Wednesday, June 01, 2011

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு,  கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி தொடர்கிறது. இம்முறை தி. நகரில்.

ஏப்ரலில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எனவே ஏற்கெனவே சென்றிருந்தாலும் இப்போதும் ஒருமுறை சென்று பார்த்துவிடுவது நல்லது.

இடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.
நாள்: 3 ஜூன் முதல்.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.

11 comments:

  1. ஆன்லைனிலிம் வாங்க வழிவகை செய்தால் எங்களைப் போன்றோர்க்கு பயனுள்ளதாக இருக்கும். இயலாத பட்சத்தில் புத்தகப் பட்டியலை முன் கூட்டியே வெளியிட்டால் நண்பர்களிடம் சொல்லி வாங்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  2. Kizhakkaar - aniyaayathu nallaavara irukkaar !
    Badri Saar!, If possible,request you to please enlighten us on how other publishers deal with unsold old books..Thanks.

    ReplyDelete
  3. I will be good for us, if you can publish the list of available books. Thanks

    ReplyDelete
  4. Why this time not in Mylapore Area; then it was very helpful to select from mylapore are;

    Suppamani

    ReplyDelete
  5. எனக்குத்தெரிந்தவரை உண்மையான தள்ளுபடி விற்பனை என்பது இதுதான்!
    பல நல்ல புத்தகங்களின் விலைகள் நம்பமுடியாத அளவிற்கு குறைவாக இருக்கும்
    புத்தக பிரியர்கள் யாரும் இதை தவற விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்
    பத்ரிக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  6. இந்த முறை செல்பேசி இலக்கங்களை ஏன் கொடுக்கவில்லை?

    ReplyDelete
  7. Is this for Karuna's Birthday ?? So sad

    ReplyDelete
  8. பத்ரி,
    "வெட்டிப்பயல்" சொல்வதை முழுதும் ஆமோதிக்கிறேன்... குறைந்தபட்சம் 'புத்தக பட்டியல்' வெளியிட்டால் கூட போதுமானது... புண்ணியமா போகும் :))

    ReplyDelete
  9. நேற்று சென்றிருந்தேன்..சுமார் ஒரு மணி நேரம் செலவழித்து 11புத்தகங்களை ரூ.260 க்கு வாங்கினேன் .இவைகளின் பட்டியல் விலை ரூ.1110 எனவே சராசரி தள்ளுபடி 76% வருகிறது.

    பிரபல எழுத்தாளர் புத்தகம் எதுவும் இல்லை (தேவன்,சுஜாதா,ஜெயமோகன் போன்ற).ஆனால் இருப்பவை அனைத்தும் நல்ல சுவாரசியமான உபயோகமான புத்தகங்கள் பல உள்ளன

    சனிக்கிழமை மாலை தி.நகர் உஸ்மான் சாலையில்
    ஜனப்பிரளயம்.சிவா விஷ்ணு கோயில் எதிர்த்தாறபோல உள்ள இந்த கண்காட்சியில் ஈ.காக்கா இல்லை.மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்..

    மீண்டும் சொல்கிறேன்.இதைப்போல உண்மையான தள்ளுபடி நான் எங்கும் கண்டதில்லை.வாய்ப்பை நழுவ விடுபவர்கள் உண்மையிலேயே துரதிருஷ்ட சாலிகள்.

    இதேபோல ஒரு நிகழ்வு கொல்கத்தா நகரில் நடந்தால், இரண்டாம் நாள், விற்பனைக்கு ஒரு புத்தகம் கூட இருக்காது.

    மிகவும் நன்றி பத்ரி..

    ReplyDelete
  10. //தேவன்,சுஜாதா,ஜெயமோகன்//
    Ganpat! இவை யாவும் வெள்ளியன்று காலை இருந்தன (ஜெமோவின் நாவல், ஏழாவது உலகம், வாழ்வில் ஒரு முறை, வண்ணநிலவனின் கடல்புரத்தில், சுஜாதாவின் சுமார் 25 நாவல்கள்!) - நான் ஜெயமோகனின் மூன்றோ நான்கோ எடுத்தேன், இன்னமும் நிறைய எடுத்தேன்! நீங்கள் சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்! - //இதைப்போல உண்மையான தள்ளுபடி நான் எங்கும் கண்டதில்லை.வாய்ப்பை நழுவ விடுபவர்கள் உண்மையிலேயே துரதிருஷ்ட சாலிகள். //

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  11. தயவு செய்து follower லிங்க் வைக்கவும்...

    ReplyDelete