சந்திரயான் விண்கலத்தை வானுக்கு அனுப்பியதிலிருந்து இதுவரை மூன்றுமுறை அதன் வட்டப்பாதையை மாற்றியுள்ளனர்.
சந்திரயான், முதலில், 255 - 22,860 கி.மீ. வட்டப்பாதைக்குள் பி.எஸ்.எல்.வியால் செலுத்தப்பட்டது. இந்தப் பாதையில் ஒரு முறை சுற்றிவர, 6.64 மணி நேரம் ஆகும்.
இங்கிருந்து, அடுத்து, 305 - 37,902 கி.மீ. என்ற வட்டப்பாதைக்கு சந்திரயான் மாற்றப்பட்டது. இந்தப் பாதையில் ஒருமுறை முழுதாகச் சுற்றிவர ஆகும் நேரம் 11.24 மணி நேரம்.
அடுத்து, 336 - 74,715 கி.மீ. என்ற வட்டப்பாதைக்கு சந்திரயான் அனுப்பப்பட்டது. இதில் ஒருமுறை சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம், 25.43 மணி. அதாவது ஒரு நாளைக்கு சற்று அதிகம்.
அடுத்து, கடைசியாக, 348 - 1,64,000 கி.மீ. என்ற பாதைக்கு இரண்டு நாள்களுக்குமுன் அனுப்பப்பட்டது. இந்தப் பாதையில் ஒரு சுற்றுக்கு ஆகும் நேரம், 72.85 மணி. அதாவது, கிட்டத்தட்ட 3 நாள்கள்.
நாளைக் காலை (29 அக்டோபர் 2008), மீண்டும் இந்தப் பாதையில் அண்மை நிலைக்கு வரும்போது, அடுத்த பாதை மாற்றம் நடக்கும்.
தொலைவு நிலை வெகு தூரம் ஆகிக்கொண்டிருந்தாலும், அண்மை நிலை, கிட்டத்தட்ட 350 கி.மீ. என்றே இருப்பதைப் பாருங்கள்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 3,84,000 கி.மீ. எனவே அடுத்த இரண்டு நகர்த்துதலில், தொலைவு நிலை 3,84,000 கி.மீ.க்கு நெருக்கமாக இருக்குமாறு உள்ள வட்டப்பாதைக்குச் செல்லவேண்டும்.
29 அக்டோபர், 3 நவம்பர், 8 நவம்பர் ஆகிய நாள்களில் இந்த மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதன்பின்14, 15 நவம்பரில் என்றேனும் ஒரு நாள் சந்திரனை 100 கி.மீ. உயரத்தில் சந்திரயான் சுற்ற ஆரம்பிக்கலாம்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
16 hours ago
பத்ரி
ReplyDeleteசந்திரயான் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து தாருங்கள். என் பையனுக்கு சொல்லிக் கொடுக்கு ரொம்பவே பயன்படுது! :)
கீழ்க்கண்ட வழக்கு குறித்துப் பதிப்பாளர் என்ற முறையில் தங்கள் கருத்துகளை உடனடியாகத் தெரியப்படுத்தவும்:
ReplyDeleteGoogle to pay $125 mln in online books settlement:
http://in.news.yahoo.com/137/20081028/736/tnl-google-to-pay-125-mln-in-online-book_1.html