இன்று மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா. காலையில் திரும்பிய திசை எல்லாம் ஷாமியானா கட்டி, ஸ்பீக்கர் வைத்து ‘நமசிவாயம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்’ பாட்டு. தெரு ஓரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட்கள் எல்லாவற்றிலும் தண்ணீர் பந்தல். வித விதமான மெனு. ஓரிடத்தில் பிரிஞ்சி என்றால் இன்னோர் இடத்தில் சாம்பார் சாதம்.
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா? இன்று மதியம் வேலை வெட்டி இல்லையா? அப்படியே ஜாலியாகக் கிளம்புங்கள். முதுகுப் பை ஒன்று இருப்பது உத்தமம். வண்டியில் வந்தால் வண்டியை நாகேஸ்வரராவ் பூங்கா பக்கத்தில் எங்காவது நிறுத்திவிட்டு, பொடி நடையாக லஸ் சந்திக்கு வாருங்கள். அங்கிருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்கு சுற்றிப் பிரதட்சிணமாகப் போங்கள். வழியில், வெட்கம் பாராமல் வரிசையாகக் கிடைக்கும் பிரசாதங்களை உண்டு மகிழுங்கள். கையோடு பேப்பர் நாப்கின் கைத்துடைக்க எடுத்துச் செல்லுங்கள், அல்லது நல்ல பெரிய கைக்குட்டைகள் சில.
இன்று மாலை நானும் அங்குதான் இருப்பேன்.
2007 விழா பற்றி நான் எழுதியது
2005 விழா பற்றி நான் எழுதியது
Saturday, March 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
சற்று நேரம் முன்பு கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக வந்தபோது அந்த சாலையில் இருந்து வீனஸ்காலனி போகும் சாலை முனையில் பெரிய தண்ணீர் பந்தலும்,கூடமும் இருந்தது. இன்று என்ன விஷேசம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.இதுதானா விஷயம் :)
ReplyDelete//நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா? இன்று மதியம் வேலை வெட்டி இல்லையா? //
ReplyDeleteபத்ரி சார்! தாங்கள் என்ன வேலை வெட்டியில்லாமலா நாள்தோறும் கூட்டம் போட்டு காலத்தை ஓட்டுகிறீர்கள்?
உங்களுக்கு லாண்ட் மார்க்கும்,ரிலையன்சும் உண்டு லாண்ட் மார்க் போக வசதி இல்லாதவர்களுக்கு ?
திருவிழாவின் முக்கியத்துவம் என்ன?அதனால் மக்களுக்கு என்ன நன்மை?
1.கடவுளின் பெயரால் ஆன்மீக அன்பர்களுக்கு கடவுளை வணங்கும் விழா.
2.அன்றைய தினம் நடைபெறும் விழாவுக்கு வேண்டிய பணிகளை செய்ய,நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.
3.அங்கு சாலைஓரம் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறிய வியாபாரக் குடும்பங்களுக்கு வாய்ப்பு.
4.திருவிழாவில் பங்கு கொள்ளும் கூட்டத்தைப் பாருங்கள் .ஒரு உண்மை நமக்கு விளங்கும்.அனைவரது முகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல் வெளிப்படும்.
என பலவகையிலும் திருவிழா மக்களை வாழ வைக்கிறது.
s, u r right - the crowds swell due to pseuds like u - unwanted creatures who hv no biz to b there - jamming the place fr genuine devotees; velai vetti illatha gumbal.
ReplyDeleteu r not like firangs to gawk at something novel -this is a religious fest - so riff raff hv no biz coming there in the first place
unless u r there fr the free food or the figure -correcting