Wednesday, October 29, 2008

சந்திரயான் அப்டேட்

இன்று காலை 7.38 மணிக்கு, சந்திரயான், அடுத்த வட்டப்பாதைக்குச் செலுத்தப்பட்டது.

இப்போது இருக்கும் வட்டப்பாதை 465-2,67,000 கி.மீ. என்பது. இந்தப் பாதையில் சுற்றிவர 145 மணி நேரம் (6 நாள்கள்). எனவே அடுத்து 4 நவம்பர் 2008 அன்று மீண்டும் அண்மை நிலைக்கு வரும்போது, அடுத்த நகர்வு இருக்கும். அப்போது தொலைவு நிலை 3,84,000 கி.மீ. என்று இருக்குமாறு பாதை மாறும்.

3 comments:

  1. இந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டுக்கு சந்திராயன் தேவைதானா? இந்தியா அணு ஆயுதம் தயாரிப்பதைக் கூட ஆதரிக்கலாம். நமது பாதுகாப்புக்காக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நிலவுக்கு விண்கலம் அனுப்புவது?! இந்த அழகில் சந்திரனில் ஐஸ் இருக்கிறதா இல்லையா, இருக்கிறது ஆனால் கொஞ்சம் அழுக்கான ஐஸ் என்றெல்லாம் செய்தித்தாள்களில் கட்டுரைகள் வாசித்து சிரிப்புதான் வந்தது. (கஞ்சா கருப்புவின் பாஷையில்) இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?

    ReplyDelete
  2. அன்பின் பத்ரி,

    இப்ப்போது தான் இதைப்போன்ற ஒரு கேள்விக்கு http://pkp.blogspot.com/2008/10/0001.html இந்த சுட்டியில் விளக்கமளித்தேன் . அதன் சிறுபகுதி உங்களுக்காக .


    *************************


    ஆனால் இந்தியதேசத்தின் உண்மையான விலை மதிப்பற்ற ஐஸ்வர்யங்கள் எவையன்றால் இந்த தேசத்தின் ஆன்மீக பலமும், அதன் வழியில் உழைக்க தயாராக இருக்கும் இளைய கூட்டத்தின் தன்னம்பிக்கை தான். சிறிய உதாரணம் - உங்களைப்போல் , என்னைப்போல் மற்றும் ITZ-ல் இருந்த உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் இந்திய இளைய கூட்டம்தான். என்ன வியப்பாக உள்ளதா? அது தான் உண்மையுங்கூட.


    மேதகு அப்துல் கலாம் அவர்கள் தனது நூலில் திப்பு சுல்தானின் ஏவுகணைகளை பற்றி விவரித்து இருப்பார். அதில் ஒரு NRI இந்தியர் மேலை நாடுகள் தான் இத்தொழில் நுட்பத்தில் சிறந்தவை எனக்கருத்து கொண்டிருப்பார். அவரிடம் இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவிலிருந்து தான் இங்கு கொண்டு வந்து அதனை உபயோகப்படுத்தியதை நிருபித்த உடன் அந்த NRI 'ஙே' என்று விழிப்பார். அவரைக் கூறி குற்றமில்லை. அவர் படித்த மெக்காலேயின் கல்வி அப்படியாக்கிவிட்டது. நல்லவேளை நான் ஒரு PHD தான். அதாவது Passed Higher-secondary with Difficulty. நல்ல பாருங்க எல்லாமே CAPS தான். அதுசரி நீங்களும் என்னை போல ஒரு PHD தானா?


    அதனால் தான் நாங்கள் அப்துல் கலாம் அவர்களை செல்லமாக 'இரண்டாம் ஜம்பாவானந்தா ' என்றழைப்போம். ஏனெனில் முதல் ஜம்பாவானந்தா அனுமன் தன் சுய திறமைகளை மறந்து அந்த NRI போல இருந்த போது அனுமனின் கடந்த காலத்தை நினைவுட்டி வங்காள விரிகுடாவை தாண்ட வைத்தார். இந்திய இளைஞர்களில் பெரும்பான்மையினர் தங்களது சுயவரலாற்றை மறந்து அனுமன் போல வாழ்கிறார்கள். அவர்களுக்கு மேற்கூறிய வகையில் சிகிச்சை அளித்தால் இந்தியா மறுபடியும் கிபி 0001-ல் இருந்த்து போல் சிறப்பான தேசமாகிவிடும்.


    ********************

    பத்ரி, மேற்கூறிய சிகிச்சையை வசந்தக்கு அளித்தால் அவர் மாற அல்லது வாயை மூடிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். மேலும் ஒரு வருத்தமான செய்தி. நான் ஜம்பாவானந்தா பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் தேடிய போது முதலில் கிடைத்தது நடிகர் பி்ரஷாந்தின் ஜம்பாவான் படத்தை பற்றிய பக்கம் தான் . வெகுநேர தேடலுக்கு பிறகு தான் கீழே உள்ள பக்கத்தை அணுகினேன். அதிலும் ஜம்பாவானந்தா இரு யுகங்களிலும் வாழ்ந்த தகவல் இல்லை. அனும்னை மேட்டிவேட் செய்ததும் இல்லை.

    http://en.wikipedia.org/wiki/Jambavantha

    அவற்றையெல்லாம் சேர்த்து விட்டு வந்தேன். அதன் history-ஐ பாருங்கள். விஷயம் புரியும். இவற்றை ஏன் கூறுகிறேன்றால் வசந்த்தின் குரலை கேளுங்கள்.

    // (கஞ்சா கருப்புவின் பாஷையில்) இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையா? //

    வசந்த்தின் உள்ளிருப்பது சினிமா கஞ்சா கருப்பு தான். குரல் கொடுக்க்கூட வேற ஆள் தேடுகிறார். இவ்ருக்கு கண்டிப்பாக ஜம்பாவானந்தாவின் வைத்தியம் தேவை.


    with care and love,

    Muhammad Ismail .H, PHD,

    ReplyDelete
  3. சந்திரயான் என்பது கொஞ்சம் கவித்துவமான பெயர். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பொருத்தமாகவும் இருக்கிறது. இந்த பெயரை தெரிவித்தவருக்கு ஏதாவது பரிசு நிச்சயம் கொடுக்க வேண்டும்.

    மஹாயான், ஹீனயான். . . அப்புறம் இப்போது சந்திரயான்!!!

    ReplyDelete