Friday, March 05, 2010

ராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் (தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்புக் கழகம்) என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளித்து கௌரவிக்கிறது. இந்த ஆண்டு, ”புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது” என்ற பிரிவின்கீழ் கிழக்கு பதிப்பக எழுத்தாளர் ராமதுரைக்கு விருது கிடைத்துள்ளது. ராமதுரையைப் போன்றே ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் டி.டி.ஓஸா என்பவருக்கும் இந்த விருது தரப்பட்டுள்ளது. (மீதமுள்ள விருதுகள் விவரம் இங்கே.) கீழே உள்ள படத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் பிருத்விராஜ் சவான் விருதைத் தர ராமதுரை பெற்றுக்கொள்கிறார்.


கிழக்கு பதிப்பகம், பிராடிஜி புக்ஸ் என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக அவருக்கு இந்த விருது (ரூபாய் ஒரு லட்சம்) கிடைத்திருப்பது, எங்களுக்கெல்லாம் மிகுந்த பெருமை தரக்கூடிய ஒன்று.

ராமதுரை தினமணி பத்திரிகை ஆசிரியர் குழுவில் வேலை செய்தவர். ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக இருந்தபோது அறிவியலுக்கு எனக் கொண்டுவரப்பட்ட வார இதழ் சப்ளிமெண்டின் பொறுப்பாசிரியராக இருந்தவர்.

இந்தச் சிறப்பான விருதைப் பெற்ற ராமதுரையை நாம் அனைவரும் பாராட்டி, வாழ்த்துவோம்.

ராமதுரை எழுதியுள்ள புத்தகங்கள்

(இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால், அறிவியல் எழுதினாலும் அங்கீகாரம், விருது ஆகியவை கிடைக்கும்! எனவே தமிழில் அறிவியல் புத்தகங்கள் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் உடனடியாக என்னைத் தொடர்புகொள்ளவும்!)

7 comments:

  1. வாழ்த்துகள் திரு.ராமதுரைக்கும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும்.

    விருதுக்காகவோ அங்கீகாரத்துக்காகவோ எழுத வேண்டாம். எழுத்தை விரும்பி எழுதினால் சந்தோஷம். அதே சமயம் விரும்பி பயனுள்ளதை எழுதுபவருக்கு விருதும் அங்கீகாரம் கிடைக்கும் போது இரட்டை சந்தோஷம்.

    திரு. ராமதுரைக்கு அளித்த விருது பணம் ஒரு லட்சம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  2. ராமதுரைக்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  3. திரு. ராமதுரைக்கு வாழ்த்துகள்!!! Congratulations Badri.

    ReplyDelete
  4. மக்களுக்கு நல்லதைச் சொல்லும் பலர் முழு நேர வேலையையும் பார்த்துக் கொண்டு இந்தப் பணியையும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயர்ந்த குறிக்கோளுக்காக அர்ப்பணித்துக்கொள்பவர்களை அங்கீகரிப்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியம்.

    திரு.ராமதுரை மற்றும் கிழக்குப் பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
    உங்கள் ஈமெயில் முகவரி என்ன ?

    ReplyDelete
  6. திரு.ராமதுரை அவர்களுக்கும்
    மற்றும் கிழக்குப் பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

    தூய தமிழில் அறிவியல் தொடர்பான கட்டுரைகள் எழுத ஆர்வமாக உள்ளேன்..
    தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்..

    ReplyDelete