Monday, May 23, 2011

சமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் ஆரம்பம்

கருணாநிதியின் அனைத்துச் செயல்களையும் எப்படியேனும் மாற்றியே தீருவது என்ற முடிவுடன்தான் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே இருந்தார். ஆனால் அவற்றைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்று யாரேனும் நினைத்திருந்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். பொதுமக்கள் எல்லாம் இந்த இடத்தில் collateral damage-தான்.

தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் இனி மீண்டும் கோட்டையில்தான் - என்பதில் தொடங்கியது இது. இதற்குச் சொன்ன காரணங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம். புதுக் கட்டடம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. சரி, கட்டி முடிப்பது தீவிரப்படுத்தப்படுமா? கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டமன்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா? தெரியாது.

அடுத்து சமச்சீர் கல்வி. மூன்றாண்டுகள் கூட்டம் கூடி, தேவை என்று சொல்லி, கொண்டுவந்த புதிய பாடத்திட்டம். புதிய புத்தகங்கள். அவற்றை அச்சடிக்க 200 கோடி ரூபாய் செலவு. புத்தக விநியோகமே ஆரம்பித்தாயிற்று. முதலில் தமிழ் பாடப் புத்தகத்தை நிறுத்தி, அதில் செம்மொழி மாநாடு பற்றிய பகுதிகளை நீக்குவார்கள் என்று அறிவித்தது, அடுத்து சமச்சீர் கல்விக்கே தடா என்று முடிந்துள்ளது. இதனால் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பாழ். புதிதாக அச்சடிக்க மேலும் 110 கோடி ரூபாய். பள்ளிகள் திறக்க 15 நாள்கள் தாமதம். ஏற்கெனவே 10-ம் வகுப்புப் பிள்ளைகளை படிக்கத் தொடங்கியிருப்பர்; அவர்களுக்கெல்லாம் திண்டாட்டம். இது தவிர, தனியார் பதிப்பகங்கள் பலவும் இந்த சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அச்சிட்டிருக்கும் கோனார் தமிழ் உரை, கைடுகள், நோட்ஸுகள் எல்லாம் பாழ். அரசுப் பணம் பாழ் என்பதே கொடுமை. இதில் தனியார் பணம் பாழாவது கடுமையான கண்டனத்துக்கு உரியது!

ஆனால் இரண்டு பிரச்னைகளிலும் கருணாநிதிமீதும் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.

புதிய கட்டடம் என்று தன் ஆட்சியின் முதல் நாளே தீர்மானித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் இருந்திருக்கவேண்டும். ஆட்சி எப்போதும் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு நான்காம் வருடம் ஆரம்பித்தால் இப்படித்தான் பொதுமக்கள் பணம் பாழ். ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் புதுவிதமான மாநில ஆட்சி நடைபெறுகிறது. இங்குமட்டும்தான் இரண்டு தனி நபர் பகை, கொள்கையாகவும் திட்டங்களாகவும் மாற்றம் பெறுகிறது. எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியைப் பிடிக்கவில்லை என்றால் மேலவை கலைக்கப்படும். எனவே கருணாநிதி அதை மீண்டும் கொண்டுவருவார். எனவே ஜெயலலிதா அதை அழிப்பார்.

அடுத்து சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி வேண்டும் வேண்டும் என்று அலைந்தது ஒருசில தன்னார்வலர்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே? எந்தப் பள்ளிக்கூடமும் இதை வேண்டும் என்று கேட்கவில்லை. மெட்ரிக் பள்ளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இதைக் கொள்கை முடிவாக ஆக்கி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, நீதிமன்றங்களில் கடுமையாகப் போராடி, இறுதியில் நடைமுறைப்படுத்த வந்தபோது கருணாநிதிக்கு ஆட்சி போயிற்று. இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள்? அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று? மெட்ரிக் பள்ளிகளை அரவணைத்துச் சென்றிருக்கலாம் அல்லவா? ஆனால் அரசியல் ஈகோ களத்தில் அப்படியெல்லாம் செய்வது ஏற்கமுடியாததே? எனவே மெட்ரிக் பள்ளிகள் சங்கம் என்னவெல்லாம் செய்தார்களோ, இன்று சமச்சீர் திட்டம் காலி. ஏகப்பட்ட பணம் நஷ்டம்.

வலுவான எதிர்க்கட்சியாக கருணாநிதியின் திமுக இவற்றை எதிர்கொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்யமுடியாமல், துக்கத்தில் இருக்கிறார் தலைவர். அவரது இன்றைய கவலை, தன் பெண்ணைச் சிறையிலிருந்து மீட்கவேண்டும் என்பதே. எனவே எந்தவிதமான whimpering protest கூட இல்லாமல், ஜெயலலிதா தான் விரும்பியதைச் செய்துமுடிப்பார்.

***

விரைவில் மேலவைக்கு முட்டுக்கட்டை போன்ற இன்னபிற மிக முக்கியமான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பதை நாம் வரவேற்போம்.

[Disclaimer: சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு NHM நிறுவனம் கைடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் எதையும் அச்சிட்டு கையைக் கடித்துக்கொள்ளவில்லை. சுரா புக்ஸ், பழனியப்பா பிரதர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே கைடுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவர்களுக்குக் கட்டாயம் நஷ்டம்தான்.]

45 comments:

  1. பள்ளிகளில் புதியபாட புத்தகங்களை அறிமுகப்படுத்தும் பொழுது 1,3,5,7,9 வகுப்புகளுக்கு மட்டும் முதலில் மாற்றுவார்கள், பிறகு அடுத்த வருடம் 2,4,6,8ன்னு மாற்றுவார்களே...அதுமாதிரி இல்லாமல் ஒட்டுமொத்தமாக எல்லா வகுப்பு பாடங்களையும் சமச்சீர் கல்வி பாடதிட்டமாக மாற்றுகிறார்களா?

    சந்தேகம்:

    1)சமச்சீர் கல்வி பாடதிட்ட புத்தகங்கள் தரமானவைகளா இருந்ததா?

    2)அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டது போன்றுதானே இருந்தது. ஹரண் பிரசன்னா பாடதிட்டங்களை பார்த்துவிட்டு அதில் இருக்கும் பிழைகள், தரங்களை பற்றி எழுதியிருந்தாரே...அதைப்பார்த்தால் பாடங்கள் மிகவும் மோசமாக இருப்பது போல் இருந்ததே. அப்படியிருக்கும் பொழுது தரமில்லாத பாடதிட்டங்களை அனுமதித்தால் பணம் பாழ் ஆவதைவிட...பல மாணவர்களில் ஒருவருட கல்வி பாழ் ஆகுமே...அப்படியிருக்க தடை செய்தது சரிதானே?

    ReplyDelete
  2. நல்ல பதிவு. ஆனால் தலைப்பு கருணாநிதியின் துக்ளக் தர்பார் என்றிருந்திருக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் உள்ளே எழுதிய விஷயத்தோடு ஒத்துப் போகும்!

    ReplyDelete
  3. குசும்பன், பாடதிட்டம் (சிலபஸ்) நன்றாகவே இருந்தது. ஆனால் தமிழக அரசு பாடப் புத்தகங்கள் மிகக் கேவலமாகவே இருந்தது. முக்கியமாக அறிவியல், தமிழ் - சகிக்கவே இல்லை. சமூக அறிவியல் ஓகே. கணிதம் ஓகே. இதனால், இதனைத் தடை செய்தது பற்றி எனக்கு அதிக வருத்தம் இல்லை. ஆட்சி நடக்குதுன்னா சும்மாவா. :> :>

    ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி திட்டத்தைப் பரிசீலிப்போம் என்று ஜெயலலிதா முன்பே சொல்லியிருந்திருக்கலாம். இது பல வகையில் பலருக்கும் உதவி இருந்திருக்கும். இதைச் செய்யாதது ஜெயலலிதாவின் தவறு.

    ReplyDelete
  4. MK or JJ, they don't care about people welfare in first place. Some motive behind (revenge etc), so its a no surprise.

    ReplyDelete
  5. எந்த குப்பையை கொடுத்தாலும் மார்க் வாங்க வேண்டுமென்பது பதின்ம வயதில் இருப்பவனது விதி.. அவனால் அந்த காலத்தில் இதை எதிர்த்தோ , ஆராய்ந்தோ போராட முடியாது.. பகுத்தறிந்து செயலாற்ற தகுதி இருந்தும் அரசியல் காரணங்களால் புழுங்கி போய் இருக்கும் ஆய்வும் திட்டமும் முறைபடுத்துபவர்களும் இதில் என்ன செய்ய முடியும்.. இவிங்க பஞ்சாயத்துல காசும் வாங்காம ஜெயிக்க வைக்க ஓட்டும் போடாம இருந்த மாணவர்களை பாடாய் படுத்துவது எந்த கணக்குல சேர்த்தி னு தான் தெரியல.. " "கைடுலாம் வாங்கியாச்சு இப்போ சொல்ராய்ங்க அறிவு கெட்டவிங்கனு வஞ்சிட்டு போறான்"... என் மாமா மவன்.." அவனுக்கு தெரியுது அறிவு கெட்டவிங்க யாருன்னு.. எனக்கு தான் தெரியாம போச்சோ..

    ReplyDelete
  6. 1) பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளைப் போக்கிவிட்டு, சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா?

    2) அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று சொல்பவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    3) மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிச்சயம் எதிர்க்கவே செய்யும். அதை அரசு எப்படிக் கையாளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  7. நான் சமச்சீர் கல்வியை ஆதரிக்கவில்லை. பல பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். அதில் சில பாடத்திட்டங்களும் சரி, புத்தகங்களும் சரி, தேர்வு முறையும் சரி, பிறவற்றைவிடக் கடினமாக இருக்கலாம். அதில் தவறேதும் இல்லை.

    அரசுப் பள்ளிகள், அரசு மானியம் பெறும் தனியார் பள்ளிகள் ஆகியவையே State Board எனப்படும் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வந்தன. மெட்ரிக் என்ற பாடத்திட்டமும் அரசால் உருவாக்கப்பட்டதே. அதனை தனியார் மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றிவந்தன. மெட்ரிக் பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தைவிட தரத்தில் சற்று உயர்ந்ததாக இருந்தது. இதில் அடிப்படையில் எந்தப் பிரச்னையும் இல்லை. வேண்டுமென்றால் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தைத் தனிப்பட்ட முறையில் உயர்த்திக்கொண்டிருக்கலாம். இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கும்போது முந்தி இருந்ததைவிட தரம் குறைவாக ஆக்கும் முயற்சி நடைபெற்றதாக மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கருதினர். இதுதான் பிரச்னைக்கு ஒரு காரணம். பிற காரணங்களும் உள்ளன.

    மெட்ரிக் பள்ளிகளை எப்படிக் கையாள வேண்டும்? அவர்களை கருணாநிதி அரசு மிகவும் மிரட்டியது. முதலில் கட்டணக் கட்டுப்பாட்டில் ஆரம்பித்து, பின் சிலபஸில் கை வைத்து, ஒரு கட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் மிரண்டு ஓட ஆரம்பித்தன. இதனால் யாருக்கும் நன்மை இல்லை. அப்படி மெட்ரிக் பள்ளிகளை மிரட்டுவதன் பின்னணி என்ன?

    கல்வியில் எப்போதும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதைவிடப் பெரிய பிரச்னை, கல்வி அளிக்கும் முறையில், கற்பிக்கும் முறையில், தேர்வு முறையில் பிரச்னைகள் உள்ளன. மாணவர்களின் திறமை இப்போது உண்மையான முறையில் வெளியே வருவதில்லை. அதனைச் சரி செய்ய முயற்சிகள் எடுக்கவேண்டும்.

    அரசின் கட்டுப்பாட்டில் கல்வி இருக்கும்வரை இது நடக்கப்போவதில்லை. தனியார்கள் கல்வி தருவதில் உள்ள பிரச்னையைக் காட்டிலும் அரசுக் கல்வியில்தான் நான் அதிகப் பிரச்னைகளைப் பார்க்கிறேன். இதைப் பற்றி விரிவாக எழுத இங்கு இடம் போதாது. எனவே தனிப் பதிவாக பின்னர் எழுதுகிறேன்.

    ReplyDelete
  8. கருணாநிதியின் அனைத்துச் செயல்களையும் எப்படியேனும் பாராட்டியே தீருவது என்ற முடிவுடந்தான் பத்ரி தேர்தலுக்கு முன்பிருந்தே இருந்தார். ஆனால் ஆட்சிமாற்றத்தின்போது இனியாவது நேர்மையான கருத்தை எழுதுவார் என்று யாரேனும் நினைத்திருந்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். வாசகர்கள் எல்லாம் இந்த இடத்தில் Collateral Damage-தான்.

    ReplyDelete
  9. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு நீக்குவது கஷ்டம்.. கல்வியிலாவது நீக்கலாமே.. சமச்சீர் கல்வியினை கொண்டு வந்து?

    ReplyDelete
  10. Nice Op-ED.Guides citizens' thoughts objectively.
    -----------
    இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள்? அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று?

    --
    Thiruchuzhi, kavidhai books -library order "mandhiri" (eppodhum pani seidhu kidappavar) azhudiruppaaro

    ReplyDelete
  11. ஸ்டேட் போர்ட் பள்ளிகளின் தரம் மோசம் என்றும் மெட்ரிக் பள்ளிகளின் தரம் உயர்ந்தது என்றும் சொல்வது போல் தெரிகிறது. சந்துபொந்துகளில் எல்லாம் மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மைதானம் கூட இல்லாத, மிகக் குறைவான இடத்தில், காற்றோட்டம் கூட இல்லாத வகுப்புகளை வைத்துக்கொண்டு, பத்தாவது கூடப் படிக்காத ஆசிரியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி, கல்வி தருபவர்களின் கல்வி எப்படி உயர்ந்ததாக இருக்க முடியும்? தரமான கல்வி அளிக்கும் மெட்ரிக் பள்ளிகளை விட இதுபோன்ற பள்ளிகளே இங்கு அதிகம். இவர்களின் நோக்கம் கல்வி அளிப்பது அல்ல, சம்பாதிக்க அது ஒரு வழி. மெட்ரிக் பள்ளிகளில் படித்தால்தான் தரமான கல்வி என்றும் அது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்றும் நினைப்பவர்கள் அந்தக் கல்விக்கூடம் எப்படிப்பட்டது என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

    எல்லா பள்ளிகளையும் தனியார் மயமாக்கிவிட்டால் அது மிகச் சிறந்த பிசினஸ். தங்கள் பள்ளியில் 100 சதவீதம் ரிசல்ட் வேண்டும் என்பதற்காக சில மெட்ரிக் பள்ளிகள் கற்கும் திறன் குறைந்த மாணவர்களைத் திடீரென்று பத்தாம் வகுப்பில் வெளியேற்றும் கொடுமையை எல்லாம் எங்கே போய்ச் சொல்வது? எந்த நிலையில் இருக்கும் மாணவனையும் மேம்படுத்துவதில் தானே ஒரு பள்ளியின் திறன் இருக்கிறது. கல்வி, மருந்து போன்ற அத்தியாவசியமான விஷயங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, இல்லாதவனை மேலும் மேலும் படுகுழியில் தள்ளப் போகிறோம். ‘பணம் இருப்பவன் வாழலாம், மற்றவனெல்லாம் செத்து ஒழிந்து போங்கள்’ என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

    ஸ்டேட் போர்ட் கல்வியின் தரம் உயரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஸ்டேட் போர்ட்டுகளிலும் மிகச் சிறந்த பள்ளிகள் இருக்கின்றன.

    ReplyDelete
  12. matric பாடத்திட்டங்களில் மிக முக்கியமான பிரச்சனை அதிகமான பாடங்கள். பாடங்களில் ஒரு ஒழுங்கு முறை இல்லாமை, ஒரு continuity இல்லாமை, பள்ளிகள் ஒவ்வொன்றும் ஒரே வகுப்புக்கு வேறு வேறு விதமான பாடங்கள் வைத்துக் கொண்டிருப்பது, மற்றும் மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் எடுக்க வைப்பது, மிக அதிக கட்டணம், கட்டணத்துக்குரிய முறையான வசதிகள் பள்ளிகளில் இல்லாமை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

    ஆனால் அரசு சமசீர் என்று முன் வைத்த போது கல்வியில் பெரும்பான்மை பங்கு வகிக்கும் matric பள்ளிகளிடம் முறையாக கலந்தாலோசிக்காமல் சில தன்னார்வ அமைப்புகளோடு மட்டும் சேர்ந்து செயலாற்றியது பெரும் தவறு. பள்ளிகள் இதை அமுல்படுத்தக் கூடவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன. கட்டணக் குறிப்பையும் கல்வி சீர் செய்வதையும் அரசு ஒன்றாக செய்தது தவறு. படிப்படியாக செய்திருக்க வேண்டியவை இவை.

    அடுத்து மிக முக்கியமாக பலருக்கும் தெரியாதது, ஏற்கனவே A ஞானம் கமிட்டி 2004 ல் கொண்டு வந்த matric சீர்திருத்தம் முறையாக அமுல்படுதப்பட்டதா என்பதை கண்காணிக்கக் கூட matric போர்டு டுக்கு அதிகாரம் இல்லை அல்லது அதை விட முக்கிய வேலை அதற்கு இருக்கிறது. அரசு கொண்டு வரும் மாற்றங்களை பள்ளிகள் அமுல்படுதுகிறதா என்று கண்காணிக்கும் ஒரு முறையான அதிகாரம் உள்ள குழு இல்லை என்பதே என் புரிதல் என் அனுபவத்தில் இருந்து. பள்ளிகளை புதிதாய் திறக்கும் போது மட்டுமே Inspection. அங்கீகாரம் வாங்கிய பின் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் RTI சமர்ப்பித்து பதில் வாங்கி விட்டுத் தான் சொல்லுகிறேன் இதை.

    ReplyDelete
  13. அடுத்து இன்னொன்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம், சமசீர் கல்வியில் KG க்கான பாட திட்டங்கள் இல்லை. இதற்கு Matric போர்டு குடுக்கும் விளக்கம் சமசீர் யின் கல்விபடி KG அரசு அங்கீகாரம் பெறாது. நம் பெற்றோர்கள் இரவே வரிசையில் நின்று காத்துக் கிடந்தது பண மூட்டையை வாரிக் கொடுத்து இடம் பிடிப்பது முதலில் KG க்குத் தான் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் matric டைரக்டர் திரு தேவராஜனை கேட்டுப் பாருங்கள்.
    KG யில் அரங்கேறும் கல்வி வன்முறை வார்த்தைகளில் அடங்காது. ஒன்றாம் வகுப்பில் வந்து சம்ச்சீர். இது எப்படி இருக்கு? இந்த அழகில் நம் பெற்றோர்கள் pre -KG , play ஸ்கூல், டே கேர் என்று இன்னும் இன்னும் முன்னே போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதாவது ஒன்றாம் வகுப்பு வருவதற்குள் ஒரு குழந்தை நான்கு வருடங்கள் படித்து ஆக வேண்டிய கட்டாயம்.

    ReplyDelete
  14. matric போர்டு, தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி போன்ற தலைப்புகளில் நிறைய விஷயங்களை அலசி இருக்கிறோம் விருட்சத்தில்.
    கட்டணக் குறைப்பு, சமச்சீர் கல்வி என்று அதிரடியாக ஆனால் அரைவேக்காடாக அரசு செய்த முயற்சிகள் தனியார் பள்ளிகளுக்கே சாதகமாக அமைந்தன. பல தனியார் பள்ளிகளும் அவசர அவசரமாக CBSE பள்ளிகளை கிளைப் பள்ளிகளாகத் திறந்து இப்போது சமசீராக நாடு தழுவிய CBSE பாடத்திட்டத்தை வைக்கச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளன. அரசுப் பள்ளிகளின் நிலையை முன்னேற்றி மாணவர்களை அரசுப்பள்ளிகள் நோக்கி இழுக்கும் வேலையை செய்வதை விடுத்து அரசு செய்தது என்ன?

    ReplyDelete
  15. ///சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு நீக்குவது கஷ்டம்.. கல்வியிலாவது நீக்கலாமே.. சமச்சீர் கல்வியினை கொண்டு வந்து?///

    அதுதானே பிரச்சினை கும்பகோணத்தான்... கல்வியில் சமச்சீர்த்தன்மை வந்துவிட்டால் பத்ரி சேஷாத்ரியும் குப்பனும் ஒன்றாகிவிடுவார்களே. இது அடுக்குமா?

    ReplyDelete
  16. பத்ரி துக்ளக் போன்றவர்கள் மத சார்பு வழியாக போகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. நீங்கள் ஜெயலலிதாவின் முடிவுகளை ஏன் கொண்டாடுகிறீர்கள். சோ, பத்ரி, ஜெயலலிதா எல்லாரும் பிராமண ஜாதியை செர்ந்தர்வகள் அதனால் அப்டி பேசுகிறீர்கள் என தோன்றுகிறது.

    ReplyDelete
  17. பள்ளிக்கூடம் திறக்கிறத தள்ளிப்போட வேணாங்க - (முதல்வர் அம்மாவுக்கு ஒரு கவிதைக் கடிதம்)


    மூணாம் முறையாக
    முடிசூடி வந்திருக்கும்
    அம்மா முதல்வருக்கு
    அன்பான வணக்கமுங்க.

    அரசியலில் நேர்எதிராய்
    அணிமாற்றம் சகஜமுங்க
    பதவியில் இருப்பவர்க்கும்
    பணிமாற்றம் சகஜமுங்க

    எல்லாமே மாறிவரும்
    என்பதுதான் நிஜமுங்க
    நல்லதைத் தொடருங்க
    அல்லதை விட்டுருங்க

    கல்வி ஒண்ணுதான்
    கடைத்தேறும் வழியின்னு
    உலகமே உணர்ந்திருக்கு
    நான்சொல்ல வேணாங்க

    வேறெங்கும் இல்லாத
    விசித்திரமாய்த் தமிழ்நாட்டில்
    ஐந்துவகைக் கல்விமுறை
    அநியாயம் நடந்துச்சுங்க

    ‘சமச்சீர்க் கல்விமுறை
    சரியான முறை’யின்னு
    மக்களில் பெரும்பாலோர்
    மனசார நம்புறோம்’ங்க

    கல்வி முதலாளிங்க
    கொள்ளை அடிச்சதெல்லாம்
    குடிமுழுகிப் போச்சுன்னு
    குமுறித் தீத்தாங்க

    சமச்சீர்க் கல்விமுறை
    சமுதாய மாற்றுமுறை
    தெரிஞ்சோ தெரியாமலோ
    திட்டமிட்டுத் தந்தாங்க!

    பலகோடிப் புத்தகங்கள்
    பள்ளிக்கூடம் வந்தாச்சுங்க
    வேண்டாத பக்கங்கள
    விட்டுவிடச் சொல்லிடுங்க

    பழைய கல்விமுறை
    பழையபடி வேணாம்’ங்க!
    பள்ளிக்கூடம் திறக்கிறத
    தள்ளிப்போட வேணாம்’ங்க!

    நினைச்சதை நினைச்சபடி
    துணிச்சலோட மாத்துவீங்க!
    களைகளைக் களைஞ்சிடுங்க
    செடிகளைக் காத்திடுங்க!

    பத்தாம்’ப்பு வாத்தியாரின்
    பணிவான வேண்டுகோள்’ங்க!
    --- நா.முத்து பாஸ்கரன்
    துணைத் தலைமை ஆசிரியர்
    அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி
    புதுக்கோட்டை -622 004
    செல் : 94431 9329
    blog: www.valarumkavithai.blogspot.com

    ReplyDelete
  18. //அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று சொல்பவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

    சுயநலவாதிகள்.


    //மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிச்சயம் எதிர்க்கவே செய்யும். அதை அரசு எப்படிக் கையாளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?//

    கல்வியை அரசுடமையாக்க வேண்டும்.

    ReplyDelete
  19. இந்த கேஜி வகுப்புகளை அடியோடு தூக்கிவிட்டு 4 ம் வயதிலிருந்து ஒன்றாம் வகுப்பில் சேர்க்க அனுமதித்து விட்டால் என்ன?

    ReplyDelete
  20. // சோ, பத்ரி, ஜெயலலிதா எல்லாரும் பிராமண ஜாதியை செர்ந்தர்வகள் அதனால் அப்டி பேசுகிறீர்கள் என தோன்றுகிறது.// ஐயா அனானி, ஒடனே பிராமணன் பூனூல்னு பேசாம இருக்க முடியாதே! அப்படி சைக்கோவாக உங்களையெல்லாம் மாற்றி இருக்கிறார்கள். கருணாநிதி என்கிற கருநாகப்பாம்பை கேவலமாக ஆட்சியிலிருந்து துறத்தியடித்த அத்தனை தமிழக மக்களும் பிராமணர்களா என்ன? ஜாதி காழ்ப்பு கண்ணை மறைத்தால் இப்படித்தான் உளரத்தோன்றும்

    ReplyDelete
    Replies
    1. அருமை ! ! உண்மையும் அதுதான். !!!

      Delete
  21. நம் நாட்டின் தேவையை உணர்ந்து அரசியல் தலைவர்கள் உணவு, கல்வி, தொழில்கள், சுகாதாரம் என்று தொலை நோக்குடன் செயல்பட்டிருந்தால் ஜப்பானைப்போல் நாமும் முன்னேறி இருக்கலாம். நமது திட்டங்கள் எல்லாம் தேர்தலை நோக்கியத் திட்டமாக, வேட்டி-சேலை திட்டமாக இருந்ததால், இருப்பதால் இன்னும் அவற்றை மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை, மக்களும் கைநீட்டி வாங்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  22. hello sir,
    this is an excellent write up. Nobody got guts write about this and talk about this. But the present the chief minister still in the same old type.She should change her attitude
    SUMA

    ReplyDelete
  23. your essau about samacheer kalvi is excellent/
    What to do this is the fate of Tamilnadu
    Suma

    ReplyDelete
  24. கட்டி முடிப்பது தீவிரப்படுத்தப்படுமா? கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டமன்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா?
    -------
    a point of note here :
    1.I am not sure if the plan for the building was
    satisfying all rules properly.I Request for data/guidance from others in this regard.
    2.The Chennai Metro Rail station is now constructed,right inside the campus(on the Anna Road side of the building).This seems to be a conflict,not only on plan approval side but also on the security aspect.
    I read somewhere that the members(not sure of their party allegiance) had raised concern during the last session of the legistative assembly,about security and noise issues due to the existing Elevated train(Beach-Velachery) route.
    The ex-government,I believe,was responsible for approving the plans for both the metro rail as well as the new assembly building.But the obvious conflict has been missed somehow.

    ReplyDelete
  25. இதில் நமது எதிர்ப்பைத் தெரிவிக்க ஜெயலலிதாவிற்கு தந்தி அனுப்பும் போராட்டத்தைத் துவக்கினால் என்ன?

    /* தனியார்கள் கல்வி தருவதில் உள்ள பிரச்னையைக் காட்டிலும் அரசுக் கல்வியில்தான் நான் அதிகப் பிரச்னைகளைப் பார்க்கிறேன். இதைப் பற்றி விரிவாக எழுத இங்கு இடம் போதாது. எனவே தனிப் பதிவாக பின்னர் எழுதுகிறேன்.
    */

    விரைவில் எழுதுங்கள். விவாதிக்க வேண்டிய விசயம்.

    /*
    இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள்? அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று?/*

    நல்ல கேள்விதான். அதே சமயம், அதை சிலபஸ்ஸிலிருந்து நீக்கிவிட்டு அதே புத்தகங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  26. //‘சமச்சீர்க் கல்விமுறை சரியான முறை’யின்னு மக்களில் பெரும்பாலோர் மனசார நம்புறோம்’ங்க//
    இதெல்லாம் சும்மா. தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்திருக்கும் பெற்றோர்களுக்கு இது பற்றிய சரியான புரிதலே இல்லை. படிப்பின் தரத்தை அரசு குறைத்து விட்டதாகத் தான் எண்ணுகிறார்கள். படித்த மேல் தட்டு மக்கள் அப்படிதான் சொல்லுவார்கள் என்று யாரும் வரிந்து கட்டிக் கொண்டு வரவேண்டாம். சரியாக படிக்காத பெற்றோர் தன் பிள்ளைகளையாவது நல்லா படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு matric படிப்பின் அறைவேக்காட்டுதனமும் தெரியாது சமசீரில் அந்தக் குறை நீக்கப்பட்டிருக்குமா இருக்காதா ஒன்றும் தெரியாது. பொதுப்படையாக அது கல்வியின் தரத்தைக் குறைக்கும் காரணம் அது அரசுப்பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் ஒரே பாடத் திட்டத்தில் இணைக்கிறது என்ற புரிதல்.
    அரசு பெற்றோர்களுக்கு சமச்சீர் கல்வி குறித்த எந்த விழிப்புணர்வையும் தரவே இல்லை. அதனால் அதை அமுல்படுத்தாமை குறித்த கவலை அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. பள்ளிகள் ஒழுங்கா திறக்குமா, பாடப் புத்தகங்கள் கிடைக்குமா என்பது தான் இப்போதைய கவலை. கட்டணங்களைக் கூட கட்டியாகி விட்டது. கட்டணக் குறைப்பு பற்றிய அறிவிப்புகள் எந்த பலனையும் தரவில்லை. ஏனென்றால் அது அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது.

    ReplyDelete
  27. சுஜாதா: மெட்ரிக் கல்விக்கூடங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளன என்று நான் சொல்லவில்லை. மெட்ரிக் சிலபஸ், ஸ்டேட் போர்ட் சிலபஸைவிடக் கடினமானது; தரம் உயர்ந்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

    மெட்ரிக் பள்ளிகள் பலவும் மிகச் சுமாரான தரத்தில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, மிக மோசமான தரத்திலான கல்வியை வழங்கிக்கொண்டிருக்கின்றன என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

    ஆனால் self-selection என்ற முறைப்படி, உயர் மட்டத்தினர் மட்டுமல்ல, ஓரளவு பணம் செலவழிக்கமுடியும் என்று விரும்பும் பல பெற்றோர்களுமே மெட்ரிக் பள்ளிகளையே நாடிச் செல்கின்றனர். இதனால் நகரங்களில் உள்ள ஸ்டேட் போர்ட் பள்ளிகளில் தானாகவே (பொருளாதார) கீழ்மட்டத்தினர் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மையா, இல்லையா என்பதை உங்கள் ஆசிரிய நண்பர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.

    இதன் விளைவாக கல்வி வழங்குதலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன, வகுப்பை நடத்துவதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    சமச்சீர் கல்வி ஒரு முழுமையான தீர்வல்ல.

    ReplyDelete
  28. இவ்வளவு பேசுகிறீர்களே ..... திமுக தலைவரின் மகன் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சென்னை வேளச்சேரியில் நடத்தும் சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளியில் ஏன் சமச்சீர் தமிழ்க் கல்வி இல்லாமல் மய்ய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் வழங்கப்படுகிறது?? பள்ளிக்கு அழகான கதிரொளிப் பள்ளி என்று தமிழ்ப் பெயர் ஏன் இல்லை?? இந்தி எதிர்ப்பில் வளர்ந்த இயக்கத்தின் குடும்பப்பள்ளியில் ஏன் இந்தி பாடமாக வைக்கப்பட்டுள்ளது?? ஒரு தொண்டன் என்கிற முறையில் ஏன் திமுகவினர் கேள்வி கேட்காமல் சோற்றாலடித்த பிண்டம் போல் எதிர்ப்பாட்டே பாடி வருகிறீர்கள் ??? திமுகவை ஆதரிக்கும் யாரேனும் இங்கு பதில் சொல்வார்களா??

    ReplyDelete
  29. ஒரு பக்கம் சமச்சீர் கல்வி, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு என்று மக்களை உசுப்பிவிட்டு மறுபுறம் கலைஞரின் பேத்தி சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தி இந்த மூன்று கொள்கைகளுக்கும் ஆப்பு வைப்பதைக் கண்டிக்காத தாத்தாவைக் கண்டித்து இந்த பத்ரி போன்றவர்கள் பொது ஊடக கட்டுரை, நேர்முகங்கள், நீயா நானா போன்ற நிகழ்ச்சியின் போது எதிர்ப்பு காட்டி கண்டிக்கும் தைரியம் உள்ளவர்களா ??? முடியுமா ??? இல்லை கலைஞர் குடும்பம் எது செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்று எல்லாத்தையும் கைதட்டி, வாய் பிளந்து பார்க்கும் சோற்றாலடித்த பிண்டமான திமுக உடன்பிறப்புகளுக்காவது சொரணை வருமா??

    ReplyDelete
  30. இந்த லின்க்கை படிங்க. Same story continues..

    http://thatstamil.oneindia.in/news/2011/05/24/tn-it-minister-avoids-wearing-chappal-aid0090.html

    ReplyDelete
  31. சமச்சீர் கல்வி வேண்டாம் என்று அரசு முடிவு எடுக்குமாயின் அது அங்கீகரிக்கும் ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் அரசு பள்ளிகளிலும் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆங்கில மீடியத்தை அரசுப்பள்ளிகளில் கொண்டுவந்த அரசு மெட்ரிகுலேசனை ஏன் கொண்டுவரவில்லை? அவரவர் வேண்டிய கல்வித்திட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கலாமே? மேலும் ஆங்கில மீடியமே 6-ஆம் வகுப்பிலிருந்துதான் அரசுப்பள்ளிகளில் உள்ளது. இதுவும் தவறு. 1-ஆம் வகுப்பிலிருந்தே ஆங்கில வழிக்கல்வி பயிலவும் அனுமதிக்க வேண்டும். இதை அரசு செய்யாதானால் சமச்சீர் கல்வி தொடர்வதே சரி. அப்படி பணக்கார புத்திசாலிக் குழந்தைகளானால் பள்ளிக்கு வெளியே தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளட்டும். 9-ஆம் வகுப்பிலிருந்தே IIT நுழைவுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களைப் போல... யார் அவர்களைத் தடுக்கப் போகிறார்கள்? மற்றொரு கோணத்தில் சமச்சீர் கல்வி பலரது தன்னம்பிக்கையை வளர்க்கும்... மதிப்பெண்களை ஒப்பிடுதல் எளிது... எந்தப் பள்ளியிலிருந்து எந்தப் பள்ளிக்கும் மாணவர்கள் மாறிக்கொள்ளலாம்... +1 அட்மிசன் எளிமையாகும்...

    ReplyDelete
  32. பத்ரி,
    (வழக்கம் போல)உங்கள் வாதம் என்ன என்பதே புரியவில்லை?
    ஒரு பக்கம் சமச்சீர் கல்வி சரியானது இல்லை என்கிறீர்கள்.இன்னொரு பக்கம் ஏற்கனவே முடிவு செய்து,புத்தகங்களும் அச்சடித்து விட்டதால் முந்தைய அரசின் முடிவை மாற்றக்கூடாது என்கிறீர்கள்.So நம் மாநில மாணவர்களின் எதிர்காலம் கெட்டு குட்டிச்சுவரானாலும் பராவாயில்லை அச்சடித்த புத்தகங்கள் வீணாக கூடாது என்பது உங்கள் நிலையா?
    கருணா கொண்டுவந்த சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு நன்மை பயக்குமா?
    கருணாவின் கொள்ளு பேரன் பேத்திகள் இந்த கல்வி முறையில்தான் பயில்வார்களா?
    விடை அளிப்பீர்களா?
    நன்றி!

    ReplyDelete
  33. செத்த பாம்ப எத்தன நாளைக்கு தான் அடிப்பீங்க (கருணாநிதியின் இரட்டை வேடம் ..)

    இங்க எல்லாரும் அடிச்சிகிரத சகிக்காம நெறைய ஸ்கூல் IGCSE / ICSE க்கு மாறிக்கிட்டு இருக்காங்க !

    சீக்கிரம் எல்லாரும் முழிச்சிகொங்க புள்ள குட்டிங்கள உலகத்தின் போட்டிக்கு ஈடு கொடுக்கற வரையில மாத்தறதுக்கு

    ReplyDelete
  34. கருணாவின் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் எல்லாம் சி.பி.எஸ்.இ படிப்பு படிக்கிறார்கள், கற்பிக்கிறார்கள் என்று இங்கு ஏற்கனவே பின்னூட்டிய ஒரு நல்லுள்ளம் சொல்லியுள்ளதை கவனிக்கவில்லையா ?

    திராவிட அரசியல் கட்சியின் புரிதலின் படி சமச்சீர் கல்வி என்பது சமமாம சீர்கெடுக்கப்பட்ட கல்வி. தமிழக அரசு 10+2 புத்தகங்களைவிட சி.பி.எஸ்.இ 10+2 புத்தகங்களில் விசயம் தெளிவாகவும், நல்ல நடையிலும் விளக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. எல்லாவிதமான நுழைவுத் தேர்வுக்கும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்க்கப்படுகின்றன. அதாவது புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல், புரிந்ததை வைத்து கேட்கப்படும் கேள்விக்கு விடை அளிக்கவேண்டும். சமச்சீர் கல்வியாளர்கள் பேசாமல் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்து (நடுநடுவில் மானே,தேனே, பொன்மானே எல்லாம் போட்டு) தமிழக அரசு பாடநூலாக வெளியிட்டாலே தமிழக மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப் பட்டுவிடும். ஆனால், தொன்றுதொட்டு புத்தகத்தில் இருப்பதை அச்சுப்பிசகாமல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனையே அறிவாளியாக எண்ணிய வாத்தியார் சமூகமும், அதையே உண்மை என நம்பிய மாணவர் சமூகமும் எப்படி உண்மையை எதிர்கொள்ளும் என்பதை நாம் சொல்ல முடியாது.

    ReplyDelete
  35. So even after all this discussion, you wont change the title of the post right?

    I agree that 1991-1996 rule of ADMK was bad. But in 2001-2006 ADMK never indulged in propogating their leaders in text books, bus, and other government oriented items/programs.

    So when DMK does that and ADMK tries to remove that, people blame ADMK for removing those references rather than blaming DMK for introducing those references

    Its a political battle and these are govt sponsored advertisements. Do you expect the adversaries to provide free advertisement to the other party.

    If bottling unit were made govt property and Coke and Pepsi were in contention do you think Coke will agree for Pepsi symbol during their tenure.

    ReplyDelete
  36. Sriram: blocking or modifying Tamil book was okay. However, scrapping Samacheer Kalvi (however bad the whole idea is) just when the school year is starting is bad. If I were the CM, I would have allowed this for this year, and then started on a wider consultation immediately.

    I am not for Samacheer Kalvi. However I am against what Jayalalitha is doing now. There will be court battles (as the PIL has already started) and being a rigid person, she will stick to her stand, and god knows where this is going to end.

    The priorities of this government should be on a whole lot of other areas.

    By the way, Coke and Pepsi examples are not correct. Karunanidhi and Jayalalitha are not running their personal governments. They are running people's government, they are mere trustees when they are ruling.

    Anyway, as I predicted, the next most important thing she has announced is scrapping of Legislative Council. Watch out for Kalainjar Kappeettu Thittam finding itself in a hot soup - not just in a name change but the model itself may change (here there is scope for improvement but I am not sure whether that will happen...)

    We are in for interesting times!

    ReplyDelete
  37. நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே 'நாம் ' ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் 'நாம்' ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் -

    ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.

    chennai.iac@gmail.com
    iacchennai.org

    சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222


    சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
    9710201043

    சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168


    சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079


    பகத்சிங்

    ReplyDelete
  38. For Jaya everything that has happened in last 10 years has to be reversed. Either She or that yellow towel "rationalist" rascal do not behave like they are trustees of a people's government. They behave as if it is their own government and for them world will end after the next election. What ever development TN has seen is not because of dravidian politics, it is in spite of this dravidian politics.

    ReplyDelete
  39. Interesting article, Thanks for Badri to starting the discussion, in a democracy, discussions are very important. The blog world is encouraging such discussions;
    In a democracy the institutions have to be free from the government clutches. Their responsibility should only be limited to governing those not dictating what is happening inside. Also, the people who are at the helm of these institutions should their allegiance to the people, not the governing party. That is democracy, that way, we would not have ended up with Karuna's poems in these text books, and thereby invoking Jaya's ire.
    Its stupidity on everyone's part, and valuable tax money is wasted. We have been a democracy for 60 years, not sure, when we will become a mature democracy.
    One thing for sure, the politicians have to change first, or the people have to change them. We seem to have no alternatives between two devils. So thats the starting point, but the most difficult one to kick off.

    ReplyDelete
  40. The strugle between two party leaders of Tamilnadu is on beginning stage. It will be exposed in the days are comming. The ruling party's vengence will kown by the people of tamilnadu and knowing clearly by the activities of former actress of tamil cinema This was disclosed very clearly by ex minister RMV long ago.The people of tamilnadu will be suffered in the years to com

    ReplyDelete
  41. my mom is a retired teacher. She did VRS due to this samacheer kalvi. She had 30+ yrs experience. She & her colleagues didnt like that teaching system. They worried a lot of being the kids get spoiled with the samacheer kalvi. There is no evaluation , no fail. Even the parents started moving their kids to matriculation instead of govt schools/govt aided schools. Finally my mom decided to quit her job, as she doesnt want to see these things and the students getting spoiled..

    Kudos to J.J. dont support samacheer kalvi.

    ReplyDelete
  42. Why cant TN adopt CBSE syllabus? Most competitive exams are based on CBSE. The CBSE standards are definitely better than those currently adopted in TN.
    thyagarajan

    ReplyDelete
  43. உங்கள் தமிழ்பேப்பரில் ஒருவர் கட்டுரையில் ஆப்பில் உதாரணம் கொடுத்திருந்தார். அது குறித்து உங்கள் பதில் என்ன?

    ReplyDelete
  44. சி.பி.எஸ்.இ பாடதிட்டம் மிகவும் கஷ்டம் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். குஜராத், மஹராஷ்டிரா மாநிலங்களில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட ஸ்டேட் போர்ட் சிலபஸ் படிக்கிறார்கள்.

    ReplyDelete