வீட்டில், வரலாறு தொடர்பான நிறையப் புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருந்ததால், நான் ஏன் எம்.ஏ (வரலாறு) தொலைநிலைக் கல்வி வழியாகப் படிக்கக்கூடாது என்று மனைவி தூண்டினார். சரி, செய்துதான் பார்ப்போமே என்று போதாத ஆசை வந்துவிட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் விண்ணப்பப் படிவம் அடங்கிய புத்தகம் ஒன்றை வாங்கிவரச்செய்தேன். ஆனால் அதில் அதிர்ச்சி காத்திருந்தது. எம்.ஏ (வரலாறு) படிக்கவேண்டும் என்றால் இளநிலையில் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி பட்டம் இருக்கவேண்டுமாம். பி.ஈ அல்லது பி.டெக் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அதாவது சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, பி.எஸ்சி இயல்பியல் படித்த ஒருவருக்கு எம்.ஏ வரலாறு படிக்கத் தகுதி உள்ளது; ஆனால் பி.டெக் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்த ஒருவருக்கு அதற்கான தகுதி இல்லை.
இன்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இது உண்மைதானா என்று கேட்க முடிவு செய்தேன். முதலில் பேராசிரியர் ஜெயதேவனைத் தொடர்புகொண்டேன். அவர் தொலைநிலைக் கல்வி இயக்குனர் ராஜ்மோகனுடைய எண்ணைக் கொடுத்தார். அவரிடம் பேசியபோது அவர் பி.ஆர்.ஓவிடம் பேசுங்கள் என்றார். பி.ஆர்.ஓ என்னை Eligibility Department-ஐத் தொடர்புகொள்ளச் சொன்னார். அங்கு போனை எடுத்தவர், தெளிவாக, முடியாது என்று சொல்லிவிட்டார். ‘நீங்கள் ஏன் எம்.பி.ஏ அல்லது எம்.ஏ பொலிடிகல் சயன்ஸ் படிக்கக்கூடாது?’ என்று பதிலுக்குக் கேட்டார்.
கொஞ்சம் தேடிப் பார்த்ததில், எம்.ஏ (வைணவம்) படிப்பதற்கு இளநிலையில் எந்த ஒரு டிகிரி இருந்தாலும் போதும் என்று இருந்தது. சரி, நம்முடைய வைணவ வேர்களைப் பற்றி ஆராயத்தான் எம்பெருமான் இந்தத் திருவிளையாடலைப் புரிந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அந்த நபரிடம் நான் எம்.ஏ வைணவம்-தான் படிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
ஆகவே, மக்களே, நான் எம்.ஏ வைணவம் படிக்கப்போகிறேன். அதற்கான புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கும்போது என் வலைப்பதிவிலும் நிறைய வைணவக் கட்டுரைகள் வரும். வரலாறு படித்து, அதனை வலைப்பதிவில் எழுதலாம் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். என்னை வேறு வழியில் திசை திருப்பி, உங்களை இக்கட்டில் மாட்டிவிட்ட பழி முழுதும் சென்னைப் பல்கலைக்கழகத்தையே சாரும்.
Friday, June 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Best of Luck..You'll be added in the list soon ->http://content.yudu.com/Library/A1o4hl/vaiNavamvaLarththape/resources/41.htm
ReplyDeleteநல்ல புளியோதரை எங்களுக்கு கிடைத்தால் சரி
ReplyDeleteBest of Luck. Eagerly awaiting your posts on Vaishnavism.
ReplyDeleteSaar!
ReplyDeleteAs for M.A.History, please enquire in other universities about possibilities.
I have heard about a few people like Lalitha Ram in varalaaru.com group,had pursued M.A.History ,with a bachelors degree in engineering
Venkat: I have examined and found that Madurai Kamarajar accepts B.Tech for doing MA History. However, I have now decided to do Vaishnavism. So History shall have to wait for another year or so:-)
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்க வைணவப் பதிவுகளை நாங்க படிப்போமோ இல்லையோ, (போலி) பகுத்தறிவு பக்தர்கள் படித்துத் திட்டப் போவது உறுதி :)
ReplyDeleteபத்ரி sir,
ReplyDeleteநீஙகள், M.A வைணவம் முடித்த பிற்கு, Mylapore Sanskrit college-ல், M.A அத்வைத சித்தாந்தம் (அதுவும் full-time course) படிக்க எனது வாழ்த்துக்கள்!!
-நகுல்
அரியர்ஸு வைக்காம பாஸ் பண்ணிடுங்க சார்... அப்பறம் பொண்ணு வந்து பப்பி ஷேம் சொல்ற மாதிரி ஆயிடப்போவுது :)
ReplyDeleteSuper sir,naraya ezhundhunga ,nangalum ungamoolama degree vangikarom :)
ReplyDeleteIdha padichapparam enakkum oru idea,Bsc maths(correspondence) for fun.What do you think ?By the way I am an Engineer.
கடவுள் இருக்கிறார் என்று நீங்களே ஒத்துக் கொண்டு விட்டீர்கள், எல்லாம் அவன் செயல். வரலாறும் வைஷ்ணவமும் ஒன்றே. :>
ReplyDeleteWe are almost of the same age ( the similarities end here)finding it very difficult to study for my MBA. Pl give your suggestions so that I can also complete my course.
ReplyDeleteBest wishes Badri.
ReplyDeleteI appreciate your energy and enthusiasm..
Hope your father is around, hale and healthy,
to do your assignments!
;-)
நாடறிந்த வலதுசாரி நாடறிந்த வலதுசாரி வைணவர் ஆகப் போகிறார் :).வைணவம் படிக்கிறேன் என்று சொல்கிறீர்கள். உங்களுடைய லிபரல் சிந்தனைப் போக்கிற்கு சரணாகதி தத்துவத்தையும்,ஆச்சாரிய வழிபாட்டையும் ஏற்க முடியுமா என்பது சந்தேகமே.
ReplyDeleteவைணவத்தை நாத்திகராக இருந்து கொண்டு ஒரளவு ரசிக்க முடியும், அதை ஏற்றுக்கொண்டு அதில் ஈடுபட முடியாது. உங்களால் அதை பாடமாக படிக்கலாம் பகவானை ஆராதிக்க முடியாது என்றாகிவிட்டாலும் எம்பெருமான் திருவுள்ளம் அப்படி என்று ஹரன் பிரசன்னாவும்,பாராவும் மனதினை தேற்றிக்கொள்வார்கள் :).
அனான்: கட்டாயமாக என்னால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. என்னால் கடவுள், விதி, கர்மா, மறு பிறவி, பிரம்மம், ஜீவாத்மா போன்ற எதையுமே ஏற்கமுடியாது. படிப்பு என்பது வேறு, அனுபவித்து அதையே நம்பிக்கையாக ஏற்றுக்கொள்வது வேறு. நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே:-)
ReplyDelete"நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே"
ReplyDeleteநாராயணா நாராயணா!
I cant understand your statement as usual. How one person understand Generator basics without accepting it produces power. Ridiculous. Any way Keep it up. Here also they say முப்பத்து முக்கோடி தேவர்கள் without beleiving how you can your understand and rewrite. I dont think you finish this without accpeting Vainavam.
ReplyDeleteSir,
ReplyDeleteW e expect to be enlightened on the following from you soon:
Bhakthi,Pari Bhakthi
Advaitham,visishtadvaitham
Coverage on Vashnavaite temples,starting from Thiruppathi and Paarthasaarathi Temples
Intro into Aazhvaar,Paasurams and books on them books by Sujaathaa Saar.
Contribution to tamil by Aazhvaars
@ பத்ரி : மாறுதல் ஒன்றே மாறாதது. உங்கள் பார்வையும் மாறலாம், மாறாது என்று இப்போதே கூறுவது எப்படி சரியாகும் ?
ReplyDeleteஅப்புறம் ஒரு சின்ன கேள்வி. நீங்கள் ஏன் பெரியாரிசம், இறை மறுப்பு பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற முயற்சி செய்ய கூடாது? இல்லை ஏற்கனவே பெற்று விட்டீர்களா? அது போல ஒரு ஆய்வு இருக்குதானு எனக்கு தெரியாது. ஏன்னா இதுதான் உங்களுக்கு நிச்சயம் எளிதாக இருக்கும். வெறும் mug up மட்டும் செய்ய வேண்டியதில்லையே வைணவம் போன்று. நம்பாத ஒன்றை படிப்பதை விட, (உங்களின்)வாழ்க்கை தத்துவத்தையே ஆராய்ச்சி செய்வது இன்னும் எளிதாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் சர்ச்சை pamphlet போன்று.
ReplyDeleteஎம்.ஏ (வைணவம்) முடித்தால் எம்.ஏ (வரலாறு) படிக்கத் தகுதி உண்டா? :)
ReplyDelete-விகடகவி
' நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே:-)'
ReplyDeleteஇதை நீங்கள் உறுதியாகச் சொன்னாலும் என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்றுதான் சொல்வேன்.ஏனெனில் தீவிர நாத்திகம் பேசி பின்னர் ஆத்திகர் ஆனவர்களை, வைணவ குடும்பங்களில் பிறந்தவர்களை பார்த்திருக்கிறேன். யார் கண்டது பத்ரி பிராண்ட் வைணவம் என்று புதிதாக ஒன்றை நீங்கள் உருவாக்கக்கூடும், நடக்க நடக்க நாராயணன் செயல் :)
அனான்: கட்டாயமாக என்னால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. என்னால் கடவுள், விதி, கர்மா, மறு பிறவி, பிரம்மம், ஜீவாத்மா போன்ற எதையுமே ஏற்கமுடியாது. படிப்பு என்பது வேறு, அனுபவித்து அதையே நம்பிக்கையாக ஏற்றுக்கொள்வது வேறு. நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே:-)///
ReplyDeletelovely reply.
பத்ரி,
ReplyDeleteஇந்த ’விண்ணப்பப் படிவம் அடங்கிய புத்தகம்’ எங்கே கிடைக்கும்? எம்.ஏ. தமிழ் படிக்க BE / BTech செல்லுமா என்று அறிய விரும்புகிறேன். ஒருவேளை உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் பார்த்துச் சொல்லவும், இல்லாவிட்டால் எங்கே வாங்குவது என்று தெரிவிக்கவும் வேண்டுகிறேன், நன்றி.
: என். சொக்கன்,
பெங்களூரு.