Tuesday, May 01, 2012

நரேந்திர மோதி பிரதமரானால்...

தெண்டுல்கர் பற்றிய பதிவில், காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டு பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எழுதியிருந்தேன். அதனைக் கவனித்த ஞாநி ஃபேஸ்புக்கில் எழுத, அவருடன் ஓர் உரையாடல் அங்கே நடைபெற்றது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் நான் காங்கிரஸ் + திமுக கூட்டணியை ஆதரித்தேன். மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்களித்தேன். அடுத்த 2009 தேர்தலில் ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் நிலையையும் திமுகவின் நிலையையும் எதிர்த்து தயாநிதி மாறனுக்கு வாக்களிக்கவில்லை.

நடப்பு நாடாளுமன்றக் காலகட்டத்தில் காங்கிரஸ் அரசு திக்குத் தெரியாமல் தடுமாறி இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் பல குழப்பங்களைச் செய்து வருகிறது. இதனை மாற்றக்கூடிய வல்லமை பாஜகவுக்கு மட்டுமே உண்டு என்று இப்போது நினைக்கிறேன். இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவது இந்தியப் பொருளாதாரத்துக்குக் கடும் ஆபத்து என்று நம்புகிறேன். காங்கிரஸும் அல்லாமல் இடதுசாரிகளும் அல்லாமல் ஒருவர் இன்று ஆட்சிக்கு வரமுடியும் என்றால் அது பாஜக தலைமையிலான கூட்டணி மட்டும்தான். பாஜக வென்றால் அது ஆட்சிக்கு வந்தும் பொருளாதாரத்தைச் சீரழிக்கக்கூடும். அப்போது வேறு வழியின்றி, அடுத்த ஐந்தாண்டுகள் பொறுத்து, மீண்டும் காங்கிரஸா என்று யோசிக்கவேண்டியிருக்கும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோதி பிரதமரானால், அதை நான் விரும்புவேனா என்று கேட்டார். பொருளாதார அரசியல் முக்கியமா, கலாசார அரசியல் முக்கியமா என்று வினவினார். எனக்கு பொருளாதார அரசியல்தான் முதன்மை. கலாசார அரசியல் அடுத்ததுதான். பெரும்பான்மைக் குழுவில் ஓர் அங்கம் வகிக்கும் காரணத்தால் நான் அப்படி நினைக்கக்கூடும். ஒரு முஸ்லிம் எப்படி நரேந்திர மோதியைப் பார்ப்பார் என்று நான் சொல்ல முடியாது. பாஜக தொண்டர்கள்போல, மோதி ஒரு அப்பழுக்கற்ற தெய்வம் என்று நான் சொல்லமாட்டேன். கோத்ரா விவகாரம் அவர்மீதான நீங்காப் பழி. அப்படிப் பார்த்தால் பாஜக கட்சியின் வாஜ்பாயி முதற்கொண்டு அனைவர்மீதும் ஏதோ ஒருவிதத்தில் மதவாதம் என்ற குற்றக்கறை படிந்தே உள்ளது. பாஜகவால் மதவாதத்தைத் தாண்டி வெளியே வருவதும் முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. அந்த மதவாதம் வன்முறையைத் தூண்டாமல் இருக்குமா என்பதுதான் கேள்வியே.

இந்தியாவில் இப்போது நடைமுறையில் இருக்கும் கூட்டணி ஆட்சி முறை, பாஜகவின் கலாசாரக் காவலர்களைக் கட்டுப்படுத்தி வைத்து, சீரிய பொருளாதாரத் திட்டங்களுக்கு மட்டும் துணை போகும் என்றே இந்தக் கட்டத்தில் நான் நம்ப விரும்புகிறேன். நரேந்திர மோதி குஜராத்தில் செயல்படுத்தியிருக்கும் பல பொருளாதாரத் திட்டங்கள் தொலைநோக்கு கொண்டவையாக உள்ளன. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரைத் தலைவராகக் கொண்ட ஓர் ஆட்சியை ஆதரிப்பதாக உள்ளேன்.

30 comments:

 1. Peace full coexistence of all communities is very important for any economic growth. Therefore, one has to question BJPs social agendas. How BJP differs from Congress on economic policy? What is BJPs stand on NREGA, RTE, allowing FDI in multibrand retail etc?

  //நரேந்திர மோதி குஜராத்தில் செயல்படுத்தியிருக்கும் பல பொருளாதாரத் திட்டங்கள் தொலைநோக்கு கொண்டவையாக உள்ளன. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரைத் தலைவராகக் கொண்ட ஓர் ஆட்சியை ஆதரிப்பதாக உள்ளேன்.//

  Got to give to Modi's PR machine for this.

  ReplyDelete
 2. ஞாநிக்கு யார் கலாச்சாரக் காவலராக இருக்கவேண்டும் என்பது தான் பெரிய்ய பிரச்சனையாகத் தெரிகிறது. நாட்டுல கரண்ட் இல்ல, தண்ணி இல்ல, ரோடு இல்ல என்பதெல்லாம் முக்கியமான விசயமாத் தெரியல்ல. இவர் தான் இடது சாரிப் பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவு தருபவராக்கும் ?

  ReplyDelete
 3. over2vinavu :)expect a post with badri being called as brahminical fascist who supports Modi.i think you love vinavu writing about you and so want to provoke them by writing like this.

  ReplyDelete
  Replies
  1. எழவு டோட் கோமை படிக்கும் அளவுக்குத் தான் தமிழ் இணைய சோசியல் மீடியா உள்ளது என்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது. இதுவே வேறு மொழியாக இருப்பின் எழவு டாட் காம் எல்லாம் ஆண்ட்ரஸ் பிரேவிக்கின் வலைத்தளத்துக்குச் சமானமாகப் பார்க்கப்பட்டிருக்கும்.

   Delete
 4. 1984-ல் ராஜீவ் காந்தி இருந்த இடத்தில்தான் 2002-ல் மோதி இருந்திருக்கிறார். மோதியை சாடுபவர்கள் ராஜீவை மற்றும் ஒன்றும் சொல்வதில்லை.

  கோத்ரா கொலை பற்றி வாயைத் திறக்காதவர்கள் அதன் பிறகு வந்த கலகத்துக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

  நாட்டுக்கு வேண்டியது நல்ல பொருலாதார திட்டங்களே. அவை மோதியிடம் உள்ளான. ஆனால் அவர் பிரதமராக வர மற்ற பாஜக தலைவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே, அது நடக்குமா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
  Replies
  1. I agree with you Mr. Raghavan, excepting on the first sentence. When >3000 sikhs were murdered, PM Rajiv, instead of immediately calling army, made a statement 'when a big tree falls the earth shakes'. But Modi contained the riots in two days and said something like 'but for my govt's efforts the riots would have escalated much more'. Modi did not defend the loss of lives in the riot but Rajiv defended. Our pseudo intellectuals, half-cooked geniuses, double standard media anchors won't mention the facts.

   Delete
 5. இப்போது யாருக்காக வருத்தப்பட என்ற கடும் குழப்பத்தில் உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஸ் யூசுவல், பா.ஜ.க வுக்காக நீங்கள் வருத்தப்படுங்கள். ஏனென்றால் அது தான் வீண் போகாது. வெற்றியின் வாயிலிருந்து தோல்வியைப் பிடுங்கித் தழுவிக்கொள்வது எப்படி என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

   Delete
 6. பத்ரி, ஏன் மதவாதம் இல்லாத வலதுசாரி அணி உருவாக உங்கள் உழைப்பை தரலாமே ? மதவாதம் அற்ற இடதுசாரிகளான என் போன்றோரும் அப்படிப்பட்ட ‘எதிரியை’த்தான் விரும்புகிறோம். ஆனால் , மதவாதம் இருந்தாலும் பா.ஜ.கவையே ஆதரிப்பேன் என்கிறீர்கள் ? மதவாதமற்ற வலதுசாரி அணி உருவாக விடாமல் தடுப்பதே அதுதானே ?

  ReplyDelete
  Replies
  1. நான் ஒரு பாஜக கட்சிக்காரனாக இருந்தால்தான் எக்காலத்திலும் பாஜகவை ஆதரிப்பேன் என்று சொல்வேன். நான் அப்படி அல்லன். இப்போதைக்கு என்றுதான் சொல்கிறேன். மதச்சாற்பற்ற வலதுசாரிப் பொருளாதாரக் கட்சி ஒன்று உருவாகவில்லை. ஆனால் அது உருவாகும்வரை, காங்கிரஸ் அல்லது பாஜகவை ஆதரிப்பதில் தவறேதும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு கட்சி தரைமட்டத்திலிருந்து உருவாவதற்குப் பலகாலம் பிடிக்கும். அதுவரையில் யாருக்குமே வாக்களிக்காமலா இருக்கிறோம்? நான் 49 ஓ ஆசாமி கிடையாது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் கஷ்டப்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்று திண்டாடினாலும் கடைசியில் ஒரு வேட்பாளரைக் கண்டுபிடித்து வாக்களித்துவிட்டேன்.

   குஜராத்தின் தொழில் வளர்ச்சி பற்றி பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மோதி சும்மா ஏமாற்றுகிறார் என்று சொல்வனதான் பலவும்.

   உதாரணம்: ஒன்று | இரண்டு | மூன்று

   இதில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவை. மோதியின் பொருளாதார முயற்சிகள் பற்றி எழுதுபவர்கள் ஒன்று அவருடைய தீவிர பக்தர்கள், அல்லது அவருடைய கடுமையான எதிரிகள். எனவே நானே எண்களை வைத்துக்கொண்டு முழுமையாகப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்துள்ளேன்.

   Delete
  2. மதவாதமற்ற இடதுசாரிகள் என்று ஞாநி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் he should be one of a kind.

   Delete
  3. May I ask Shri. Gnani what does he mean by 'mathavaatham'. Today I worship Lord Krishna and I'm a forward class. In case tomorrow I start worshipping Allah, I'll bcum a backward class and I'll get more concessions & benefits. Is it secularism ?

   Delete
 7. நரேந்திரமோடிக்கு விசா மறுத்ததில் மாற்றமில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க விசா வழங்குதுறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் புதனன்று வழமையான செய்தியாளர் சந்திப்பில் இச்செய்தியை உறுதிபடுத்தினார். "எங்கள் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை"என்றார் அவர்.

  கடந்த இருவாரங்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ வால்ஷ் என்பவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரிக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி வினவியிருந்தார். அவ்வினவுக்கு விடையிறுக்கும் விதமாகவே நூலண்ட் இவ்வாறு கூறினார். "இவ்விதயத்தில் பொதுவான விதிமுறைகளின்படியே செயல்படுகிறோம்" ஒரு இனப்படுகொளை நடக்க காரணமானவராக இருக்கிறார் k மோடி என்றார் அவர்.

  ReplyDelete
  Replies
  1. சே குவேராவை அமேரிக்கா தீவிரவாதியாகத் தான் பார்த்தது, பார்க்கிறது. நீங்கள் எப்புடி ? ஹீரோவாப் பார்க்குற ஆளா ?

   Delete
 8. Dear Mr Badri

  Pl collect the Economic Development of all States for the past ten years and give your own independent views / comments

  ReplyDelete
  Replies
  1. Dr. Badri is a trained researcher in engineering and now he is in business. I think it's sensible to say if he wants to educate the public about the economic development of our states and if he wants to do honest job, he has to gain expertise in the many complexities of economics and study past and present economic developments of the states very carefully. All that would demand much of his time and energy.

   Delete
 9. Economic growth cannot be the single criteria. If that is the only criteria then Badri should choose China as the model and should argue that India too should choose that and opt bfor single party rule .Look at the development in terms of Human Development Index and other measures. Then the real growth story of that state will be different from what his supporters claim. Not even all in BJP support Modi as a potential candidate for PM. How his government treats critics like Sanjeev Bhatt and Teesta should be an eye-opener for Badri.

  ReplyDelete
  Replies
  1. Not necessarily Chaina...other countries like Singapore, Malaysia also developed economically from the bottom without Communism like single party rule. You require only a visionary and will to impliment your plans.

   Delete
  2. It is unfortunate that your knowledge of Gujarat is limited to Teesta and Butt. They are well and alive and perhaps enjoying their life with foreign whisky and exotic dancers. What happens to critics of China inside china is well known. Its better to know more before opening your mouth or keep your silence for common good.

   Delete
 10. பத்ரி, பகல் கனவு காணாதீர்கள். எனக்கும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தாலும், இது நடக்கவே நடக்காது என்று தான் தோன்றுகிறது. பி ஜே பி தவிர மற்ற பலரின் உதவி தேவை. அது கிடைக்காது. பெண் என்ற ஒரே காரணத்தினாலேயே பிரதிபா பாட்டில் போன்ற ஒரு ஜந்துவை ஜனாதிபதி ஆக்கினர். இப்போது முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினாலேயே அன்சாரியை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். தகுதி, திறமைக்கெல்லாம் இங்கு வேலை கிடையாது. மதச்சார்பின்மையின் லட்சணம் இது.

  ReplyDelete
 11. modi or eny one else on the top but system is the same and people mindset all over india same and how to one man show is possible. pls understand change not in the top only in the bottom level

  ReplyDelete
 12. Based on the revised versions of BBC/BS articles, Tamilnadu's growth is better than of Gujarat in the period 2004-05 to till date.And in the human development parameters also, Tamilnadu is ahead of Gujarat.
  If economy is the only criteria,Karunanidhi or Jayalalitha as prime minister is good choice.They are giving better economic growth than Modi along with good score in human development parameters.

  ReplyDelete
  Replies
  1. There is a history to Tamil Nadu doing better than Gujarat. Be it the forward castes or the backward castes, they were clamouring for education from very early on. The demand for reservation, Justice party and the communal GO was all about getting a fair share of spots in Government jobs and therefore educational institutions. This was pre-independence. On the other hand, Gujarat witnessed a major battle pro & anti reservation only in the 1980s! even to this day, Gujarat is way behind in higher education and it is catching up.

   I am very keen about comparing Gujarat and Tamil Nadu on several indicators - not with a view to either diss Modi or deify him. Over the next few months, I intend to write more on this topic.

   I however don't think Karunanidhi or Jayalalitha stand a chance. Modi stands a chance because he is part of BJP, and probably its tallest leader as of now.

   Delete
  2. raul gandi is what these a.holes deserve...political parpaneeyam is what they practice. They consider anything associated with BJP as impure and untouchable and should be kept away. Even by mistake if they appreciate modi they will brush their teeth and gargle their mouth with phenyle. Unfortunately our mainstream and social media are infested fully with these gas bags...Not Modi but a guy like McCarthey is needed to purge them.

   Delete
  3. Very Well Said ! :) . Most of our folks won't torment themselves with reason, logic & fairness.

   Delete
 13. I appriciate you on openly telling your view point

  ReplyDelete
 14. Modi for India, Badri for Tamil Nadu - does it sound nice to your ears :)

  ReplyDelete
  Replies
  1. 'Modi for India; Badri, after an apprenticeship under Dr. Subramanian Swamy, for TamilNadu' is music to my ears :)

   Delete
 15. பத்ரி சார், எந்த கட்சியை ஆதரிக்கிறேன் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் யாருக்கு ஒட்டு போட்டோம் என்பதை வெளியில் சொல்ல கூடாது என்று படித்திருக்கிறேன். ரஜினி சார் கூட ஒருமுறை இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

  ReplyDelete