள் வேங்கையின் வருகை.
தொடரும் அல்லது உருவாகும் மற்றொருமொரு குடும்ப செயற்குழு.
முடிவை விரைவில் வெண்திரையில் பார்க்கலாம்?