Zoho University பற்றி நான் எழுதிய பதிவுக்கு சில எதிர்வினைகள் இருந்தன. அதைத் தொடர்ந்து ஸ்ரீதர் எனக்கு அனுப்பிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கி இங்கே இட்டுள்ளேன். கூடவே ஆங்கில வடிவத்தையும் கொடுத்துள்ளேன்.
*** ஸ்ரீதர் எழுதியது ***
Zoho University பற்றிப் பதிவு எழுதியதற்கும், அது தொடர்பாக வந்துள்ள விமரிசனங்களுக்குப் பதில் அளிக்க வாய்ப்பளித்ததற்கும் பத்ரிக்கு நன்றி. மேற்கொண்டு படிப்பதற்குமுன், நான் எழுதியுள்ள How We Recruit - On Formal Credentials vs Experience Based Education என்ற பதிவைப் படியுங்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதற்குப் பின்னால் உள்ள கருத்துகள் விளங்கும். அங்கே சொல்லியிருப்பனவற்றை இங்கே நான் மீண்டும் பதியப் போவதில்லை.
நாங்கள் ஏன் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வேலைக்கு எடுக்கிறோம்? என் அனுபவத்தில், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுத்ததிலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் வேலை செய்வதைக் கவனித்ததிலும் சிலவற்றைப் புரிந்துகொண்டுள்ளேன். கல்லூரிகள் மிகச் சிறப்பாகக் கல்வி அளித்தாலும் (நம் ஊரில் பொறியியல் கல்லூரிகளில் அரிதாகவே இது நடக்கிறது) மாணவர்கள் பாடங்களை ஒழுங்காகக் கவனிப்பதில்லை; பாடங்களின் சிறப்பை அறிந்துகொள்வதும் இல்லை. இதற்குக் காரணம் அறிவு என்பது சூழலைப் பொருத்தது.
இதற்கு வரலாற்றை உதாரணமாகக் காண்பிக்கிறேன். ஏனெனில் கல்வெட்டு தன் விமரிசனத்தில் வரலாற்றைக் குறிப்பிட்டிருந்தார். கூகிளைப் பயன்படுத்தாமல் இந்தச் சோதனையை மேற்கொள்ளுங்கள்: குப்தப் பேரரசு சுமாராக எந்தக் காலகட்டத்தில் இருந்தது? அவர்களது பரப்பை முகலாயர்களின் பரப்புடன் ஒப்பிடுங்கள். முகலாயர்களுக்கும் குப்தர்களுக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? கட்டாயம், இந்தியப் பள்ளிகளில் படித்திருக்கும் அனைத்துக் குழந்தைகளும் இவற்றைப் படித்திருப்பார்கள். எண்ணற்ற பரீட்சைகளை எழுதியும் இருப்பார்கள். நம் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியே வந்துள்ள 100 பேரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டால், கட்டாயம் 99 பேர் திருதிருவென விழிப்பார்கள். ஏன்? பரீட்சைகளே வரலாற்றில் ஒருவருக்கு உள்ள ஆர்வத்தை அழித்துவிடுகின்றன. நோக்கம் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அல்ல; பரீட்சையில் தேர்ச்சி பெறுவது. நாம் பலரும் அந்த நோக்கத்தை அடைந்துவிட்டோம்.
விரிந்த பொறியியல் அறிவைப் பொருத்தமட்டில் எந்தச் சூழலில் கற்றுக்கொள்தல் நிகழ்கிறது என்பது முக்கியமாகிறது. எனக்கு ஐஐடி மெட்ராஸில் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங்கில் பட்டம் கிடைத்துள்ளது. அதுவும் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களுடன். ஐஐடியில் ஆண்டெனாக்கள் பற்றி எனக்கு ஒரு பாடம் இருந்தது. இன்று நீங்கள் ஆண்டெனாக்கள் பற்றி சற்றே ஆழமாக விவரிக்கச் சொல்லிக் கேட்டால் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் விக்கிபீடியாவைத் தேடிச் செல்லவேண்டும். ஆண்டெனா பற்றி, எனக்குத் தெரிந்ததும், 12-ஆம் வகுப்பில் இயல்பியல் பாடம் படித்த ஒருவருக்குத் தெரிந்ததும் ஒன்றே. (ஆண்டெனாக்கள் கம்பி இல்லாமல் சிக்னலை பெறும்/அனுப்பும். டிஷ் ஆண்டெனாக்கள் கண்ணாடியைப் போல வேலை செய்யும். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்! நான் பொய் சொல்லவில்லை.)
ஐஐடியில் நான் இந்தத் துறையில் ஒரு பாடத்தை எடுத்து, தேவையான எல்லாப் பரீட்சைகளிலும் தேர்வு பெற்று, நல்ல மதிப்பெண்ணையும் பெற்றிருந்தேன். ஆனாலும் அந்தப் பாடத்தின்போது நான் கவனத்தைச் செலுத்தவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என் வாழ்க்கையில் அப்போது நடந்துகொண்டிருந்த பிற விஷயங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பாடம் அவ்வளவு முக்கியமானதாக இல்லை. என் வாழ்க்கைக்கு போரடிக்கும் ஆண்டெனாக்கள் தேவையே இல்லை என்று கருதினேன். பிற்காலத்தில் குவால்காம் என்ற வயர்லெஸ் நிறுவனத்தில் வேலை செய்யப்போகிறேன் என்று தெரிந்திருந்தால், செல்பேசிகள் இயங்குவதற்கு ஆண்டெனாக்கள் மிகவும் அவசியம் என்று தெரிந்திருந்தால் (நான் பட்டம் பெற்றது 1989-ல். செல்பேசிகள் பிறகுதான் வர இருந்தன), ஆண்டெனாக்கள்மீது அதிக கவனம் செலுத்தியிருந்திருப்பேன். ஆனால் அந்தச் சூழலில் இந்தப் பாடத்தை நான் கவனிக்க வாய்ப்பே இருந்திருக்கவில்லை. ஒரு சராசரி மாணவன் இப்படித்தான் இருந்திருப்பான். சொல்லப்போனால் என்னை சராசரிக்கும் மேலான மாணவனாகவே கருதினர்.
1985-ல் ஐஐடியில் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பை நான் எடுத்துக்கொண்டதற்குக் காரணம் அப்போது கம்ப்யூட்டர் சயன்ஸ், புரோகிராமிங் ஆகியவை சுவாரசியம் அற்றவையாகத் தெரிந்தன. மாறாக, சர்க்யூட்கள் சுவாரசியமாகத் தெரிந்தன. ஐஐடியில் இருந்த காலத்தில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மழைக்குக்கூட ஒதுங்கமாட்டேன் என்று நினைத்திருந்தேன். என் தந்தை இப்போதும் இதை ஞாபகப்படுத்துவதை நிறுத்துவதில்லை.
இன்று பொறியியல் கல்லூரிகளில் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் ஒரு செமஸ்டரில் இருக்கும் பாடங்கள்: மொபைல் கம்யூனிகேஷன்ஸ், சாடிலைட் கம்யூனிகேஷன்ஸ், சி புரோகிராமிங், இமேஜ் ப்ராசஸிங், ப்ரொஃபஷனல் எதிக்ஸ். இவற்றைக் கற்றுக்கொள்ள, அதிர்ஷ்டசாலி மாணவர்கள் நிறையப் பணம் செலவழித்திருப்பார்கள். முக்கியமாக அந்த ப்ரொஃபஷனல் எதிக்ஸ் பாடம்! அந்தப் பாடத்தில் 90%-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் (என்னைப் போல) அந்தப் பாடத்தையே எடுக்காதவர்களைவிட அற உணர்ச்சி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
என் கருத்து இதுதான்: பெரும்பாலான அறிவுத் துறைகளில், முக்கியமாக பொறியியல், மென்பொருள் துறை போன்ற தீவிரமான அறிவுத் துறைகள், அறிவு என்பது சூழலைப் பொருத்தே அமைகிறது. கல்லூரி பெரும்பாலும் சரியான சூழலாக இருப்பதில்லை. சொல்லப்போனால், கல்லூரி சரியான சூழலே அல்ல.
ஒரு கல்லூரி நன்கு பாடம் நடத்தினாலே இதுதான் நிலை. 90% இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் சரியான ஆசிரியர்கள் இல்லை. லீனியர் அல்ஜீப்ரா பாடத்தைக்கூடச் சரியாகச் சொல்லித்தருவதில்லை.
“கொத்தடிமை” என்ற கருத்து தொடர்பாக: இந்தியச் சமூக நிலையைப் பார்க்கும்போது அந்த விமரிசனம் ஏன் வந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். Zoho Corp-இல் எந்தவிதமான கைவிலங்கோ, கட்டுப்பாடோ கிடையாது. மாணவர்கள் சேர்ந்து, ஒரே மாதத்தில் விலகியிருக்கிறார்கள். மேற்கொண்டு கல்லூரியில் சேர்ந்து படி என்று உறவினர் வற்புறுத்தியிருப்பார். சேர்ந்த 6 மாதத்தில் கல்யாணம் என்ற காரணத்தால் விலகியிருக்கிறார்கள். இன்றும்கூட எங்களிடம் சேரும் பல பெண்களுக்கு இதுதான் நடக்கிறது. வேலைக்கு சேர்ந்தவர்களும்கூட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேலையிலிருந்து விலகலாம்.
கொத்தடிமை பற்றிப் பேசும்போது, நான் வேறு இடத்தில் Jail College Phenomenon என்று எழுதியிருப்பதைப் பாருங்கள். நவீன கல்வி, மாணவர்களை பச்சைக் குழந்தைகளாகப் பார்க்கிறது. எங்களது மாற்றுக் கல்வி முறை, மாணவர்களை வயதுக்கு வந்தவர்களாகப் பார்க்கிறது. இதனால் மாணவர்கள் மேலும் வேகமாக வளர்கிறார்கள். இதுபற்றி நான் பின்னர் எழுத உள்ளேன்.
நாங்கள் எங்கள் மாணவர்கள்மீது நிறைய முதலீடு செய்கிறோம். ஆசிரியர்-மாணவர் விகிதம் எங்கள் இடத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமாக வேறு எங்கும் இருக்க முடியாது. மாணவர்கள் படிக்கும்போதே அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறோம். ஏன் இத்தனையையும் செய்கிறோம்?
உதவித்தொகை அளித்தல், அவர்களுக்கு வேலை காத்திருக்கிறது என்ற உத்தரவாதத்தைத் தருதல், நிஜமான வேலையில் பணிபுரிவோருடன் தினம் தினம் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு ஆகியவையே அவர்கள் ஆர்வத்துட்ன ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம். அந்தச் சூழல்தான் முக்கியம். எங்கள் மாணவர்கள் விரைவிலேயே அவர்களது குடும்பத்தின் முக்கிய சம்பாதிப்பவராக ஆகிறார். அது தரும் தன்னம்பிக்கை விலைமதிப்பற்றது.
இறுதியாக, என் சொந்த மகனை இங்கு சேர்த்துப் படிக்க வைப்பேனா? நிச்சயமாக! (ஆனால் அதற்குமுன் அவன் ஆடிசத்திலிருந்து மீண்டு வரவேண்டும். அது ஒரு தனிக்கதை!)
*** முற்றும் ***
*** ஆங்கில வடிவம் ***
I want to thank Badri for blogging about Zoho University, and giving me the opportunity to respond to critical comments. Before I begin, I want to point to a blog post I made some time ago How We Recruit - On Formal Credentials vs Experience Based Education, which explains the philosophy behind what we are doing. It is worth reading that post, so I won't repeat that material here.
Why do we go to high school to recruit? It is my belief, based on years of observation and experience, both my own, as well based on recruiting hundreds of college graduates and observing their real world performance, that even when colleges teach well (a very rare situation in our engineering colleges in India), the fact that most advanced knowledge is contextual makes it hard for students to appreciate its significance or pay attention.
I will use a history example, because kalvettu brought up history in his comment. Take this quick test (no Google please): approximately what era was the Gupta empire and what was its significance to Indian history? Compare their geographic reach to that of the Mughals later; approximately how many centuries separated the Guptas and the Mughals? Practically every school kid in India would have studied all this, and written countless exams on it. If I asked that question to 100 of our college-educated engineers, 99 would draw a complete blank on that one (yes, I have performed this "test"). Why? Those blasted exams *themselves* killed any possible interest anyone could have had in history. The objective was not to learn history, but pass the exams. Most of us met *those* expectations well.
When it comes to detailed engineering knowledge, the context in which learning takes place matters a lot. I am supposed to have a degree in Electronics Engineering from IIT Madras. I even have a fairly good GPA to go with it. Consider the subject of antennas, on which I had a course in IIT. If I were asked to explain antennas at a fairly high level, I would draw a blank, and have to hit the Wikipedia. My level of knowledge of antennas is no more than that of a person who had a Physics class in 12th standard (antennas receive/transmit wireless signals, and dish antennas work like a mirror - that's about it, and I am not making this up). On paper, I had a class in IIT on that subject, passed all the requisite exams, even got a decent grade out of it. But at some deeper level, I *know* I wasn't paying attention to it. It wasn't *important* compared to everything else going on in life at that time for me, and I couldn't see the significance of something mundane and boring like antennas in the overall scheme of things in life. If I had realized I would end up working for a wireless company later (Qualcomm), and if I had realized antennas would be important in cell phones (which were to come later - I graduated in 1989), I might have paid more attention. Basically, there was no context in which I felt like paying attention to this fairly esoteric subject. I consider myself an entirely typical student in that respect - in fact, by the standards of the system, I was considered a "high achiever".
In fact, I opted for Electronics in IIT in 1985, mainly because computer science and programming sounded incredibly boring compared to building circuits. During my years in IIT, I would have sworn that I would not be caught dead in a software company. My father still reminds me of that once in a while.
A typical engineering college curriculum (in Electronics) will have the following courses all in one semester, taken from a real world example: Mobile Communications, Satellite Communications, C Programming, Image Processing and Professional Ethics. The lucky recipients of that education paid enormously for the privilege. Take that Professional Ethics course. Does anyone believe that the student who went through that class and got 90% in their exams is more ethical than someone (like me) who never had the good fortune to attend a formal ethics class?
My basic point is this: most knowledge, particularly higher order knowledge you use in an engineering or software job, is highly contextual. The *motivation* to learn something (for most people) is a function of the context they are in. College is *not* always a great context, unfortunately. In fact, for most students, college is not a very good context.
All of the above applies even when college teaches well. I will not dwell on the fact that 90% of engineering colleges in India do not have anything remotely resembling decent faculty, and basic stuff like Linear Algebra are not taught well.
On the "bonded labour" comment, it is understandable, considering the society we live in India. We do not require any sort of commitment, bond, nothing at Zoho Corp. We have examples of students joining, and then dropping out in 1 month because some uncle told them to go to college or after 6 months because of pressure from their families to marry - unfortunately that still happens to some of our female students. Students can leave at any time (and some do) even after joining the job. Now, tangentially on the subject of bonded labour, I have posted about the Jail College Phenomenon elsewhere. I believe modern education infantilizes students, and I believe our alternative treats students as the young adults they are, and therefore they actually grow up faster. This is a separate topic which I hope to write about some day.
We invest heavily in our students. Our faculty to student ratio would be among the highest anywhere. We pay students during their time learning. Why do we do all that? Because we believe actually paying them, and the knowledge on the part of the students that there is a job waiting for them, and the extensive opportunity to interact with people doing a real world job on a daily basis, create the *context* in which they have the motivation to learn. That context really matters. Our students actually become primary breadwinners for their families fairly quickly, and the resulting sense of self-worth is incalculable.
Finally, would I put my own son in this? Absolutely (he has to recover from autism first, but that is a whole another topic).
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Thank you Badri for bringing this out.
ReplyDeleteRegards,
Srinivasan. V.
I am thankful that Badri is devoting so much energy on this important issue. I wish his partner Satya, who keeps an excellent blog on Education in India, can chip in with his views as well.
ReplyDeleteSridhar, I think that what you are doing at Zoho Univ is definitely interesting from a business point of view. However I cannot say the same about your education model. I don’t care about credentials, and I wouldn’t doubt that Zoho education is better that most college degrees. I agree with you that there is a big context gap between the skills that students acquire in college and the skills they'll need later at work. Most college courses teach few useful job skills; their main function is to signal to employers that students are smart, hard-working, and conformist. In that sense Zoho may even be doing a good thing to our economy by preparing students to become productive early instead of spending many years in wasteful status contests.
However, in general, people benefit from formal education and should acquire as much as they can. Though there are many good reasons to do so, the best economic research suggests that the wage return and range of job opportunities for a year of college course work is more than enough to justify pursuing at least some higher education after higher secondary. I am curious as to why Zoho would want to recruit higher secondary students while there are many equally talented, eager and unemployed college graduates who will lap up the opportunity for the same salary and employment conditions. Does the fact that college graduates pose much more flight risk than an employee with higher secondary + Zoho univ qualification figure in your considerations? I am not saying this is wrong – retaining employees is a huge challenge in the s/w industry and this would be a creative but a perfectly valid business decision.
And if that is the reason, it is best to leave out all the talk about education philosophy and social change.
@anon :
ReplyDeletecollege students could have already spent a lot on their studies and would want to reap back the benefits and will not mind switching jobs as necessary for higher salaries.
for these school students taking such decisions will create a feeling of guilt : "How can I quit this place which has given me my current life."
creating a feeling of guilt is cheaper and works well.
see the proof :
"One of the students, who was on an assignment at Tokyo, was offered a lucrative job at a level 1 company, but coolly rejected it! this too of his own choice.", says a zoho staff
This comment has been removed by the author.
ReplyDelete.
ReplyDeleteஸ்ரீதரின் மற்றும் பத்ரிக்கு நன்றி!
**
கல்வியின் நோக்கம் வேலைக்கு கரைசேர்ப்பதாக இருக்கக்கூடாது. நம்மில் பெரும்பாலனவர்கள் வேலை இலக்கை வைத்துதான் படித்திருப்போம் .நான் அப்படித்தான் படித்தேன் அல்லது பயிற்று + விற்கப்பட்டேன் .
சிந்திக்கும் திறன் , கேள்வி கேட்கும் மற்றும் திறன் சுயபுரிதல் போன்றவை மழுங்கடிப்பட்டு மனப்பாடம் செய்யும் கருவியாகவே குழந்தைகளின் கல்வி உள்ளது. அதில் நிறைய மாற்றம் தேவை.
நல்ல உதாரணம் ஐ ஐ டி எனப்படும் மாட்டுத்தொழுவங்கள். ஐ ஐ டி யில் இருந்து இதுவரை உலகைத் திரும்பச் செய்யும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு வந்துள்ளாதா? அவர்கள் அமெரிக்கா போய அங்கே நன்றாக் வேலை செய்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஐ ஐ டி இந்தியர் யாரும் உலகை மாற்றிப்போடும் கண்டுபிடிப்புகளை குவித்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. :-((((
அதுபோல இன்னும் கம்யூனசிம், மார்க்கிசம், மும்,பின்பக்கவாட்டு நவீனம் என்று உலக சித்தாந்தகளைத்தான் கல்லாகட்டி விற்கிறோமே தவிர இந்தியாவில் இருந்து சிந்தனைகள் வரவில்லை. (சாமியார் சிந்தனைகள் ..வேணாம் நான் அழுதிடுவேன்)
மொத்தமாக தலைமுறைகளின் புத்தி மழுங்கடிப்பட்டுவிட்டது.
**
அனைவரும் ஒரு நல்ல நோக்கத்துடந்தான் ஒரு முயற்சியைத் தொடங்குகிறார்கள். காலப்போக்கில் அது வணிகமயம் ஆகும்போது பலவற்றை சகித்துக்கொண்டு நோக்கத்தை மறந்து வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்
எனக்கு இருக்கும் பல வருத்தங்களில் முக்கியமான ஒன்று , கணனித்துறையிலும் பொதுவாக மக்கள் மத்தியிலும் இருக்கும் பொதுப்புத்தி. சோப்பு என்றாலே ரின் , அல்லது வாசிங் பவுடர் என்றால் நிர்மா என்று கேட்பதுபோல "கம்யுனிகேசன்" திறமை என்றாலே அதை ஆங்கில மொழியுடன் அடையாளைப்டுத்துவது.
ஸ்ரீதரும் இங்கே அதைத்தான் செய்கிறார். ஒரு இடத்தில் அவர்கள் எல்லாம் ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கிறார்கள் என்று ...
சோ..வாட் ஸ்ரீதர்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது
கம்யூனிகேசன் என்பது தான் நினைத்தை தெளிவுபட அடுத்தவருக்கு சொல்வது. அதை ஆங்கிலத்தில் சொன்னால்தான் கயூனிகேசன் திறமை என்று சொன்னால் என்ன செய்வது?
மொழி அறிவு என்பதும் நினைத்தை தெளிவுபட சொல்வது என்பது வேறு. பேச மொழித்திறன் வேண்டும். ஆனால் ஆங்கில திறன் மட்டுமே கம்யுனீகேசன் என்ற எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒன்றை ஆங்கில மொழி என்ற அளவுகோலில் மட்டுமே அளக்கும் முறை வலிந்து திணிக்கப்பட்டது.
எனது காலத்தில் நடந்த குரூப் டிஸ்கசன் என்ற கொடுமைகள், ஆங்கிலத்தை மட்டுமே கம்யுனிகேசன் மீடியமாக கருதின. வைகோ போல் அழகாக தமிழில் கம்யுனிகேட் செய்தால்கூட அவர்களின் அளவுகோளில் கம்யுனீகேசன் முட்டாளகவே கருதப்பட்டது.
Toyoda (Toyata CEO) விற்கு ஆங்கிலம் தெரியாது. என்ன செய்யலாம். அவரை கம்யுனீகேசன் அவருக்கு பூஜ்ஜியம் என்று சொல்லிவிடலாமே?
***
ஒவ்வொரு விசயத்திலும் நிறையப்பேசலாம்.
கறிக்காக என்றே வளர்க்கப்படும் கோழிகள் ஆரோக்யமாகவும் போசாக்காகவும் இருக்கிறது என்று சொன்னால். ஆமாம் அந்த நோக்கத்தில் அது சரி என்று தான் சொல்வேன்.
.
அடிப்படையில் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அவர்களின் கல்வி ( வேலை நோக்கம் இல்லாமல் அறிந்து கொள்ள மட்டும்) என்று திட்டமிட்டால் எண்ணச் சுதந்திரம் இருக்கும்.
***
.
உங்களின் கல்வி முறைகளை பற்றி மேலும் தெரிந்துகொண்டு பேசுகிறேன்.
இப்படியாவது சிலர் செய்ய முனைகிறார்களே என்றளவில் பாராட்டுகள்.
.
ReplyDelete1: //நாங்கள் எங்கள் மாணவர்கள்மீது நிறைய முதலீடு செய்கிறோம். //
முதலீடு ஏன் எதற்கு செய்யப்படுகிறது?
முதலீடு என்று நீங்கள் தெரிந்து சொன்னதா?
(அல்லது பத்ரியின் தமிழாக்கமா?)
முதல் போடுகிற்வர்கள் பலன் எதிர்பார்ப்பார்கள்.
எதை எதிர்பார்கிறீர்கள்?
**
2. // மாணவர்கள் படிக்கும்போதே அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறோம். ஏன் இத்தனையையும் செய்கிறோம்?//
அதானே? எங்க சொல்லுங்க பார்ப்போம்? :-))))
3. //உதவித்தொகை அளித்தல், அவர்களுக்கு வேலை காத்திருக்கிறது என்ற உத்தரவாதத்தைத் தருதல், நிஜமான வேலையில் பணிபுரிவோருடன் தினம் தினம் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு ஆகியவையே அவர்கள் ஆர்வத்துட்ன ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.//
:-)))
காமராஜர் ஏன் சாப்பாடு போட்டார் தெரியுமா? சிம்பிள் ....
அ: காலிவயிருடன் படிக்கமுடியாது
ஆ: அப்படியாவது பெற்றோர்களின் பணச்சுமை குறையும்
இ: அதற்காகவாவது படிக்க வருவார்கள்.
வேலையை நோக்கிய திட்டம் அல்ல.
கல்வியை கற்றுக்கொடுப்பதற்காகவே போட்ட திட்டம். அதன் பலன்களில் ஒன்று வேலையாக இருக்கலாம். ஆனால் வேலை மட்டுமே நோக்கம் அல்ல.
4: // எங்கள் மாணவர்கள் விரைவிலேயே அவர்களது குடும்பத்தின் முக்கிய சம்பாதிப்பவராக ஆகிறார். //
சம்பாதித்து....?
5: // அது தரும் தன்னம்பிக்கை விலைமதிப்பற்றது.//
பணம் தன்னம்பிக்கை தரும் ..சரிதான்.
**
கல்வி என்ற கோட்பாட்டில் நீங்கள் இல்லை.
வேலை என்ற இலக்கில் பங்கில்(மாணவர்களிடம்) முதலீடு செய்கிறீர்கள். நீங்கள் சொன்ன வார்த்தைதான்.
கல்விக்காக மட்டும் பங்களித்தால் நல்லது. முதலீடு பலன் வேலை சம்பளம் என்ர நோக்கில் செயல்பட்டல் இது வேலையை நோக்கி ஓட்டப்படும் ஆட்டுமந்தையாக முடிய வாய்ப்பு உள்ளது.
.
அதுக்காக கான்வென்ட் மற்றும் Eng..காலேஜ் முதலீடுபோல ரிவர்ஸ் கியரில் போய்விடாதீர்கள். :-))
ஆஹா எங்காவது நல்ல விவாதம் நடந்துடகூடாதே. இந்த கல்வெட்டு தன்னுடைய சொம்பை தூக்கிட்டு வந்துடுவாரு. ஏதாவது உருபடியா இதுவரைக்கும் விவாதிச்சிருக்காரான்னு பார்த்தோமுன்னா ஒண்ணுமேயில்லை.
ReplyDelete.
ReplyDeleteஅனானி @ Mon Mar 15, 05:10:00 PM IST
//எங்காவது நல்ல விவாதம் நடந்துடகூடாதே. இந்த கல்வெட்டு தன்னுடைய சொம்பை தூக்கிட்டு வந்துடுவாரு. ஏதாவது உருபடியா இதுவரைக்கும் விவாதிச்சிருக்காரான்னு பார்த்தோமுன்னா ஒண்ணுமேயில்லை.//
நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை அனானி. ஆட்டுக்குட்டியை அறுத்துச்சாப்பிடுவது சாப்பிடுபவனுக்கு நல்லதா இருக்கும். ஆனால் ஆட்டுக்கு அல்ல.
எல்லாம் எங்கே இருந்து பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
எனது சொம்புகள் உங்களுக்கு அப்படித் தெரிவது உண்மை. ஏன் என்றால் நீங்கள் சொல்லியதுபோல நான் உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லை.
:-((((
**
"12 ஆம் வகுப்பு" + "மான் மார்க் 2 வருட சர்டிபிகேட்" உள்ள ஒருவனை அந்த "மான் மார்க்" கம்பெனிதவிர மற்றவைகள், கல்வித் தகுதி என்ற அடிப்படையில் ஏறெடுத்தும் பார்க்காது.
ஒரு கேவலமான உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு இல்லாமல் , 'கல்வித் தகுதி' என்ற அடிப்படையில் கொடுக்கப்படும் அயல்நாட்டு விசா பிரிவுகளுக்கான விதிமுறைகளில் இவர்கள் சுண்ணாம்பாகி "மான் மார்க்கிலேயே" அல்லது உள்ளூரிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம்.
(எதற்கு அயல்நாடு என்று கேட்கலாம். அதனால்தான் கேவலமான உதாரணம் என்று சொன்னேன்)
அதாவது இவர்கள் இந்த 12 ஆம் வகுப்புத் தகுதியை மட்டும் (அங்கீகரிக்கப்பட்டது) வைத்து இவர்கள் "மான் மார்க்" கம்பெனியைத் தாண்டி எங்கும் செல்ல முடியாது.
இப்படி பயிற்சி கொடுக்கும் பெரும்பாலான மான் மார்க் கம்பெனிகளின் Hidden Agenda இதுவாகவே இருக்கிறது. :-(((
திறமையால் சுயதொழில் செய்பவர்களாக வரலாம். நான் சொல்வது கல்வி மர்றும் அது சார்ந்த வேலைவாய்ப்பு.
***
"இலவசமாக சோறு" என்றால் சிந்திக்காமல் மூளையை அடகுவைக்கத்தயார இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைதான்.
குறைந்த பட்சம் ஒரு பட்டப்படிப்பு படித்துவிட்டு பின்னர் இப்படியான பயிற்சிகளில் சேருவது நல்லது. மற்றும் அதுவே புத்திசாலித்தனம்.
********
செய்ய வேண்டியது......
(1) 3 அல்லது 4 வருட அறிவியல் பட்டப்படிப்பிற்கான அனுமதியை முறைப்படி அரசாங்கத்திடம் (பல்கலைக் கழகம்)பெற வேண்டும்.
(2) அதனை அடிப்படையாகக் கொண்டு அந்த பாடத்திட்டங்களுடன் இவர்களின் நல்ல பயிற்சியையும் கொடுத்தால் மட்டுமே, மாணவர்கள் உண்மையான சுதந்திரம் உடையவர்களாக இருப்பார்கள்.
அதுவரை 12 ஆவது முடித்த "மான் மார்க் கம்பெனி" கயிற்றில் கட்டப்பட தலைசிறந்த அறிவாளிகளாக மட்டுமே இருப்பார்கள்.
**
அரசின் அங்கீகாரம் இல்லாத ஒரு படிப்புடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களை முடக்குவது சரியல்ல. :-(((
பல்கலைக் கழகம் குப்பையாக இருக்கலாம் ,அரசாங்கம் குப்பையாக இருக்கலாம், ஆனால் அங்கீகாரம் என்பது கல்விக்கு முக்கியம்.
***********
கொசுறு:
ஒரு செயலானது அதனைப் பார்க்கும் பார்க்கும் இடத்தில் இருந்தும் ,பார்ப்பவரின் சிந்தனைகளில் உறைந்துள்ள பழைய தகவல்களையும் ஒட்டியே மூளை பரிசீலித்து ஏற்கும் என்பதைப் புரிந்தவன். நான் சொல்வது பிதற்றலாக, முட்டாள்தனமாக யாருக்கும் தெரிந்தால் அதுவும் உண்மையே.
.
Kalvettu: Your views are vastly trying to dig out only negatives. And the arguments you place are like those that people argue in the "pattimandrams" held in TV channels- nothing useful/concrete.Just some emotional talks.
ReplyDeleteTo some extent your views are because of the tons of training centers, tuition centers, "IT" companies taking x amount and providing x/10 rupees as salary for 10 months that we are used to right from school days. These kind of things have a huge impact on our mindset towards any initiative that is not conventional.
Please try to come out of the mindset that any social cause should be 100% free from business interest. Why cant a social cause be done with business interests too as far as it is helps the people involved. This way the cause as such can be sustainable. Take example of Food processing companies giving job to differently abled.This is win-win and is a sustainable way of helping those people. Infact there could be more cost or more effort involved in getting them work. The company is taking that effort to employ them rather than taking the conventional mode.
Zoho says that there is no legal bond and people are free to move on whenever they wish.If a person wants to move out after an year he can go back and join college. He would have lost 1 year which is like failing once in +12. The fact that he wants to move out indicates a failure on his side or a failure on Zoho's side. Whats the big deal here. In that one year the person might have learned few things, interacted with many experienced people, got exposure to real world business aspects and all of these will make him a better person.
There is also option to pursue the "government authorized degree" after 3 years.There are tons of such universities offering 2 years degree churning mechanism. So they do join the so called elite group of degree holders if they wish.
You complain about Zoho teaching English. Whats wrong in that? The fact is that English is the no.1 business language today. One has to learn it to be in global business. The fact that English is no.1 business language DOES NOT mean other languages are inferior.Zoho teaching English does not mean they are killing Tamil or they are saying English is the only language thru which someone can communicate (as you have understood). English skill is vital for survival in vast variety of global business.This is like a warrior learning different fighting/war skills to survive against foreign enemies. If one thinks that only his skill is superior and keeps mum, they are bound to fail.
Anonymous said... @ Tue Mar 16, 11:49:00 AM IST
ReplyDelete// Kalvettu: Your views are vastly trying to dig out only negatives. And the arguments you place are like those that people argue in the "pattimandrams" held in TV channels- nothing useful/concrete.Just some emotional talks. //
Thank you Mr. Anonymous , in that case please ignore my message. Why do you care for answering my question then?
bye
*
Badri feel free to delete my comments.
**
ஸ்ரீதரின் கல்லூரி மற்றும் போதிக்கும் முறை -அப்படியே நிஜம்.என் மகன் சொல்லும் விஷயங்கள் மூலம் கல்லூரி நடப்புகளை தெரிந்துகொள்வேன் அதில் சாம்பிளுக்கு ஒன்று “ அந்த வாத்தியார் பேசுவே காதில் விழாது” பிறகு எப்படி புரிந்துகொள்வது?பல விரிவுரையாளர்கள் சரியான தகுதியுடன் வருவதில்லை என்பதும் நிஜம்.நாளைய தலைமுறையை பார்க்கும் போது பயமாக இருக்கிறது.இவர்கள் செய்யும் Design மூலம் என்னென்ன தவறுகள் மக்களை பலி வாங்கப்போகிறதோ!!டெல்லி மெட்ரோ - ஒரு உதாரணம்.என்ன தான் மென்பொருள் மூலம் Design செய்ய முடிந்தாலும் அடிப்படை அறிவு என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
ReplyDeleteZoho பற்றி தெரியவைத்ததற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.
கல்வெட்டு,
ReplyDeleteபத்ரியின் முதல் பதிவிலேயே தெளிவாக
"ஏழைக் குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட பின்னணியில் வந்தவர்கள் மட்டுமே விதிவிலக்கு. அவர்களால் மேற்கொண்டு படிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களை சோதித்து, அவர்களைப் பயிற்சிக்கு எடுக்கிறது Zoho University."
என்று போட்டிருக்கிறதே. அதாவது, அவர்களது இலக்கு 12 க்கு பின் படிக்க முடியாத/விரும்பாதவர்கள் என்று தெரிகிறது. இத்தகையோருக்கு என்ன சாய்ஸ் இருக்கிறது? இவர்களுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற படிப்பு கிடைக்க விடாமல் Zoho கறி ஆடாக வளர்க்கிறது என்பது தவறான சித்தரிப்பு. இவர்களுக்கு உள்ள சாய்ஸ் அரசின் அங்கீகாரம் பெற்ற படிப்பு Vs Zoho அல்ல., நீல காலர் வேலை Vs Zoho என்பதே.
Zoho டிகிரி படிப்பவர்களிடம் போய் மார்க்கெட்டிங் செய்கிறதா? படிக்க முடியாது வேறு எதோ செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களிடம் தானே? "University " என்று போட்டுக் கொள்வதைத் தவிர அவர்கள் எதையும் தவறாக செய்வதாக தெரியவில்லை. அவர்கள் செய்வது ஒரு தகவல் தொழில் நுட்ப துறைக்கான "vocational training " அவ்வளவே. "vocational training" குடுப்பவரிடம் போய் நீ ஏன் மத்ததெல்லாம் சொல்லி தரலைன்னு கேட்பது சரியா?
.
ReplyDeleteபாலா,
இதை மேற்கொண்டு இங்கே பேசுவதா ? அதனால் என்ன பயன்? என்று எனக்கு தெரியவில்லை.
கேள்வி என்னை நோக்கி இருப்பதாலும் , அதைப் பார்க்க நேர்ந்ததாலும் பதில் சொல்லுதல் கடமை.
(அன்புள்ள அனானி, இதுவும் ஒரு பட்டிமன்ற விவாதமாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் படிக்க நேர்ந்தால் ,அதனால் உங்களுக்கு வரும் மன உளைச்சலுக்கு நான் உண்மையில் வருந்துகிறேன். எதையும் வலிந்து திணிப்பது எனது நோக்கம் அல்ல)
**********
// "ஏழைக் குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட பின்னணியில் வந்தவர்கள் மட்டுமே விதிவிலக்கு. //
1. நீங்கள் சொல்லும் மனிதர்கள் ஒரு பி.ஏ படிக்கக்கூட முடியாமல் இருக்கிறார்களா?
2. அரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்து இடம் கிடைக்காமல் போனவர்கள் அல்லது 12 ஆம் வகுப்பிற்கு அடுத்து அரசுக் கலைக் கல்லூரிகளில் வறுமையின் காரணமாக சேர முடியாவர்களின் புள்ளிவிபரம் ஆராயப்பட்டுத்தான் இவர்கள் 12 என்று இலக்கு வைத்தார்களா?
3. அதைத் தெரிந்து கொள்ள ஆவல்.
அப்படி புள்ளிவிவரம் இருந்தால் , கலைக்கல்லூரிக்குகூட இலவச பஸ் பாஸ்,சாப்பாடு என்று வருங்காலங்களில் திட்டமிட அனைவருக்கும் உதவியாய் இருக்கும்.
***********
// அவர்களது இலக்கு 12 க்கு பின் படிக்க முடியாத/விரும்பாதவர்கள் என்று தெரிகிறது. இத்தகையோருக்கு என்ன சாய்ஸ் இருக்கிறது?//
உண்மைதான். அதை நல்லவிதமாகச் செய்யலாம்.
அரசு கலைக்கல்லூரிகளிலும் இவர்கள் சொல்லும் / தேடும் அதே "ஏழைக் குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட பின்னணியில் வந்தவர்கள் " உள்ளார்கள். அவர்களையும் சேர்க்கலாம் அல்லவா?
12 மட்டும் என்று இருக்கும் விதியின் உள்நோக்கம் அதை அமைத்தவர்களுக்கே தெரியும்.
.
அடிப்படை நோக்கம் வளர்த்துவிடப்பட்டவர்கள் கம்பெனி மாறுவதை தடுப்பது. அதுதான் உண்மை. மற்றவை எல்லாம் அதைச் சுற்றிப்பின்னப்பட்ட சுகர் கோட்டிங்.
**
.
Kalvettu: In this blog and the previous blog about Zoho University, it has been clearly mentioned that there are no formal rules to bind students to this like bonds, fees etc,. Students are free to go out whenever they feel. Rajendran had even quoted few instances where people left for reasons like marriage etc,.
ReplyDeleteI did say earlier that if someone decides to leave after an year, the loss from their side is 1 academic year. They can still join college and study if they wish.
தொடர்புடைய ஒரு இருபது நிமிடப் பேட்டி:
ReplyDeleteSridhar Vembu in Conversation with Dale Dougherty of O'Reilly Media
அன்புடன்
வெங்கட்ரமணன்