Thursday, May 17, 2012

டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்

நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:

கிமு கிபி - மதன்
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோபிநாத்
கீரைகள் - நலம் வெளியீடு
விரத பூஜா விதானம் - லிஃப்கோ
சுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்
கூண்டு, கார்டன் வெய்ஸ், காலச்சுவடு (இலங்கைப் போர் பற்றிய புத்தகம்)
பொன்னியின் செல்வன், கல்கி
அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன்

***

கிமு கிபி புத்தகம் பற்றி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்தது. அதிலிருந்தே இந்தப் புத்தகம் மிக அதிகமாக விற்கத் தொடங்கியுள்ளது. ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம் தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒன்று. லிஃப்கோவின் ‘விரத பூஜா விதானம்’ அதிகமாக விற்பதற்குக் காரணம் கடை இருக்கும் இடத்தில் முன்பு லிஃப்கோவின் ஷோரூம் இருந்தது. லிஃப்கோ வாசகர்கள் தொடர்ந்து அங்கு வந்து அனைத்து லிஃப்கோ புத்தகங்களையும் வாங்குகிறார்கள். காலச்சுவடு வெளியீடான ‘கூண்டு’ அதிகம் விற்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை எவர்கிரீன் புத்தகங்கள். நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.

10 comments:

 1. டாப் டென்னில் சுஜாதா இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இன்று இணையத்தில் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது. சொல்லப் போனால் 'பொன்னியின்...' மட்டுமே ஒரே புனைகதை! அதையும் வாங்குகிறவர்கள் படிக்கிறார்களா, வெறுமனே ஷெல்ஃபில் அலங்காரமாக அடுக்கி வைக்கிறார்களா தெரியவில்லை. புனைகதை வெளியிடுபவர்களுக்கு நல்ல சேதி இல்லை.

  நாஸ்டர்டாமஸும், கீரைகளும் கூட எவர்கிரீன் தான்!
  அணுசக்தி விவாதம் இனியும் டாபிகல் இல்லை போல.

  சரவணன்

  ReplyDelete
 2. Ponniyin Selvan here too. OMG!!! This book is silently creating an history ;-)

  ReplyDelete
 3. nice and very co-operative staff and goodluck badri and team.
  -surya

  ReplyDelete
 4. 'நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.'
  ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் அவர் இன்று பரவலாக அறியப்படுகிறார்.முன்பு எஸ்.ராமகிருஷ்ணனும் இப்படி ஆ.வியின் மூலம் பிரபலமானவர்தான்.

  ReplyDelete
 5. பத்ரி.. அந்தக் கடையில் என் ஓபக்கங்களும் அறிந்தும் அறியாமலும் முதலிய நூல்களை விற்பனைக்கு வைக்கவில்லை என்று வந்து விசாரித்த வாசகர்கள் எனக்குத்தெரிவித்தார்கள். வைத்திருந்தால்,அவற்றின் விற்பனை சாதனை எண்ணிக்கையை எட்டியிருக்கலாம் இல்லையா? :(
  ஞாநி

  ReplyDelete
 6. டாப் டென்னில் எது எவ்வளவு விற்றது என்று சொல்லவில்லையே,அதைச் சொன்னால்தானே தமிழில் புத்தகங்களின் விற்பனை ஆயிரத்திலா,லட்சத்திலா,கோடியிலா என்பது தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு கடையில், அதுவும் இப்போதுதான் ஆரம்பித்த கடையில், 15 நாட்களில் எவ்வளவு விற்றது என்பதைக் கொண்டு அதையெல்லாம் புரெஜெக்ட் செய்யமுடியாது.

   இல்லை. எண்ணிக்கையைச் சொல்லப்போவதில்லை. ஒவ்வொரு மாதமும் அம்மாத டாப் 10 என்ன என்பதை மட்டும் வெளியிடப்போகிறேன். இது டிரெண்ட் தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே.

   Delete
 7. சொந்தக் காசில் புத்தகம் போட்டு விற்கும் ஞாநி போன்றவர்கள் கமிஷன் போன்றவை போக கையில் கிடைக்கும்
  தொகை எவ்வளவு,புத்தக விற்பனை எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் சொன்னால் புத்தக பதிப்பு/விற்பனையில் உள்ள
  இன்னொரு பக்கம் தெரியவரும்.

  ReplyDelete
  Replies
  1. புத்தக விற்பனையின் எந்தப் பக்கத்தையும் காண்பிப்பதற்காக அல்ல இந்தப் பதிவு! அதற்கெல்லாம் வேண்டுமென்றால் தனிப்பதிவாகவே ஒன்று போட்டுவிடுகிறேன். இந்தப் பதிவின் ஒரே நோக்கம், நாங்கள் விற்கும் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களில் டாப் டென் எவை என்பதைத் தீர்மானிப்பது மட்டுமே.

   Delete
 8. 1985/1986 (வருடம் சரியாக ஞாபகமில்லை) தூத்துக்குடியில் முதல் புத்தகக் கண்காட்சி நடக்கையில், அதிக அளவில் விற்ற புத்தகங்கள் " நீங்களும் ஆவியுடன் பேசலாம் , ஆவியுடன் பேசுவது எப்படி" போன்ற தலைப்புகளில் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிய புத்தகங்கள் தான். ஆனால் ஆச்சரியமான விஷயம் ஜே ஜே சில குறிப்புகள் மற்றும் சுகுமாரனின் கோடைகால குறிப்புகள் போன்ற புத்தகங்களும் நன்கு விற்றது தான்.
  zelvakumar@gmail.com

  ReplyDelete