Friday, December 28, 2007

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian Writing

Indian Writing - Stall Number 162

Indian Writing பதிப்பின் நோக்கம் இந்திய மொழிகளிலிருந்து தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்துக்கு மாற்றுவது. முதலில் தமிழில் ஆரம்பித்துள்ளோம். அடுத்து மலையாளம் ஆரம்பமாகவுள்ளது.



இதுவரையில் 20 புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அவைதவிர, மூன்று ஒரிஜினல் ஆங்கில நாவல்களையும் பதிப்பித்துள்ளோம். இவை மூன்றுமே இந்த கதாசிரியர்களின் முதல் முயற்சிகள்.

சமீபமாக வந்துள்ளவற்றுள் முக்கியமாகச் சொல்லப்படவேண்டிய நான்கு நாவல்கள்:

1. இரா.முருகனின் அரசூர் வம்சம் - The Ghosts of Arasur
2. யூமா வாசுகியின் ரத்த உறவுகள் - Blood Ties
3. ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு - Lizzy's Legacy
4. சா.கந்தசாமியின் சூரிய வம்சம் - Sons of the Sun



முந்தைய பதிவு: ஆடியோவில் தமிழ் சிறுகதைகள்

3 comments:

  1. Is there any chance of translating
    horry potter books into tamil?. If somebody is having that plan means it will be very nice. I am sure many will like

    ReplyDelete
  2. அன்புள்ள செந்தில், இப்போது நாங்கள் இண்டியன் ரைட்டிங் என்ற பதிப்பில் முயற்சி செய்வது அனைத்துமே இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு தீவிர இலக்கியங்களை மொழிபெயர்ப்பது.

    பிறமொழிகளிலிருந்து தீவிர/கேளிக்கை எழுத்துகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் வேலையை இன்னமும் முழுமையாக, ஒழுங்காக ஆரம்பிக்கவில்லை. சில வருடங்கள் ஆகலாம். அந்தச் சமயத்தில் ஹேரி பாட்டர் இருக்குமா அல்லது வேறு எவராவது அதை மொழிபெயர்த்திருப்பாரா என்று தெரியாது.

    ReplyDelete
  3. பத்ரி, ப்ளாக் தலைப்பில் தமிழ் எழுத்துக்கள் உடையாமல் தெரிய ஏதேனும் ஹெச்டிஎமெல் இல் புதிதாக செய்து இருக்கிறீர்களா? (லினக்ஸ் இல்) பயர்பாக்ஸ் பிரச்சினை என்று நண்பரிடம் சொன்னால் (உங்கள் பக்கத்தை குறிப்பிட்டு) சரியாக தெரிகிறதே என்கிறார். என்னுடதையும் பார்த்து எப்படி சரி செய்யலாம் என்று சொன்னால் நல்லது.
    http://nallaseithi.blogspot.com

    நன்றி
    திவா

    ReplyDelete