Friday, October 31, 2008

கம்ப்யூட்டர் புத்தகங்கள் எழுத ஆசையா?

கிழக்கு பதிப்பகம் வாயிலாக, மென்பொருள், கம்ப்யூட்டர் துறைகளில் புத்தகங்கள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

சென்னையில் இருக்கும் கம்ப்யூட்டர் துறை (ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங், மென்பொருள்) விற்பன்னர்கள், புரோகிராமர்கள், இந்தப் புத்தகங்களை (தமிழிலும் ஆங்கிலத்திலும்) எழுதவிரும்புபவர்கள், மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொள்ளவும்.

எனது முதல் சாய்ஸ், சென்னையில் இருப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவதே. ஏனெனில் நேருக்கு நேர் சந்தித்து, பலமுறை உரையாடவேண்டியிருக்கும். கம்ப்யூட்டர் இருக்கிறதே, இண்டெர்னெட் மூலம் தொடர்புகொள்ளலாமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். முதல் முறையாக நான் இந்தப் பணியில் இறங்கப்போவதால் நேருக்கு நேர் உரையாடுவதன்மூலம் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. இதற்கு ஒரே காரணம் எனது நேரப் பற்றாக்குறைதான்.

ஓரிரு புத்தகங்கள் வெளியானதும், பிற நகர/நாடுகளில் இருப்பவர்களுடன் கலந்துரையாடி, பிற கணினித் துறைகளில் புத்தகங்களைக் கொண்டுவருவது எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு விஷயம் தெரிந்திருப்பது முக்கியம். எழுதக் கற்றுக்கொள்ளலாம், பிரச்னையில்லை:-)

2 comments:

  1. எழுதக் கற்றுக்கொள்ளலாம், பிரச்னையில்லை:-)

    :-)))

    ReplyDelete
  2. இயந்திரவியலில் பல நல்ல புத்தகங்கள் கொண்டு வர முடியுமே.. அதை ஏன் கண்டு கொள்வதில்லை.? இயந்திரவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது , வெகு ஜன ஈர்ப்பைபெறும் தன்மை கொண்டது... கம்ப்யுட்டர் என்பது ஒரு பிரிவினருக்கு மட்டுமே பயன்பட கூடியது..

    எனவே , இயந்திரவ்யலை துச்சமாக நினைக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்..

    ReplyDelete