Saturday, March 17, 2007

நந்திகிராமம், SEZ தொடர்பாக...

* நேற்றைய 'தி ஹிந்து' தலையங்கம் மிகக் கேவலமான முறையில் எழுதப்பட்டிருந்தது. 'தீக்கதிர்' கூட இப்படி ஜால்ரா அடித்திருக்காது. முக்கியமாக, கீழ்க்கண்ட வரிகள்:
"More disconcertingly, a usually sagacious Governor, Gopalkrishna Gandhi, stepped out of line in publicly airing his philosophical and tactical differences with the State government while expressing high-minded anguish over the Nandigram deaths. Under the Indian Constitution, it is surely not the job of a Governor to offer public judgments on how an elected government should have handled a tricky situation."
சரி, அப்படி கவர்னர் கோபால்கிருஷ்ண காந்தி என்ன சொல்லிவிட்டார்? துப்பாக்கிச்சூடு நடந்திருக்கக்கூடாது என்றார்.
[T]he governor of West Bengal Gopal Krishna Gandhi expressed shock over the incident. Without mincing words, Gandhi spoke about the state government's inability to handle the situation. In a press statement he said that the firing on Wednesday has filled him with a sense of cold horror. "Force was not used against terrorists or anti-national elements. I trust that the government will ensure that there is a no repetition of the trauma witnessed," Gandhi said.
பின் தடியடியில் காயமடைந்தவர்களைப் பார்க்கச் சென்ற காந்தி இவ்வாறு கூறியுள்ளார்:
"I was saddened at what I saw here. People are in shock. They are not getting proper treatment. Some of them need to be shifted to Kolkata."
* சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது வலுக்கட்டாயமாக மக்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளதாக இன்று காலை சன் நியூஸ் செய்தியில் வந்தது. இந்த விவாதம் வருவதற்கு நந்திகிராம மக்கள் உயிரிழக்க வேண்டியிருந்தது பரிதாபம்.

* இது இப்படியிருக்க மத்திய அரசின் விவசாய அமைச்சகமும் (!), ASSOCHAM-ம் (தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு) இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஒரு கருத்தரங்கை தில்லி லெ மெரிடியன் ஹோட்டலில் நடத்த உள்ளதாக நேற்றைய செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அது தொடர்பான ASSOCHAM இணையத்தளத்தின் பக்கம் இதோ.

விவசாய அமைச்சகம் (அமைச்சர்: ஷரத் பவார்), விளைநிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றப்படுவதைக் கண்டிக்கவோ தடுக்கவோ இதுவரை முனையவில்லை. வர்த்தக அமைச்சகம் (அமைச்சர்: கமல்நாத்), சி.பொ.மண்டலங்கள் அமைவதைப் பெரிதும் வரவேற்கிறது. அதனால் நிறைய வேலைவாய்ப்புகள், முதலீடுகள் வரும் என்று வர்த்தக அமைச்சகம் கருதுகிறது. நிதி அமைச்சகம் வரி வருமானம் வெகுவாகக் குறையும் என்று சொன்னதோடு சரி. வேறு எந்த எதிர்ப்பும் இல்லாமல், எந்த நாடாளுமன்ற விவாதமும் இல்லாமல் SEZ Act நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதுதான்.

கடந்த சில வருடங்களாக நாட்டின் உணவு உற்பத்தி அதிகமாவதில்லை; சொல்லப்போனால் குறைந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விளைநிலங்கள் - அவை எவ்வளவு குறைவான அளவுள்ளதாக இருந்தாலும் சரி - சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாறுவது நாட்டின் உணவு உற்பத்திக்கு ஆபத்தானது. இதனை ஒட்டுமொத்தமாக எதிர்க்காமல் விவசாய அமைச்சகம், அசோசாமோடு சேர்ந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்கை நடத்துகிறார்கள். இதில் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

* Policy makers & regulators
* Government Officials
* Diplomats
* State Governments
* CEOs & CFOs
* Business Development heads
* Operations Heads
* Commercial Managers
* Legal Heads
* Strategic Managers
* Real Estate Companies
* Exporters & Importers
* Investors & Developers
* Service Providers
* Banks and financial Institutions
* Researchers & Information Providers
* Consultants

விவசாயிகளைத் தவிர பிற அனைவரும்.

* எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, மாநில ஆளுநரின் எதிர்ப்பு, 15 பேர் கொலை, மாநிலமே கொந்தளிப்பு, அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பித் தருதல், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பிறகு மேற்கு வங்க அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான நிலம் கையகப்படுத்தலைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் தேவை. அவசரமாக.

5 comments:

 1. நந்திகிராம் அரசபயங்கரவாத்தம் தொடர்பான உங்கள் பதிவுகள் ஆறுதல் அளிக்கின்றன. தமிழ்வலைப்பதிவுலகம் இது தொடர்பான இது தொடர்பான சாதாரண விவாதத்தைக்கூட நிகழ்த்தவில்லை என்பது நமது அரசியல் உணர்வுகள் எவ்வளவு மழுங்கிப்போயிருக்கின்றன என்பதைக் காட்டுவதோடல்லாமல் மனித உணர்வும் அற்ற சுயநலமிகளாக ஆகிப்போனதையே சொல்கிறது.

  ReplyDelete
 2. To condemn the killings, to demand a probe, and to appeal for rehabilitation of the bereaved:

  http://petitions.aidindia.org/nandigram/index.php

  ReplyDelete
 3. உலகத்திலேயே துப்பாக்கி ஏந்தாத போர் வீரர்கள் என்றால் அது கம்யூனிஸ்ட்டுகள்தான். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி.. அதனால்தான் ஊருக்கு ஒரு பேச்சு.. மொழிக்கு ஒரு பேச்சு.. மாநிலத்துக்கு ஒரு பேச்சு.. நாட்டுக்கு ஒரு பேச்சு.. என்று மாறி மாறி மாறி மாறி மாறி பேசிக் கொண்டே காலத்தைத் தள்ளுகிறார்கள். அதிலும் நம் இந்திய நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. கம்பம் அருகேயுள்ள குமுளி பஸ்ஸ்டாண்டில் கொடியேற்றிவிட்டு பேசும் கம்யூனிஸ்டுகள் கண்டந்தேவி கோயிலை மீட்கும் வரை ஓய மாட்டோம் என்பார்கள். பெரியார் அணை தண்ணீரை கொண்டு வந்தே தீருவோம் என்பார்கள். பேசிவிட்டு மேடையிலிருந்து இஇறங்கி இரண்டே ஸ்டெப்புகளில் கேரள எல்லைக்குள் கால் வைத்தவுடன் (உண்மைதான்.. குமுளி சென்றிருக்கிறீர்களா? கேரளா எல்லை என்று ஒரே ஒரு கயிற்றை மட்டுமே கட்டி வைத்திருப்பார்கள். அந்தப் பக்கம் கேரள போலீஸ¤ம், இந்தப் பக்கம் தமிழக போலீஸ¤ம் நின்று காது குடைந்து கொண்டிருப்பார்கள்) ஐயையோ.. ஆட்சியில் இருக்கும் தோழர்களை வீழ்த்தும் எந்தத் திட்டத்தையும் ஒழித்துக் கட்டுவோம் என்பார்கள். இஇங்கே அன்னிய முதலீடு தேவையில்லை என்று பிரகாஷ் காரத் காட்டுக் கத்துக் கத்துவார். கொல்கத்தாவில் கால் வைத்தவுடன் மேற்கு வங்க மாநிலத்தின் நலனில் எப்போதுமே மார்க்சிஸ்டு கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நிறைய முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தை வளப்படுத்துவதுதான் நம் கட்சியின் முக்கிய நோக்கம் என்பார். இந்த இரட்டை நிலையை கடந்த இருபத்தைந்தாண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. இப்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையான வேலைவாய்ப்பு இல்லாமையைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை. தடியடி, துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை குண்டு பிரயோகம் ஆகியவை அதிகார வர்க்கம் சாதாரண மக்களுக்கெதிராக சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே செய்து வரும் ஒரு ஜனநாயக வழிதான். இதில் வருத்தப்பட்டு என்ன செய்வது? ஒன்று மட்டும் உறுதி.. கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சரி.. ஜனநாயகவாதியாக இருந்தாலும் சரி.. பண முதலாளிகளின் முன்பு அவன் வெறும் செல்லாக்காசுதான்..

  ReplyDelete
 4. //
  உலகத்திலேயே துப்பாக்கி ஏந்தாத போர் வீரர்கள் என்றால் அது கம்யூனிஸ்ட்டுகள்தான்.
  //

  ஐயோ ஐயோ..ஐயோ..! இதெல்லாம் எந்த மனுசனாவது நம்புவானா ?
  பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்யா.

  அரச பயங்கரவாதம், பாஃசிசம் என்று மனித உயிர்களைக் கொல்ல புதிய பரிணாமங்களைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

  ReplyDelete
 5. இந்த விவாதத்தை தொடங்கியதற்கு நன்றி. நானும் இதைப்பற்றி எழுத நினைத்தேன். எனது கருத்துகள் http://silakurippugal.blogspot.com/2007/04/blog-post.html

  ReplyDelete