Tuesday, May 03, 2011

ஒபாமா - ஒசாமா

சற்றும் எதிர்பார்த்திராத நிகழ்வுகளில் இது ஒன்று. கிட்டத்தட்ட உலகமே அவரை மறந்துவிட்ட நிலையில், அமெரிக்க சிறப்புப்படை ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் தேடிக் கண்டுபிடித்து, சுட்டுக் கொன்று, பழிதீர்த்துள்ளனர்.

செய்தித்தாள்களில் பல பக்கங்கள், தொலைக்காட்சிகளில் பல மணி நேரங்கள் அலசப்பட்ட ஒரு விஷயம். நேற்றே இணையத்தில் முழுவதுமாகப் படித்துவிட்டதால் இன்று காலை செய்தித்தாள்களைப் பார்க்கும்போது ஏன் இத்தனை லேட் என்றுதான் தோன்றியது.

எனக்குத் தோன்றும் சில கருத்துகள்:

1. அல் காயிதாவுக்கு இது பலத்த அடி. ஒசாமாதான் அதன் மிகவும் அறியப்பட்ட முகம். அவருடைய சொந்தப் பணம், அவரை நோக்கி உலகெங்கிலிமிருந்து குவியும் பணம் இப்போது குறையத்தொடங்கும். மற்றொரு கவர்ச்சிகரமான, பணக்கார ஆசாமி மீண்டும் அல் காயிதா போன்ற கொடுந்தீவிரவாதக் குழுவுக்குத் தலைமை தாங்குவாரா என்பது சந்தேகமே. அய்மன் அல் ஸவாஹிரி இருக்கும்வரை பயங்கரமான மூளைவீச்சுடன் சில அதியற்புதத் தாக்குதல்கள் நிகழலாம். அதன்பின் அதிலும் சுணக்கங்கள் ஏற்படலாம்.

2. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்கள் தெஹ்ரீக்-இ-தாலிபன் போன்றவை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு (மட்டும்) தலைவலி கொடுத்துக்கொண்டிருக்கும். ஒசாமா இருந்தவரையாவது பாகிஸ்தானுக்கு அமெரிக்காவிடமிருந்து பணமாகவும் பிற வழியிலும் உதவிகள் வந்துகொண்டிருந்தன. இது பெருமளவு குறையக்கூடும்.

3. ஆஃப்கனிஸ்தானில் பாகிஸ்தான் சாதிக்க விரும்பும் எதையும் சாதிக்கமுடியாது. ஆஃப்கனின் பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம் பாகிஸ்தானே என்ற எண்ணம் ஆஃப்கனில் உள்ள பலரிடம் உள்ளது.

4. உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக பாகிஸ்தான் காஷ்மீரில் செய்ய நினைக்கும் விஷமங்களைச் செய்வது ஏற்கெனவே குறைந்துள்ளது. ஆனால் மும்பை தாக்குதல் போன்ற சில அதீதமான விஷயங்களை பாகிஸ்தானின் சில விஷமிகள் செய்ய நினைக்கலாம். அதனை இந்தியாவால் எதிர்கொள்வது மிகக் கடினம். இங்குதான் இந்தியா மிகக் கவனமாக இருக்கவேண்டும். ராணுவத் தளவாடங்களுக்கு அதிகம் செலவு செய்வதைவிட, உளவு வேலைகளுக்கு அதிகம் செலவு செய்வது பலனளிக்கும்.

5. ஒபாமா அடுத்த அதிபர் தேர்தலிலும் ஓஹோவென்று ஜெயித்துவிடுவார். ரிபப்ளிகன் கட்சியில் சொல்லிக்கொள்ளும்படி ஒருவரும் இல்லாதது ஒரு பக்கம். ஒசாமா ஒழிப்புக்குப்பின் பாபுலாரிடி ரேட்டிங்கில் ஒபாமா கிடுகிடுவென மேலே ஏறிவிடப்போவது மறுபக்கம். டெமாக்ரடிக் கட்சியிலேயே எந்த எதிர்ப்பும் இன்றி, ஒபாமா ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். ஒசாமா மீதான தாக்குதல் நடக்கும் நேரத்த்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற சிந்தனை நமக்கு வருவது தடுக்கமுடியாத ஒன்று.

6. பாகிஸ்தான் கதியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ஒருபக்கம் சர்வதேச அளவில் அவமானம். மிலிட்டரி அகாடெமிக்கு அடுத்த வீட்டிலேயே ஒசாமா இருந்திருக்கிறான், உனக்கு அதுகூடத் தெரியாதா என்று ஏளனம். மற்றொரு பக்கம், தெரிந்தேதான் இந்த பாகிஸ்தானிகள் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்று வெறுப்பு ஏற்படுவதற்கான வழி. பாகிஸ்தானிய ராணுவ, சிவிலியன் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள அவமானம் ஒரு பக்கம். பாகிஸ்தான் ராணுவ உதவி இல்லாமல் அமெரிக்கா இந்தத் தாக்குதலைச் செய்திருக்கமுடியாது என்று ஒசாமா ஆதரவாளர்களிடமிருந்து வரப்போகும் கடுமையான எதிர்ப்பு, எதிர்த்தாக்குதல்கள். பாகிஸ்தானுக்கு நாலு பக்கத்திலிமிருந்து இடிதான். இத்துடன், குலைந்துபோயுள்ள குடியாட்சி முறை, மோசமான நிர்வாக அமைப்பு, தினமொரு குண்டுவெடிப்பு, கல்வி போதாமை, பணப் பற்றாக்குறை என்று அனைத்தையும் சேர்த்தால் இதிலிருந்து எப்படி மீண்டுவரப்போகிறார்கள் என்பதே தெரியவில்லை.

***

ஒசாமா கொலை பற்றி சல்மான் ரஷ்டி

13 comments:

  1. // ஒசாமா மீதான தாக்குதல் நடக்கும் நேரத்த்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற சிந்தனை நமக்கு வருவது தடுக்கமுடியாத ஒன்று.//

    Dude, come on...the elections are still 18 months away, and honestly, odds are that the intervening events will wash out this memory. People have already quoted the 1991 victory against Saddam, the after-glow to Bush Sr in the pools, and his eventual loss in 1992 (due to economy) as a prototype for this.

    On a separate note, I always thought OBL was like an old guy - with rumors of health issues, and images of him walking with a stick, I thought he was in his late sixties or something...guy was just 54! Good they got him now...

    Srikanth

    ReplyDelete
  2. சார்!, நீங்கள் ஒசாமா சாவு பற்றிய செய்தியை சந்தேகிக்கவே இல்லையா? என்னை பொறுத்த வரை, இந்த செய்தி - வாத்தியார் ஸ்டைலில் சொன்னால் - ஒரு உட்டாலக்கடி .
    இந்த பொய்யான cover up செய்வதற்கு ஏன் பத்தாண்டுகள்? செப் 12 2001 அன்றே,இதை செய்திருக்கலாமே என தோன்றுகிறது

    ReplyDelete
  3. வீரப்பன் , பிரபாகரன் விஷயங்களில், உடல் என்று ஒன்றை கணக்கு காண்பித்தார்கள் . இங்கு அது கூட இல்லை.
    ஆமாம்,DNA confirmation என்கிறார்களே,அது எப்படி என்று எனக்கு தெரிந்து கொள்ள ஆவல்.
    இப்போது கிடைத்த உடலில் இருந்து ஒரு dna சாம்பிள் எடுத்து கொள்ளலாம்,சரி ...மாட்சிங்செய்ய கரெக்ட் ஆளுடைய சாம்பிள் வேண்டுமே - அதை ஏற்கனவே, ஒசாமா விடமிருந்து எடுத்து வைத்திருப்பார்களா என்ன ? (ஒசாமாவுக்கு ரஷ்ய போரில் அமெரிக்க உதவி செய்யும்போது எடுத்திருப்பார்களா? ) இதே டவுட் தான் வீரப்பன் மற்றும் பிரபாகரன் விஷயத்திலும் உள்ளது

    ReplyDelete
  4. Pakisthan says - "According to Declared Policy of USA, AMericans acted on themselves on knowing OBL's hide out").
    Can India also declare such a policy and enter Pakisthan and arrest the several wanted convicts of Mum 26-11 attacks?Will Pakisthan remain silent in that case?
    USA on its part could have atleast(anyway,they have decided to stage a false cover-up) declared to the world that OBL was caught in Tora Bora area instead of putting Pakisthan in embarassing scenario

    ReplyDelete
  5. டி.என்.ஏ சாம்பிள்கள் அவரது ரத்த உறவினர்கள், தம்பி தங்கைகளிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. அதனுடன் ஒப்பிட்டுத்தான் 100% ஓசாமா தான் என்று சொல்கிறார்கள்.

    அல்காயிதாவிடமிருந்து இன்னும் அஃபிசியல் எதிர்ப்பு வரவில்லை என்பது கூடுதல் பிளஸ்.

    ReplyDelete
  6. இந்தியாவின் பிரதம மந்திரி ஒருவார் தொண்ணூறுகளில் இந்திய எல்லை தாண்டிய உளவு வலையை டிஸ்மாண்டில் செய்தார். எதற்குத் தெரியுமா ? பாகிஸ்தானுடன் நல்லுறவு கொண்டாடுவதற்கு. அந்த உளவுத்துறை வலை மட்டும் சிதைக்கப்படாமல் இருந்திருந்தால் தீவிரவாதத் தாக்குதல்கள் உருவாகாமல் தடுத்திருக்கலாம் தான். கூடவே தாவுதை என்னிக்கோ போட்டுத் தள்ளியிருக்கலாம்.

    ReplyDelete
  7. மனிதர்கள் எல்லோரும் 99 9 % dna ஒற்றுமை உள்ளவர்களாக தான் இருப்போம். ஒரு ஆளுடைய ரெண்டு சாம்பிள்கள் மேட்சிங் என்று நிரூபிப்பதே கடினம் . சிப்ளிங் மாட்சிங் அவ்வளவு சரியானதா என்று கூற இயலாது. தவிரவும், அமெரிக்கர்கள் சொல்வது தான் ரிப்போர்ட் என்றான பிறகு, விக்ஞானமாவது அச்கிரசி ஆவது

    ReplyDelete
  8. இந்தியாவின் பிரதம மந்திரி ஒருவார் தொண்ணூறுகளில் இந்திய எல்லை தாண்டிய உளவு வலையை டிஸ்மாண்டில் செய்தார். எதற்குத் தெரியுமா ? பாகிஸ்தானுடன் நல்லுறவு கொண்டாடுவதற்கு.

    அனானி,
    நேராவே பேரச்சொல்லலாமே, குஜ்ரால் என்று. மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்த ஒரு ஆள் இந்திய உளவுத்துறைக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது என்பது ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயம். பிரச்சனையைப் பின்னால் வந்த பி.ஜே.பி. அரசு சரி செய்ய முனைந்த போது காலம் கடந்து விட்டதால் எல்லாவித active and hybernating cells had already gone into extinct by then. A really huge setback for indian intelligence.

    ReplyDelete
  9. வெங்கட், நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் ? ஓசாமா இன்னும் சாகவில்லை என்றா ?

    ஓசாமாவை, அவர் பிறருக்கு அடிக்கடி செய்வது போல், குண்டு வைத்து சிதரடித்து சாகடிக்கவில்லை, மிகவும் கஷ்டப்பட்டு டி.என்.ஏ வைத்து மட்டும் கண்டுபிடிக்க. நேரில் பார்த்து இது அவன் தான் என்று விசுவல் கன்ஃபர்மேஷன் பார்த்து போட்டுத் தள்ளியுள்ளனர். அவனது மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் முன்னிலையில். அவர்களும் உயிருடன் தான் இருக்கிறார்கள் ஆஸ்பத்திரியில். மேலும், ஜெனிட்க் மார்க்கர்கள் (point mutations in specific genes) குடும்பத்தில் வாழையடிவாழையாக கடத்தப்பட்டு வருவதை வைத்து அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெளிவாகச் சொல்லிவிடலாம். விக்கி லீக்ஸ் அசாங்கே கூடியவிரைவில் ஒசாமாவின் வாய்பிழந்த உடல்புகைப்படத்தை வெளியிடுவார். அல்லது வெறும் 30 ஆண்டுகள் கழித்து சி.ஐ.ஏவே கோப்புகளை டிகிளாசிஃபை செய்யும். அதுவரை பொருத்திருக்கவும்.

    ReplyDelete
  10. //
    மனிதர்கள் எல்லோரும் 99 9 % dna ஒற்றுமை உள்ளவர்களாக தான் இருப்போம். ஒரு ஆளுடைய ரெண்டு சாம்பிள்கள் மேட்சிங் என்று நிரூபிப்பதே கடினம் .
    //

    அப்ப ஆந்திர ஆளுனர் என்.டி.திவாரியின் மகன் அவன் தான் என்று நிரூபித்தது எப்படி ? அவன் உம்ம பையனாக் கூட இருக்கலாம் இல்லையா ?

    தெரிஞ்சு பேசனும் வெங்கிட்டு, தெரியாம வாயவிடக்கூடாது.

    ReplyDelete
  11. அது சரி வெங்கிட்டு, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். சந்திரனில் அமெரிக்கன் கால் வைத்து ஒரு உட்டாலக்கடி போட்டோ ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே வந்தது. அது உண்மையா?

    ReplyDelete
  12. //Venkat said... என்னை பொறுத்த வரை, இந்த செய்தி - வாத்தியார் ஸ்டைலில் சொன்னால் - ஒரு உட்டாலக்கடி .
    இந்த பொய்யான cover up செய்வதற்கு ஏன் பத்தாண்டுகள்? செப் 12 2001 அன்றே,இதை செய்திருக்கலாமே என தோன்றுகிறது//

    செஞ்சு இருக்கலாம் உம்மை மாதிரி ஒரு திறமையான ஆள் அமெரிக்காவிடம் இல்லை.

    ReplyDelete
  13. //
    பாகிஸ்தான் கதியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ஒருபக்கம் சர்வதேச அளவில் அவமானம். மிலிட்டரி அகாடெமிக்கு அடுத்த வீட்டிலேயே ஒசாமா இருந்திருக்கிறான், உனக்கு அதுகூடத் தெரியாதா என்று ஏளனம். மற்றொரு பக்கம், தெரிந்தேதான் இந்த பாகிஸ்தானிகள் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்று வெறுப்பு ஏற்படுவதற்கான வழி. பாகிஸ்தானிய ராணுவ, சிவிலியன் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள அவமானம் ஒரு பக்கம். பாகிஸ்தான் ராணுவ உதவி இல்லாமல் அமெரிக்கா இந்தத் தாக்குதலைச் செய்திருக்கமுடியாது என்று ஒசாமா ஆதரவாளர்களிடமிருந்து வரப்போகும் கடுமையான எதிர்ப்பு, எதிர்த்தாக்குதல்கள். பாகிஸ்தானுக்கு நாலு பக்கத்திலிமிருந்து இடிதான். இத்துடன், குலைந்துபோயுள்ள குடியாட்சி முறை, மோசமான நிர்வாக அமைப்பு, தினமொரு குண்டுவெடிப்பு, கல்வி போதாமை, பணப் பற்றாக்குறை என்று அனைத்தையும் சேர்த்தால் இதிலிருந்து எப்படி மீண்டுவரப்போகிறார்கள் என்பதே தெரியவில்லை.
    //
    அத்தனை கடுப்பையும் - இந்தியா மேலேதான் காட்டப்போகுது. மண்-மோன-சிங் கொஞ்சம் உசாரா இருக்கறது நல்லது.
    //அனானி,
    நேராவே பேரச்சொல்லலாமே, குஜ்ரால் என்று.//
    அடக்கொடுமையே..
    -ஜெகன்

    ReplyDelete