ஆட்டங்கள் நடக்கும் நேரம் மோசம். இரவு 8.00 மணிக்கு ஆரம்பிப்பதால் அதிகபட்சம் ஓர் இன்னிங்க்ஸ் மட்டும்தான் பார்க்க முடிகிறது.
சோனி சானல்களை உலகக்கோப்பை பார்க்கவென்றே காசுகொடுத்து வைக்கவேண்டிய கட்டாயம்.
மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் ஆட்டம் முதல் இன்னிங்க்ஸ் கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன். நேற்று ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து ஆட்டம் மனத்தில் ஒட்டவேயில்லை. ஸ்காட்லாந்து பையன்களுக்கு பந்தைத் தடுத்து, திரட்டக்கூடத் தெரியவில்லை. கென்யா - கனடா ஆட்டம் தூக்கத்தை வரவழைத்தது. HBO-வில் நல்ல படம் ஒன்றைப் பார்த்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டேன்.
சாரு ஷர்மா, மந்திரா பேடி, டீன் ஜோன்ஸ் கூட்டணி ஆஸ்திரேலியா ஆட்டம் மழையின்போது ஏதோ பேசினார்கள். அதுவும் மனத்தில் நிற்கவில்லை. மந்திரா பேடி ஏதோ சொல்ல முயற்சி செய்வதும், அதைச் சரியாகக் கவனிக்காமல் பிறர் பேசிக்கொண்டே இருப்பதுமாக இருந்தது கொஞ்சம் உறுத்தியது. இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும்கூட மந்திரா பேடியை செட் பீஸாக மட்டுமே கருதுகிறார்களோ?
முதல் சுற்றில் உருப்படியான ஆட்டம் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். அவை:
மார்ச் 13: மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் (குரூப் D)
மார்ச் 16: இங்கிலாந்து - நியூசிலாந்து (குரூப் C)
மார்ச் 23: இந்தியா - இலங்கை (குரூப் B)
மார்ச் 24: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (குரூப் A)
அவ்வளவுதான்!
சூப்பர் 8 என்பது ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளில் 1991-ல் நடைபெற்ற உலகக்கோப்பையை ஒத்ததாக உள்ளது. மழையால் பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டால் இந்த இரண்டாம் கட்டம் வெகு சுவாரசியமாகப் போகும்.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
19 hours ago
பத்ரி
ReplyDeleteஉங்கள் கருத்தை இன்று காலை இங்கு வானொலியில் ஒலிபரப்பினார்கள்.
பத்ரி,
ReplyDeleteஇது தொடர்பான எனது பதிவையும் பார்க்கவும்.
//முதல் சுற்றில் உருப்படியான ஆட்டம் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். அவை:///
ReplyDeleteI thing you have to count the two games that took place on Saturday 17th March