அத்வானி, பாஜக முன்னிருந்து இந்தத் தேர்தலில் முக்கியமான பிரச்னையாகப் பேசுவது ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் கொண்டுபோய் வைத்திருக்கும் கோடி கோடியான வரி கட்டாத, கணக்கில் காட்டாத, ‘கறுப்புப் பணம்’.
இது உண்மையா? அப்படியே இருந்தாலும் இந்தப் பணத்தை அங்கே கொண்டுபோய் வைத்திருப்பது யார்? அந்தப் பணத்தை திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவருவது என்றால் என்ன? நிஜமாகவே சாத்தியமா? ஸ்விஸ் வங்கியில் நாம் போய்க் கேட்டதுமே கொடுத்துவிடுவார்களா?
ஏன் ஒருவர் தன் பணத்தை வெளிநாட்டு வங்கி ஒன்றில் கொண்டுபோய் வைக்கிறார்? இது இந்தியர்கள் மட்டுமே செய்யும் காரியமா? அல்லது பிற நாட்டவர்களும் செய்கிறார்களா?
இப்படிப் பல கேள்விகள் இருக்கலாம்.
1 மே 2009 அன்று, மாலை 5.30 மணிக்கு, சென்னை, மைலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் தக்ஷிணாமூர்த்தி அரங்கில் ஐஐஎம் பேராசிரியர் ஆர்.வைத்யநாதனும், ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். நிகழ்ச்சி சுதேசி விழிப்புணர்வு இயக்கம், இந்தியன் லிபரல் குரூப், ராஜாஜி பொது விவகார மையம் ஆகியோர் ஆதரவில் நடைபெறுகிறது.
இதே நேரம், இந்தப் பிரச்னை தொடர்பான பல கட்டுரைகள், கேள்வி பதில்கள் கொண்ட, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் ஆங்கிலத்திலான சிறு பிரசுரம் (நன்கொடை ரூ. 50) விற்பனைக்குக் கிடைக்கும்.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
9 hours ago
பதிவிற்கும் தகவலுக்கும் நன்றி பத்ரி. Are you attending..??
ReplyDeleteநான் இருப்பேன்.
ReplyDeleteThat was good information. I feel few additional information on "Black Money" over here would interest readers. The information are,
ReplyDelete*) Yes, we can bring back those money to india through legal action against those person found to be guilty.
*) What is the procedure to do that? Bank association has already informed indian govt that only on formal request they would provide their client information. However, indian govt can request information only on per person basis (ie) does person x has account with your bank?.
*) Secondly, indian govt may need to show some proof to prove that person x is a suspect on this trail and so we request your assistance.
”பொது விவகாரங்களுக்கான ராஜாஜி மையம்”
ReplyDeleteஎன்பது
”ராஜாஜி பொது விவகாரங்களுக்கான மையம்”
என்று இருக்கலாம்.
வர முயற்ச்சிக்கிறேன். இருந்தாலும் நிகழ்ச்சி பற்றியும் பரிமாறிய கருத்துகளையும் விபரமாக பதிவிடவும்.
ReplyDeleteராஜாஜி பொது விவகார மையம் - என்று மாற்றிவிட்டேன்.
ReplyDeleteBadri, I hope you have attended the discussion. Would you mind sharing your knowledge gained through discussion? Thanks!
ReplyDelete