இன்று காலை கருணாநிதியின் லேடஸ்ட் ஸ்டண்ட் - வீட்டுக்குத் தெரியாமல் உண்ணாவிரதம். இந்தியா சொல்லியும் இலங்கை கேட்கவில்லை என்று மனவேதனையாம். இந்தியா என்ன சொன்னது? இலங்கை எதைக் கேட்கவில்லை?
மறுபுறம், ஜெயலலிதா மக்களை முழு முட்டாளாக்கும் விதத்தில் “போடுங்கம்மா ஓட்டு, தமிழ் ஈழத்தைப் பார்த்து!” என்கிறார். வீரமணி சொல்கிறார்: இலங்கையில் இந்தியாவால் தலையிட முடியாது; அது உள்நாட்டுப் பிரச்னை!
கடந்த ஆறு மாதங்கள் கோமாவில் இருந்து வெளிவரும் ஒருவர் தமிழக அரசியல் வாதங்களைக் கேட்டால் அதிர்ச்சி அடைவார்.
தேர்தலைப் புறக்கணிப்பதால், மக்களின் கருத்து என்ன என்று யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே வாக்களிக்கவேண்டும். யாருக்கு என்பதில்தான் குழப்பங்கள் இருக்கும்.
என் கருத்து இவை:
1. எந்தத் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் நிற்கிறதோ, அங்கு காங்கிரஸுக்கு எதிரான வாக்கு, அது வலுவான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு.
2. எங்கெல்லாம் மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் நிற்கிறார்களோ, குழப்பங்கள் தவிர்த்து (பாமக vs விசி), அவர்களுக்கு வாக்கு.
3. திமுக - அஇஅதிமுக நேருக்கு நேர் போட்டி என்றால், அங்கு நல்ல சுயேச்சை வேட்பாளர் இருந்தால் அவருக்கு முதல் வாய்ப்பு. நல்ல சுயேச்சை இல்லை என்றால் (உ.ம்: மத்திய சென்னை), திமுக வேட்பாளர் நல்லவர் என்று நம்பிக்கை இருந்தால் அவருக்கு. இல்லாவிட்டால் வாக்கு அஇஅதிமுகவுக்கு.
***
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வர அஇஅதிமுக ஆதரவு தேவை என்றால், சோனியா சிறிதும் கவலைப்படாமல், திமுகவை கழற்றி விட்டுவிட்டு, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோருவார். ஜெயலலிதா சிறிதும் கவலைப்படாமல் ஆதரவைத் தருவார். மத்தியில் மந்திரி பதவியோ, ஈழமோ ஜெயலலிதாவின் நோக்கமல்ல. கருணாநிதியைப் பதவியில் இருந்து கீழே இறக்குவது. அதன்பிறகு மற்றவை, முடிந்தால்... நேரம் இருந்தால்... விருப்பம் இருந்தால்...
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
வழி மொழிகிறேன்
ReplyDeleteமத்தியில் மந்திரி பதவியோ, ஈழமோ ஜெயலலிதாவின் நோக்கமல்ல. கருணாநிதியைப் பதவியில் இருந்து கீழே இறக்குவது////////
ReplyDeleteமிகச்சரி பத்ரி.
அம்மாவின் தாரக மந்திரம் இது மட்டும் தான். வேற ஒரு புண்ணாக்கும் இல்லை.
ஆனால் லேட்டஸ்ட தகவல்:
தி.மு.க 25 -27 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
பாமக = 0
விஜயகாந்த் = 0
//வீட்டுக்குத் தெரியாமல் உண்ணாவிரதம்.//
ReplyDeleteஏதோ வீட்டுக்குத் தெரியாமல் தம்மடிக்கிற இளைஞனின் செயல் மாதிரி இருக்கிறது. :-)
இது ஒரு காமெடி என்றால் ஜெ.பெற்ற 'திடீர்' ஞானோயத்திற்கு ஆதரவாக அவருக்கு ஒட்டளிக்கச் சொல்லி இணையத்தில் எழுந்திருக்கும் குரல்கள் இன்னொரு காமெடி. 'பேன் தொல்லைக்காக கொள்ளிக்கட்டையில் மண்டையை சொறிஞ்சுக்கிட்ட மாதிரி' ஜெ.விடம் சரணடையச் சொல்கிறார்கள். ஜெ. திடீரென 'தமிழர் தலைவி'யாக பெற்றிருக்கும் பதவியேற்றம் புல்லரிக்கச் செய்கிறது.
இந்தத் தேர்தலை ஈழப்பிரச்சினை என்ற ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகுவது சரியல்ல. நம்முடைய உள்ளூர்ப் பிரச்சினைகளையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கூட்டணி அயோக்கியத்தனத்தையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் வேட்பாளர்களை கருத்தில் கொண்டுதான் ஓட்டளிக்க வேண்டும். முறையான வேட்பாளர் யாரும் இல்லையென்றால் 49ஓ வை பயன்படுத்தலாம். நடைமுறையில் அது சாத்தியமில்லையென்றால் கடைசி வரிசையில் உள்ள சுயேச்சைக்கு போட்டு அவரையாவது குறைந்தபட்சம் சந்தோஷப்படுத்தலாம். :-)
//இந்தத் தேர்தலை ஈழப்பிரச்சினை என்ற ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகுவது சரியல்ல//
ReplyDeleteஇடியட்டாக இருப்பது உங்கள் பிறப்புரிமை. ஆனால், எல்லோரும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது அதிகப்படி. அதுவுமில்லாமல், இன்றிரவு வரை பொறுத்திருங்கள். அதற்குள் அத்தனை தமிழர்களும், இலங்கை அரசால் கொல்லப்பட்டு விடுவார்கள். பிறகு ஈழப்பிரச்சனை என்று எதுவுமே இருக்காது. உள்ளூர் பிரச்சனைகளை பல்முனைப் பரிமாணத்தில் அலசி ஆராய்ந்து நிதானமாக ஓட்டுப் போடலாம். அது வரை போரடித்தால், தமிழ்ச்சினிமாவின் தரத்தை உயர்த்துதெப்படி என்று விவாதிக்கலாம்.
// ஜெ. திடீரென 'தமிழர் தலைவி'யாக பெற்றிருக்கும் பதவியேற்றம் புல்லரிக்கச் செய்கிறது. //
ReplyDeleteகருத்து மாறுபாடு என்று ஒன்று இருப்பது ஆரோக்கியமானது, ஆனால் சுரேஷ் கண்ணனுக்கு வாசிப்பதிலும், புரிந்து கொள்வதிலும் சீரியஸான பிரச்சனை இருக்கிறது. ஏற்கனவே அவரிடம் அவதானித்த பிரச்சனைதான்.
ஒரிரு சில அதி உற்சாக பதிவர்களை தவிர, யாருமே ஜே சொல்வதை சீரியசாக எடுத்தோ, நம்பிக்கை வைத்தோ அவரை ஆதரிக்கவில்லை. எனது பதிவு, அதில் வந்த பின்னூட்டங்கள் தமிழ் சசியின் இன்றய பதிவு இதில் எதிலும் இப்படி ஒரு பார்வை இல்லை. ஏன் திமுகவை தோறகடித்தே ஆகவேண்டும், அதற்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு வழியில்லை என்ற அடிப்படையில், தேர்தல் ஜனநாயகம் என்பது குறித்த ஒரு புரிதலில் கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை மற்றவர்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால் சுரேஷ் கண்ணன் போல (அதுவும் இலக்கியத்தை எல்லாம் கரைத்து குடித்து உன்னதங்களை பரிந்துரைப்பவர்கள்) எழுதிய எளிய விஷயங்களை எல்லாம் உள்வாங்காமல் உளரும் வரை எதையுமே விவாதிக்கவோ உரையாடவோ இயலாது.
என்னுடைய பின்னூட்டத்திற்கு அடுத்த வந்திருந்த இரண்டு பின்னூட்டங்களிலும் விவாதிக்கப்படும் தலைப்பிற்கு சம்பந்தமில்லாத (திரைப்படம்,இலக்கியம்) கிண்டல்கள் குறித்து எழுதப்பட்டிருந்ததை வைத்தே நான் சொன்னதை மறுத்தே ஆக வேண்டும் என்கிற முன்தீ்ர்மானத்துடன் என் பின்னூட்டங்களை அணுகியிருப்பதை படிக்கும் எவருமே உணரலாம்.
ReplyDelete//பிறகு ஈழப்பிரச்சனை என்று எதுவுமே இருக்காது.//
மற்றவர்களின் கருத்தை சரியான தொனியில் எடுத்துக் கொண்டால் இப்பிரச்சினை எழாது.
ஈழப்பிரச்சினையையோடு கூட உள்நாட்டு மதவாதக் கட்சிகளையும் கலாசாரக் காவலர்களையும் சரிந்து வருகிற பொருளாதார நிலைக்கு எந்தவித தீர்வும் காண முன்வராமல் ஜாதி அரசியல் செய்யும் கட்சிகளையும் ஒட்டளிக்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எழுதியிருந்தேன். அதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் ஒன்றும் செய்யவியலாது.
//கருத்து மாறுபாடு என்று ஒன்று இருப்பது ஆரோக்கியமானது, //
மற்றவர்கள் எழுதுவதை தொடர்ந்து சீரியசாக அவதானித்து அவர்கள் எழுதுவது எல்லாமே உளறலாக தெரியும் ரோசா வசந்துக்கு (அப்படி உளறலாக தெரிவதை எதற்கு தொடர்ந்து அவதானிக்க வேண்டும்) அபூர்வமாக இந்தமாதிரி பொன்மொழியெல்லாம் தெரிந்திருப்பது ஆச்சரியம்தான். ஆனால் வெறுமனே தெரிந்து வைத்திருப்பதில் பிரயோசனம் ஒன்றுமில்லை.
உளறுவது யார் என்று உங்கள் பதிவை வாசிக்காதவர்களுக்கு தெரிவிப்பதற்காக அதன் சுட்டியை இங்கே தருகிறேன். http://rozavasanth.blogspot.com/2009/04/blog-post.html
காலை டிஃபனுக்குப் பின் ஆரம்பித்த உண்ணாவிரதம் மதிய சாப்பாட்டுக்கு முன் முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகய உண்ணாவிரதம் எல்லாம் கடந்த 8395 நாளாக நானும் இருக்கிறேன்.
ReplyDeleteகிழத்திற்குத்தான் வயது ஆன அளவுக்கு மூளை வளரவில்லை எனில் அஞ்சா நெஞ்சருக்கும் வளரவில்லையே!
இத்தகய மூளை வளர்ச்சியின்மை மரபு வழியாக வருவது போலும்.
உங்கள் அறிவுபூர்வமான பதிலுக்கு ரொம்ப நன்றி சுரேஷ் கண்ணன். நீங்கள் எழுதுவதை எல்லாம் நான் தொடர்ந்து எல்லாம் அவதானிப்பதில்லை. ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒருமுறை பார்க்க நேருவதே போதுமானது, அதைத்தான் குறிப்பிட்டேன்.
ReplyDeleteஆமாம். சுரேஷ் கண்ணன் எதை எழுதினாலும், அதை மறுப்பதுதான் என் வேலை..... நல்ல ஆளய்யா..... சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாமல், திரைப்பட விமர்சனங்கள் எழுதும் போது கிடைத்த இடைவேளையில் ஒற்றைப் பரிமாணம், பல்பரிமாணம் என்று ஜல்லியடித்துவிட்டுப் போக இது ஒன்றும் இலக்கிய / சினிமா விமர்சனமல்ல.
ReplyDeleteசரி, இப்பொழுது எழுதியிருப்பதை, சரியான தொனியில் அணுக முயற்சி செய்கிறேன்.
//ஈழப் பிரச்சனையோடு கூட உள்நாட்டு மதவாதக் கட்சிகளையும் கலாசாரக் காவலர்களையும் சரிந்து வருகிற பொருளாதார நிலைக்கு எந்தவித தீர்வும் காண முன்வராமல்//
உள்நாட்டு மதவாத / கலாசாரக் காவல் எதிர்ப்பும் ஈழத்தமிழர்களுகாகக் குரல் கொடுப்பதும் எப்படி ஒன்றுக்கொன்று முரணாக அமையும்? சரிந்து வருகிற பொருளாதார நிலைக்கு தீர்வு எடுப்பதற்கும், ஈழப்பிரச்சனைக்கும் தொடர்பு?
என்ன சாதி அரசியல்? எல்லாக் கட்சிகளும், அந்தத் தொகுதியில் எந்த சாதிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அந்த சாதி வேட்பாளரைத்தான் நிறுத்துகிறார்கள். அதிலே ஒருத்தருக்குத்தான் எப்படியும் நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? இதற்கும் , ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னிலைப் படுத்துவதற்கும் என்னய்யா தொடர்பு?
இப்போதைய தேர்தலில், தமிழகத்தைப் பொருத்தமட்டில், ஈழப் பிரச்னை தவிர வேறு ஏதும் பெரிய பிரச்னை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது. இது சரியா, தவறா என்பது வேறு விஷயம். அத்வானி பேசும் ‘கறுப்புப் பணம்’ பற்றி இங்கு யாரும் பெரிதாகக் கவலைப்பட்டு விவாதத்தில் இறங்குவதாகத் தெரியவில்லை.
ReplyDeleteகருணாநிதி குடும்ப அட்டகாசம் என்பது ஒருவேளை அடுத்த மாநிலத் தேர்தலில் பேசப்படலாம். அழகிரி-ஸ்டாலின், மதுரை இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா, மாறன்கள் சண்டை+கூடல் எல்லாம் மறந்துவிட்டனர் மக்கள்.
ரேஷன் கடையில் பொருள்கள் தமிழகத்தில் நன்கு கிடைக்கின்றன. பிற மாநிலங்களைவிடச் சிறப்பாக. குறைந்த விலையில். அங்கும் ஊழல்கள் இருந்தாலும்கூட. பணவீக்கம் என்னவாக இருந்தாலும், விலை உயர்வு அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு அடிமட்ட மக்களை அணுகாவண்ணம் ரேஷன் கடைகள் நடக்கின்றன என்று கேள்விப்படுகிறேன்.
மதவாதம் இங்கு பயப்படும் அளவுக்குப் பிரச்னை இல்லை. மும்பை, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் போல சென்னையிலோ தமிழகத்திலோ தீவிரவாதம் பெரிய பிரச்னை கிடையாது.
எனவே, ஈழம் மட்டுமே. ஆனால் அது தொடர்பாக வாக்காளர்கள் தெளிவான தீர்மானத்தை எடுக்கவிடாமல் கட்சிக் கூட்டணிகள் உள்ளன. அது போதாது என்று, கலைஞரும் ஜெயலலிதாவும் தினம் தினம் விளையாடுகிறார்கள். காங்கிரஸ் நல்ல பக்கவாத்தியம்.
vote cast for mmk where ever dmk, aidmk stand.
ReplyDeleteபத்ரி, நறுக்கென்ற பதிவு. அஞ்சல் வாக்குகள் பற்றி கொஞ்சம் தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன்.
ReplyDeleteயாருக்கு வாக்களிப்பது - http://www.irasenthil.com/2009/04/blog-post_27.html
//vote cast for mmk where ever dmk, aidmk stand.//
ReplyDeleteமனிதநேய மக்கள் கட்சி? நான் சீரியஸாகவே எங்கள் தொகுதியின் வேட்பாளர் ஹைதர் அலிக்கு வாக்களிக்கலாமா என்று யோசித்து வருகிறேன். இவருடன் சன் நியூஸில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் - வீரபாண்டியனின் நேருக்கு நேர். அப்போது இவர்கள் திமுகவுடன் உறவாடி மூன்று சீட்கள் கேட்டுவந்தனர்.
இவர்கள் ‘மூணு’ வேண்டும் என்று கேட்க அதற்கு கருணாநிதி, ‘மூன்தானே, சன்னில் நில்லுங்க’ என்றாராம். அதாவது, மூன் - பிறைச்சந்திரன் - முஸ்லிம் சின்னம். அந்தக் கட்சிக்கு ஒரு சீட், ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும். மாட்டேன் என்று விலகி, திமுகவுக்கு ‘பாடம்’ கற்பிக்க இந்தத் தேர்தலில் நிற்கிறார்கள்.
மத்திய சென்னையில் திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் முஸ்லிம் வாக்குகளை அதிகம் பிரிப்பார் என்பதாக இன்றைய தி ஹிந்து கட்டுரை சொன்னது. ஜெயலலிதாவின் திடீர் வேட்பாளர் மொகம்மதலி ஜின்னாவுக்குப் போகக்கூடிய முஸ்லிம் வாக்குகள் ஒருவேளை இவருக்குப் போகலாம்.
இதனால் தயாநிதி மாறனின் வெற்றி வாய்ப்பு குறையுமா என்று தெரியவில்லை.
//அஞ்சல் வாக்குகள் பற்றி கொஞ்சம் தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன்.//
ReplyDeleteஅஞ்சல் வாக்குகள் சாதாரண மனிதர்களுக்குக் கிடையாது. ராணுவத்தினர், தேர்தல் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள், காவலர்கள் ஆகியோர், குடியரசுத் தலைவர், மாநில ஆளுனர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், ஜம்மு காஷ்மீர், மிசோரம் ஆகிய மாநிலங்களிலிருந்து துரத்தப்பட்டு இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் உள்நாட்டு அகதிகள் ஆகியோருக்கு மட்டுமே தபால் வாக்கு உண்டு.
எனவே நம்மைப் போன்றவர்கள் குறிப்பிட்ட தினத்தில் நமது வாக்குச் சாவடி இருக்கும் இடத்தில் இல்லை என்றால், வாக்கு கோவிந்தா. விஷயம் தெரிந்த கட்சிகள், கள்ள வாக்கு போட்டுவிடும் அபாயம் உண்டு.
குறந்த பட்சம் கள்ள வாக்கை தவிர்க்காவாவது வ்ழி இருக்கிறதா?
ReplyDeleteபத்ரியின் வலைப்பதிவை தொடர்ந்த பின்னூட்டங்களின் மூலம் அரசியல் மேடையாக்க என்னைப் பொறுத்தவரை நான் விரும்பவில்லை. முதிர்ச்சியற்ற தனிநபர் தாக்குதல்கள் விவாதத்தை தொடரவிடாதவாறோ திசைதிருப்பியோ விடுகிறது என்பதை இணையத்தில் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருவதினால் பழகிப் போய்விட்டது. இயன்றால் இது குறித்து தனிப்பதிவு இட முயல்கிறேன்.
ReplyDeleteபெயரில்லா:
//எப்படி ஒன்றுக்கொன்று முரணாக அமையும்? //
நான் எங்கே ஒன்றுக்கொன்று முரண் என்று சொன்னேன்? ஈழப்பிரச்சினையோடு மற்றவற்றையும் இணைத்துத்தான் இந்த மத்திய பொதுத் தேர்தலை அணுக வேண்டும் என்பது என் பார்வை. இதில் உங்களுக்கு முரணிருந்தால் அது குறித்து மாத்திரமே உரையாட வேண்டும். தேவையில்லாமல் என்னுடைய மற்ற பதிவுகளையும் இதையும் போட்டு குழப்பக்கூடாது.
வசந்த்:
//நீங்கள் எழுதுவதை எல்லாம் நான் தொடர்ந்து எல்லாம் அவதானிப்பதில்லை//
இதற்கே உங்களுக்கு ஒரு பெரிய நன்றி சொல்ல வேண்டும்.
//குறந்த பட்சம் கள்ள வாக்கை தவிர்க்காவாவது வ்ழி இருக்கிறதா?//
ReplyDeleteஇஷ்டத்துக்கு வாக்குச் சீட்டில் அடித்து பெட்டியில் திணிப்பதை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தவிர்க்கிறது. படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆள்மாறாட்ட கள்ள வாக்கைத் தவிர்க்கிறது. ஆனாலும், சில வாக்குச் சாவடிகளில், உள்கை ஆசாமிகள் இருந்தால், முகத்தைப் பார்க்காமல் கள்ள வாக்குகள் போட அனுமதி தரப்படும். இதனை பிற வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் எதிர்த்துக் கேள்வி கேட்கலாம். ஆனால் பொதுவாக நான் வாக்களிக்கச் சென்றபோது எந்த ஏஜெண்டும் என்னைக் கண்டுகொண்டதே கிடையாது. நான் சாவடிக்குள் இருந்தபோது பிறரது அடையாளங்களையும் சரிபார்த்தது கிடையாது.
நம் வாக்கை நாம் முன்னே சென்று போடுவது ஒன்று மட்டுமே கள்ள வாக்கைத் தவிர்க்கும்.
தேர்தல் நாள் அன்று அனைவருக்கும் விடுமுறை. இது உரிமை. எந்தத் தனியார் நிறுவனமும் இதனை மீறமுடியாது. ஆனால் நீங்கள் எங்கோ டில்லியில் இருந்து கன்யாகுமரி செல்லவேண்டும் என்றால் அவர்கள் ஒரு நாளைக்கு மேல் விடுப்பு தரமாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் பல இந்தியர்களும் வாக்குரிமையை இழக்க நேரிடுகிறது. அல்லது கள்ள வாக்குகளுக்கு வழிகோல நேரிடுகிறது.
இப்போதைய தேர்தலில், தமிழகத்தைப் பொருத்தமட்டில், ஈழப் பிரச்னை தவிர வேறு ஏதும் பெரிய பிரச்னை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது. இது சரியா, தவறா என்பது வேறு விஷயம்/////
ReplyDeleteஇது என்ன Escape, அப்போ வாங்க, முதல்ல இது சரியா தவறான்னு ஆரம்பிப்போம், அப்போ தெரியும் வண்டவளாங்கள்.. இந்த மாதிரியான முக்கியமான விசயங்களை விடுத்து மற்றவற்றை பிடிச்சு தொங்குறது தான தமிளன்! குணம்.. சரி தவறெல்லாம் depends ன்னு அடுத்த ஜல்லிய ஆரம்பிக்காம இருந்தாச் சரி..
அன்பு பத்ரி, உங்களுடையது நல்ல பதிவு. கோக் - பெப்சி, ஏர்டெல் - வோடபோன் இப்படி இரு பிரிவுகளாக வாழ்க்கையின் அநேக விஷயங்கள் மாறி விட்டன. இது இல்லை என்றால் அது. அது இல்லையென்றால் இது. இதற்கு மேல் வேறு options இல்லை. ஆனால் உற்று நோக்கினால் மேலும் சில options மறைந்து போகாமல் இன்னும் இருக்கலாம்.
ReplyDeleteவருகிற தேர்தலை பற்றி பேசினால் திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி தவிர வேறு யார் இருக்கிறார்கள்? அது யாரோ ஒரு சுயேட்சையாக இருக்கலாம். அல்லது ML கம்யூனிசட்டாக இருக்கலாம். நாம் வோட்டு போடுவதால் அவர்கள் ஜெயிக்க போவதில்லை. குறைந்தபட்சம் அவர்களுக்கு நம்பிக்கையையும் பெருங்கட்சிகளுக்கு சின்ன அளவு ஆச்சரியத்தையும் கொடுக்கலாம்.
தேர்தலில் எல்லா பெருங்கட்சிகளையும் ஒதுக்கி விடுங்கள் என்பது என் நிலைப்பாடு.
தவிர, வோட்டு போடுவது மட்டும் ஜனநாயக கடமை அல்ல. http://poetry-tuesday.blogspot.com/2009/04/define-democracy.html
//
ReplyDeleteமனிதநேய மக்கள் கட்சி? நான் சீரியஸாகவே எங்கள் தொகுதியின் வேட்பாளர் ஹைதர் அலிக்கு வாக்களிக்கலாமா என்று யோசித்து வருகிறேன். இவருடன் சன் நியூஸில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் - வீரபாண்டியனின் நேருக்கு நேர். அப்போது இவர்கள் திமுகவுடன் உறவாடி மூன்று சீட்கள் கேட்டுவந்தனர்.
//
ம.ம.க மட்டும் என்ன செக்குலர் கட்சியா ?
இந்தியாவில் ஒருவன் இந்து என்றால் அவன் மதவாதி, கம்மியூனல்.
இந்தியாவின் பிறிவினைக்கு வித்தாக அமைந்த முஸ்லீம் லீக் உட்பட அனைவருமே செகுலர் அப்படித்தானே ?
நீங்கள் ம.ம.க வுக்கு வாக்களிப்பதும் இந்தியாவைத் தாலிபான் கையில் ஒப்படைத்துவிட்டு நாமெல்லாம் குல்லா மாட்டிக் கொண்டு சுன்னத் பண்ணிக்கொள்வதும் ஒன்று தான்.
..
ReplyDeleteமதவாதம் இங்கு பயப்படும் அளவுக்குப் பிரச்னை இல்லை. மும்பை, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் போல சென்னையிலோ தமிழகத்திலோ தீவிரவாதம் பெரிய பிரச்னை கிடையாது...
தீவிரவாதம் பெரிய்ய பிரச்சனை ஆகும் போதுதான் மதவாதம் வளர்கிறது என்கிறீர்...
சரி சரி...
மதச்சார்பின்மை மாங்காகளிடம் மாட்டிக்கொள்ளாமல் அடித்தால் சரி.
Wow ..நறுக்கென்ற பதிவு
ReplyDeleteI like your un-biased attitude.
We need this type of opinion so as to analyze our thoughts correctly and decide, instead of Hidden-writings etc.
Keep-it-up...
Your Friend n regular reader of yr blog
S.Ravi
Kuwait
//காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வர அஇஅதிமுக ஆதரவு தேவை என்றால், சோனியா சிறிதும் கவலைப்படாமல், திமுகவை கழற்றி விட்டுவிட்டு, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோருவார். ஜெயலலிதா சிறிதும் கவலைப்படாமல் ஆதரவைத் தருவார்.//
ReplyDeleteஇதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க வாய்ப்பே இல்லை! அழைப்பது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும் இவர் ரெடியாக இருப்பார் என்று ஊர் அறிந்த உண்மை :)))
திரு. பத்ரி அவர்களின் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்.AIADMK க்கு வாக்களித்தல் தமிழ் இனத்திற்கு அவ்வபோது குரல் கொடுக்கும் ஒரு தலைவரின் ஆதரவையும் நாம் இழக்க வேண்டி இருக்கும். இந்த தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா தமிழ் ஈழம் பற்றி பேசவும் மாட்டார்,பேசுபவர்களையும் விட்டு வைக்க மாட்டார்.இதற்கு கடந்த கால நிகழ்வுகள் சாட்சி .
ReplyDelete