Tuesday, September 18, 2007

முஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு

தமிழக அரசு ஓர் அவசரச்சட்டத்தை இயற்றி, கிறித்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தலா 3.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்துள்ளது. இது கல்வியிடங்களுக்கும் மாநில அரசு வேலைகளுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் இதுவரை 69% இடங்கள் வெவ்வேறு சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் (BC): 30%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC): 20%
அட்டவணைப் பிரிவினர் (SC): 18%
பழங்குடியினர் (ST): 1%
மீதமுள்ள 31% இடங்கள் பொதுப்பட்டியல் எனப்படும். இதில் அனைவரும் போட்டியிடலாம்.

இனி, இட ஒதுக்கீடு இப்படி ஆகும்.
கிறித்துவர்கள் (C): 3.5%
முஸ்லிம்கள் (M): 3.5%
ஹிந்து பிற்படுத்தப்பட்டோர் (BC): 23%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதில் சில கிறித்துவ, முஸ்லிம்கள் இருக்கலாம்) (MBC): 20%
அட்டவணைப் பிரிவினர் (SC): 18%
பழங்குடியினர் (ST): 1%
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள், கிறித்துவர்களின் எண்ணிக்கை, கீழ்க்கண்டவாறு:
தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை: 62,405,679
முஸ்லிம்கள்: 3,470,647 (5.6%)
கிறித்துவர்கள்: 3,785,060 (6.1%)
இந்த அறிவிப்பை எதிர்பார்த்ததுபோல கிறித்துவ, முஸ்லிம் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். ஹிந்து முன்னணியின் ராமகோபாலன் நீதிமன்றம் செல்வதாகக் கூறியுள்ளார்.

ஒருவிதத்தில் இந்த இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், கிறித்துவர்களுக்கு எதிராகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் பிறபடுத்தப்பட்டோருக்கான 30% இடங்களில் 3.5%க்கும் மேற்பட்ட இடங்களை கிறித்துவர்கள் பெற்றுவந்தனர் என்பது என் யூகம். (தவறாகவும் இருக்கலாம்.)

பாமகவின் ராமதாஸ் 100% இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு சாதி/உட்பிரிவுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப இடங்களைப் பிரித்துக் கொடுக்கவேண்டுமாம். ஐயங்கார்கள் என்றால் வடகலைக்கு இத்தனை, தென்கலைக்கு இத்தனை என்றும் செட்டியார்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் இத்தனை இத்தனை என்றும் போகவேண்டுமா என்று அவர் சொல்லவில்லை.

இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்துபவர்கள், இட ஒதுக்கீடு எந்த அளவு வரை செல்லவேண்டும் என்பதை கவனமாக யோசிக்கவேண்டும்.

9 comments:

  1. பத்ரி, இந்த 'ஹிந்து பிறபடுத்தப்பட்டோர் 23%'இல் முஸ்லீம், கிறிஸ்தவ பிற்படுத்தப்பட்டோர் போட்டியிடமுடியுமா?

    நன்றி,பிரசன்னா

    ReplyDelete
  2. பிரசன்னா: முடியாது. ஆனால் இவர்கள் 31% பொது இடங்களுக்குப் போட்டியிடலாம்.

    ReplyDelete
  3. As a Christian, I don't like these kinds of reservations. It will unnecessarily create trouble in communities.

    ReplyDelete
  4. If I convert to christianity, can I get reservation benefit. I am the so called upper caste

    ReplyDelete
  5. If I convert to christianity, can I get reservation benefit. I am the so called upper caste.

    May not be possible as not all christians are civered by this
    reservation.However your question is interesting. Perhaps you can
    give it a try :).

    ReplyDelete
  6. //பிரசன்னா: முடியாது. ஆனால் இவர்கள் 31% பொது இடங்களுக்குப் போட்டியிடலாம்.//

    அப்பிடியா.....
    அரசானை வந்துவிட்டதா... அதில் தான் தெளிவாக இருக்க வேண்டும்

    //If I convert to christianity, can I get reservation benefit. I am the so called upper caste//
    அரசானையில் பார்க்க வேண்டும்

    ReplyDelete
  7. பத்ரி அவர்களுக்கு:
    காலம் கடந்த பின்னூட்டம். எனினும்...
    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் முஸ்லிம்கள் இல்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் பி.சி.யிலும், வெகு சிலர் பொது இடங்களில் போட்டியிடுவோராகவும் உள்ளனர்.

    மேலும், முஸ்லிம்-கிறிஸ்துவர்கள் மீதமுள்ள 23%-இல் போட்டியிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அரசாணையில் அவ்வாறு இல்லையே! விளக்கமளிக்கவும்.

    ReplyDelete
  8. Tamil Nadu prefers Hindi speakers over Tamils! Why in the 69% reservation in Tamil Nadu several Hindi and Telugu speaking castes get preference. In road projects in Tamil Nadu also Hindi speakers are getting reservation. Now in the construction of the new MLA complex, THERE ARE NO TAMIL WORKERS. So Tamil language is getting removed by means of CBSE schools (DMK Education minister Thennarasu has excused CBSE from teaching Tamil and allowed Hindi imposition in CBSE schools in Tamil Nadu), Tamils are getting removed. 69% reservation is a great 'achievement' proclaimed by ADMK and DMK and PMK parties. But no one questioned why so many Hindi speaking castes (particularly in Muslim communities and also Telugus) getting special priviledge. In most of the Highway, Flyover, Bridge and Subway projects also THERE ARE NO TAMIL WORKERS!!! ONLY HINDI WORKERS !!!!

    Truth is this.

    The Chief Minister of Tamil Nadu Mu Karunanidhi is a Telugu.

    The leader of Paattaali Makkal Katchi Ramadoss who wants Tamil Nadu bifurcation into 3 parts - is another Telugu. PMK wants 3 Telugu chief ministers for the three bifurcated peices of Tamil Nadu.

    ReplyDelete