Thursday, December 20, 2007

ஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை - லிவிங் ஸ்மைல் வித்யா

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4, 2008 அன்று தொடங்குகிறது. அதையொட்டி பல பதிப்பகங்களும் பல புத்தகங்களை சிறப்பாகத் தயாரித்திருப்பார்கள்.

நியூ ஹொரைசன் மீடியா சார்பாக, கிழக்கு பதிப்பகம், வரம் வெளியீடு, நலம் வெளியீடு, பிராடிஜி புத்தகங்கள் (தமிழ், ஆங்கிலம்), புலரி, இண்டியன் ரைட்டிங்க், ஆக்சிஜன் புக்ஸ், கிழக்கு/வரம் ஒலிப் புத்தகங்கள் என பல பதிப்புகள் வெளியாகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என்று நான் கருதுபவற்றை அடுத்த சில பதிவுகளில் எழுத உள்ளேன்.

முதலாவதாக

வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கைப் பயணம் பற்றிய நூல். இதன் சிறப்பு ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.



ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய வித்யா இன்று தொண்டு அமைப்பு ஒன்றில் பணிபுரிகிறார். அவர் எடுத்த முடிவால் அவரது வாழ்க்கையிலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்னைகள், இந்தியாவில் திருநங்கைகளின் நிலை, அவர்களது போராட்டம், அவர்களது அபிலாஷைகள் போன்றவற்றை இந்தப் புத்தகம் வெளிக்கொண்டுவருகிறது.

ஒவ்வோர் அத்தியாயமாக அவர் இந்தப் புத்தகத்தை அனுப்பும்போதும் நான் படித்துவந்தேன். இதை எழுதும்போது வித்யா எத்தனை மனச்சங்கடங்களை அனுபவித்திருப்பார் என்பதை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் புத்தகம் பலரையும் சென்றடையவேண்டும் என்பதால் உடனடியாகவே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கொண்டுவந்துவிடவேண்டும் என்று செயல்பட்டோம்.

திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.

14 comments:

  1. நல்ல முயற்சி பத்ரி.

    வாழ்த்துக்கள் வித்யா

    ReplyDelete
  2. A good effort Badri. Am reading the compilation of adhavan's writings now. This book would be the next from kizhakku.

    -Mathy

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வித்யா , பத்ரி ....

    ReplyDelete
  4. //இந்தப் புத்தகம் பலரையும் சென்றடையவேண்டும் என்பதால் உடனடியாகவே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கொண்டுவந்துவிடவேண்டும் என்று செயல்பட்டோம்.//

    Good!

    Thanks for the same.

    ReplyDelete
  5. ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாவது சிறப்பு. கிழக்கு பதிப்பகத்துக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. blog கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் பத்ரி sir,
    வாழ்த்துகள் வித்யா,பத்ரி.

    நன்றி
    கார்த்திக்

    ReplyDelete
  7. பத்ரி,

    நீங்கள் அறிமுகப்படுத்துகிற புத்தகங்களியே நல்ல முயற்சி இதுதான். வலைப்பதிவு வாசகர்களுக்கு முதலில் அறிமுகமான வித்யா, பிறகு (அவள்) விகடன் முதலிய புத்தகங்களில் பேட்டி காணப்பட்டபோதே சந்தோஷம் அடைந்தேன். இப்போது அவர் புத்தகம் வருவது, வாழக்கையின் இருண்ட பக்கங்களில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் அரவாணிகளின் குரலை உரத்து ஒலிக்கும். (கொஞ்சம் சத்தம் அதிகமென்றாலும் கூட...)

    ReplyDelete
  8. ரொம்ப நல்ல விஷயம்,
    வாழ்த்துக்கள்!

    அட்டப் படம் சூப்பர்!
    யார் எடுத்தது?

    ReplyDelete
  9. //நீங்கள் அறிமுகப்படுத்துகிற புத்தகங்களியே நல்ல முயற்சி இதுதான்.//

    மூக்கு சுந்தரின் கருத்தை வழிமொழிகிறேன். அவருடைய வலைப்பதிவை படியாதிருந்தால், திருமங்கைகளின் பிரச்னைகள்/குமுறல்கள் நம்மை அடைந்திருக்காது. அவருடைய நூலின் மூலம் மேலும் தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வித்யாவுக்கும், கிழக்குக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  10. கிழக்குப் பதிப்பகத்திற்கும் வித்யாவிற்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. வெளிநாட்டில் இருப்போர் எப்படி வாங்கலாம் என்று சொன்னால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  12. நல்லதொரு செயல் பத்ரி. பதிப்பகத்திற்கும் வித்யாவிற்கும் பாராட்டுகள்.

    ReplyDelete