சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், புத்தகம் பேசுது மாத இதழ் ஆகியவை இணைந்து இரண்டு நாள் கருத்தரங்கத்தை நடத்துகின்றனர்.
நாள்: 22, 23 ஏப்ரல் 2009
இடம்: பவள விழா அரங்கம், மெரீனா வளாகம், சென்னை பல்கலைக்கழகம்
நிகழ்ச்சி நிரல்:
22/4/2009
10.00-11.00: தொடக்க விழா, நூல் வெளியீடு
11.00: அமர்வு 1: புத்தக உருவாக்கமும் வெளியீட்டு வரலாறும்
தலைமை: இரா.முத்துக்குமாரசாமி
19-ம் நூற்றாண்டில் புத்தக உருவாக்கம்: வீ. அரசு
புத்தக உருவாக்கம் 1900-1945: அ.சதீஷ்
சுதந்தரத்துக்குப் பிந்தைய காலங்கள் - புத்தக உருவாக்கம் 1947-1990: ஸ்ரீரசா
பின்காலனிய உலகமயச் சூழலில் புத்தக உருவாக்கமும் வெளியீட்டு முறைகளும் 1990-2009: எஸ்.பாலச்சந்திரன்
14.00: அமர்வு 2: புத்தகத்தின் உள்ளடக்க முறைகள்
தலைமை: ச.தமிழ்ச்செல்வன்
புனைகதைகள் 19-ம் நூற்றாண்டு: பெருமாள் முருகன்
மரபு இலக்கியங்கள்: 1900-1945: கா.அய்யப்பன்
அரசியல் குறுநூல்கள்: 1947-1990: ஆ.சிவசுப்ரமணியன்
23/4/2009
10.00: அமர்வு 3: புத்தக உருவாக்கத்தில் தொழில்நுட்பம்
தலைமை: மா.சம்பந்தன்
19-ம் நூற்றாண்டில் எழுத்து வடிவங்களும் அச்சு முறைகளும்: தமிழ்நாடன்
இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும் உருவான தொழில்நுட்பம்: அசோக்குமார்
இன்றைய தொழில்நுட்பம் - இணையத்தில் தமிழ் நூல்கள்: விருபா து. குமரேசன்
நூல் வடிவமைப்பு முறைகள் - செ.ச.செந்தில்நாதன்
தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோ பீட்டர்
14.00: அமர்வு 4: புத்தக வெளியீடுகளும் நிறுவனங்களும்
தலைமை: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
பத்தொன்பதாம் னூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் பதிப்புப் போக்குகள் - வெ.ராஜேஷ்
காலனிய காலத்தில் செய்த பதிப்புகள்: பொ.வேல்சாமி
பதிப்பு உலகில் மறைமலையடிகள் நூலகத்தின் பங்களிப்பு (1947-90): ரெங்கையா முருகன்
பிந்தைய காலனியச் சூழலில் நூல் வெளியீடு (1990-2009): மனுஷ்யபுத்திரன்
17.00 நிறைவு விழா
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
பகிர்விற்கு நன்றி பத்ரி.
ReplyDeleteஏப்ரல் 22 உலக புத்தக நாள் சிறப்பாக தானே இவையெல்லாம்.
கிழக்கு சார்பாக ஏதும் விசேஷம் இல்லையா..??
விசேஷமாக எதும் இல்லை. அன்றும் புத்தகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்போம். மற்றுமோர் இடத்தில் - பல்லாவரத்தில் - புத்தகக் கண்காட்சி ஆரம்பிப்போம். விருகம்பாக்கத்தில் நடக்கும் கண்காட்சி தொடர்ந்து நடக்கும்.
ReplyDeleteஒரு மொட்டை மாடி கூட்டம் போட்டிருக்கலாம்.
ReplyDeleteஒ.கே.
தகவலுக்கு நன்றி.
பின் காலனிய/பிந்தைய காலனிய என்று குறிப்பிட்டு 1990 என்று போடுபவர்களுக்கு
ReplyDeleteபின் காலனியம் என்றால் என்னவென்று தெரியுமா.இல்லை post-modern என்பது
போல் அதையும் சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்களா.'பின்காலனிய உலகமயச் சூழலில் 1990' என்று எழுதுவதன்
மூலம் என்னதான் சொல்லவருகிறார்கள்.