சென்ற மாதம், மகாதேவன் ரமேஷ் எழுதிய A Gentle Introduction to Carnatic Music என்ற புத்தகம் பற்றி என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் புத்தகத்தை தமிழில் கொண்டுவர விருப்பம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
அந்தப் பதிவைப் பார்த்த உடனேயே பிரிட்டனில் வசிக்கும் கிரிதரன் ராஜகோபாலன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உடனேயே அவருக்கு மகாதேவன் ரமேஷின் புத்தகத்தை பி.டி.எஃப் கோப்பாக்கி அனுப்பிவைத்தேன். கிரிதரன் ஒவ்வொரு நாளும் ஒரு சாப்டராக மொழிமாற்றி எனக்கு அனுப்பிவைப்பார். நானும் அன்றன்றைக்கே அதனை எடிட் செய்துவிடுவேன்.
இப்படி இரண்டு வாரங்களுக்குள்ளாக அந்தப் புத்தகத்தை எடிட் செய்து முடித்து, தமிழ் வெர்ஷனை மகாதேவன் ரமேஷுக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பினேன். ஃபோன் மூலமாகவே மாற்றங்களைச் செய்தோம்.
ஆங்கில வெர்ஷனில் கர்நாடக இசையின் சில நுட்பங்களை விளக்க, ‘பா பா பிளாக் ஷீப்’ பாடலையும், ‘ரூப்பு தேரா மஸ்தானா’ பாடலையும் பயன்படுத்தியிருப்பார். தமிழ் வெர்ஷனில் ரூப்பு தேராவுக்கு பதிலாக தமிழ்ப் பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்காக ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற இளையராஜா இசையில் அமைந்த திரைப்பாடலைப் பயன்படுத்தினார். அதற்காக பல இடங்களில் மாற்றங்கள் செய்யவேண்டியதாயிற்று. அனைத்தையும் தொலைபேசி மூலமாகவே செய்தோம்.
இந்தப் புத்தகம் இப்போது அச்சாகிக்கொண்டிருக்கிறது. நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
கிழக்கின் தொழிலில் இணையம் எப்படிப் பயன்படுகிறது என்று ரவிசங்கர் கேட்டிருந்தார். இது ஓர் உதாரணம். இருவரும் சென்னையிலேயே இருந்தாலும், மகாதேவன் ரமேஷை நான் நேரில் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. கிரிதரனை எனக்கு யார் என்று தெரியாது. வலைப்பதிவிலும் ட்விட்டரிலும் ‘பார்த்தது’தான். (ஆனால் அவர் என் மனைவி வழியில் எனக்கு உறவினர் என்று இப்போது கண்டுபிடித்துள்ளார்! ஆனாலும் அவர் முகம் எனக்கு ஞாபகத்தில் இல்லை.) கிரிதரனும் மகாதேவன் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. ஆனால் வெகு குறைவான காலகட்டத்தில் இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்.
இலையப்பம்
7 hours ago
Badri,
ReplyDeleteReally it is exciting. Just yesterday i was thinking how to catch a person for translation, when i know that has already completed it is thrilled and i'm going to buy this book in the exhibition.
Ramachandran. (Your SJM Friend)
நேற்று முன் தினம் கிழக்கு பதிப்பக புத்தகங்களின் பட்டியலை (http://nhm.in/shop/home.php?cat=1-ல்) பார்த்தபோது, இந்தப் புத்தகம் பற்றிய விபரமும் வந்தது. விரைவிலேயே மொழி பெயர்க்கப்பட்டுவிட்டதென ஆச்சரியமடைந்தேன். இணையத்தின் உதவியினால்தான் இந்தப் புத்தகம் தமிழில் குறைவான காலகட்டத்தில் தயாராக முடிந்தது என அறிந்து மகிழ்ச்சி. கட்டாயம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிவிடலாம்!
ReplyDeleteஇந்த புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்பி உங்களைச் சந்திக்க நேரம் கேட்டு இருந்தேன். உங்களிடம் இருந்து பதில் இல்லை. anyway நன்றாக முடிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.நாளை மறுநாள் கண்காட்சிக்கு வரும்போது வாங்கி விடுகின்றேன்.
ReplyDelete:)
அட! சூப்பர்.
ReplyDeleteஇதை ஒலிப்புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளதா? ஒலிப்புத்தகத்தில் உதாரணங்களை ஒலியாகவே கொடுக்கமுடியுமே! அது இப்புத்தகத்துக்கு உதவுமே! ஆம் என்றால் பொருத்திருந்து வாங்குவேன்!
ReplyDelete