Tuesday, May 15, 2012

2ஜி வழக்கு அப்டேட்

2ஜி வழக்கில் வெகு நாள்கள் திகார் சிறையில் இருந்த ஆ. இராசா பெயில் கேட்டு, இப்போது அவருக்கு பெயில் வழங்கப்பட்டுள்ளது, இப்போது இந்த வழக்கு தொடர்பாக யாருமே சிறையில் இல்லை, அனைவரும் பெயிலில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இது முன்னதாகவே நடந்திருக்கவேண்டும். இதுபோன்ற பொருளாதார வழக்குகளில் மீண்டும் குற்றம் இழைக்க வாய்ப்பு இல்லை; சாட்சிகளைக் கலைப்பதும் எளிதல்ல.

இதே 2ஜி-யின் ஒருவித தொடர்ச்சியாக ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் இப்போதைய உள்துறை அமைச்சரும் முன்னால் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மீது ஒரு விவகாரம் வெடித்துள்ளது. அதைப்பற்றி இன்று ட்விட்டரில் சிலவற்றை எழுதினேன். விவரமாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

மொத்தத்தில் ஒரு சில சுயநலக்காரர்களால் தொலைத்தொடர்புக் கொள்கை சீரழிக்கப்பட்டுவிட்டது. இப்போது நான் விடுமுறைக்காக வந்திருக்கும் பிரிட்டனிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கம்பியிழை பிராட்பேண்ட் வேகம் பல மெகாபைட் அளவில் உள்ளது. கம்பியில்லா வயர்லெஸ் முறையில் 3ஜி, 4ஜி என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். நாம் கட்டை மாட்டு வண்டியில் தொங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான மின்சாரம் வழங்குவது கடினம். நல்ல சாலைகள் வழங்குவது கடினம். குடிநீர் வழங்குவது கடினம். ஆனால் இணைய இணைப்பை வழங்குவது எளிது. போன் வசதி செய்து தருவது எளிது. எது முக்கியம் என்றால் அனைத்துமேதான். ஆனால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யாமல் ஸ்பெக்டரத்தை ஏலம் விட்டே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் இந்தியர்கள். இதன் பின்விளைவுகளை மக்கள் கொஞ்சம்கூட உணரவில்லை. ஆ.இராசாவையோ கனிமொழியையோ எதிர்ப்பவர்கள் எதற்காக அவர்களை எதிர்க்கவேண்டும் என்றுகூடத் தெரியாமல் இருக்கிறார்கள். 2ஜி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகள் மிகச் சரி. அதனால்தான் இந்தியா சட்டென முன்னேறியது. ஆனால் 3ஜி, 4ஜி, கம்பிவழி பிராட்பேண்ட் ஆகிய கொள்கைகளில் தடுமாறி நிற்கிறோம்.

ஒரு தொழில் நிறுவனம் நியாயமாக லாபத்தை அடைவதில் தவறே இல்லை; அநியாயமாக லாபம் பெறுவதைத்தான் தடுக்கவேண்டும். லஞ்சம் தருவதை, ஏமாற்றுவதைத் தடுக்கவேண்டும். அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை எடுக்கப் பணம் லஞ்சமாகக் கேட்பதைத் தடுக்கவேண்டும். இதை மட்டும்தான் நாம் சரியாகச் செய்யவேண்டும்.

14 comments:

 1. Dear Badri sir,
  -------------------------------------
  மொத்தத்தில் ஒரு சில சுயநலக்காரர்களால் தொலைத்தொடர்புக் கொள்கை சீரழிக்கப்பட்டுவிட்டது.
  Completely agree with you.
  -------------------------------------
  ஸ்பெக்ட்ரம் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற உங்களின் ஆதங்கம் புரிகிறது.

  ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மீடியாவால் தொடர்ந்து பரப்பப்பட்ட ஒரு விஷயம். அதற்கு காரணம் கிடைத்த ஊழல் பணத்தை பங்கு போட்டுகொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை. (thats why Raja arrest , Kanimozhi arrest and etc., )

  ஆனால் காங்கிரஸ் அரசு, எல்லாம் செய்து விட்டு, ஸ்பெக்ட்ரம் விலையும் உயர்த்த வழி வகுத்து விட்டு, இப்போது உளறி கொண்டு இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் ஒரு முடிவெடுக்க முடியாமல் திணறி கொண்டு இருக்கிறது.

  -Siva

  ReplyDelete
 2. தலித், அடித்தட்டு பலிகடாக்கள் இருந்தால்தானே "கிழக்கு" மாதிரி முதலாளிகள் சம்பாதிக்க முடியும். 2 ஜி நாமம் வாழ்க, ராசா நாமம் வாழ்க போட்டு முடிச்சிருந்தா, இன்னும் அமர்க்களமாக இருந்திருக்கும் ஜி.

  ReplyDelete
 3. 2ஜி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகள் மிகச் சரி. அதனால்தான் இந்தியா சட்டென முன்னேறியது

  இந்தக் கருத்தை நீதிமன்றங்கள் ஏன் ஏற்க மறுக்கின்றன

  ராசாவையும், கனிமொழி அக்காவையும் இன்ன பிற நபர்களையும்
  குற்றமற்றவர்கள் என்று சொல்லி
  ஏன் விடுதலை அளிக்காமல் இருக்கின்றனர் நீதி பதிகள்

  கொய்யாப் பழக கம்பெனி கலைஞர் தொலைக்கட்சிக்கு பணம் வழங்கினால் என்ன, அது என்ன மிகப் பெரிய குற்றமா என்ன

  இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் உயர்ந்து கொண்டே இருப்பதை தடுப்பானேன்

  ReplyDelete
 4. நேரமிருந்தால் ஆங்கில செய்தி ஊடகங்களின் இணையதளங்களில் ராசா பிணையில் விடுதலையாகி இருப்பது குறித்த வாசகர் கருத்துக்களை படித்து பாருங்கள்..எவ்வளவு முட்டாள்களுடன் நாம் வாழ்கிறோம் என்பது புரியம்.

  1.76 இலட்சம் கோடி ஊழலுக்கு 15 மாதம் மட்டுமே தண்டனை(?) என ஒரு புத்திசாலி கேள்வி கேட்கிறது.வழக்கு இன்னும் முடியவில்லை,கிடைத்திருப்பது பிணை மட்டுமே.இந்த அடிப்படை கூட புரியாமல் கருத்து சொல்ல கிளம்பிவிடுகிறார்கள் வட இந்திய ஞான சூன்யங்கள்

  ReplyDelete
 5. ஒரு பொருளுக்கு நிறைய பேர் போட்டியிட்டால், Fixed Price ஐ விட auction method சிறந்தது. ராஜா period ல் license வேண்டி நிறைய applications இருந்தது. அவர் ஸ்பெக்ட்ரமை ஏலத்தில் விட்டு இருக்கலாம். Base price ஆக பழைய விலையையே வைத்து இருக்கலாம்.

  மானியங்கள் தருவது, இலவசங்கள் தருவது என்பது அரசின் கொள்கை முடிவாக இருபது போல Fixed price - என்பது அரசின் கொள்கை முடிவாக இருப்பதில் தவறு இல்லை. But அதையும் அவர் உருப்படியாக செய்யவில்லை. கடைசி நேர குளறுபடிகளால் (deadline changed , முன்கூட்டியே தகவலைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, தேதியையும் முன்தள்ளி வைத்துவிட்டார்).

  தப்பு செய்யாம தப்பு பண்ணத் தெரில. என்னத்த law படிச்சாரோ?

  //இதுபோன்ற பொருளாதார வழக்குகளில் மீண்டும் குற்றம் இழைக்க வாய்ப்பு இல்லை; சாட்சிகளைக் கலைப்பதும் எளிதல்ல.//
  எளிதல்ல but கஷ்டப்பட்டாவது சாட்சியை கலைத்து விடுவார்கள். ஆவணங்களை அழித்து விடுவார்கள் .

  //ஆ.இராசாவையோ கனிமொழியையோ எதிர்ப்பவர்கள் எதற்காக அவர்களை எதிர்க்கவேண்டும் என்றுகூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.//
  சிலர் தெரிந்தேதான் எதிர்கறார்கள்.

  Fixed price ஒ, ஏலமோ - தப்பு செய்து இருந்தால் தண்டனை அனுபவித்து தானே ஆகணும் ?!!!

  ReplyDelete
  Replies
  1. already our Raja has answered for these kind of questions , please read that befor e you comment any .
   http://abiappa.blogspot.in/2012/05/2010.html

   Delete
 6. Auction will not increase the price of wireless services. The amount paid for a license is a fixed cost. In a competitive market price is determined by the marginal cost. This is basic microeconomics.

  Total cost=Variable cost+Fixed Cost(License fee)

  TC=P*Q+F

  Marginal Cost=dTC/dQ=P

  I don't think your argument that the policy pursued by the Government on this issue was the correct one makes any sense.

  You may want to read this paper
  http://wireless.fcc.gov/auctions/data/papersAndStudies/SpectrumAuctionsDoNotRaisePrices.pdf

  In the United States where spectrum is auctioned, Producer Price Index for cellular services has come down from 100 in 03/2009 to 87.7 in 04/2012.

  Bharath

  ReplyDelete
 7. பாரத்,
  அமெரிக்காவின் பிபிஜ கணக்கிடும் முறையில் உள்ள முன்கருத்தாக்கங்களையும்-அஷம்ஸன்ஸ்- கணக்கில் கொண்டால்தான் முழுமையான சித்திரம் கிடைக்கும்.

  ஆனால் நீங்கள் குறிப்பிட்ட சுட்டியில் உள்ள வெள்ளை அறிக்கை வித்தியாசமான பார்வையை முன்வைக்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 8. @balamurugan ,arleady our Raja has answered for these questions,check out here
  http://abiappa.blogspot.in/2012/05/2010.html

  ReplyDelete
 9. CAG இப்போது மாதவன் நாயரை வெளுத்து வாங்கியுள்ளதே .அவர் ஏன் ராஜா (நம்ம ராசா இல்லை ,பழங்காலத்து ராஜா ) மாதிரி சுத்தி வருகிறார்/எல்லாரையும் திட்டுகிறார் .அவரால் பலன் பெற்ற நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் ஆயிற்றே.இஸ்ரோ இட ஒதுக்கீடு இல்லாத இடம் என்பதால் அங்கு ஊழல் வாய்ப்பு இல்லை என்று நீதிமன்றம்,எதிர்கட்சிகள் அனைத்தும் மௌனம் சாதிக்கிறதா

  http://www.tribuneindia.com/2012/20120516/main1.htm

  ReplyDelete
 10. //2ஜி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகள் மிகச் சரி. அதனால்தான் இந்தியா சட்டென முன்னேறியது//
  India developed because of 2G!!! How did you come to this conclusion? What was 2G's contribution towards India's GDP? And can you give us in monetary value too?

  ReplyDelete
 11. Badri
  You are also emotionally charged, not able to think. Please stop tweetingm writing and reading blogs then you will get a clear mind. Before writing please do complete research.

  ReplyDelete
 12. The Singapore government has installed >1GB OFC in all the houses...

  ReplyDelete
 13. I read ur blogs because u graduated from excellent schools IITm, & Cornell. I got overwhelmed by your CV and am very happy people like you come back to tamilnadu and work here, and interact with masses in social media. U have the potential to effect positive changes in our society. However ur blogs really disappoint me. U give very wrong information in your blogs. You are writing on various serious issues which demand collection of all the facts and cross-checking them, critical analysis, and logical conclusions. I find all these are missing. You are writing your comments on various issues but you never seem to question urself that whether u have done good home work, whether u have the background to understand the nitty, gritty details. Our politicians, journalists and "celebrities" do "comment", and make judgment on many things which are beyond their expertise. It would be unfortunate if a Cornell-cum-IITM engineering graduate writes,& comments in that fashion. If I may give you unsolicited suggestions for politics, & national issues read Dr.Subramanian Swamy's articles available in www.janataparty.org & listen to his talks in youtube. For science & higher education read IISc director P.Balaram's editorails in the fortnightly Current Science which is available in www.ias.ac.in/ . Many of the ppl u quote are very mediocre and the facts they state are rubbish. I hope you will show more rigor in your future blogs which reflects your experience in writing your research publications.

  ReplyDelete