Friday, October 17, 2008

நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH)

Direct to Home Satellite Television என்பதுதான் DTH சேவை என்று அழகாக ஆங்கில எழுத்துகளில் சுருக்கப்பட்டுள்ளது. தமிழில் இதனை ‘நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி’ என்று சொல்லவேண்டும்.

இதற்கு முந்தைய கேபிள் (வடம்) வழித் தொலைக்காட்சிச் சேவையில், நமக்கு சேவை வழங்குபவர், பெரிய குவி ஆண்டெனாக்கள்மூலம் சிக்னல்களைப் பெற்று, பல சானல்களை சேர்த்து, கேபிள்மூலம் நம் வீடுகளுக்கு அனுப்பினார். நேரடி துணைக்கோள் சேவையில் நம் வீட்டிலேயே சிறிய குவி ஆண்டெனா இருக்கும். இதன் விட்டம் ஒரு மீட்டருக்குக் குறைவானதாகவே இருக்கும்.

இந்தச் சேவையை வழங்கும் நிறுவனம் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோள் (Geo-stationary Satellite) வழியாக சிக்னல்களை அனுப்பும். இந்த சிக்னல்களை நம் வீட்டில் உள்ள சிறிய ஆண்டெனா பெற்று, தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள செட்-டாப் பாக்ஸ் என்று சொல்லப்படும் கருவிக்கு அனுப்பும்.

இந்த செட்-டாப் பாக்ஸ் கருவி, சிக்னல்களைப் பிய்த்து எடுத்து, என்கிரிப்ட் செய்து வருபவற்றை (அதற்கான அனுமதி இருந்தால்) டி-கிரிப்ட் செய்து, நசுக்கி அனுப்பப்படும் சிக்னல்களை விரிவாக்கி (Mpeg uncompression), தொலைக்காட்சிப் பெட்டிக்கு அனுப்பும்.

இந்த நேரடித் துணைக்கோள் சேவையில் பல வசதி வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும். (இவற்றில் பல, பிற நாடுகளில் ஏற்கெனவே கிடைக்ககூடியவைதான்.)

1. நேரடித் துணைக்கோள் சேவை வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பைத் தரலாம்.

2. நல்ல இருவழிப் பாதை கிடைப்பதால், வீட்டில் இருந்தபடியே பொருள்களை வாங்குதல், டிக்கெட் பதிவுசெய்தல் போன்றவற்றை கம்ப்யூட்டர் உதவி நாடாமல், தொலைக்காட்சி கொண்டே செய்யமுடியும்.

3. மழை பெய்து, கேபிள் அறுந்து படம் தெரியாமல் கழுத்தை அறுக்காது. நமக்கு கேபிள் சேவை அளிப்பவரது அலுவலகத்தில் மின்சாரம் போய் நம்மை பாதிப்பது நடக்காது. வீடு மாற்றும்போது இந்தியா முழுமைக்கும் கையோடு கொண்டுபோகலாம்.

4. Narrow-casting, Personal-casting போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம். மிகச்சில வீடுகள் மட்டுமே பெற விரும்பும் சில சானல்களை இந்த மேடையின்வழியாக அறிமுகப்படுத்தமுடியும். இதனைக் கொண்டு பல புதுமையான சேவைகளைப் புகுத்தமுடியும்.
(அ) உதாரணத்துக்கு pay-per-view என்ற வழியில், புது சினிமாப் படங்களை, படம் வந்த ஓரிரு மாதங்களுக்குள்ளாக, ரூ. 100 அல்லது அதற்கு அதிகம் என்ற கட்டணத்தில் காண்பிக்கமுடியும்.
(ஆ) பிரீமியம் கட்டணத்தில் ஒரு சானலில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐஐடி கோச்சிங் போன்றவற்றைச் சொல்லித்தரமுடியும்.

5. பிராட்பேண்ட் சானலுக்கு அதிக அகலத்தை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க ஸ்ட்ரீமிங் வழியிலான ஒளியோடைகளைத் தரமுடியும்.

6. மேலே சொன்ன அனைத்துக்குமான கட்டணங்களை செட்-டாப் பாக்ஸில் உள்ள ஒரு கடனட்டை வருடியின் வழியாகவே கட்டிவிடலாம்.

7. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் எழுத்து வடிவில் படிக்க, சேவை வழங்குனர்கள் வசதிகளை ஏற்படுத்தித்தரமுடியும். ஒரு கிரிக்கெட் மேட்சின்போது, ஸ்கோர்கார்டை நாம் விரும்பும்போதெல்லாம் பார்க்கமுடியும். வீடியோ சாளரத்தைச் சிறிதாக்கி எழுத்துகளைப் படித்துவிட்டு, மீண்டும் வீடியோவைப் பெரிதாக்கிக்கொள்ளலாம். இதேபோல சினிமாப் பாடல் ஒன்று ஓடும்போது, அதன் வரிகளை கீழே நாமே பார்க்குமாறு செய்துகொள்ளலாம். இவை அனைத்துக்கும் தேவையான ‘கண்டெண்ட்’ சேவை வழங்குனரால் கொடுக்கப்படவேண்டும்.

8. Personal Digital Recorder எனப்படும் சேவையை இரண்டு இந்திய சேவை வழங்கு நிறுவனங்கள் தரப்போவதாகச் சொல்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டம் நடக்கும்போது ஒரு நல்ல திரைப்படமும் காட்டப்பட்டால், ஒன்றைப் பார்த்துக்கொண்டு, மற்றதை ரெகார்ட் செய்துகொள்ளலாம். பிரகு மெதுவாக, விளம்பரங்களைத் தள்ளிவிட்டு, விரும்பியதை மட்டும் பார்க்கலாம். நாம் வீட்டில் இல்லாதபோது வரும் ஒரு நிகழ்ச்சியை ரெகார்ட் செய்யுமாறு முன்கூட்டியே செட்-டாப் பாக்ஸிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம்.

**

இப்போது இந்தியாவில் கீழ்க்கண்டவர்கள் இந்த சேவையை அளிக்கிறார்கள்.

1. தூரதர்ஷன் (அனைத்துமே இலவச சானல்கள். மாதக்கட்டணம் கிடையாது.)
2. ஜீ நிறுவனத்தின் டிஷ்
3. டாடா ஸ்கை
4. சன் டி.டி.எச்
5. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏர்டெல் டி.டி.எச்
6. விரைவில் தொடங்க உள்ள அனில் அம்பானியின் பிக் டி.டி.எச் சேவை

**

இந்தத் துறையில் உலக அள்வில் முன்னோடியாக இருப்பது ரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் கார்ப், அதன் பல்வேறு நாடுகளில் தரும் சேவை. மர்டாக்கின் பி-ஸ்கை-பி என்ற பிரிட்டன் நாட்டுச் சேவை உலகில் முன்னோடி என்று சொல்லலாம். அமெரிக்காவில் டிரெக்-டிவி, எக்கோஸ்டார் ஆகிய இரு நிறுவனங்கள் இந்தச் சேவையை அளிக்கின்றன. மர்டாக் மிகவும் விரும்பினாலும் டிரெக்-டிவியை கையகப்படுத்த முடியவில்லை. அவரது கைக்கு வந்த நிறுவனம், மீண்டும் கையை விட்டு நழுவியுள்ளது. இந்தியாவின் டாடா-ஸ்கை அவருடையதே.

**

இப்போது என் வீட்டில் SCV-யின் கேபிள் வழி செட்-டாப் பாக்ஸ் சேவை உள்ளது. இந்த வருடத்துக்குள் ஏர்டெல் சேவையை, வேண்டிய சானல்களைக் கொண்டிருந்தால், வாங்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

9 comments:

  1. // 6. விரைவில் தொடங்க உள்ள அனில் அம்பானியின் பிக் டி.டி.எச் சேவை

    விரைவில் தொடங்க உள்ள ??

    ReplyDelete
  2. ஏற்கெனவே இருக்கா? அப்ப மாத்திடறேன்.

    ReplyDelete
  3. Now DTH competition in India is getting hot with new entrants into the market. Even though Dish TV was the first service provide in India, in terms of current scenario and service, they are the worst. One silly thing, they have not added Neo Sports in their package due to internal issues with BCCI and Nimbus. Two years back, the rights was first awarded to Zee and then BCCI revoked that and awarded to Nimbus for the cricket matches played in India for 5 years. Due to this, Dish TV (which belongs to Zee Group) has not added Neo Sports. Recent ICL conflict with BCCI's IPL has further added to the woes and hence Dish TV is very adamant in bringing Neo on their platform. But they claim some false reasons saying Neo is costly. The fact is Neo is offering at the same rate to Dish TV as it offers to other DTH providers. I am having the Dish TV and missing live cricket when it is exclusively on Neo sports. I have already decided to switch over to Reliance's Big TV.

    Note: I am in UAE, since the satellite foot prints of Dish TV is available, I am using it. Reliance's satellite is also having good reception here.

    ReplyDelete
  4. // நல்ல இருவழிப் பாதை கிடைப்பதால், வீட்டில் இருந்தபடியே பொருள்களை வாங்குதல், டிக்கெட் பதிவுசெய்தல் போன்றவற்றை கம்ப்யூட்டர் உதவி நாடாமல், தொலைக்காட்சி கொண்டே செய்யமுடியும். ////
    I don't know how is it possible! Still you need computer to access internet. We can avoid the connection through cable. That is possible.

    ReplyDelete
  5. சென்னையில் தற்பொழுது (கிரிக்கெட் + சன் + கலைஞர் பார்க்க வேண்டுமென்றால்) எந்த சேவை Cheap and Best ??

    ReplyDelete
  6. புரூனோ: தெரியவில்லை. பொதுவாக, ஈ.எஸ்.பி.என் (3 சேனல்கள்), நியோ கிரிக்கெட், ஜீ+டென் ஸ்போர்ட்ஸ் போன்றவை அனைத்து டி.டி.எச்சிலும் இருக்கும். எனவே நீங்கள் எந்த டி.டி.எச் சேவையை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

    சன், கலைஞர் எல்லாம் வேண்டும் என்றால், சன் டி.டி.எச்சைப் பெறுதல் நலம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. இன்டர்நெட் அகலப்பட்டை சேவை ADSL மோடம் வழியாக வழங்குவதை DTH மூலம் வழங்கமுடியுமா ?

    ReplyDelete
  8. தொடர்புடைய சுட்டி http://www.airtel.in/digitaltv

    ReplyDelete
  9. DTHசேவையை இன்டர்நெட் மூலம் கணினியில்
    பார்க்கவும்,கேட்கவும் முடியுமா

    ReplyDelete