Wednesday, September 12, 2007

ஆதவன் நாவல்கள் ஆங்கிலத்தில்

ஆதவன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர். மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். பல சிறுகதைகள், குழந்தைகளுக்காகக் கொஞ்சம், சில குறுநாவல்கள், இரண்டு நாவல்கள் எழுதியிருந்தார்.

அவரது நாவல்கள் 'என் பெயர் ராமசேஷன்', 'காகித மலர்கள்' இரண்டையும் போன்று எனக்குத் தெரிந்து தமிழில் வேறு யாரும் எழுதவில்லை. இந்த இரண்டு நாவல்களும் தற்போது உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளன. அவரது பிற படைப்புகள் - சிறுகதைத் தொகுதி, குறுநாவல் தொகுதி - இரண்டும் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளன.

இப்பொழுது அவரது இரண்டு நாவல்களும் ஆங்கிலத்தில் Indian Writing என்ற பதிப்பின் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

I, Ramesehan
Paper Flowers

ஆதவனை நேரடியாகத் தமிழில் படிக்க முடியாத பிற மொழி பேசும் நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள்!

1 comment:

  1. நல்ல விஷயம்.தகவலுக்கு நன்றி பத்ரி

    ReplyDelete