ஒரு அவலம் அண்டை நாட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பல ஆயிரம் தமிழர்கள் சிங்கள் ராணுவத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் மாட்டிக்கொண்டு உயிரை இழந்து, திகிலில் வாழ்ந்துவருகின்றனர்.
இன்றும் இந்தியாவில் ஒருமித்த குரல் இல்லை. தமிழகத்துக்கு வெளியே யாருக்கும் இதைப்பற்றிய பிரக்ஞை இல்லை. இதற்காகப் பிறரை குற்றம் சொல்லக்கூடாது. நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.
பிரபாகரன் தீவிரவாதியா, இல்லையா என்ற விவாதத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போதைய தேவை அது இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதி நாளை ஒரு வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நான் அலுவலகம் வந்து வேலை செய்யப்போகிறேன். இந்த வேலை நிறுத்தங்களும் கடிதங்களும் தந்திகளும் மாபெரும் ஏமாற்றுவேலை. அரசியல் எதிரிகளும் பத்திரிகையாளர்களும் சூழ்ச்சி செய்து தன்னை சிக்கவைத்துவிட்டனரே என்ற பதற்றத்தில், தேர்தல் நெருங்குகிறதே என்ற பயத்தில் முதல்வர் கருணாநிதிக்குத் தோன்றிய கடைசி அஸ்திரம் இது.
ஒரு பக்கம், காங்கிரஸ் சற்றும் கவலைப்படாமல் தன் பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி பேசுகிறது. அதற்குச் சரியான பதில் சொல்ல வக்கின்றி, காங்கிரஸைத் தன் விருப்பத்துக்கு இழுக்க முடியாமல், காங்கிரஸை எதிர்த்தால் தன் ஆட்சி போய்விடுமே என்ற பயத்தில் கருணாநிதியின் சொல்லும் செயலும் மதிப்பின்றிப் போய்விட்டன.
***
இலங்கை இன அழிப்பு எந்த வகையில் இந்தியாவின் தேர்தலை பாதிக்கும்? முக்கியமாக தமிழ்கத்தில் அதன் தாக்கம் எப்படியிருக்கும்? இரு பெரும் அணிகளுக்கு இடையில் கருத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் வித்தியாசமில்லை. ஆனால் வாக்குகளுக்காக ஜெயலலிதாவால் பல்டி அடிக்கமுடிகிறது. காங்கிரஸால் அது முடியவில்லை. காங்கிரஸ் இருக்கும் அதே அணியில் இருக்கும் தொல்.திருமாவளவன், ஏதோ லாஜிக்கைப் பயன்படுத்தி வைகோவையும் ராமதாஸையும் தாக்குகிறார்!
யார் அதிகப் பரிதாபம்? கருணாநிதியா அல்லது திருமாவளவனா என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம்தான்.
தமிழனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மாபெரும் சிக்கல். அனைத்துக் கட்சியினரும் தாங்கள்தான் ஈழத்தமிழர் நலனை முன்வைப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்கிறார்கள். ஆனால் செயலில் காட்டுவது வெறும் வேலை நிறுத்தத்தை மட்டுமே.
அரசியல்ரீதியாக, எந்த வகையில் தங்களது எதிர்ப்பை ஒருமுகப்படுத்துவது, தங்களது ஆதங்கத்தை எப்படிச் செயலாக்குவது என்று தெரியாமல் மக்கள் தடுமாறுகின்றனர். வழிநடத்த சரியான தலைவன் இல்லை. ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.
***
நான் போகும் பல இடங்களில், இலங்கை அவலம், இந்தியத் தேர்தல் ஆகியவற்றைவிட ஐ.பி.எல்தான் பெரிய விஷயமாக உள்ளது. விவாதங்கள் அதில்தான் ஆரம்பிக்கின்றன, அதில்தான் முடிகின்றன.
எந்த ஒரு கேளிக்கையும் இந்த அளவுக்கு மக்களை அலைக்கழிக்கக்கூடாது.
மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசரத் தேவை. அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
11 hours ago
மிக கடுமையான கோபம் உங்கள் பதிவில் தெரிகிறது, அது எல்லோருக்கும் புரியவேண்டுமே, எத்தனை குழந்தைகள், அப்பாவிகள் சடலமாக கிடப்பதை பார்க்கும்போது பற்றிக்கொண்டு வருகிறது சுய நலம் இப்படி எல்லா தலைவர்களையும் கொலைகாரர்களாக மாற்றிவிட்டதே என்று தோன்றுகிறது, கருணாநிதியை இலங்கைக்கு அழைத்தார்களே போய்பார்த்து ஏதாவது செய்து தொலைத்திருந்தால் ஏதாவது நடந்திருக்குமே, பந்த் நடத்துகிறார்களாம் பந்த் என்ன எழவுடா இது.
ReplyDeleteசரியான பதிவு பத்ரி.
ReplyDeleteஎல்லா ஏமாற்றங்களையும் சகித்தே பழக்கப்பட்டு விட்டது.
எதை பற்றியும் கவலை இல்லாமல் அயன் பாத்தியா, IPL பாத்தியான்னு தான் கேட்கிற தமிழனிடன் என்ன எதிர்பார்க்க முடியும்.
வந்த அத்தனை விழிப்புணர்வுகளையும் மகன், மகள், பேரன் வருங்காலம் கருதி காலில் போட்டு மிதித்தவர் இவர்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. நம் நாட்டிலே...
Even i am going to work tomorrow.
ReplyDeleteLet us see if kalaignar TV and Sun TV shut their transmission and sacrifice some revenue.
ReplyDelete//ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.//
ReplyDeleteஅதிலும் வைகோவுக்கு எந்த விதமான திட்டம்/நோக்கம் அல்லது எதிர்காலம் காத்திருக்கோ என்றே தெரியவில்லை ??
//அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்//
ReplyDeleteவழிமொழிகிறேன்!
மற்ற மாநிலத்தவரை பொறுத்தவரை..,
ReplyDeleteஇலங்கை பிரச்சனை என்பது வேற்று நாட்டு பிரச்சனை.
முக்கியமாக ஹிந்தி எதிர்ப்பின் மூலம்
தமிழனை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள்.
கிட்டதட்ட தமிழன் என்றாலே ஒரு வெறுப்பு
அவர்களிடம் இருக்க தான் செய்கிறது.
தமிழ் என்பது ஒரு சமஸ்கிரதம் கலக்காத
மொழி என்பதை கூட ஆதாரத்துடன்
புரிய வைக்க வேண்டி இருக்கிறது.
நான் சொல்வது தவறாக் கூட சிலருக்கு
தோன்றலாம்.
இந்த தேர்தலில் மக்கள்
குறைந்த பட்சம்
வைகோ & திருமாவளவனை ஜெயிக்க
வைத்தார்கள் எனில்
அவர்களுக்கு இந்த பிரச்சனையை
இந்திய அளவில் பேச வாய்ப்பாக அமையும்.
நீங்கள் சொல்வது உண்மை பத்ரி , தமிழக மக்களை தவிர மற்ற இந்தியர்களுக்கு இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் தெரியவில்லை , இதற்கு ஆங்கில மற்றும் பிறமொழி பத்திரிக்கைகள் ஒரு காரணம் . இலங்கை பிரச்சனையை எல்டிடீஇ என்ற அமைப்பின் மீது அரசாங்கத்தின் தாக்குதல் என்று நோக்குகிறார்களே தவிர அங்கு இருக்கும் தமிழர்களை பற்றி நினைப்பதில்லை. சினிமாவும் கேளிக்கைகளுமே உலகம் என்று நாம் இருக்கிறோம். நம்முடைய பிரச்சனைகளையே நாம் இன்னும் உணராமல் கேளிக்கைகளில் திளைத்து இருக்கிறோம், மணல் திருட்டால் ஆறுகள் அழிந்துக்கொண்டிருக்கின்றன சில நிறுவனங்கள் வெளிநாட்டு குப்பைகளை நம் நிலத்தில் கொட்டுகிறது. சொல்ல போனால் கலைஞர் டிவியில் பந்த் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ReplyDelete"ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது."
ReplyDelete"மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசரத் தேவை. அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்."
miga arumaiyana varigal....
முக்கியமான பதிவு.வரப்போகும் நாட்களை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.இது போகும் பாதை சரியாகத் தோன்றவில்லை.
ReplyDeleteஅங்கே மக்களுக்கு அடிப்படை உதவிகளாவது கிடைக்க வேண்டும்.அதுவே நான் வேண்டுவதாகும்.
உங்களின் கடைசி வரியும் உண்மையாகட்டும்.
//தமிழகத்துக்கு வெளியே யாருக்கும் இதைப்பற்றிய பிரக்ஞை இல்லை. இதற்காகப் பிறரை குற்றம் சொல்லக்கூடாது. நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.//
ReplyDeleteகடந்த சில வாரங்கள் வரை நானும் கூட இப்படித்தான் நினைத்திருந்தேன். இது நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளும் சமாதானம்.
இலங்கையைப் பற்றி ஒரு நிமிடத்துக்கும் குறைவாக அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் வரும் செய்தியை வைத்துக் கொண்டே எத்தனையோ அமெரிக்கர்கள், எனக்கு ஏதாவது தெரியுமா என்று அவர்களாகவே அதைப் பற்றி என்னிடம் கேட்கின்றனர், மேற்கொண்டு படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுப் படித்து அப்போராட்டத்திலுள்ள நியாயத்தை ஆதரிக்கின்றனர். அல்லது புலிகள் பற்றிய எதிர்மறைச் செய்திகளையாவது கேட்கிறார்கள். சுனாமி காலத்தில் ஒரு மாதம் தன்னார்வ மருத்துவராகத் தொண்டு செய்யச் சென்ற அமெரிக்கப் பெண்மருத்துவர் தன்வாழ்நாளையே தமிழருக்காக அர்ப்பணித்து அமெரிக்க மண்ணில் போராட்டம் நடத்துகிறார். ஆனால் இந்திய மரமண்டைகளுக்கு நாம் போய் விளக்கிச் சொல்லிப் புரியவைத்து அவர்கள் போய் டெல்லி அரசியல் நாய்களைத் தடுத்து நிறுத்தப்ப் போகிறார்களாக்கும்.
எத்தனையோ கூடல்களிலும், வேலையிலும் கூடவே நண்பர்களாகப் பழகும் இந்தியர்கள் அதைப் பற்றி நாமாக எடுத்துச் சொல்வதாக இருந்தால் கூட கேட்பதற்கு அக்கறையில்லை. ஒப்புக்கு இரண்டு சொல் சொல்லிவிட்டுப் போகிற கூட்டம்தான் பெரும்பாலும். அல்லது இந்திப் பிரச்னையை முன்வைத்து வாதம் செய்யும் இன்னொரு கூட்டம்.
இந்தியாதான் அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரி. இந்தியாவைத் தமிழர்களாகிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாதான் தமிழர்களை ஒழிக்க அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் பொழுது இந்தியர்களை எப்படி புரிய வைக்க முடியும்?
இன்றையச் சூழலில் இந்தியா நாசமாகச் சிறறுண்டு போக வேண்டும் என்று சபிப்பதைத் தவிர எதுவும் செய்ய இயலாது. ஒடுக்கப் படும் காஷ்மீர மக்களும், அப்பாவி வடகிழக்கு இந்திய மக்களும் கூட இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இசுலாமியத் தீவிரவாதம் வளர்ந்து பெரிதாகி இந்தியா என்றாவது ஒரு நாள் சோவியத் யூனியன் போலச் சுக்கு நூறாகி உடையும். உடைய வேண்டும். என்ன செய்வது முட்டாள்தனமான, துளிக்கூட பகுத்தறிவில்லாத சாதியமும் (பார்ப்பனியமும்), மதவாதமும் தான் இந்தியாவில் வெல்லக் கூடிய சக்தி படைத்தவை. அவை இரண்டும் ஒன்றோடொன்று மோதி இந்தியாவை உடைத்தெறியட்டும்.
மொழி அடையாளத்தை வெறியென்று கேலி செய்யும் இராம்-மாலினிபார்த்தசாரதி-சோ பார்ப்பன வெறியர்களுக்கும், சிதம்பரம் போன்ற பிற சாதி வெறியர்களுக்கும் தம் சாதிசார்ந்த அடையாளங்களை சுமந்து திரிவதில் துளிக்கூட வெட்கமில்லை. தூ! தூத்தெறி நாய்கள்.
இதை உணர்ந்த உண்மையான உலகத் தமிழர்களுக்கும், மனிதாபிமானிகளுக்கும் இங்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவை மறந்து அமைதியாக அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டும், செயலாற்ற வேண்டும்.
http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.htmlநன்றி - சொ.சங்கரபாண்டி
பத்ரி,
ReplyDeleteகடந்த சில மாதங்களின் நிகழ்வுகளிலிருந்து நிச்சயமாவது: இந்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநில எதிர்கட்சியினரின் உடன்பாட்டுடன், இலங்கையில் தீவிரவாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை வேரறுக்க இலங்கை அரசிற்கு உதவ தீர்மானித்து அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது.மாநில அரசும் முக்கிய எதிர்கட்சிகளும், தமிழகத்தில் எழும் எதிர்ப்பை திசை திருப்பி, ஒருவருக்கொருவர் நாடகமாடி வருகின்றனர். அந்த நாடகத்தின் climax இன்றைய பந்த். தில்லியில் நடக்கும் தேசபாதுகாப்பு குழுவின் கூட்டம், இலங்கை பாதுகாப்பு அமைச்சரின் நன்றி நவிலல், மு க வின் "நண்பர்" slip of tongue இவை பிரபாகரனின் முடிவை கட்டியம் கூறுகின்றன. அதனால் எழலாம் எனக் கருதப்படும் தமிழக கொந்தளிப்பை சமாளிக்கவே இந்த பொது வேலைநிறுத்தம். தேர்தல் ஆதாயங்கள் கொசுறு.
//நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.//
ஆங்கில/ இந்தி ஊடகங்களில் தமிழ் முதலாளிகள் இல்லாதவரை இது சாத்தியமில்லை. ஒரே பத்திரிகையான "தி இந்து'வும் எதிர்மறையான போக்கைக் கொண்டிருந்தது உதவவில்லை.
//இலங்கை அவலம், இந்தியத் தேர்தல் ஆகியவற்றைவிட ஐ.பி.எல்தான் பெரிய விஷயமாக உள்ளது.//
தமிழர்கள் என்றில்லை, இந்தியர்களுக்கே உள்ளது பொறுப்பில்லா குணமும் மற்றும் laisez-faire மனப்போக்கும். இது திருந்தும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் வேண்டுவதில் நானும் உங்களுடன்.
உள்துரை/நிதி, டெலிகாம், சுகாதாரம், சாலைப் போக்குவரத்து என்று முக்கியத்துரைகளே திராவிட கட்சியின் பிடியில் இருக்கும் போதுகூட ஒன்றும் புடுங்க முடியவில்லையே, இப்பொழுது பந்த் என்று அறிவித்து என்ன புடுங்கப்போகிறார் முதலமைச்சர் ?
ReplyDeleteMuka can take a day off and stay in hospital.. naama ethuku bandh pannanum..
ReplyDeletenamma oorla "dhina kooli" polapayum kedukarar.
/ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது./
ReplyDeleteஉண்மைதான்.
(தமிழக) தமிழினத்தை பிடித்த சாபம் - உணர்வே இல்லாத தன்மையும், அதையே வருடக்கணக்காக வளர்த்து, லாபமடையும் தமிழின துரோகிகளும்தான்.
விபின் - கோவை.
உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.
ReplyDeleteஅடுத்தது என்ன?
// இன்றும் இந்தியாவில் ஒருமித்த குரல் இல்லை. தமிழகத்துக்கு வெளியே யாருக்கும் இதைப்பற்றிய பிரக்ஞை இல்லை. இதற்காகப் பிறரை குற்றம் சொல்லக்கூடாது. நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.//
ReplyDeleteஇது தவறான பார்வை.
எனக்கு தலைவலித்தால் மாத்திரை வாங்கி சாப்பிடுவதற்கு எனக்கு உரிமை இருக்க வேண்டும். பத்துப் பேருக்கு புரிய வைத்து அவர்கள் வாங்கிக் கொடுத்து சாப்பிட வேண்டும் என்ற நிலை அடிமைத்தனமானது.
வெளிநாட்டு விவகாரங்களை மத்திய அரசு முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
வெள்ளைக்காரனிடம் பேசி நமக்கு உரிய ஆட்சியதிகாரத்தை பெறாமல் தவற விட்டதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.
// மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசரத் தேவை. அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்.//
எந்த சமூக அக்கறையுமற்ற கலைஞர் குடும்பம் தமிழ் ஊடகங்களை தமது ஆதிக்கத்தில் வைத்திருப்பதால் நாம் விரும்பும் இந்த மாற்றம் உடனடியாக நடக்காது. சென்ற தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த விசயத்தில் நிலைமை மோசமடைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக நான் சன் டி.வி.யைத்தான் சொல்வேன்.
// ஆங்கில/ இந்தி ஊடகங்களில் தமிழ் முதலாளிகள் இல்லாதவரை இது சாத்தியமில்லை. ஒரே பத்திரிகையான "தி இந்து'வும் எதிர்மறையான போக்கைக் கொண்டிருந்தது உதவவில்லை.//
ReplyDelete"தமிழ் முதலாளிகளால்" நடத்தப்படும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளைவிட "ழீ" டி.வி. சமூக அக்கறையுடன் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது; ஈழப்பிரச்சினையில் பல செய்திகளை சொல்கிறது; விவாதங்களை நடத்துகிறது. எனவே, உங்கள் கருத்து தவறு என்று நினைக்கிறேன், மணியன்.
இது ஒரு தேசிய பிரச்சினை - (தேசியங்களின் பிரச்சினை); பீகாரிகளின், காஷ்மீரிகளின் பிரச்சினையை சராசரி தமிழனுக்கு அக்கறை இருக்காது. எதிர்மாறாக தமிழனின் பிரச்சினையில் அவர்களுக்கு அக்கறை இருக்காது. பல்தேசியங்களை ஒற்றை தேசியமாக வெள்ளைக்காரர்கள் கற்பிதம் செய்ததை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டதே பிரச்சினைகளின் ஊற்றுக்கண். தமிழ் முதலாளிகள் கையில் ஊடகம் இல்லை; அதனால்தான் இந்த நிலை என்று சொல்வது மிகவும் எளிய பார்வை.
பத்ரி,
ReplyDeleteஉங்கள் பதிவுடன் ஒத்துப் போகின்றேன்.. ஆனால், தற்பொழுது இருக்கும் மனநிலையில் சொ.சங்கரபாண்டியின் ஆசை தான் எனக்கும் உள்ளது.
//
ReplyDeleteமொழி அடையாளத்தை வெறியென்று கேலி செய்யும் இராம்-மாலினிபார்த்தசாரதி-சோ பார்ப்பன வெறியர்களுக்கும், சிதம்பரம் போன்ற பிற சாதி வெறியர்களுக்கும் தம் சாதிசார்ந்த அடையாளங்களை சுமந்து திரிவதில் துளிக்கூட வெட்கமில்லை. தூ! தூத்தெறி நாய்கள்.
//
The Real Dravidian Tamils should stop pretending like they are still being oppressed by some fancy force like Parpaaneeyam, Male Saathieeyam etc.,. They control the government at the centre in an unprecedented way. Finance, Health, Telecom, Transport,Home, Social Justice - all are with Real Tamils.
ஆங்கில ஊடகங்களில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழர்கள் படும் வேதனையை படம் பிடித்து காட்டுகிறார்கள் ஆனால் அது தேசிய அளவில் பதிப்பிக்கபடாமல் தமிழக பதிப்புகளில் மற்றும் பதிப்பிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். இந்து ஒரு சீன , சிங்கள , இடதுசாரி ஆதரவு பத்திரிகை.
ReplyDelete'இன்றையச் சூழலில் இந்தியா நாசமாகச் சிறறுண்டு போக வேண்டும் என்று சபிப்பதைத் தவிர எதுவும் செய்ய இயலாது. ஒடுக்கப் படும் காஷ்மீர மக்களும், அப்பாவி வடகிழக்கு இந்திய மக்களும் கூட இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இசுலாமியத் தீவிரவாதம் வளர்ந்து பெரிதாகி இந்தியா என்றாவது ஒரு நாள் சோவியத் யூனியன் போலச் சுக்கு நூறாகி உடையும். உடைய வேண்டும். என்ன செய்வது முட்டாள்தனமான, துளிக்கூட பகுத்தறிவில்லாத சாதியமும் (பார்ப்பனியமும்), மதவாதமும் தான் இந்தியாவில் வெல்லக் கூடிய சக்தி படைத்தவை. அவை இரண்டும் ஒன்றோடொன்று மோதி இந்தியாவை உடைத்தெறியட்டும்'
ReplyDeleteHow does India's disintegration will
help Sri Lankan Tamils or Tamils in India
or anywhere else in the world.Green card
holding American Tamils can say anything
like this because they assume that somehow
America will be a haven/heaven for them
for all times to come and whatever happens
to India it will have no impact on them.
If you have problems with the Indian state why do you want India's disintegration. Pakistan and China have supplied arms to Sri Lanka.China blocked discussion in Security Council stating
that it was an internal issue of Sri Lanka.
China is aiding Sri Lanka in many ways
because of strategic interests.India is
not China, nor can act as a big brother.
'இதை உணர்ந்த உண்மையான உலகத் தமிழர்களுக்கும், மனிதாபிமானிகளுக்கும் இங்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவை மறந்து அமைதியாக அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டும், செயலாற்ற வேண்டும்'
Can you ignore the influence of China
on SriLanka?
சுடலைமாடன் எழுதியது நல்ல நகைச்சுவையாக இருந்தது. ஏதோ பிரபாகரனை இன்று சிங்கள ராணுவம் சுற்றி வளைக்கும் இந்த நிமிடம் வரைக்கும் இந்திய தேசிய வாதியாக இருந்தது போலவும், இப்போதுதான் திடீரென்று மொழி தேசிய வாதத்தை கண்டுபிடித்து தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்து இந்தியா உடைய வேண்டும் என்று நினைத்தது போலவும் எழுதுகிறார். நகைச்சுவைதான் வேறென்ன?
ReplyDeleteஇவர் எப்போது இந்திய தேசியவாதியாக இருந்தார் இப்போது மாறியதற்கு? பள்ளிக்கூடத்தில் ஒருபக்கம் ஜனகனமண பாடிவிட்டு வீட்டுக்கு போகும்போதே திராவிட கழகம் மாதிரி பேசியிருப்பார். இணையத்தில் எழுத ஆரம்பித்த எந்த ஒரு காலத்திலும் இவர் இந்தியாவுக்கு ஆதரவாக எழுதியதில்லை. வீரப்பன் தமிழன் என்ற காரணத்தால், அவன் விடுதலை வீரன் என்றும் உளறியவர்கள் இவர்கள். (இவர்கள் என்று சொல்லும்போது இவரது நண்பர்களையும் சேர்த்தே சொல்கிறேன்) நல்ல வேளை ஆட்டோ சங்கர் நான் தமிழன் என்பதால்தான் மரணதண்டனை கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால், இவர்களது பேச்சிலும் எழுத்திலும், அவன் மானமிகு ஆட்டோசங்கராக ஆகியிருப்பான்.
புலிகள் தங்களுக்குத்தாங்களே தீ வைத்துக்கொண்டார்கள். சற்றே கூறு இருக்கும் எவருக்கும் அது நன்றாக தெரியும். நிச்சயமாக ஆதரவு தெரிவிக்கக்கூடிய ஒரே நாடான இந்தியாவை பகைத்துக்கொண்டது மட்டுமே அவர்கள் செய்தது அல்ல.
கடந்த பதினைந்து வருடங்களில் அவர்களது எல்லா இணையதளங்களையும் சற்று புரட்டி பாருங்கள். இந்திய வெறுப்பும், இந்திய பகையும் கொளுந்துவிட்டு எரியும். இந்தியாவை வெறுக்கும், இந்தியாவை உடைக்க விரும்பும் அனைத்து இயக்கங்களுடனும் மிக நெருங்கிய உறவு வேறு. அந்த இயக்கங்களுக்கு ஆயுத உதவி, பயிற்சி உதவி என்றெல்லாம் செய்தார்கள். உல்பாவும் பிகார் மாவோயிஸ்டுகளும் ஒரு நல்ல உதாரணம். இந்த இணையதளங்களும், புலி ஆதரவாளர்களும் தமிழ்நாட்டு புலி பினாமிகளும் எந்த பாஜகவை கடுமையாக திட்டி வந்தார்களோ அந்த பாஜக அரசுதான் நோர்வே மூலமாக ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வழிவகுத்தது என்பது சங்கரபாண்டி உட்பட இன்று எல்லோருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன். ஆனால், புலிகளும் புலி பினாமிகளும் இந்திய எதிர்ப்பை கை விடவே இல்லை. தொடர்ந்து இந்தியா மீதும் தேசிய கட்சிகள் மீதும் கடும் வெறுப்பையே கக்கி வந்தார்கள். அந்த கக்கலை தொடர்ந்து உண்டு வந்த சுடலைமாடன் ஏதோ இன்றுதான் திடீரென்று ஞானம் பெற்றதுபோல சாபம் இடுவதுதான் நகைச்சுவையானது.
இன்று இலங்கையின் ராணுவ முன்னெடுப்பு பின்னால் இருப்பது சீனா என்பது அரைகுறைக்குக் கூட தெரியும். இருந்தும் இங்கே இந்தியா உடைய வேண்டும் என்று பேசுவதும் தொடர்ந்து இந்திய வெறுப்பின் அடையாளமே. இந்தியா உடைந்துவிட்டால், ஈழத்தையும் தமிழகத்தையும் ஒருசேர ஆளலாம் என்று சங்கரபாண்டி கனவு காண்கிறார். பரிதாபமே பட முடிகிறது. இந்தியா உடைவதில் யாருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையே, சிங்களவர்களுக்கும் சீனர்களுக்கும் பலத்த லாபம் இருக்கிறது. இந்தியா உடைந்தால், தமிழகத்தில் சென்னையில் சிங்கள ராணுவம் சீன ஆயுதங்களுடன் நிற்கும். எப்படி போரிடுவீர்கள்? தற்கொலைப்படை மூலமாகவா? தாராளமாக செய்யுங்கள் என்று இன்னும் நிறைய தற்கொலைப்படை உடைகளை உங்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைப்பார்கள். எல்லோரும் ஒட்டுமொத்தமாக மரணத்துள் வாழலாம்! அதற்குள் சங்கரபாண்டியின் நண்பர்கள் பாதி தமிழகத்தை துரோகிபட்டம் (அல்லது பார்ப்பன அடிவருடி பட்டம்) கட்டியோ, அல்லது சகோதர கொலைகளிலோ மேலே அனுப்பியிருப்பார்கள். இன்னும் ஜாலிதான் சங்கரபாண்டிக்கு.
//இந்து ஒரு சீன , சிங்கள , இடதுசாரி ஆதரவு பத்திரிகை.//
ReplyDeleteஇடதுசாரி ஆதரவு ???
ஈழப்பிரச்னையில் கவலை கொள்ளாமல் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்கிறீர்கள். இலங்கைக்கு வெளியே வாழும் அனைத்து தமிழர்களுக்கும் ஈழப்பிரச்னை ஒரு கிரிக்கெட் மாட்ச் போலத்தான் - காணொளிப் பொழுதுபோக்கு. இதில் அவர்களது படை தோற்கக்கூடாது என்பதுதான் கவனமே ஒழிய, எது உண்மை எது நன்மை என்பதில் அல்ல. இப்படி இருப்பதற்கு பேசாமல் கிரிக்கெட் ஆட்டத்தையே பார்த்து ஒழியலாம்.
ReplyDeleteமேலும், மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்று கோஷம் போட்டுத் திரிந்த இவர்களிடம் ஒரு கேள்வி - அப்படியென்றால் மூன்று நாட்களாக தப்பி ஓடி வந்த ஒரு லட்சம் பேரும் யார்? இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிகளா?
//
ReplyDeleteதமிழ் என்பது ஒரு சமஸ்கிரதம் கலக்காத
மொழி என்பதை கூட ஆதாரத்துடன்
புரிய வைக்க வேண்டி இருக்கிறது.
//
ஆதாரம் என்பது தமிழ்ச்சொல்லா ?
//
நான் சொல்வது தவறாக் கூட சிலருக்கு
தோன்றலாம்.
இந்த தேர்தலில் மக்கள்
குறைந்த பட்சம்
வைகோ & திருமாவளவனை ஜெயிக்க
வைத்தார்கள் எனில்
அவர்களுக்கு இந்த பிரச்சனையை
இந்திய அளவில் பேச வாய்ப்பாக அமையும்.
//
இவர்கள் ஜெயிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை.
ஆனால் உங்களுக்கு வந்திருக்கும் வியாதியை அவர்கள் இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்று நீங்கள் எண்ணுவது மஹா முட்டாள்தனம்.
//
ReplyDelete//இந்து ஒரு சீன , சிங்கள , இடதுசாரி ஆதரவு பத்திரிகை.//
இடதுசாரி ஆதரவு ???
//
http://cbcnn.blogspot.com/
People like So. Sankarabandi can still live in India. Thats why and how India survives. We respect opinions that are diametrically opposed to our views but still allow their articulation in public forum.
ReplyDeleteஇலங்கையில் மறிப்பவர்கள் தமிழர்கள் என்பதால் இந்தியத் தமிழர்கள் பொங்குவது நியாயம்தான். ஆனால் உலகெங்கும் போர் நடக்கும் நாடுகளில் தவிக்கும் அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் - தெலுங்கர்களாகவோ கன்னடர்களாகவோ ஜப்பானியர்களாகவோ அராபியர்களாவோ யூதர்களாகவோ, ஏன், சிங்களவர்களாகவோ இருந்தாலும் கூட - இதே அளவு நாம் வருந்த வேண்டும், அழுது புலம்ப வேண்டும். செய்வோமா?
ReplyDeleteமனித நேயம் முன்னிற்கையில் பேசும் பொழி, வணங்கும் தெய்வம், தோலின் நிறம் எல்லாமே இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் எங்கள் இனம் அழிகிறது என்று மட்டுமே புலம்பினால் அந்த இனம் சாராத மற்றவர்களின் ஆதரவும் அனுதாமும் எப்போதும் கிடைக்காது. இந்த மார்தட்டும் பழக்கத்தினால்தான் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்கும், யூதர்களுக்கும் அந்த அந்த இன மக்கள் மட்டுமே உதவுகிறார்கள். மற்றவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் இதை உணராமல் தமிழ் ரத்தம், தமிழ் உயிர் என்றெல்லாம் இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசி - எல்லா ரத்தமும், உயிரும் ஒன்றுதானே! - இலங்கைத் தமிழ் மக்களைத் தனிமைப் படுத்தி விட்டார்கள்.
ராமதாசும் திருமாவளவனும் வை.கோ.வும் சாதாரண தொகுதிப் பொறுக்கிகள். விட்டெறியப்படும் 3 அல்லது 4 இடங்களில் முக்கி முனகி வெற்றி பெறும் இவர்கள் இந்திய இறையாண்மையை ஆட்டம் காண வைப்பதாக சொல்வது பெரும் நகைச்சுவை. முதலில் தனித்து நின்று டெபாசிட் திரும்பப் பெறட்டும். அப்புறம் ஜெயிக்கட்டும். அப்புறம் மெஜாரிட்டி... அப்புறம் ஆட்சி... அப்புறம் தனித்தமிழ் நாடு... நல்ல காமெடி!
இது தவிர தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு புலிகள் மீதுள்ள வெறுப்பு உறுதியானது. தங்களை இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக தானாகவே அவர்கள் உருவாக்கிக் கொண்டுவிட்டதால் (மற்ற இயக்கங்களை அழித்து) அவர்கள் இருக்கும் வரை இங்கிருந்து முழுமையான ஆதரவு இலங்கைத் தமிழருக்குக் கிடைக்காது. பிரபாகரன் மறிக்கும் வரை அங்குள்ள சாமானியர்களுக்கு நிம்மதி வராது என்றுதான் தோன்றுகிறது.
மற்றபடி, தார்ஃபூர், பாலஸ்தீனம், காஷ்மீருக்காக மங்காத IPL புகழ், வட கிழக்கு இலங்கைக்காக மட்டும் குறையும் என்று எதிர்பார்ப்பது கனவுதான்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//Vajra சொன்னது…
ReplyDeletePeople like So. Sankarabandi can still live in India. Thats why and how India survives. We respect opinions that are diametrically opposed to our views but still allow their articulation in public forum.//
Thank you Vajra for your kindness, otherwise I would be in prison like Seemaan, correct ?
Are you not ashamed of speaking like this, when you yourself study and live in America and talk so much rubbish against not only America but also humanity. In any case, my views are better than your racist and idiotic Hinduthwa propaganda.
//தமிழ்நாட்டில் ஈழப்பிரச்னையிலிருந்து அனைத்துப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுவதற்கு இராம்,சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி என்ற வெகுமக்கள் செல்வாக்கில்லாத செல்லாக்காசுகளையே வட இந்தியச் செய்தி நிறுவனங்கள் அழைப்பதிலேயே அறியலாம் பார்ப்பனிய நரிகளின் அரசியல் அதிகாரத்தை.//
ReplyDeleteஇந்தப் பார்ப்பன நரிகளுக்கு செல்வாக்கில்லையென்றால் அவர்கள் சொல்வதை ஏன் மதிக்கிறீர்கள்? இவர்கள் தவிர வேறு ஒரு சில செல்வாக்கில்லாத சூத்தி்ர நரிகள் ராமதாசுவும் வைகோவும் திருமாவும் கூடத் தன் பொன்மொழிகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எது சரி எது தவறென்று கேட்டு முடிவு செய்வது எங்கள் உரிமை.
மாற்றுக் கருத்து ஒலித்தால் வன்முறையால் முடக்கும் காட்டு மிராண்டித்தனம் புலிகளிடம் இருப்பதால்தான் இந்தியத்தமிழர்கள் இன்று அவ்ர்கள் உயிப்பிச்சை கேட்டு இறைஞ்சும் போது காறி உமிழ்கிறார்கள்.
பிறர் கருத்துக்களை சாதி, இனப்பெயர் சொல்லித்திட்டும் வழக்கம் இருப்பவர்கள் பார்ப்பானானாலும் சிறுத்தையானாலும் புலியானாலும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும் நிலை வந்தே தீரும்.
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1091390
ReplyDeleteதமிழ்நாட்டில் ஈழப்பிரச்னையிலிருந்து அனைத்துப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுவதற்கு இராம்,சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி என்ற வெகுமக்கள் செல்வாக்கில்லாத செல்லாக்காசுகளையே வட இந்தியச் செய்தி நிறுவனங்கள் அழைப்பதிலேயே அறியலாம் பார்ப்பனிய நரிகளின் அரசியல் அதிகாரத்தை. இந்திய ஊடகங்களின் தமிழர் வெறுப்பும் தெரிகிறது. பார்ப்பனிய இந்தியாதான் தமிழர்களின் முதல் எதிரி.
[ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது. - பத்ரி]
நன்றி - சொ.சங்கரபாண்டி
//
ReplyDeleteAre you not ashamed of speaking like this, when you yourself study and live in America and talk so much rubbish against not only America but also humanity. In any case, my views are better than your racist and idiotic Hinduthwa propaganda.
//
FYI, I live and study in India.
I do not care two hoots about you or your anti-India rhetoric. I am proud of being a hindu and i despise people like you. But that does'nt mean that you should be hanged or executed. You should be allowed to speak out your mind so, that the rest of us can know what kind of an insane clown you are. This precisely is what makes me different from the likes of you.
Have a great day, Enjoy your cup of Cappuccino from Starbucks.
எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.
ReplyDeletehttp://dubukku.blogspot.com/2009/04/blog-post.html
சங்கரபாண்டி,
ReplyDeleteநீங்களும்,உங்கள் நண்பர்களும் எந்த காலத்திலும் இந்திய வெறுப்பாளர்கள்தான். முன்பு இந்தியா என்ற நாட்டை வசைபாடித்திரிந்தீர்கள். இன்று ரத்தகொதிப்பு ஏறி இந்திய மக்களையும் சேர்த்து வசைபாடுகிறீர்கள்..இலங்கை பிரச்சனையால் புதிதாக உங்கள் நிலை மாறியதாக தெரியவில்லை. பெரியார் காலத்திலிருந்து கேட்டு ஓய்ந்துபோன வழக்கமான அதே 'பார்ப்பன பனியா இந்தியா' பல்லவிதான்.
உங்கள் சாபம் இந்தியாவை ஒன்றும் செய்யாது. இஸ்லாமிய தீவிரவாதிகளை அமெரிக்காவும், இஸ்ரேலும் கவனித்துகொள்ளும். இந்தியா கவலைப்பட தேவையில்லை. நீங்கள் வேறு எதாவது தீவிரவாதிகள் கும்பல் மேலாவது நம்பிக்கை வைப்பது நல்லது.
ராஜீவ் நினைவுதினமான மே 21 வருவதற்குள் இலங்கையிலிருந்து பிரபாகரன் பிடிபட்ட அல்லது கொல்லப்பட்ட செய்தி வரும் என எதிர்பார்க்கலாம். அப்போது உங்கள் ரத்த அழுத்தம் எத்தனை மடங்கு அதிகரிக்கும் என யோசித்து பார்த்தால் இப்போதே பயமாக இருக்கிறது.எதையும் தாங்கும் இதயத்துடன் நீங்களும் உங்கள் நண்பர்களும் இருப்பதே நல்லது.
Please click and read this article
ReplyDeleteOpen Letter from a Rwandan Tutsi to the Tamil Brothers of Sri Lankan descent in CanadaEloge Butera clearly points out the apathy of all outsiders on such issues of genocide, comparing Rwanda and Sri Lanka.
நம்முடைய வாழ்நாள் பூராவும் செலவிட்டு மற்ற இனத்தவர்களைப் புரியவைத்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதில் நேரத்தை வீணாக்குவதை விட இந்தியா போன்ற நயவஞ்சகமான தமிழின எதிரியை தமிழ்மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டியது அவசியம். நயவஞ்சக இந்தியாவை எதிர்ப்பதும் இயலாத காரியம். இந்தியாவை நம்பி மோசம் போகாமல் இருப்பதே தமிழர்களுக்கு எதிர்காலத்திலும் நல்லது. தமிழர்கள் மத்தியில் இந்தியா தமிழர்களின் எதிரி, அதுவும் மறைந்திருந்து தாக்கும் நரித்தனமான எதிரி என்ற உண்மையை மட்டும் ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் பார்ப்பனிய இந்து-முஸ்லீம் வன்முறையில் போலி இந்திய தேசியம் உடைந்து சிதறும். அதுவரை தமிழர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அமுதன், வெற்றிவேல் என்ற நல்ல தமிழ்ப் பெயர்களை முகமூடியாகக் கொண்டு வரும் சூச்சுக்கள் மறைந்திருந்து மேலும் என்னைத் தாக்கட்டும்!
நன்றி - சொ.சங்கரபாண்டி