இன்று மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களில் (விண்டோஸ்) தமிழில் எழுத சில மென்பொருள்கள் பயன்பட்டுவருகின்றன. பல எழுத்துக்குறியீடுகள் இன்னமும் புழக்கத்தில் உள்ளன. எழுத்துக்களை உள்ளிடுவதிலும் பல முறைகள் புழக்கத்தில் உள்ளன. டைப்ரைட்டிங் முறை; தமிழ்99 முறை; ஃபொனெடிக் எனப்படும் ஒலிவடிவ உள்ளீடு, பாமினி, இன்னபிற.
நாளையே புதிய யூனிகோட் குறியேற்றம் தமிழில் வரலாம். (வராமலும் போகலாம்.)
அதேபோன்று இந்திய மொழிகள் பலவற்றிலும் பல எழுத்துக்குறியீடுகள், பல உள்ளீட்டு முறை ஆகியவை இருக்கலாம்.
உலக மொழிகள் பலவற்றுக்கு இன்று யூனிகோட் எழுத்துகளை அடிக்க மென்பொருள் இல்லாமல் இருக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வாக, மிகச் சிறிய ஒரு கோப்பாக, ஒரு செயலியை வடிவமைத்துள்ளோம். பெயர் NHM Writer. இப்போதைக்கு தமிழில் பல்வேறு உள்ளீட்டு முறைகளில், எழுத்துக் குறியீடுகளில் எழுத்துகளை உருவாக்க உதவும் ப்ளகின் (plugin). சுமார் 800 கிலோபைட் அளவுள்ளது. மேலும் இந்த மென்பொருளை பொதித்துக் கொண்டால், விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் தமிழ் யூனிகோட் உடையாமல் தெரிய என்ன செய்யவேண்டுமோ அதனையும் செய்துவிடும்.
இப்போதைக்கு விண்டோஸ் எக்ஸ்பியில் முழுமையாகவும், விண்டோஸ் விஸ்டாவில் ஓரளவுக்கும் சோதனை செய்யப்பட்டு இயங்குறது. ஓரிரு பிழைகள் இருக்கலாம். தெரியவந்தால் அதனைச் சரி செய்து தருகிறோம்.
எந்தப் புதிய மொழியாக இருந்தாலும், எழுத்துக் குறியீடாக இருந்தாலும், உள்ளீட்டு முறையாக இருந்தாலும், அவற்றை ஒரு xml கோப்பாக உருவாக்கி பயனரே சேர்த்துக்கொள்ளலாம். உடனே அந்த மொழி, குறியீடு, உள்ளீட்டு முறைக்கு ஏற்றவாறு இந்தச் செயலி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். புதிதாக மென்பொருளை மாற்றி வடிவமைக்க வேண்டியதில்லை.
இந்த மென்பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம்.
மென்பொருளைக் கீழே இறக்கிக்கொள்ள
இந்த மென்பொருளை லினக்ஸுக்கு திறமூல அடிப்படையில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்த வேலை முடிந்ததும், அதுபற்றிய தகவலை அளிக்கிறேன்.
இந்த மென்பொருளுடன், ஃபொனெடிக் முறையில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்றவற்றுக்கு யூனிகோட் எழுத்துக்களை அடிக்கும் வண்ணம் உருவாக்கியுள்ளோம். கூடியவிரைவில் டைப்ரைட்டிங் முறையையும் சேர்த்து வெளியிடுவோம்.
இதுகுறித்து மேற்கொண்டு தகவல் வேண்டினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
18 hours ago
வாழ்த்துக்கள்
ReplyDeleteGood one.
ReplyDeleteIt has phonetic, tamil typewriter, tamil net 99 key board. Do you have any plan to include Anjal layout.
Thanks,
Jayaradha
Phonetic is close enough to (or same as) Anjal layout.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
பதிவிறக்கிப் பயன்படுத்திப் பார்த்தேன்.
1) OnScreen keyboard மற்றும் Key preview வசதிகள் அருமை.
2) ToogleKeys குறிப்பிட்ட சில விசைகளை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு இருக்கிறது. எ-கலப்பை போல எந்த விசையை வேண்டுமானால் தெரிவு செய்து கொள்ளும் வசதியைத் அடுத்த வெளியீட்டில் தர முடிந்தால் நன்றாய் இருக்கும்.
நன்றி
After installing on my PC running WinXP/SP2, my virus scanner complained about the newly installed file as a possible virus. I am running TrendMicro virus scanner.
ReplyDeleteIt gave the following info after deleting some files:
http://www.trendmicro.com/vinfo/grayware/ve_graywareDetails.asp?GNAME=POSSIBLE%5FINFOSTL
பத்ரி
ReplyDeleteவாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Bamini Unicode இல் நான் கண்டுள்ள வழுக்கள்:
1). ஒ + ள விசைகள் சரியாக ஔ (U+0B94) க்கு மாற்றுகிறது. ஆனால் பினவரும் விசைமாற்றங்கள் ஏற்படுத்தப் படவேண்டும்:
ஒ + ள + ் --> ஒள்
ஒ + ள + ா --> ஒளா
ஒ + ள + ி --> ஒளி
ஒ + ள + ீ --> ஒளீ
தற்போது மேறகண்ட நான்கிலும் தவறாக ஔ (U+0B94) தான் வெளிவருகிறது
2) அவ்வாறே ஒவ்வொரு எகர-மெய் + ளகரம் அடுத்து { ், ா, ி, ீ } இல் ஒன்றுடன் விசை யடி இடுகையில் அவ் எகர-மெய் + { ள், ளா, ளி, ளீ} என வராமல் அம் மெய்யின் ஔகார-மெய்யாகவே வெளிவருகிறது - உதாரணமாக த + ெ + ள + ி --> தெளி என வராமல் தௌ (U+0BA4 U+0BCC) என தவறாக வருகிறது.
Tamil Typewriter Unicode இல் மேற்கூறிய வழுக்களில் இறுதி விசை ஆகாரம் ஆயின் அவ்வாறான வழுக்கள் உள்ளன.
அதாவது
ஒ + ள + ா --> ஒளா க்குப் பதில் ஔ (U+0B94) வருகிறது.
த + ெ + ள + ா --> தெளா க்குப் பதில் தௌ (U+0BA4 U+0BCC) என தவறாக வருகிறது.
Bamini Unicode இல் "ளூ" பெறுவதற்கு விசைகள் அமைக்கப் பட்டுள்ளனவா?
நன்றி
`~சேது
பத்ரி,
ReplyDeleteஅருமையான வசதிகள். வேகமாக இயங்குகிறது. பாராட்டுக்கள்.
எந்தத் தமிழ் விசைப்பலகையையும் பழகாமல் முதன் முதல் இந்த மென்பொருளைப் பயன்படுத்த வருபவர்களுக்கு தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்தச் சொல்லி ஒரு பரிந்துரையை settings பகுதியில் தர இயலுமா?மற்ற விசைப்பலகைகளைக் காட்டிலும் தமிழ்99 மேம்பட்டது என்று நீங்கள் உடன்படும் பட்சத்தில். நன்றி.
The kbd driver is good. It is said it provides for "phonetic"; in fact it is for "transliteration" like anjal, ekalappai, azagi etc.
ReplyDeleteHelp file in pdf, and developper help in pdf are required for other uses. ISO standards available for Transliteration. Phonetic is typewriter, where ALL vowel marks are to right of base consonant.Atleast one more basket, together with normal and shift will be useful in future, as an international kbd driver. Best wishes for the effort from, V.ramasami of Aruppukottai.
when i want to link some text using the pop-up window in blogger or wordpress i am unable to change the keymap inside it. It's an annoying bug as i give lot of links.
ReplyDeleteநன்றி....
ReplyDeleteஉங்கள் கருவி மூலம்தான் இப்போது நான் தட்டச்சிடுகின்றென். அருமையாக வேலைசெய்கின்றது.
பத்ரி
ReplyDeleteவழு அறிக்கைகள தெரிவிக்க வலைத்தள அல்லது மின்னஞ்சல் முகவரி தாருங்கள்
சேது
முதலில் இந்த மாதிரி துணிச்சலான முயற்சிக்கு வாழ்த்துக்கள். நான் எ-கலப்பையை நீண்டகாலமாகப் பயனபடுத்துகின்றேன் (அதற்கு முன்னர் நளினம் மென்பொருளைப் பயன்படுத்தினேன்). விண்டோஸ் நிறுவும்போதே நிறுவக்கூடியதாக என்லைட் (nLite)எகலப்பை Addon ஒன்றை ஆக்கியிருந்தேன் எனினும் எ-கலப்பை மென்பொருளை உருவாக்குவதற்கு உதவிய ரவல்டீ சாப்ட் ஊடாக முறைப்படி அனுமதி இன்னமும் கிடைக்காததால் பின்போடப்பட்டுள்ளது. உங்களின் NHM Writer ஐ இது போன்ற nLite Addon ஐத் உருவாக்கலாமா? இதற்கு வசதிகள் உண்டா? இருப்பின் அனுமதியளிப்பீர்களா? அறிய ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteஉமாபதி: நிச்சயமாக. நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். இதை எப்படிச் செய்யலாம் என்பது பற்றிப் பேசுவோம்.
ReplyDeletethanks and wish to you
ReplyDeleteபத்ரி, காலதாமதமாகப் பதிலளித்தமைக்கு மன்னிக்கவும். nlite addon ஐ உருவாக்குவதற்கு http://www.msfn.org/board/Add-Maker-Nlite-124-Update-06-17-2006-t73008.html ஐப் பார்க்கவும். பின்னர் Silent Installer ஐ உருவாக்குவதற்கான சுவிக்குக்களை கண்டறியவேண்டும். யாஹூ! தேடுபொறியில் தேடியதில் டவல்டீசாப்ட் மென்பொருளுக்கு -s -s ஐப் பாவிக்கின்றார்கள் என்று தெரிந்தது. இதை வைத்துக் கொண்டு ஓர் addon தயாரிக்கலாம். இதை உருவாக்க முன்னர் ஓர் வெற்றுக் கோப்புறையில் இந்தக் கோப்பை மாத்திரம் சேமிக்கவேண்டும். இதுபோல ஏதாவது வழிமுறைகள் NHM writer இற்கும் இருக்கக்கூடும். Slient installer ஐ (அதாவது பயனரிடம் ஒருகேள்வியும் கேட்காமல் எவ்வாறு நிறுவது என்பதை நீங்கள் தெரிவித்தால்) மிகுதியை நானும் சேர்ந்து முயற்சித்துன் பார்க்கின்றேன்.
ReplyDeleteவணக்கம் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் மென்பொருளை தரையிரக்க முடியவில்லை
நான் இணையத் தளங்களில் எல்லாம் தேடி களைத்துவிட்டேன்
முதலில் லதா தமிழ் எழுத்துரு பயன்படுத்தி NEW FOLDER ற்கு தமிழில் பெயரிடுவேன். பின்பு கணனிக்கு புதிய WINDOWS பதித்ததும் லதா தமிழ் எழுத்துரு மறைந்துவிட்டது
இப்பொழுது அப் பெயரிட்ட படிவ்ங்கள் எல்லாம் சதுரம் சதுரமாக எழுத்துரு தென்படுகிறது. தயவு செய்து உதவி செய்யவும்
தமிழா எனும் பெயருடைய
(keyman) மென்பெருளில் எழுதும் பொழுது இணையத்தளத்தில் எழுதினால் தமிழில் வரும்
புதிய NEW Folder இல் எழுதினால் வருவதில்லை உதவி செய்யவும் நன்றி
எனது மின் அஞ்சல் adminissan@msn.com
NHM செயலியை எழில்நிலா தளத்திலிருந்து நேரடியாக இறக்குவதற்கு ஒரு இணைப்புப்பக்கத்தை உருவாக்கலாம் என் எண்ணுகின்றேன். இதற்கு உங்கள் அனுமதியை எதிர்பார்க்கின்றேன்.
ReplyDeleteஅன்புடன்
மகேன்
http://ezilnila.com
மகேன்: செய்யுங்கள். முழு அனுமதி உண்டு.
ReplyDeleteஅம்மா அன்பு வணக்கம்
ReplyDeleteI tried using it. Works nice.
Date: 08 March 2009
rajashokraj@yahoo.com
எவ்வாறு கீமேப் எக்ஸ் எம் எல் பைல் உருவாக்குவது.
ReplyDeleteHow to create xml file for exiting tamil font..
about the contents of xml file and its tags..etc
பற்றி கூறவும். நான் ஏற்கனவே சில தமிழ் எழுத்துருக்கள் வைத்துள்ளேன். அவற்றிற்கு xml file உறுவாக்க விரும்புகிறேன்... உதவவும். நன்றி... முருகேசன்
மிக்க நன்றி சார்.
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம். on screen keyboard நான் ரைட் கிளிக் செய்தேன் மானிட்டரில் தமிழில் வரவேண்டிய எழுத்துக்களெல்லாம் கட்டம் கட்டமாக வருகிறதே ஏன் கொஞ்சம் உதவ முடியுமா தயவு செய்து...காத்திருக்கிறேன். reply to janhavi.1967 @ rediff mail.com
Annoymous, நீங்கள் எந்த இயங்குதளத்தைப் பாவிக்கின்றீர்கள் என்று கூறவில்லை. விண்டோஸ் எக்ஸ்பியாக இருக்கக்கூடும் என்று யூகிக்கின்றேன். Start ->Run ->intl.cpl என்று தட்டச்சுச் செய்யவும். இதில் languages என்ற தத்தலில் (tab) Install Files for Complex Scripts என்றைத் தேர்வு (Tick) செய்யவும். இப்போது அநேகமாக விண்டோஸ் சீடியைக் கேட்கும். உள்நுழைத்ததும் நிறுவப்பட்டுவிடும். கணினியை மீள்துவக்கம் செய்துவிட்டு பிரச்சினை இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும். Onboard Screen சரியாக வேலை செய்யவேண்டும்.
ReplyDeleteபத்ரி சேஷாத்திரிநாதன்,
ReplyDeleteசில காலம் முன்பு விண்டோஸ் நிறுவலுடன் சேர்த்து நிறுவக்கூடிய என்லைட் சேர்க்கை ஒன்றை உருவாக்குவதற்கு அனுமதி கேட்டிருந்தேன். இதை உருவாக்கி http://cid-afe0590778dade55.skydrive.live.com/self.aspx/nLite/NHMWriter.7z தளத்தூடாகப் பதிவிறக்கம் செய்யலாம். காலதாமதமாகப் பதிலளித்தமைக்கு மன்னிக்கவும். ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் தயவுசெய்து தெரிவிக்கவும்.
நல்ல முயற்சி யாதும் ஊரே யாவரும் கேளீர்
ReplyDelete@mohamed cassim,
ReplyDeleteகேளீர் - listen
கேளிர் - relatives
கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றே எழுதியுள்ளார். பார்க்க http://tawp.in/r/ff8