Sunday, March 14, 2010

இது ஒரு ‘போர்’ காலம்

நேற்று தினமணியில் வெளியான கட்டுரை.

நான்கைந்து தினங்களுக்குமுன் திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் இப்படிப்பட்ட ஒரு ‘போர்’ காலக் கருத்தரங்கில் நானும் கலந்துகொண்டு பேசினேன்.

கட்டுரையாளர் சொல்வதைப்போல, இந்தக் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டதன் முதன்மை நோக்கம் UGC நிதியில் ஒவ்வொரு கல்லூரியின் ஒவ்வொரு துறையும் ஏதோ ஒரு கருத்தரங்கை நிகழ்த்தவேண்டுமே என்ற கட்டாயம்தான்.

நான் எதைப் பற்றிப் பேசினேன் என்பது முக்கியமில்லை. அதனால் அங்குள்ள மாணவிகளுக்கு ஏதேனும் உபயோகம் இருந்ததா என்று எனக்குத் தெரியாது. அந்த மாணவிகள் இந்த வலைப்பதிவைப் படிக்கிறார்களா என்று தெரியாது. படித்தாலும் வெளிப்படையாகக் கருத்து சொல்வார்களா என்றும் தெரியாது.

மொத்தத்தில் இதுபோன்ற கருத்தரங்குகளால் எந்தப் பயனும் கிடையாது என்ற எண்ணம் வலுவாகியுள்ளது.

இதற்கு என்ன மாற்று இருக்கலாம் என்று என்னால் உடனடியாகச் சொல்லமுடியவில்லை.

மாணவர்களிடமே இந்தப் பணியை விட்டுவிட்டால், அவர்களாக உருப்படியான கருத்தரங்குகளை நிகழ்த்துவார்களா? சரியான context இல்லாத நிலையில், மாணவர்கள் எனோதானோவென்று கல்லூரிப் பாடங்களைப் படித்து, எப்படியோ பரீட்சை எழுதி பாஸ் செய்தால் போதும் என்று நினைக்கும் நிலையில், கருத்தரங்குகள் மூலம் ஏதேனும் பயன் கிட்டும் என்று விரும்பி அவர்களாக உருப்படியான கருத்தரங்குகளை நிகழ்த்துவார்களா?

4 comments:

 1. சும்மா பேசிவிட்டுப் போகாமல், கருத்தரங்கின் முடிவில் ஒரு action plan ஒன்று உருவாக்க்கி அதனை மாணவர்கள் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும்.

  - சிமுலேஷன்

  ReplyDelete
 2. அப்படியும் சொல்லிட முடியாது. கல்லூரிப் படிப்பிலே, கருத்தரங்கம் என்கிற கான்சப்ட் இருப்பதால் தான், அதை உருப்படியாகச் செய்ய முடியுமான்னு சிந்திச்சிப் பாக்கவோ, கேள்வி கேட்டுத் தலையங்கம் எழுதவோ முடியுது. பத்து பேர், மானியக்குழு தர துட்டைச் செலவு செய்து கணக்குக் காட்டறதுக்காக இந்தமாதிரி குருட்டரங்கம் நடத்தறாங்கன்னா, எவனாச்சும் ஒரு வேலைக்காவாத நல்ல கல்லூரி தலைமையாசிரியர் எங்கயாச்சும் ஒரு கல்லூரில, இந்த provision ஐ பயன் படுத்தி, பசங்களுக்கு relevant ஆக எதையாச்சும் செய்துகிட்டு இருக்கலாம்.

  இதை, இன்னும் ஆக்கபூர்வமாக, பசங்களுக்கு நிஜமாகவே ஏதாச்சும் பயன் தர வழியிலே - வேலைவாய்ப்பு, மேற்படிப்புக்காக வழிமுறைகள், ஆராய்ச்சிக்காக வழிமுறைகள், மென் திறன் மேம்பாடு etc - இந்த கருத்தரங்குகளை நடத்துவது பத்தி, ஆலோசனைகளை எழுதலாம்.

  மேலும் இந்த மாதிரி கல்லூரில நடக்கற சிம்போசியம் எல்லாம், ஒரே பேட்டர்ன்ல, போரடிக்கறாப்பல இருக்கும். உங்களுக்குத் தொடர்பு இருக்கிற கல்லூரிகள்ல எதிலயாச்சும், un-conference பாணியிலே ( மாத்தி யோசி) கருத்தரங்கை நடத்தச் சொல்லி ஐடியா குடுக்கலாம். க்ளிக் ஆனாலும் ஆகலாம்

  ReplyDelete
 3. மாணவனாக, பார்வையாளனாக, கல்லூரி ஆசிரியனாக பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன், எல்லாம் வேஸ்ட்.

  கட்டுரை வாசிக்கும் அல்லது சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு சர்டிஃபிகேட் கிடைக்கும். அதை பையோடேடாவில் ஆட் செய்து கொள்ளலாம்.கருத்தரங்கில் வெளியிடப்படும் நூல்கள் கிடைக்கும். அவ்வளவுதான். சில சமயம் வேலைவாய்ப்பின் போது இதுபோன்ற தகுதிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மற்றபடி இதனால் எந்தப் பயனும் இல்லை. இந்தக் கருத்தரங்குகளினால் அறிவு விருத்தியாகிறது, மாணவர்களின் சிந்தனை மேம்படுகிறது என்றெல்லாம் சொன்னால் அதெல்லாம் சும்மா பம்மாத்து. ஐயாம் சாரி.

  அதை நடத்துபவர்களுக்கு அவர்கள் கல்லூரியோ, பல்கலைக்கழகமோ அல்லது தனியார் அமைப்போ பேராசியர்கள் குழுவோ யாராக இருந்தாலும் சம்பாதிக்க அல்லது புகழ் பெற அல்லது தன்னையோ தனது அமைப்பையோ நிலை நிறுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

  இப்போதெல்லாம் சில பல்கலை மற்றும் கல்லூரிகள் ஒரு சில பதிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தக் கருத்தரங்குக் கட்டுரைகளை நூல்களாக தொகுப்பாகக் கொண்டு வருகிறார்கள். அதில் பாதிக்கு மேல் குப்பை. எழுத்துப் பிழை, தகவல் பிழை, கருத்துப் பிழை மலிந்தவை. பேராசிரியர்களால் பிழை திருத்தப்படாதவை.

  நான் சொல்வது உங்களுக்குத் தவறாகத் தெரிந்தால் திரிசக்தி பதிப்பகத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார், அதை வாங்கிப்படியுங்கள். நமது கருத்தரங்குகளின் உண்மை நிலையும், கட்டுரைகளின் உண்மைத் தன்மையும் புரியும்.

  உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எல்லாமே வேஸ்ட். ஆனால் எங்கள் காலத்தில் இப்படியெல்லாம் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். சஞ்சீவி காலம் ஒரு பொற்காலம்.

  ஒரு (முன்னாள்) கல்லூரி ஆசிரியன்.

  ReplyDelete
 4. Situation in IIMs is also equally bad. Shocked to see the conferences in top IIMs and new IIMs. For the co-ordinating professor, it gets a brownie point in CV. They call for papers and there will be a mandatory registration fee. All the good (sometimes) and third rated papers will be accepted. Many times they'll have parallel tracks with 2-3 people as audience. For the presenter, again CV. They'll put, I presented a paper in IIM. Sad scenario. The compendium of papers will be published as a book by some publisher. Situation is different in North America. I donot know about IIT.

  ReplyDelete