குறுங்கடன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். http://www.rangde.org/ என்று ஒரு தளம் உள்ளது. அது, குறுங்கடன் தருவதற்கான ஒரு person-to-person தளம். பணம் உள்ளவர்கள் குறைந்தது 500 ரூபாய் அளவில், பணம் தேவைப்படுபவர்களுக்குத் தரலாம். நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு சிறு அளவு வட்டியும் கிடைக்கும்.
நான் இந்தத் தளத்தில் உறுப்பினராக இருந்து, சிறு சிறு அளவுகளில் பணம் கொடுக்கிறேன். இதனால், எங்கோ இருக்கும் மக்கள், அதிக வட்டியில் கடன் வாங்கி தங்கள் வாழ்வை அழிக்காமல் இருக்க ஏதோ சிறு அளவில் உதவி செய்யமுடிகிறதே என்று மகிழ்கிறேன்.
சில மாதங்களாகவே நான் உறுப்பினராக இருந்தாலும், பணம் ஒழுங்காகத் திரும்பக் கட்டப்படுகிறதா என்பதைப் பார்த்தபின் இதைப் பற்றி எழுத விரும்பினேன்.
இது, kiva.org என்ற தளத்தைப் போன்றதுதான். ஆனால், வரும் மாதங்களில் அதனைவிடப் பெரிதாக வளரக்கூடியது என்று தோன்றுகிறது.
இந்தியாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அவற்றை வழிநடத்த தொண்டு நிறுவனங்கள் என்ற பலவும் உள்ளன. கிராமீன் வங்கி மாதிரி அல்லாத, இந்தியாவுக்கே உரித்தான சுய உதவிக் குழுக்கள் வாயிலாகக் கடன் வாங்குவது என்ற முறை இந்தியாவில் பரவியுள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் பலரும் முன்வந்து சிறு சிறு தொகையாகக் கடன் கொடுக்க ஆரம்பித்தால், பல ஏழை மக்களுக்குத் தேவையான ரூ. 5,000, ரூ. 10,000 பணம் எளிதாகக் கிடைத்துவிடும்.
இதில் கடன் பெறுபவர்கள் என்ன செய்கிறார்கள், அப்படி சிலர் நிஜமாகவே உள்ளார்களா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் நாமே நேரில் சென்று பார்த்துவிடலாம். அல்லது நண்பர்களிடம் சொல்லி, விசாரிக்கலாம். முதலில் நான் பணம் கொடுத்தது திருச்சி பகுதியில் இருந்த சிலருக்கு. முடிந்தவரை தமிழகத்தில் இருக்கும் தேவைப்படுபவர்களுக்குப் பணம் தருவதாக எண்ணியுள்ளேன்.
முயற்சி செய்து பாருங்கள். அதே சமயம், caveat emptor. நாளை பணம் போய்விட்டது என்றால் என்னைக் குறை சொல்லாதீர்கள். இதை நான் வருமானம் தரும் விஷயமாகப் பார்க்கவில்லை. முதலுக்கு மோசம் இல்லாமல் இருந்தால் குறிப்பிட்ட அளவு பணத்தை இதில் ‘சுழற்சி’ செய்துகொண்டே இருக்கலாம்.
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
14 hours ago
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல யோசனையாக இருக்கிறது + அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteஆனால், நமக்கு 3.5%, partnerக்கு 5%ஆமே...? மற்ற கடன்களை விட கம்மிதான் என்றாலும், எப்படியும் கடன் வாங்கியவர்கள் 8.5% கட்டவேண்டும் என்று போட்டிருக்கிறது.
க்ருபா: ஆமாம். இடையில் இருப்பவருக்கு 5%. இது தேவை. ஏனெனில் வாராவாரம் வசூலிக்கவேண்டும். இதுகூட இல்லாவிட்டால், அவர்களால் இதனைப் பராமரிக்கமுடியாது. 3.5% என்பது குறைவுதான். அதனால்தான் இதனை முதலீடாக நினைத்துப் பார்க்கக்கூடாது.
ReplyDeleteக்டன் வாங்கியவர்களுக்கு 8.5% என்பது மிகவும் குறைவு. அவர்கள் பொதுவாக, ஆண்டுக்கு 120% என்ற அளவில் வாங்கிகிறவர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
நன்றி பத்ரி.
ReplyDeleterangde.org இந்திய விசா/மாஸ்டர் அட்டைகளை மட்டும்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். எங்களைப்போன்ற NRIகளுக்கு ஏதாவது மாற்றுவழி உண்டா? அதாவது, உங்களுக்கு தெரிந்த வகையில், நாங்கள் இங்கிருந்தபடியே pre-paid INR விசா அட்டை வாங்க முடியுமா? மீண்டும் தகவலுக்கு மிக்க நன்றி.
-மு.க
தகவலுக்கு நன்றி பத்ரி.
ReplyDeleteGood initiative. Always team work wins, join your hands against Global Warming as well. Use only re-cyclilable items.
ReplyDelete