Tuesday, May 22, 2012

குடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா?

பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் ஆக்குவதே நல்லது என்று கொஞ்சம் விளையாட்டுத்தனமாக எழுதியிருந்தேன். இப்போது சீரியஸான பதிவு.

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் யாரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தலாம் என்பதில் ஒரே குழப்பம். தானாக யாரை நிறுத்தினாலும் அது செல்லுபடியாகாது என்று பாஜகவுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. எனவே மீண்டும் அப்துல் கலாமுக்கு ஆதரவு தரலாம் என்று நினைத்து, அது பற்றிப் பேசி, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

காங்கிரஸின் கதை வேறு. அவர்கள் பிரதிபா பாடில் போல ஜிங்சக் ஆசாமி யாராவது கிடைப்பார்களா என்று பார்க்கிறார்கள்போல. வேறு யாரையாவது குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டால் நாளை ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயப்படுகிறார்கள்.

இந்நிலையில் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவும் சமயோசிதமாக யோசித்து பூர்ணோ சாங்மா பேரை முன்மொழிந்துள்ளனர். சாங்மா மக்களவை சபாநாயகராக இருந்தபோதே அனைவரையும் கவர்ந்தவர். நன்கு பேசக்கூடியவர். எனக்கு மேகாலயா அரசியல் பற்றி எதுவும் தெரியாது; ஆனால் சாங்மா பற்றி மோசமான செய்தி ஏதும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். எனவே நேர்மையானவராக இருக்கவேண்டும். குடியரசுத் தலைவர் பதவி பெரும்பாலும் ஏதோவிதத்தில் ‘டோக்கனிசம்’தான். ஒரு முஸ்லிம், ஒரு தென்னாட்டவர், ஒரு சீக்கியர், ஒரு பெண் என்றவகையில்தான் அடையாளங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அடையாள அரசியலில் வடகிழக்கு, டிரைபல் போன்ற அடையாளங்கள் தாமாகவே முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரதிபா பாடில் போல வெற்று அடையாளமாக இல்லாமல், சாங்மாவை தைரியமாக வெளிநாட்டுக்கு அனுப்பலாம். கலாம் போல உணர்ச்சிவசப்பட்டு ஐ.நாவில் உரை ஆற்றமாட்டார் என்றாலும் அழகாக, ஆணித்தரமாகப் பேசி உலகத் தலைவர்களைக் கவரக் கூடியவர்.

எல்லாம் சரி, இவர் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறதா? காங்கிரஸ் இவருக்கு வாக்களிக்காது. தேசியவாத காங்கிரஸ் தன் சொந்தக் கட்சிக்காரரான இவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதனால் என்ன? அதுவே இவருடைய பலமாக இருக்கலாம்.

சோனியா பிரதமர் ஆவதை வலுவாக எதிர்த்தவர் என்றவகையில் பாஜக, இறுதியில் இவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யலாம். இடதுசாரிகளின் பார்வையிலும் இவர் ஏற்கத்தக்கவராக இருப்பார். இந்த இரு கட்சிகளும் முடிவு செய்துவிட்டால், பல மாநிலக் கட்சிகள் இவருக்கு ஆதரவைத் தரும். சமாஜ்வாதி எதிர்த்தால், பகுஜன் சமாஜின் ஆதரவு இருக்கும். அப்படியானால் குறுகிய வித்தியாசத்தில் இவர் வென்றுவிடுவார். அது காங்கிரஸுக்கு நல்லதல்ல என்ற ஒரே காரணத்தாலேயே பாஜக இவருக்கு ஆதரவு தரவேண்டும். ஆனால் அக்கட்சி கொஞ்சம் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதே நலம். முதலில் இடதுசாரிகள் தம் ஆதரவைத் தெரிவிக்கும்வரை பொறுமையாக இருந்துவிட்டு, பிறகு ஆதரவைத் தெரிவிப்பதே பாஜகவைப் பொருத்தமட்டில் சரியான கேம்பிளான்.

28 comments:

 1. //சோனியா பிரதம்ர் ஆவதை வலுவாக எதிர்த்தவர்//

  இந்த ஒன்றுக்காகவே சங்மாவை பாஜக ஆதரிக்கவேண்டும். மேலும் ஒரு பழங்குடியினர். அதைவிட முக்கியம் அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபாதி ஆகி மொக்கை போடாமல் இருப்பது!

  ReplyDelete
  Replies
  1. :-)கலாம் மேல் ஏன் உங்களுக்கெல்லாம் இத்தனை வெறுப்போ தெரியவில்லை. அவர் அப்படி என்ன தான் கெடுதல் செய்துவிட்டார்?

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. /// had been a street walker ///

   அப்பட்டமான, அநாகரிகமான அவதூறு. பத்ரி, மேற்கண்ட கமெண்ட்டை நீக்கி விடுங்கள். நீங்கள் எதையும் சென்ஸார் செய்ஙதில்லை என்று தெரியும். ஆனால் இது மிகவும் பேட் டேஸ்ட் ஆக, வீண் சேறு பூசலாக உள்ளது.

   சரவணன்

   Delete
  4. I agree. I have removed the comment.

   Delete
 2. Yeah..he is the good choice I guess..he won't be a rubber stamp for Congress and if BJP grants its support..he may help them in forming govt in the next election when no party gets majority but BJP gets more than Congress... :)

  ReplyDelete
 3. I think it is high time you become a high profile politician or an advisor to a politician.

  I am serious on this comment, pl consider

  ReplyDelete
  Replies
  1. சோ'வையும் இப்படித்தான் ஏற்றிவிட்டார்களோ அந்தக் காலத்தில்?

   Delete
 4. Abdul kalam excelled as a President of India. Why do u think his chances of becoming President are low ?

  ReplyDelete
  Replies
  1. There isn't really much support for Kalam amidst even BJP. If they were really serious, they would not have whimpered out like they did when the partners in NDA protested.

   Delete
  2. How sure are you. BJP need not follow the same strategy all the time.

   Delete
 5. //Why do u think his chances of becoming President are low ?
  //

  Realpolitik

  ReplyDelete
 6. i think he has parted away from NCP, is he still in sarath pawar's party

  ReplyDelete
  Replies
  1. As of now he is still in NCP. Though he has been in and out of that party a few times before.

   Delete
  2. Being in and out of the same party a few times?? Does this not question the stability of Sangma?

   Delete
 7. அப்துல் கலாமை விட சங்மா நிச்சயம் நல்ல தேர்வு.
  தமிழர், கவிஞர், நல்லவர் என்றெல்லாம் கூறி அப்துல்
  கலாமை கொண்டாடலாம். குஜராத் கலவரக் கறையை
  மறைக்க பாஜக பயன்படுத்திய சர்ஃப் கலாம் என்பது
  வருத்தமான உண்மை

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி ஜல்லியடிகளை எப்போது நிறுத்தப் போகிறோம் என்று தெரியவில்லை.

   சரியான காரணங்களுக்காக மதிப்பீடுகள் இருக்க வேண்டும்...பார்க்க

   http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Gujarat-village-that-puts-metros-to-shame/articleshow/13309567.cms

   Delete
  2. குஜராத்துக் 2002ல் தான் முதல் முறை கலவரம் நடந்ததா ? எந்தக் கட்சி ஆட்சியானாலும் கலவரம் நடக்கக்கூடிய ஊர் அது என்பது தான் வருத்தமான உண்மை.
   பா.ஜ.க ஆட்சியில் நடந்துவிட்டது என்பது அதை வைத்துக் கல்லா கட்ட அலையும் ஏவல் நாய்களுக்கு மிகமிக சந்தோசமான உண்மை...

   Delete
 8. Some of the commenters are so very wrong about Dr.Kalam. S.Raman, Vellore don't tweet rubbish. BJP's candidate in 2002 was P.C.Alexander, the former TN governor. First Mulayam's SP proposed Abdul Kalam who using Rashtrapathy Bhavan inspired youngstirs. Brought new meaning to Presidency. A honest, dignified, courageous, patriot Dr.Abdul Kamlm is going to be our next president and lots of influential people are working for it.

  ReplyDelete
 9. Instead of pestering abdul kalam to become president, the man can be honored by giving his name to important streets in delhi. For example the tyrant aurangazeeb road can be renamed as Abdul kalam road.

  ReplyDelete
 10. http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=602251&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  "வெளிநாட்டுப் பெண்" விவகாரத்தில் சோனியா மன்னிக்கவேண்டும்: சங்மா!

  கிழிஞ்சது கிருஷ்ணகிரி!

  ReplyDelete
 11. I am not going to approve comments talking about or quoting 'Know your Sonia' in this thread. Thanks.

  ReplyDelete
 12. Don't you think you got to give us a reason.

  ReplyDelete
  Replies
  1. I think KYS by Swami is largely innuendo and does not deserve to be discussed. It brings the discussion level lower. I am interested only in serious political discussion. Not street gossip.

   Delete
 13. Sir, with respect, I beg to disagree with you. 'Know your Sonia' was written by no ordinary man. Pls, pls, pls...pls give him atleast the benefit of doubt. It's a blessing I interact with you and Dr.Swamy. Yours and Dr.Swamy's academic achievements inspire me. It's a joy to have both of you in social media. Sir, Dr. Swamy excelled in every role- atleast as a student, professor, and father. A man with a Ph.D. from Harvard at 24, professor at IIT-D at 29, who raised two girls - one Suhasini Haidar and the other Dr. Gitanjali Swamy B.Tech (IITk), PhD (Berkely), MBA (Harvard). Also look at the class of his enemies. See the explicit, obvious facts about him & his opponents; don't they tell us something. Don't they make us to suspect that this man could be right & his opponents could be wrong. V make judgments based on what we learn from media and u pretty well the quality of many of our media folks. Excepting in 1999, praising Sonia, has he ever given any wrong info. Sir, we don't care what anyone thinks of dr.Swamy, but we can't afford to have a man of your record having such negative view about my leader dr.SS. Thank you. It's refreshing to see a man of your accomplishments in social media and have debate with you. Thx Sir. :)
  If you see any offensive statement here, pls forgive me, in the past I've managed to offend quite a lot of ppl. thx

  ReplyDelete
  Replies
  1. ஏய்...அவரு யாரு தெரியுமா ? அவர் கொலம் என்ன தெரியுமா, அவர் கோத்திரம் என்ன தெரியுமா ? அவர் சொல்றத கேக்க மாட்டியா ?

   இது தான் அந்த நீண்ட ஆங்கிலப் பின்னூட்டத்தின் சாராம்சம்.

   Delete
  2. Wow, you have guessed it ! Quite brilliant! These is nothing wrong in spreading good things - certainly it's not commerical. Instead of these silly 'nakkal', ppl r always welcome to clash with me just using facts & reason. OK Bro, Have good one !

   Delete
 14. சங்மா பரவாயில்லன்னு சந்தோசப்பட்டோம் ... அதுக்குள்ள பதவிக்காக சோனியா கிட்ட மன்னிப்பு கேட்டு அசிங்கப்பட்டுட்டாரே ??? ? ஆனா... இந்த பதவிக்கு நாந்தான் சரியான ரப்பர் பொம்மைன்னு ப்ரூவ் பண்ண விரும்புறாரோ ???

  ReplyDelete