Wednesday, January 11, 2006

நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்

சென்னை புத்தகக் காட்சி நடக்கும் நேரத்தில் பல விஷயங்கள் நிகழ்ந்தேறுகின்றன. அனைத்தையும் பற்றி எழுத ஆசையிருந்தும் முடிவதில்லை.

சென்னையில் சமீபத்தில் நடந்த பிராமணர் சங்க மாநாடு. இதில் கலந்துகொண்ட சுஜாதா விகடனில் இதுபற்றி எழுதியிருப்பதாக ஸ்ரீகாந்த் எழுதியிருந்தார். கண்காட்சியில் நாராயணுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரும் இதுபற்றி சொன்னார். சுந்தரவடிவேல் பதிவில் உண்மையில் வெளியான கட்டுரை இருந்தது.

ஜாதி சங்கங்கள் இருப்பதே ஆபத்தான ஒரு விஷயம். இந்த ஜாதி சங்கங்கள் மாநாடுகள் நடத்துவதும் அதில் தங்களுக்கு எக்கச்சக்க அரசியல் அதிகாரம் இருப்பதாகவும் தங்களது ஆதரவு இல்லாமல் அரசியல் கட்சிகள் ஜெயிக்க முடியாது என்றும் கூக்குரல் இடுவதும் பொதுவாக அருவருக்கத்தக்கது. ஆனால் பிராமணர் சங்கம் தங்கள் ஆதரவில்லாமல் 20-25 சட்டமன்ற தொகுதிகளில் யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

பிற ஜாதி சங்கங்களைக் காட்டிலும் பிராமணர் சங்கம் ஆபத்தானது. இந்தச் சங்கத்தின் ஒரு முக்கியமான நோக்கம் பிராமணர்கள் பிறரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதை அழுத்திச் சொல்வது. "ஓ.சியில் 90 சதவீதம் பிராமண குழந்தைகள் வர வேண்டும்." என்றாராம் சரசுவதி ராமநாதன் என்பவர். ஆனால் உண்மை என்னவென்றால் கடந்த பொறியியல் நுழைவுத்தேர்வில் ஓ.சியில் 25% கூடப் பெறமுடியாத நிலைதான் பிராமணர்களுக்கு.

சுஜாதாவின் ஒப்பீடு அர்த்தமற்றது. எல்லா சமூகங்களிலும் ஏழைகளின் பொருளாதார நிலை கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். இதனால் பிற ஏழைகளுக்கும் தலித் ஏழைகளுக்கும் ஒரேமாதிரியான பிரச்னை என்று சொல்லிவிடமுடியாது. பிராமண சமூக ஏழைகள் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுபோன்ற வாய்ப்புகள் தலித்துகளுக்குக் கிடையாது. இப்பொழுதுகூட.

இதனால் பிராமண ஏழைகள் திண்டாடட்டும் என்று விட்டுவிடக்கூடாது. பிராமணர் சங்கம் என்று ஒன்று இருக்கவேண்டுமானால் அவர்களது நோக்கம் இதுபோன்ற ஏழை பிராமணர்களின் நிலையை முன்னேற்றுவதாக, கல்விக்குக் கடன் அல்லது மான்யம் அளிப்பதாக, வேலை கிடைக்க வகை செய்வதாக இருக்கவேண்டுமே அன்றி, கத்தியைத் தூக்குவோம் என்றெல்லாம் அபத்தமாகப் பேசுவதாக இருக்கக்கூடாது.

"நம்முடைய சாதனைகள்" என்று பாலசந்தர் குறிப்பிடுவது நன்றாக இல்லை. அதைப்போன்றே பிற பிரபலங்கள் பேசியதும்.

கடைசியாக சுஜாதா சொன்னதாக வரும் மேற்கோள்: "நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்." இப்படி சுஜாதா நிஜமாகவே நினைத்தார் என்றால் ... "அய்யோ, பாவம்" என்று மட்டும்தான் சொல்லலாம். சுஜாதாவின் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு உரைகள் எல்லாம் வெகு சாதாரணம் என்ற வகையைச் சார்ந்தவையே. சொல்லப்போனால் அவை உரைகளே அல்ல. சுமாரான நவீன தமிழ் வடிவம். விளக்கிச் சொல்லுதல், உட்பொருளைக் காணவைத்தல், இயற்றப்பட்ட காலம், இடம் ஆகியவை தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளைக் கொடுத்தல் என எதுவுமே இல்லாமல் செய்யப்பட்டவை இவை.

மேற்கண்டவற்றுக்கு பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் (உ.வே.சா போன்ற பிராமணர்களும்கூட) சுஜாதாவைவிட மிகச்சிறப்பான உரைகளை எழுதியிருக்கிறார்கள்.

24 comments:

  1. very sad to see so much of pent up negative energy. hope pacifists for such a jingoistic and violent cause are only a marginal minority.

    -sk

    ReplyDelete
  2. பத்ரி,
    //ஜாதி சங்கங்கள் இருப்பதே ஆபத்தான ஒரு விஷயம்.//
    ஜாதி உள்ளவரை எல்லா ஜாதிச் சங்கங்களும் புஷ்டியுடன் வளரும் என்பது சோகமான உண்மை.

    "மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு" என்று மலேசியா ராஜசேகரன் என்பவர் "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா..தானா டோய்" கட்டுரையில் கூறியிருப்பார். (http://mynose.blogspot.com/2005/12/blog-post_28.html).இதைப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது. நாமும் ஏன் அப்படி மாறக்கூடாது.?
    நம் மக்கள் என்னடா என்றால் “மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் உண்டு” என்பதையே தூக்கிப் பிடிக்க விரும்புகிறார்கள்.

    //பிற ஜாதி சங்கங்களைக் காட்டிலும் பிராமணர் சங்கம் ஆபத்தானது. இந்தச் சங்கத்தின் ஒரு முக்கியமான நோக்கம் பிராமணர்கள் பிறரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதை அழுத்திச் சொல்வது.//

    மிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    என்பார்வையில்...
    மனு -->விச வித்து
    ஜாதி---> மனுவால் வந்த விஷ மரம்
    பிராமண ஜாதிச் சங்கம்-->விஷ மரத்தால் வரும் பலனை தக்கவைக்க போராடும் அமைப்பு.
    பிற சாதிச் சங்கங்கங்கள்:--->மேலேயும் கீழேயும் என்ன நடக்கிறது என்று தெரியாமலும் (கண்ணை மூடிக் கொண்டு) சாதியை எதிர்த்து தலித்துடன் கை கோர்க்காமலும், அரசியல் பொருளாதார இலாபங்களுக்காக செயல்படுவைகள்.
    தலித் ஜாதிச் சங்கங்கள்-->விஷ மரத்தால் நிகழ்ந்துவிட்ட பாதிப்பை மீட்டெடுக்க போராடும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அமைப்புகள். (தமிழகத்தில் இது அரசியலில் சீரழிந்து கொண்டு உள்ளது)

    சுந்தரவடிவேல் சொன்னது போல் ...
    //சாதீயம் இந்தியாவின் மாற்றப்பட முடியாத விதி. இது இந்தியாவில் மட்டுமில்லை, கடல் பல கடந்து வந்தேறிய நாடுகளிலும் இந்தியர்களை நாறடிக்கிறது. சட்டத்தில் எல்லா மனிதர்களும் சமம் என்று மேலை நாடுகளில் எழுதப் பட்டிருந்தாலும் இந்தியர்கள் தம் மூட்டை முடிச்சுக்களோடு சாதியையும் தூக்கிக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். அங்கு செய்த அத்தனையையும் இங்கும் செய்யத்தான் செய்கிறார்கள்.//

    சோகத்துடனும், வருத்தத்துடனும்.. கல்வெட்டு

    ReplyDelete
  3. பத்ரி,

    உங்கள் ஆதரவின்மையைத் தெளிவாக தெரிவித்து விட்டாலும் - சில விஷயங்களை நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை
    என்பதும் தெரிகிறது. குறிப்பாக வன்முறைக்கு வித்திடும் கோஷங்களை. பெண்களின் வீரத்தைப் பற்றி நீட்டி, முழக்கும் அவர்களுக்கு
    இந்தப் பெண்களின் முழுமையான நிலைமையை எடுத்துச் சொல்ல விருப்பமில்லை போல இருக்கிறது உங்களுக்கு.

    இந்த வலைப்பூக்களிலே சமீபத்தில் நடந்த விவாதங்களில் கூட, வெளி வந்த கருத்து, பெண்களுக்கென தனிப்பட்ட சிந்தனையோ,
    இலக்குகளோ கிடையாது என்று சிந்திக்கத் தெரிந்த எழுத்தாளினிகளே வாதிட்டிருக்கிறார்கள். ஆக, கல்வி பெற்றும் கூட, பெண்கள்
    நிலைமை மற்ற இன பெண்களை விட மேலான நிலைமையை அடையவில்லை என்பதை நீங்கள் உரத்துச் சொல்லி இருக்க
    வேண்டும். சுஜாதா பாலசந்தர் காதுகளில் விழுமாறு.

    மீன் கழுவும் பெண்களைப் பற்றிய கவலை எங்களுக்கும் கவலை அளிக்கிறது. ஏனென்றால் கலப்புத் திருமணத்தை மூர்க்கமாக
    எதிர்ப்பதன் மூலம், தங்கள் இனத்தூய்மையைக் கட்டிக் காப்பாற்ற முனைந்த அடிப்படைவாதம் தானே தவிர, சமூக நல்லிணக்கத்திற்கு
    போடப்படும் அடித்தளம் அல்ல.

    எல்லாவற்றையும் விட நகைப்புக்குரிய கோரிக்கையாக 15% சதவிகித ஒதுக்கீடு கேட்டதும், அதற்குப் பதிலாக
    ஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில் சொன்னதுமான நிகழ்வு தான். ஒ.சி-யில் 25% சதவிகிதம்
    என்பது மொத்தமாகப் பார்க்கும் பொழுது 8% ஆகும். இது நியாயமா? 3% மக்கட்தொகையே கொண்டவர்கள் 15 சதவிகிதம் கேட்டு, அதில்
    8% பெறுவது ஒன்றும் பாதகமானதில்லையே! இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு -
    உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்?

    இதையெல்லாம் கண்டிக்க உங்களுக்கு நேரமிருந்திருக்கவில்லை போலும். புத்தக கண்காட்சியில் மும்முரமாக இருக்கிறீர்கள். புத்தக கண்காட்சி
    முடிந்ததும் - நிதானமாக நிகழ்வுகளை வாசித்து இன்னுமொரு பதிவு விரிவாக - கண்டித்து எழுதி விடுங்கள். ஏனென்றால், உங்களின்
    இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது தோன்றுவது - you had tried to balance things precariously.

    நண்பன் பெயர்களைப் பார்த்து முடிவு செய்பவன் அல்ல என்று உங்களுக்குச் சொன்ன பதிவை நீங்கள் படிக்கவில்லை போலும் -
    ஏனென்றால், இதுவரையிலும் அமெரிக்கர்களைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் தான் எழுதி வந்திருக்கிறேன்.
    இந்து மதத்தையோ, பார்ப்பனர்களைப் பற்றியோ ஒரு பதிவு கூட எழுதியதில்லை. நோவா, மனு ஒரு சரித்திரப் புரட்டு என்பதால் அதை எழுத
    வேண்டி வந்தது. அமெரிக்கர்களைப் பற்றி மட்டும் எழுதினால், அது பெயர் நோக்கி சிலருக்கு எதிராக போராடுவதாகவா தோன்றுகிறது
    உங்களுக்கு?

    வியப்பாக இருக்கிறது நண்பரே!!!

    ReplyDelete
  4. விகடன் போன்ற பிரபல இதழ்களில் இவர் (அல்லது வேறு எவரும்) இது போன்று தனி ஒரு சாதி குறித்து தூக்கிப் பிடித்து எழுதுவதும், அதற்கு விகடன் போன்ற பத்திரிக்கைகள் இடம் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  5. ஒட்டுமொத்த பார்ப்பனர்களையும் லாரியில் ஏற்றினால் லாரி ஃபுல்லாக நான்கு பேர் குறைவார்கள். இதில் பேச்சு மட்டும் பெரும்பேச்சு.

    ReplyDelete
  6. //எல்லாவற்றையும் விட நகைப்புக்குரிய கோரிக்கையாக 15% சதவிகித ஒதுக்கீடு கேட்டதும், அதற்குப் பதிலாகஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில் சொன்னதுமான நிகழ்வு தான். ஒ.சி-யில் 25% சதவிகிதம்என்பது மொத்தமாகப் பார்க்கும் பொழுது 8% ஆகும். இது நியாயமா? 3% மக்கட்தொகையே கொண்டவர்கள் 15 சதவிகிதம் கேட்டு, அதில்
    8% பெறுவது ஒன்றும் பாதகமானதில்லையே! இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு - உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்?//

    நண்பன் - தெளிவாக எழுதுகிறேனென்கிறீர்கள்; இப்பதிவின் தொனி உங்களுக்குப் பிடிபடவில்லை என்பதுதான் ஆச்சரியம். Getting intellectually close to puerility, I guess ;-)

    ReplyDelete
  7. சன்னாசி,

    இடஒதுக்கீட்டைப் பற்றி சொல்லும் பொழுது, இட ஒதுக்கீடு - மக்கட்தொகையின் அடிப்படையிலான இட ஒதுக்கீடாக அனைவரும் இணங்கி வரும் பொழுது, அதாவது, மக்கட்தொகையின் சதவிகிதத்தால் இருக்கின்ற 100 % சதவிகித மக்கட்தொகைக்கும் பகிர்ந்து கொடுப்பதாக இருந்தால், அப்பொழுது உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒதுக்கீடு 3% சதவிகிதமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அதை விட போட்டியிட்டு உங்களால் அதிக இடங்களைக் கைப்பற்றி, நல்ல நிலைமையில் இருக்கும் பொழுது, ஏன் ஒதுக்கீடு என்று கேட்கிறீர்கள். மக்கள் தொகையின் அடிப்படையில் பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று எல்லோரும் கேட்டால், பின்னர் அது உங்களுக்குத் தான் சிரமமாக இருக்க முடியும் என்று தான் எழுதினேன். மற்ற படிக்கு, no hidden agenda, no pun intended.

    இந்தப் பதிவின் தொனி பிடிபடவில்லை என்கிறீர்கள் - ஏன்?

    வசிஷ்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர் போல் எழுதி இருக்கிறீர்கள்? (முதன் முறையாக - நேரிடையாகப் பதில் சொல்ல முனைந்த உங்களுக்கு ஒரு நன்றி. சின்ன பிள்ளைங்க மாதிரி கள்ளன் போலிஸ் விளையாடாமல் பதிலே போட்டுட்டீங்க... )

    முதலில் -

    வலைப்பூக்களில் காணப்படும் முகங்களைக் கொண்டே ஒரு மனிதனை எடை போட்டு விட வேண்டும் என்று நான் முனைவதில்லை. சில சமயங்களில், வலைப்பூக்களில் காணப்படும் முகம் முற்றிலுமாக வேறாக இருக்கக் கூடும். அதனால், நான் எந்த ஒரு அபிப்ப்ராயத்திற்கும் வருவதற்கு முன்னர் - அவர்களைப் பற்றிய ஒரு நேரிடையான அனுபவம் கிடைத்தால் மட்டுமே ஒரு முடிவிற்கு வருவேன். அதனால், இந்தப் பதிவை பத்ரி எழுதிவிட்டதால் அவரைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.

    ஒரு பதிவை நான் விமர்சித்தேன் - தொடக்க வாக்கியமாக, பத்ரி, உங்கள் ஆதரவின்மையைத் தெளிவாக தெரிவித்து விட்டாலும் - என்று தான் தொடங்கினேன். இதுவே அவர் எழுதியதற்கான என் பாராட்டுகள். ஆனால், அது மட்டுமே போதாது - உங்களைப் போன்றவர்களிடமிருந்து எழக்கூடிய கண்டனங்கள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் - பொத்தம் பொதுவாக இருக்கக் கூடாது - it should be focussed to the point என்று தான் சொல்லுகிறேன்.

    எல்லா வலைப்பதிவாளர்களும் - ஆதரவு நிலை பதிவாளர்களும் - ஒரு விவாதத்தைத் தவிர்ப்பதற்காகவே, சுஜாதாவையும் பாலசந்தரையும் பலிகடாவாக முன்னிறுத்தி, மற்ற விஷயங்களைப் பின் தள்ளுகிறீர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி இல்லை என்று நீங்கள் சொல்ல முனைந்தால், ரவிஷங்கர், கல்வெட்டு போன்று வெளிப்படையாக இங்கேயே கண்டித்து எழுத முடிந்தால், அதற்காக மகிழ்ச்சி தெரிவிப்பேன்.

    // நண்பன் - தெளிவாக எழுதுகிறேனென்கிறீர்கள்; இப்பதிவின் தொனி உங்களுக்குப் பிடிபடவில்லை என்பதுதான் ஆச்சரியம். Getting intellectually close to puerility, I guess ;-) //

    When you can't comprehend the veiled appreciation to Badri, asking for condemnation of other issues as well, then there is nothing wrong to reach your level of comprehension - no?

    சரி, பத்ரிக்குப் பாராட்டுகள் - தன்னுடைய மென்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டமைக்காக. ஆனால், அது பத்தாது. இன்னும் வலுவாக அமைந்திருக்க வேண்டும் இந்த கண்டனக் கட்டுரை. மற்றபடிக்கு வலைப்பூவில் வந்த இந்தப் பதிவிற்கு மட்டும் பாராட்டுகள். இன்னும் சொல்லப்போனால், பத்ரியின் வலைப்பூவில் நான் படித்த ஒரே பதிவு இது மட்டுமே என்பதால், வெளிப்படையாக அவரைப் பற்றிய கருத்துகள் எதுவும் இல்லை. அதனால் அவசரப்பட்டு எதையும் எழுத வேண்டாம் - விமர்சனம் மட்டும் வைத்தால் போதும் என்று நினைத்தேன். சன்னாசியின் மனவருத்தம் நியாயமானது தான். இந்தப் பதிவிற்கு 'அற்புதமான நண்பர்களின்' ஆதரவு இல்லையென்றால், மனம் சோர்வடையத் தான் செய்யும்.

    பாராட்டுகள், பத்ரிக்கும், சன்னாசிக்கும் மற்றும் கருத்து எழுதியவர்களுக்கும்.

    ReplyDelete
  8. திரு.பத்ரியின் கருத்தை நான் வழிமொழிகிறேந்:-))

    ReplyDelete
  9. "திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திண்டுக்கல் மாநாட்டில் (25.12.2005) சொன்னது போல தர்ப்பைப் புல்லேந்தி பழக்கப்பட்டவர்கள், வாளேந்தத் தயாராகிவிட்டனர் என்றால் பரம்பரையாக வாளேந்திய பரம்பரை எதை ஏந்தும் என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார். அவர்கள் விடை சொல்லாவிட்டாலும் நாமும் தற்காப்புக் கலையில் தயாராகிவிட வேண்டியதுதான்."
    இது மட்டும் எப்படி இருக்கு? கட்டபொம்மன், பூலித்தேவன்னு 'நாமெல்லாம் வாளேந்தி பழகியவர்கள்'ன்னு ஜாதி பிரிச்சிப்பீங்க.... அவங்கள்ளாம், மறத் தமிழர்க்ள். எல்லா ஜாதிக்கும் பொதுவானவஙக. பார்ப்பணன கண்டா கல்லால அடின்னு சொன்னவரும் முழம் சறுக்கி காமத்துக்காகத் தானே 90 வயசுல கட்டிகிட்டாரு? காயத்ரி மந்திரமோ வேற ஏதோ, எல்லாம் வெட்ட வெளில தான் இருக்கு? இன்னிக்கி ரிங் டோன், காலிங் பெல் டோன், சினிமா பாட்டு எல்லாத்துலயும் எல்லா மந்திரமும் 'தேசிய மயமாக்கப் பட்டிருக்கு'.... வேணும்னா எல்லாரும் படிக்கட்டும். ராஜாஜி ஆலய பிரவேசம் செய்ய வெச்சது யார் மதிக்கறாங்க? இங்க பெரிசா டயலாக் அடிச்சிருக்கர 30 பேருல
    எவ்வளோ பேரு அடுத்த ஜாதில பொண்ணு எடுத்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா? நீங்க அன்னிக்கி ஆட்டம் போட்டீங்க.. இன்னிக்கி நாங்கன்னு சொல்லறீங்க...? அப்பன்னா வாய்ப்பு கிடச்சா நீங்களும் அதே தப்ப செய்வீங்க..? பழக்கமில்லன்னு அசைவம் சாப்டறதில்ல..... அது தப்பா சரியான்றது ரெண்டாவது.... ஆனா எவ்ளோ பேரு தயிர் சாதத்துல முட்டை, மீன்னு போட்டு கலாட்ட பண்றாங்க?உண்மை என்னன்னா இன்னிக்கி தேதிக்கு யாரும் அடிமயா இருக்க விரும்பல... பின் தங்க் விரும்ப்ல...வேற் யாரும் ஒப்புக்காததால, எல்லாரும் கவுண்ட் ஏத்தறதுக்கு, ஜாதி வாரியா கூட்டம் கூட்டறாங்க... அவ்ளோ தான்.... விவேக் மாதிரி யாரும் லெக்சர் அடிச்சிட்டு பல்டி அடிக்கலயே?
    'ஜெயம்' படத்துல 'ரயிலு வண்டி' பாட்ல பூணுல சறுக்கு சறுக்குன்னு மியூசிக் ஏத்தாப்புல இழுத்து காண்பிக்கறாங்க... ஜீவா ஷ்யாம வச்சி, 'உள்ள்ம் கேட்குமேல' இதே மாதிரி பூணூல் போட்டவர நிர்வாண படுத்தறதா ஒரு காட்சி வெக்கறார்... வடிவேல் தேங்காய பொறுக்கி சண்ட போடறதா அர்ச்சகர காமிக்கறார். இதல்லாம் உள்ள இருக்கற வக்கிரத்த காண்பிக்கற வேலை தான். இதுல நக்கல் தொனில இங்க நிறய பேரு பிராமிணாவது அருவாள தூக்கறதாவதுன்னு கேலி... கீரிப்பட்டி கிராமத்துல வருஷா வருஷமா தேர்தல நிறுத்தற ஜாதி வெறி யாருது..? அதுல எந்த பிராமண்ன் இருக்கான்...? சேலம் பக்கத்துல ரெண்டு டீ டம்ளர் முறை கொண்டாந்த்து யாரு..? இதல்லாம் தடுக்க வக்கில்ல... பிராம்ணன் அப்பிராணினு ஏளனத்தோட பல கூத்து நடக்குது..... ஜாதியே இல்லன்னு சொல்றவன் வாழ்க்கய நோண்டினா பல முரண்பாடு கிடைக்கும்.... உண்மயா யாரு அப்படி வாழ்ந்து காண்பிக்கறாங்களோ அவங்களுக்கு தலை வணங்கறேன். மத்த எல்லாருடய கூச்சலும் ஹம்பக். என் ப்ரெண்ட்ஸ் பலர் கூட பழகும் போது வித்யாசம் காண்பிக்கறாங்க..... ஆக மொத்தம் நாய் மனுஷன கடிச்சா அத யாரும் கண்டுக்கறதில்ல (மற்ற ஜாதி சங்க கூட்டங்கள்) .... ஆனா மனுஷன் கிறுக்கு புடிச்சி நாய கடிச்சா கூச்சல் போட இங்க நிறயவே கூட்டம் இருக்கு.... வாழ்க தமிழகம்....

    ReplyDelete
  10. //அதனால், இந்தப் பதிவை பத்ரி எழுதிவிட்டதால் அவரைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.//
    நண்பன்: எழுதியதால் பாராட்ட மட்டுமே செய்யவேண்டுமென்பது, உள்ளேன் ஐயா ஆஜர் கொடுக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது அபத்தமென்பதுதான் என் கருத்தும்கூட.

    //சன்னாசியின் மனவருத்தம் நியாயமானது தான். இந்தப் பதிவிற்கு 'அற்புதமான நண்பர்களின்' ஆதரவு இல்லையென்றால், மனம் சோர்வடையத் தான் செய்யும்.//
    ;-). புரிதலுக்கு நன்றி.

    //முதன் முறையாக - நேரிடையாகப் பதில் சொல்ல முனைந்த உங்களுக்கு ஒரு நன்றி. சின்ன பிள்ளைங்க மாதிரி கள்ளன் போலிஸ் விளையாடாமல் பதிலே போட்டுட்டீங்க... )//
    உங்கள் பதிவுகளில் போட்ட "அகராதிப்" (தென் தமிழ்நாட்டில் 'அகராதி'க்கான சிலேடை தெரிந்திருக்கவேண்டுமெனில் கவி காளமேகமாயிருக்கத் தேவையில்லை ;-)) பின்னூட்டங்கள், அந்தந்தப் பதிவுகள் குறித்த விமர்சனங்களே.

    //வலைப்பூக்களில் காணப்படும் முகங்களைக் கொண்டே ஒரு மனிதனை எடை போட்டு விட வேண்டும் என்று நான் முனைவதில்லை. சில சமயங்களில், வலைப்பூக்களில் காணப்படும் முகம் முற்றிலுமாக வேறாக இருக்கக் கூடும். அதனால், நான் எந்த ஒரு அபிப்ப்ராயத்திற்கும் வருவதற்கு முன்னர் - அவர்களைப் பற்றிய ஒரு நேரிடையான அனுபவம் கிடைத்தால் மட்டுமே ஒரு முடிவிற்கு வருவேன். அதனால், இந்தப் பதிவை பத்ரி எழுதிவிட்டதால் அவரைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. //

    இன்னொரு சுட்டி கொடுத்தால் போயிற்று இங்கே ;-). நான் கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறேனென்று நினைத்தால் அது உங்கள் அனுமானம் - அந்த அவசியம் எனக்கில்லை, இதெல்லாம் defelecting rhetoric என்று நீங்கள் கருதினாலும், அது உண்மையில்லை என்பதைத்தவிர நான் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

    இந்தப் பதிவை திசைதிருப்ப விரும்பவில்லை. நன்றி.

    ReplyDelete
  11. நண்பன்,

    நேற்றிலிருந்து உங்களை கேட்க நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே போவதற்கு காரணம், "நண்பன்" என்று குறிப்பிட்டு யாராவது ஏதாவது சொன்னால், நேரடியான அர்த்தத்துக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொட்த்து மத்த fill in the blanksக்கு உங்கள் அஞ்சறை பெட்டியை திறந்து சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ், மதம், ஜாதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி ஒரு பதிவு பல பின்னூட்டங்கள் என்று சம்பந்தமில்லா இடங்களில் எல்லாம் எழுதி வருகிறீர்கள் என்பதே... சரி, விஷயத்துக்கு வருவோம்.

    பதிரி இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில் :: நீங்கள் இதை இதையெல்லாம் சுட்டியிருக்கலாம், தவறிவிட்டீர்கள் என்ற அளவில் எழுதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் // இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு -
    உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்? // இது என்ன? பத்ரி என்பவர் ஜாதி உங்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் தெரிந்துவிட்டது என்பதால் அதிலேயே தொங்குவீர்களா? மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். இப்போது உங்கள் பாணியில் பேசினால், உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா?

    ReplyDelete
  12. //இதனால் பிராமண ஏழைகள் திண்டாடட்டும் என்று விட்டுவிடக்கூடாது. பிராமணர் சங்கம் என்று ஒன்று இருக்கவேண்டுமானால் அவர்களது நோக்கம் இதுபோன்ற ஏழை பிராமணர்களின் நிலையை முன்னேற்றுவதாக, கல்விக்குக் கடன் அல்லது மான்யம் அளிப்பதாக, வேலை கிடைக்க வகை செய்வதாக இருக்கவேண்டுமே அன்றி, கத்தியைத் தூக்குவோம் என்றெல்லாம் அபத்தமாகப் பேசுவதாக இருக்கக்கூடாது.//

    Well said. Thanks.

    ReplyDelete
  13. Nanban,
    I thought of asking a similar question as Mugamudi did. You cannot put Badri on trial for the utterances of others lest you will face the same awkward situation for incidents involving people with whom you have nothing in common except the religious identity.

    ReplyDelete
  14. Badri,

    You have penned a very provocative and controversial blog.
    Firstly, i am not a big fan of Sujatha. In my view he is an average writer (even of science fiction) which he claims as his own.
    Having said this, 2 things to note,
    - I doubt whether he would've spoken this way... and you know how press and people misrepresent statements.
    - Secondly, you might want to read his statement carefully. I don't think he has said he has written better commentary or better thirukkural. He has said he has written better than "THEM"
    Of course this is rubbish. You have been in IIT and seen such talent from anywhere in the country. I am surprised you are even taking this seriously !!

    ReplyDelete
  15. எல்லாம் சரி. பாலாஜி, தனது பின்னூட்டத்தில் பல கேள்விகள் எழுப்பியுள்ளார். அதற்கு யாரும் பதில் எழுதக் காணோமே.

    ReplyDelete
  16. முகமூடியார் மறுபடியும் ஒரு தட்டையான வாதத்தை வைக்க முற்படுகிறார்.

    அரபு/ஆப்கான்/பாகிஸ்தான் வாழ் இசுலாமியர்கள் செய்கிற செயல்களுக்கெல்லம் இங்கே உள்ள இசுலாமியர்தான் காரணம் என்பது போல பலரும் பேசி வரும் கேவல நிலை உள்ளதை யாரும் மறுக்கவியலாது.

    பார்ப்பனர்கள் இதுவரை தங்கள் மீது வைக்கப்பட்ட எல்லாக் குற்றச்சாட்டுகளையும், ஆரிய மூலங்களையும் மறுத்தே வந்துள்ளனர்; இடஒதுக்கீடு குறித்த இவர்களது அலம்பல்கள் சொல்லி மாளாதவை.

    இப்போது 15% இட ஒதுக்கீடு, OC-இல் 90% சதம் வரணும், இப்போ 25% சதம் கூட இல்லையே என்றெல்லாம் ஊளையிடுபவர்கள் இதுகாறும் நடந்த சமூகநீதி சார்ந்த சீர்திருத்தங்களை இப்போது ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தமா?

    அப்படியும் தெரியவில்லை! அந்த மாநாட்டுப்பேச்சில் 'மனுநீதி'தான் தெரியுது!

    3% இருந்து கொண்டு 25%, 90% என்றெல்லாம் வெறி கொண்டு பேசுவது ஏன் - என்று 'நண்பன்' கேட்டதில் 100% நியாயம் உள்ளது.

    பத்ரி அவர்கள் பற்றி நான் pre-determined ஆக எண்ணிக் கொண்டு இதைச் சொல்லவில்லை.

    ஆனால் பத்ரி இந்தக் கேள்விகளை முகம் கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.

    'கைபர் போலனுக்கு ஓடுதளம் அமைக்கிறார்கள்' என்று கெக்கெலி கொட்டியவர்களுக்கு இப்போது தேள் கொட்டி விட்டது!

    கத்தவா முடியும்! ;)

    ReplyDelete
  17. முகமூடியாரே!


    என்ன? அப்பன் குதிருக்குள் இல்லையா?!
    இருந்துவிட்டுப் போகட்டும்! இந்த விவாத ஓட்டத்தில் உருப்படியாக ஏதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள்.

    எள்ளலும், எகத்தாளமும் எப்போதும் துணைவராது என்பதைக் காலம் கடந்தாவது புரிந்து கொண்டதற்கு வாழ்த்துகள் :)

    பத்ரி - இந்த என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் விரும்பினால் நீக்கிக்கொள்ளலாம் - முந்தைய முகமூடியாரின் பின்னூட்டத்தையும் சேர்த்து.

    ReplyDelete
  18. neo,

    பேச வந்த விஷயத்தை விடுத்து எப்ப பாத்தாலும் எதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பட க்ளைமாக்ஸ் போல நீளமான விமர்சனம், உளவியல் ஆராய்ச்சி, பழமொழின்னு...

    நான் இதற்கு முன்பு நண்பனிடம் என்ன கேட்டிருக்கிறேன் என்று மூன்று முறைக்கு மேல் பொறுமையாக படிக்கவும். உங்களுக்கு ஜாதி கண்ணாடியை கழட்ட மனம் வராது என்பதால் எளிமையாக உரை எழுதுகிறேன்.

    அதாவது பதிவாளர் மூன்றாம் மனிதர் பார்வையில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் கூட்டத்தை குறிப்பிட்டு, 90% என்றெல்லாம் பேசுகிறார்கள், நிதர்சனம் 25% கூட இல்லை என்று சொல்கிறார்.

    அதை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் நண்பன், "ஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில்" என்று ஆரம்பிக்கிறார். இங்கு நீங்கள் என்று குறிப்பிடுவது பதிவாளரைத்தான் என்பது 3ம் வகுப்பு வரை தமிழ் படித்தவர்களுக்கு கூட எளிதில் புரியும். அப்படியே அதன் தொடர்ச்சியாக நீங்கள் நல்ல நிலையில்தானே இருக்கிறீர்கள் என்று வரும்போது அதனை அவர் பதிவாளரை நோக்கி எழுதியதாகவே அனைவருக்கும் தெரிகிறது, உங்களுக்கும் நண்பனுக்கும் தவிர.

    இங்கே "அவர்கள்" என்று வந்திருக்க வேண்டிய கேள்வி பதிவாளரின் சாதியை பற்றி தெரிந்ததால் "உங்கள்" என்று வந்திருப்பது தவிர்க்கப்படவேண்டியது. அப்படி பார்த்தால் "நீங்கள்" ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள் என்று IISc தாக்குதல் குறித்து நண்பனை நோக்கி கேட்க முடியுமா என்பதே நான் கேட்டது.

    இதில் எங்கே தட்டையான வாதம் வருகிறது. முகமூடியின் தட்டையான வாதத்தில் ஆரம்பித்து தேள் கொட்டி விட்டது என்று முடிக்கும் வரை என்னை refer செய்து நடுவில் வழமையான சில கேள்விகளை கேட்டு ஒரு ஸ்மைலியுடன் முடிக்கும் அவசர கோல பின்னூட்டத்துக்கு காரணம் ஒன்று அந்த பழமொழியில் குறிப்பிடப்பட்டதாக் இருக்கலாம் அல்லது செக்கூலரிஸ திரையின் பின்னிருக்கும் உமது உண்மையான முகமான பச்சையான ஜாதி துவேஷம் காரணமாக இருக்கலாம். இந்த பின்னூட்டம் நான் போட்டு 12 மணி நேரம் மாடரேஷனில் இருந்த போது என் பதிவில் வந்து நீங்கள் மறுபடி மறுபடி நான் சொன்னதை Prove செய்த போது எனக்கு பரிதாபமாகத்தான் இருந்தது.

    *

    உங்களுடைய பின்னூட்டத்தை நீக்கச்சொல்லி கேட்டது உங்கள் விருப்பம். அது எதற்கு முந்தைய என் பின்னூட்டத்தையும் நீக்க சொல்லி கேட்பது. அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்காமல் சுயநினைவோடுதான் நான் அந்த பின்னூட்டத்தை எழுதினேன். அதை நீக்க கோர உங்களுக்கு உரிமை இல்லை.

    ReplyDelete
  19. ஒரு இடைச்செறுகல் ::

    .....பின்னிருக்கும் உமது உண்மையான முகமான பச்சையான ஜாதி துவேஷம் (+ அதீத கற்பனையால் ஏற்படுத்திக்கொண்ட கற்பிதம் காரணமாக கொண்ட முகமூடி எதிர்ப்பு) காரணமாக இருக்கலாம்....

    ReplyDelete
  20. மு. சுந்தரமூர்த்தி said...

    // Nanban,

    I thought of asking a similar question as Mugamudi did. You cannot put Badri on trial for the utterances of others //

    Sundaramoorthi,

    Thanks for your concern. I had sufficiently clarified about this in my blog. As I do not want to disturb the flow of this blog, I answered in my blog. Please read that.

    While, I clarified that it was not my intention to put any one on trial - anywhere, they should also keep the same level of decorum in their writings.

    I had also refuted some unfair criticism of the people who closed - not only their faces, but also their senses.

    You should have read my blog for the replies, before put up an advice.

    //lest you will face the same awkward situation for incidents involving people with whom you have nothing in common except the religious identity.//

    I am not ashamed of my religious identity. Connecting innocent Muslims with incidents happening around the world is going on in this country for so long. There are many Arokyams to connect Muslims with anything they dislike.

    Its happening and the majority of population will be a mute spectator to such comments.

    May Allah will give us the courage and strength to face such awkward situation and people.


    Once again, thanks for your concern.

    Wish you all a happy Pongal and Tamil New Year.

    Nanban

    ReplyDelete
  21. முகமூடி,

    >> அவர் பதிவாளரை நோக்கி எழுதியதாகவே அனைவருக்கும் தெரிகிறது, உங்களுக்கும் நண்பனுக்கும் தவிர. >>

    இதிலே மற்ற அனைவரையும் நீங்கள் இழுக்க வேண்டிய அவசியம் வந்ததைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது!

    பத்ரி அவர்களை கோக்கி 'மட்டுமே' அந்தக் கேள்வி எழுப்பப்பட்டதல்ல என்பது நிதர்சனம். அதற்கு பத்ரி அவர்கள் தெளிவாக மறுமொழி அளித்துவிட முடியும்; தன்னைப் பற்றிய தாக்குதல் என்று அவர் கருதினாலும் கூட.

    வேறொரு இடத்தில் 'நண்பனின்' பார்வை பற்றிய ஒரு தாக்குதலை (indiblogs poll பற்றிய ப்திவில்) அவர் செய்ததற்கு தொடர்ச்சியான ஒரு பதிலை நண்பன் இங்கே தந்திருக்கக் கூடும்.

    25% கூட இல்லை என்று பத்ரி அவர்கள் குறிப்பிடும்போது - அவரை நோக்கி (அவர் 'சாதி' தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும்) இந்தக் கேள்விக்கணை பாயத்தான் செய்யும். பத்ரி இதை தனிப்பட்ட தாக்குதலாக கருதுவார் என்று நான் நினைக்கவில்லை.

    இந்த விவாதத்தை வழக்கம் போல் திரிப்பதற்கான உங்கள் 'மட்டையடி' முயற்சிக்கு என் வாழ்த்துகள்! :)

    உங்களைப் போன்ற பார்ப்பனீய வெறியாளருக்கு தமிழ் உணர்வாளர்கள் 'சாதீயவாதிகளகி' விடுவது என்பது புரிந்து கொள்ளப்பட்ட வழக்கமான standard operating thought என்பது அனைவர்க்கும் தெரிந்ததே!

    ஸ்மைலி, ஆச்சர்யக்குறி இதெல்லாம் கூட உங்களுக்கு அத்தனை ஆத்திரத்தைக் கிளப்புவது எனக்கு புரியாத புதிராக உள்ளது.

    உங்கள் பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் துப்பிருந்தால் அங்கேயே சொல்லுங்கள்.
    'Holier than thou' நாடகமெல்லாம் பழசு.

    புதிதாய் ஏதாவது முயற்சி செய்யவும்!

    ReplyDelete
  22. நண்பன், neo: இது உங்கள் இருவருக்காக. நண்பன் நான் எழுதியதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பக்கம் பக்கமாக பதில் எழுதுகிறார். அதனால் எனக்கு இந்த விவாதத்தில் மேற்கொண்டு பங்குகொள்ள விருப்பமில்லை.

    நான் என் கருத்தை எழுதும்போது, "நீ அதைக் கண்டிக்கவேண்டும், இதைக் கண்டிக்க வேண்டும்" என்றெல்லாம் யாரும் சொன்னால் அதை நான் கண்டுகொள்வதேயில்லை.

    அவரவர் தமக்கு விருப்பமானதைக் கண்டிக்கலாம்.

    25% கூட இல்லை என்று எங்கு குறிப்பிட்டேன்? "ஐயோ, பிராமணர்களுக்கு நிறைய இடம் கிடைக்கவில்லையே" என்ற ஆற்றாமையால் அல்ல. சரசுவதி ராம்நாத் என்பவர் ஓப்பன் கோட்டாவில் பிராமணர்கள் 90% பெறவேண்டும் என்று நினைக்கிறார். அதாவது அவர் கருத்தின்படி பிராமணர்கள் மிகச்சிறந்தவர்கள், எனவே அவர்கள் அதிகம் கஷ்டப்படாமல் 90% பெற முடியும் என்பது அவர் கருத்து. அந்தக் கருத்து தவறானது என்று சொன்னேன். ஏனெனில கடந்த நுழைவுத்தேர்வில் பிராமணர்கள்/FC அப்படியான நிலையில் இல்லை. அவ்வளவே.

    எனது பதிவில் நான் குறிப்பிட்ட எதையும் மாற்றவோ அதிகப்படுத்தவோ தேவையில்லை என்று நினைக்கிறேன். சொல்லவந்ததை முதல்முறையிலேயே சரியாகக் குறிப்பிட்டுவிட்டென்.

    இனி உருப்படியாக ஏதேனும் வந்தால் மட்டுமே இந்தப் பதிவுக்கான பின்னூட்டத்தை அனுமதிப்பேன்.

    ReplyDelete
  23. பத்ரி அவர்களே,

    நண்பன் அவர்களின் அந்த வினா உங்களை 'மட்டுமே' நோக்கி எழுப்பப்பட்டதல்ல என்கிற கருத்துக்கு மதிப்பு தந்ததற்கு என் நன்றிகள்.

    உங்கள் மறுமொழி தெளிவாகவே உள்ளது (அதாவது அந்த 25% பற்றி)என்னைப் பொறுத்தவரை.

    ---------------------------------

    மேலே தந்தது பின்னூட்டம் (நீங்கள் விரும்பினால் அனுமதியுங்கள்)

    இது உங்களிடம் நான் சொல்ல விரும்பிய ஒரு தனிப்பட்ட கருத்து..


    'எஸ்.ரா' விவகாரம் பற்றிய மாலனின் பதிவையும், ரமேஷ் 'கீற்றில்' எழுதியதையும் படிக்கும் போது சற்றே பெரிய சங்கதி போலத்தான் தெரிகிறது.

    குஷ்பூ, சுகாசினி விவகாரத்தில் பல தமிழகத்து 'அறிவுஜீவிகள்' கருத்துச் சொல்ல குதித்தோடி வந்ததும், இந்த விவகாரத்தில் பலர் வாய்மூடி இருப்பதும் புரியாத புதிர்.

    இங்கே வலையிலேயே பலர் இதை 'cover-up' செய்வதாகவே தோன்றுகிறது.

    நீங்கள் 7/1/2006 அன்று அந்தச் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்திருந்தீர்கள் என்றால் - உங்களுக்குத் தெரிந்ததை, இது தொடர்பான உங்கள் கருத்தை எழுத விருப்பமிருந்தால் - எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete