Saturday, August 20, 2011

அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்?

தர்க்கரீதியாக ஜன்லோக்பால் மசோதாவைப் பார்க்கும்போது என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மெலிதான அரசு என்ற என் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது ஜன்லோக்பால் முன்வைக்கும் மாதிரி. இப்போதுள்ள அரசின் சில அமைப்புகளை வலிமைப்படுத்துவதன்மூலம் ஊழலைக் குறைக்கமுடியும் என்பதே என் கருத்து.

ஆனால் அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாகப் பின்தொடர்கிறார்கள்? யார் இவர்கள்?

என் நண்பர் சமீபத்தில் தில்லி சென்றிருக்கிறார். அப்போது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதக் கூட்டத்தில் பங்கெடுக்க கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த மூவரை பேருந்தில் பார்த்திருக்கிறார். அவர்கள் அரசு வேலை பார்ப்பவர்கள்.

“அண்ணா ஹஸாரே, ஜன் லோக்பால் என்கிறாரே, இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா?”

“இல்லை. அதெல்லாம் எங்களுக்கு அவ்வளவாகப் புரியாது.”

“அப்படியென்றால் எதற்காக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்?”

“உங்களுக்குத் தெரியாது... என் தாயும் தந்தையும் விபத்தில் இறந்து அந்த உடல்களை வாங்க நான் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டிவந்தது, எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருந்தது என்று. நீங்கள் எல்லாம் பையில் காசைப் போட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பி உங்கள் வேலைகளைச் செய்துகொள்பவர்கள். உங்களுக்குத் தெரியாது நாங்கள் தினம் தினம் படும் கஷ்டம். அண்ணா ஹஸாரே எங்களுக்காகப் போராடுகிறார். அதனால் லஞ்சம் தீர்ந்துவிடுமா என்றால் தெரியாது. ஆனால் ஒருவேளை தீர்ந்துவிட்டால்? அதனால்தான் வந்திருக்கிறோம். எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. எனக்குச் சம்பளமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவருடன் இருப்போம். மேலும் இன்னொரு விஷயம். அவர் நல்லவர்.”

இந்த ஒரு பதிலில் கிட்டத்தட்ட எல்லாமே அடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். பொட்டில் அறைந்தாற்போல இருந்தது எனக்கு. அண்ணா ஹஸாரேயால் லஞ்சம், ஊழல் எல்லாம் முற்றிலுமாக ஒரே நொடியில் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள், அதுவும் அடிமட்ட மக்கள், நினைக்கவில்லை. ஆனால் அவர்மூலமாக ஊழல் ஒழியக்கூடும் என்ற நம்பிக்கையை ஓர் ஓரத்தில் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையே நிராசையாக இருக்கும்போது ஏன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கக்கூடாது?

அதனால்தான் இந்த அளவுக்கு வரலாறு காணாத கூட்டம் அவர்பின் வருகிறது. இது நிச்சயம் பிரியாணியும் சாராயமும் வாங்கிக்கொடுத்து கட்சிகள் சேர்க்கும் கூட்டமல்ல. தானாகச் சேரும் கூட்டம். கூடவே லாப்டாப் வைத்திருக்கும் நவீன இளைஞர்களும் இருக்கிறார்கள்; அதுவும் தொலைக்காட்சி கேமராவைக் கண்டுவிட்டால் முன்னால் துருத்திக்கொண்டு வந்து நிற்கிறார்கள், வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என்பது முற்றிலும் வேறு விஷயம். அதைப் புறந்தள்ளுவோம்.

ஆனாலும் என் மனம் ஜன்லோக்பாலை ஏற்க மறுக்கிறது. அதே நேரம், காங்கிரஸ் கட்சியினர்போலோ அல்லது வினவு குழுவினர்போலோ அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன். அவர்மீது அளவுகடந்த மதிப்பு உள்ளது. மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர். அவரது கூட்டணியினரும் அரசுடன் மோதும் போக்கை மட்டுமே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. என் பயம் எல்லாம் அவரையே தங்கள் நாயகராக, தங்கள் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு தீர்ப்பாக நம்பியிருக்கும் அடிமட்ட மக்களை நினைத்துத்தான்.

அவர்களது நம்பிக்கை நாசமாகாமல் இருக்கவேண்டும்.

19 comments:

  1. அப்பாவித்தனம் என்பது தான் சரியான சொல். என் கருத்துக்களும் வேறாக இருக்கிறது. அதை தான் பேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், அரசுக்கு கெடு வைப்பது எல்லாம் ஏற்புடையதல்ல.

    ReplyDelete
  2. நான்கு பக்கமும் இருக்கும் நியாயத்தை எளிமையாக கூறியிருக்கிறீர்கள். நல்ல கட்டுரை.

    ReplyDelete
  3. அண்ணா அப்பாவியாக இருக்க முடியாது. If it is so he could not have succeeded in developing watersheds in Ralegan.Watershed development demands most critical skills and creativity.
    அரசுக்கு கெடு வைப்பது,பாராளுமன்றம் கூடும் போது கோரிக்கைகள் வைப்பது இதுவெல்லாம் சமூகச் செயல்பாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இப்போதைக்கு இதுதான் நம்மனைவருக்கும் தெரிந்த உத்தி.
    Negotiating process is going on.Let us hope to get a bill which is better than the govt and the one suggested by Anna's team.

    ReplyDelete
  4. I am cent percent with you on this. Especially the Lokpal bill and Anna. Our people,s understanding of democracy and rights under decmocracy is fully a mis-conception and the blame goes squarely to the education system. the student curriculum should know,
    1> how to protest without hindrance
    2> available means to create awareness
    3> how a law is enacted.

    In my opinion the whole process (Anna's) could have been done thru a single member (MP) tabling the act in the parliament rather than irking the whole government.
    goodluck to you and keep up the work. ?I am happy that there are few people (like u) who think like (me) this.
    rgds/Surya

    ReplyDelete
  5. அன்பான நண்பர் திரு பாரா,

    // வினவு குழுவினர்போலோ அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன்.//

    நல்ல பதிவு. ஒண்ணே ஒண்ணுதான் இடிக்கிது! அதாவது நேர்த்தியான ஒரு ஆய்வுக்கட்டுரையில் ஒருவர் கடைசியில் முடிக்கும்பொழுது, "சின்னிஜயந்தும் லூசு மோகனும் அந்த படத்தில் சொல்லியதைபோல" என்று முடித்தால் அந்த ஆய்வுக்கட்டுரை அசட்டுக்கட்டுரையாக மாறும்!
    அதேபோலதான் மேலே உங்களின் வரிகள்!!

    வினவு என்பது மாற்று கருத்து என்ற பெயரில் வெறுப்பையும் பொய்களையும் கோமாளித்தனமாக வாரிக்கொட்டும் ஒரு கும்பல்!
    சமூகத்தின் அழுக்குகள் எல்லாம் நல்லது செய்யப்போறேன் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டதின் ஒரு வடிவம்தான் இவர்கள்!
    நாஜிகள், தாலிபான் போன்றவர்களின் சிந்தனைகள், வாதங்கள், முறைகள் பண்புகள் மற்றும் ஆக்கங்களுக்கும் இவர்களின்
    வழிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!!!

    அதைவிட முக்கியமான விடயம், இவர்களின் குப்பைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள்? அதுவும் இவர்கள் தொங்கும் தமிழ்மணம் போன்ற இந்திய தேச, இந்திய கலாசார வெறுப்பாளர்கள் நடத்தும் திரட்டிகளை படிப்பவர்கள் யார் யார்? இதற்க்கு பதில், "just about nothing " !!!!!!!!

    இந்த மாதிரி அசடுகளுடன் காங்கிரஸ் கட்ச்சியை நிலைபடுத்தி நீங்கள் எழுதுவது நீங்கள் எங்கோ தடுமாறுகிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது!

    Morons should never to be quoted as the slightest recognition that are offered to them means a space for insanity in the public realm! They just do not have the standing to be mentioned in any seriosu writings such as yours!

    ReplyDelete
  6. மன்னிக்கவும் திரு பத்ரி, உங்கள் பெயருக்கு பதிலாக திரு பாராவின் பெயரை இட்டுவிட்டேன்!

    இந்த வினவு கும்பலின், அதாவது ம.க.இ.க என்ற நவீன நாஜி கும்பலின் தமாஷுகளை அந்த நாட்களில பார்த்த நினவு வருகிறது! அது சோவியத் கைப்பாவை நாடுகள் சின்னாபின்னமான நேரம்! பாக்கி இருந்தது சோவியத் ரஷ்யா மட்டுமே. அதுவும் கொர்பசோவ் கீழ் தள்ளாடி கொண்டிருந்தது! செக்கு, போலந்து ரோமானிய போன்ற நாடுகள் கீழே விழுவதற்கு சிறிது நாட்கள் முன்னால் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்ட இந்த மகஇக கும்பலின் போஸ்டர்கள் சொன்னது " இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகம்,சோவியத் ரஷ்சிய ஜனநாயகமே உண்மை ஜனநாயகம்" போன்ற ரஷ்ய பாராட்டு போஸ்டர்கள்! . சொல்ல வேண்டிய விடயம் இவர்கள் போஸ்டர் ஓட்டும் இடங்கள், பெரம்பூர், கொருக்குபெட் மாம்பலம், மீனம்பாக்கம், தாம்பரம் போன்ற ரயில்வே நிலையங்களில் உள்ள படிகளில் பக்கவாட்டில் மட்டுமே. மேலும் டிக்கெட்டு கொடுக்கும் இடத்தில் பக்கத்தில் சிவப்பு கலரில் சில போஸ்டர்கள் ஒட்டி இருப்பார்கள்! அதை யாராவது படிப்பார்களா என்பதே சந்தேகம்!

    விடயத்திற்கு வருவோம். சோவியத் அடிவருடி நாடுகள் எல்லாம் கவுந்த ஒரு வாரத்தில், அதை ரஷ்யா தடுக்கமுடியாமல் தள்ளாடி கொண்டிருந்த கட்டத்தில்,
    நம்ம நண்பர்களில் போஸ்டர்கள் திடீரென்று மாறியது! கோர்பசொவு போயி, ரஷ்யா போயி மாவோவும் சீனாவும் வந்தார்கள்!! அதில் அவர்கள் சொன்னது, சீன ஜனநாயகமே உண்மை ஜனநாயகம்!! இந்த அந்தர் பல்டி ஒரே வாரத்தில் நடந்தது என்று நினைக்கிறேன்!! 1989 / 90 வாக்கில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்!
    அந்த போஸ்டரில் ஒரு பன்றிகூட்டத்தை இவர்களின் உலக ரட்சகர் மாவோ அடித்து விரட்டுவதுபோல வந்ததாக நினைவு!!

    இப்பொழுது சீனா வேறு விதமாக போனபின்னர் இந்த காமடியன்கள் எந்த மாதிரி போஸ்டர்கள் சென்னையில் அடிக்கிறார்கள் என்று தெரியாது!
    கேட்டபோது சிலர் சொன்னது, நாமளே எப்போவாதுதான் போரும் அதுல இதை இல்லாம் வேறையா என்று கூறிவிட்டார்கள்!

    அமேரிக்கா சார்பாக பேசும் யாரிருந்தாலும் அசிங்கப்படுத்தும் நம் பகுத்தறிவு ஊடகங்கள் (குறிப்பாக தமிழ்நாட்டில்) இந்த சீன / ரஷ்யா புகழ்பாடிகளை கண்டால் மட்டும் கப்சிப்ப் ஆவது, அதற்க்கு மேல் போய் அவர்கள் முற்போக்காளர்கள் என்று கூவுவது ஒரு வக்கிரமான காமடியாக மட்டுமே பார்க்கமுடியும்

    நான் ஒரு இரண்டு வருடமாக என்னுடைய ஹாபியாக இந்த மாதிரி கும்பல்களின் "கருத்துக்களை" மற்றும் இவர்களின் ரீச்சை கவனித்து வருகிறேன்!
    இவர்களின் குப்பைகளை படிப்பவர்கள் மூன்று வகையினர்!

    ReplyDelete
  7. முதல் வகை, இந்த கும்பலை சேர்ந்த சுமார் ஐம்பது பேர்கள்! இவர்கள் எல்லாம் யாரென்று அவர்கள் எழதும் வசவை வைத்தே கண்டு பிடுத்து விடலாம்!! அவர்களே சுத்தி சுத்தி பல பெயர்களில் வந்து வட்டமிட்டு "கருத்து" தெரிவிக்கிறார்கள்!

    இரண்டாவது, இவர்கள் இந்து மதத்தை கண்டபடி திட்டும் பொழுது அங்கே வந்து வாழ்த்து சொல்லும் வேற்று மதத்தினர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,
    இஸ்லாமியர் அல்லது இஸ்லாமிய பெயர் வைத்த சிலர்! இவர்கள் முக்கால்வாசி அரேபு நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்து மதத்தின் மேல் ஒரு நல்ல அபிபிராயம் கொண்ட உண்மை மதப்பற்றாளர்களாக இருப்பது புரிகிறது!! இவர்கள் இஸ்லாமியராகதான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதன் காரணம், இவர்கள் யாரென்று அவர்களின் பிலாகுகள் மூலமாகவோ அல்லது இவர்கள் வேறு சில இடங்களில் போடும் கும்மிகளை வைத்துதான்! அதை சேஸ் செய்து படித்து அதை புரிந்து கொள்ளுவது அவ்வளவு சிரமமில்லை! (ஆனால் இதே வினவு இவர்களை பற்றி கண்ணியமாக-செல்லமாக- அன்பாக- பவ்யமாக- பொய்கோபம் கொண்டு பேருக்காக "விமர்சித்து" எழுதும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளுக்கு ஆவேசமாக பதில் கொடுப்பார்கள். அதற்க்கு வினவு அறிவாளிகளும், இதோ பார் நாங்கள் மற்ற மதங்களையும் விமர்சிப்போம்
    என்று அறிக்கை வேறு )

    மூன்றாவது நம்ம ஊரு லோக்கல் "புரட்சியாளராக-ஆகத்துடிக்கும் கூட்டம்" . ஆபிசு கொடுக்கும் சலுகைகளை பயன் படுத்திக்கொண்டு மனேஜரை டபாய்த்து
    விட்டு பிலாகு படிக்கும் கூட்டம்! நான் புரட்சியாளன் என்று சொல்லத்துடிக்கும் ஒரு சிறு கூட்டம்! ஆனால் பாவம், இந்த முதாளித்துவ சுகங்களை விட
    மனமில்லாம் புரட்சி வாழ்கைக்கு உள்ளேன் ஐயா மட்டும் சொல்லி ஒளிந்து கொள்ளும் கூட்டம்!

    இந்த அச்சு பிச்சுகளையும், இஸ்லாமிய மத வெறியர்களையும் கொண்டதுதான் இவர்களின் வாசகர் கூட்டம்! அப்படிப்பட்ட வாசகர்களும் இவர்கள் எழுதும் மடத்தனமான கட்டுரைகளை படிக்காமல் (அதெல்லாம் வீண் வேலை என்பதால் சாய்சில் விட்டுவிடுவார்கள் ) அதன் டைட்டிலை மட்டும் வைத்தே உள்ளே புகுந்து கும்மி அடிப்பார்கள்! இது எப்படி தெரியும் என்றால் நான் இவர்கள் எழுதிய நீளமான சில குப்பைகளை படித்து (ஐயோ வாழ்க்கையே வெறுத்து விட்டேன்) அதற்க்கு வந்து பின்னூட்டங்களை படித்து ரீலேட்டு செய்தேன்! ஒருத்தனும் (அதாவது இந்த கும்பலை சேர்ந்த ஒரு பத்திருவது புரட்சியாளர்களை தவிர) இந்த நீண்ட கதைகளை படித்து பின்னூட்டமிட்டதாக தெரியவில்லை!

    அதாவது dance of mad men என்று கூறுவார்கள்! Mad menஆக மட்டும் இருந்தால் பரவாஇல்லை! சிரித்து விட்டு போகலாம்! ஆனால் இவர்கள் அஜெண்டா உள்ளவர்கள்! இந்தியாவை அழிகப்பார்ப்பவர்கள்! இந்தியாவை ஒழித்து கட்ட துடிக்கும் சீனாவிடம் நடனமாடுபவர்கள்! இந்தியாவை எப்படியாவது நாசமாக்கவேண்டு என்று இயங்கிய மாவோ என்ற கொலைகாரனை, இந்திய எதிரியை கடவுளாக வணங்குபவர்கள்!
    ஆதலால், இந்த தமிழ் வெளியில் பிரபலமாக இருக்கும் உங்களைப்போன்றவர்கள் வினவு போன்ற நாச சக்திகளை எக்காரணம் கொண்டும் கோட்
    செய்யக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்

    ReplyDelete
  8. which part of jan-lokpal is not acceptable? I would like to hear your complete understanding of jan-lokpal.

    ReplyDelete
  9. // முதாளித்துவ சுகங்களை விட
    மனமில்லாம் புரட்சி வாழ்கைக்கு உள்ளேன் ஐயா மட்டும் சொல்லி ஒளிந்து கொள்ளும் கூட்டம்! //

    மனதை தட்டி எழுப்பிய வரிகள்..

    கொடிபிடித்து பின் செல்ல ஆயிரம் கோடி இளைஞர்கள் உடனிருக்கிறோம். இந்த சுதந்திர போருக்கு இருநூறு ஆண்டுகள் வேண்டியதில்லை..

    ReplyDelete
  10. // மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர்

    உண்மையாகவா, பிறகு ஏன் NGO க்களை சேர்ப்பதை எதிர்கிறார் என்று விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. முயலுக்கு மூன்று கால்தான் இறுக்கு, இவங்க ஏன் நாலாவது கால தேடி போறாங்க அப்படின்ற மாதிரி இறுக்கு, உங்களோட கருத்து.

    ஆனா கடைசி வரைக்கும், ஏன் லோக்பால் பிடிக்கலை அப்படின்ற பதில் மட்டும் காணும்.

    இந்த கட்டுரை என்னத்துக்கு,யாருகாக எழுதி இருக்கீங்க அப்படின்னுவது தெரியுமா?


    Bharat said...
    which part of jan-lokpal is not acceptable? I would like to hear your complete understanding of jan-lokpal.

    இவரோட கேள்விக்கு கொஞ்சம் பதில் சொன்னிங்கன்னா நல்லாருக்கும்

    ReplyDelete
  12. ஜன் லோக்பால் மசோதாவைப் பற்றி அந்த சட்ட முன்வரைவை முழுமையாக படித்துவிட்டு, ஏப்ரல் மாதம் நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ.

    ReplyDelete
  13. இப்பதிவுக்கு பொருத்தமாக இருந்தால், இதை பிரசுரிக்கவும். என்ன பிரச்னை ஜன் லோக்பாலில்?

    ReplyDelete
  14. நண்பர் திரு பத்ரி,

    புழுதி வாரி தூற்றும் கும்பலின் அடுத்த காமடி, சென்னையில் அன்னா ஹசறேவிர்க்கு திரண்ட கூட்டத்தை அசிங்கப்படுத்தி ஒரு பதிவு!!
    அதாவது வயிறு எரிய எரிய என்னாடா செய்வது என்று புரியாமல் கடைசியில் கூட்டத்தை பார்த்து உளறும் நிலைக்கு வந்து விட்டார்கள்!!

    அசிங்கமான இந்த கூட்டம் எழுதிய அசிங்கமான அந்த பதிவில் உள்ள அசிங்கமான ஜால்ரா பின்னூட்டங்களை படித்தாலே புரியும், இந்த குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அசிங்கங்கள் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று!! சீனாவிலும் ரஷ்யாவிலும் பல லட்சகணக்காக மக்களை ஒழித்து கட்டியதை பார்த்து, மனிதர்களளால் சக மனிதனை இப்படி எல்லாம் நாசம் செய்யமுடியுமா என்று எண்ணுபவர்களுக்கு இவர்களின் இந்த சாகசங்களே, பேச்சுக்களே சான்று!!

    இவர்கள் பண்பானவர்களும் இல்லை நல்லவர்களும் இல்லை வல்லவர்களும் இல்லை எழைப்பங்காளிகளும் இல்லை நிதானம் உள்ளவர்களும் இல்லை நல்லவை புரிந்தவர்களும் இல்லை, ஞாயத்தை தெரிந்தவர்களும் இல்லை நல்லவை செய்பவர்களும் இல்லை! இவர்கள் மாவோ மதம் என்னும் கேடுகெட்ட மனநோயால் பீடிகபட்டு அதே அந்நிய மன நோயை இந்தியாவில் பரப்ப வந்த மறை கழுண்ட கூட்டம் மட்டுமே!!!

    இவர்களுக்கு வேண்டியது, அந்த மனநோயை மனமுவந்து ஏற்றுகொள்ளம் ஒரு அடிமை கூட்டம் மட்டுமே!இவர்களின் செயல்களுக்கு பொருந்தாது
    யாராவுது வாய்த்திரந்தாலோ, அல்லது மூச்சு விட்டாலோ, பைத்தியங்கள் கூரை மேல் உட்கார்ந்து கொண்டு குறியோ முறையோ என்று அற்சிக்கத்
    தொடங்கிவிடும்!!!

    ReplyDelete
  15. நல்ல வேளை இவர்களிடம் இப்போதைக்கு துப்பாக்கி இல்லை! இருந்தால் அதை மக்களின் மேல் உபயோகப்படுத்துவதற்கு சிறிதும் தயங்க மாட்டார்கள்!!

    மாவோ பித்து அப்படி பட்டது!! சத்தீஸ்கரிலும் மற்ற சில இடங்களிலும் இவர்களின் சகோதர பைத்தியங்கள் நடத்தும் வெறியாட்டத்தை இங்கேயும் நடத்த ஆள் தேடுகிறார்கள்!! ஆள் சேராததால் வாய்க்கு வந்தபடி அர்ச்சனை செய்கிறார்கள்!!

    ஆதலால் இவர்கள் பதிவு எழுதிப்போடுவதர்க்கு பின்னால் ஒரு கொலை-கள துவகத்திர்க்கான எல்லா ஏற்பாடுகளும் மறைந்திருக்கிறது என்பதை புரியாதவர்கள் சுத்த அப்பாவிகள் மட்டுமே!!! இதை புரியாத சில மாங்காய்கள் "ஆஹா இதோ முற்போக்கு" "இதோ பார் விமர்சனம்" என்று புரியாமல் ஆடுகிறார்கள்!! இவர்களும்தான் நேரம் வந்தால் பலி பீடத்திற்கு அழைத்துசெல்ல படுவார்கள் என்று புரிவதில்லை!! இந்த அப்பாவிகள் சுத்தமாக சரித்திரம் தெரியாதவர்கள்!! மாவோவிசம் பற்றி அறியாதவர்கள்! ஸ்டாலினின் வழிமுறைகள் புரியாதவர்கள்!

    அப்போ அவர்கள் நல்லவர்கள் இல்லையா என்று கேட்பவர்களுக்கு: : A Maoist turns good only when he runs out of bullets!!!

    History offers adequate lessons. In the case of violence against common people history employed wonderful lecturers such as Mao and Stalin. If a poor soul appalauds the perverts that now worship Mao and Stalin, then he has either not attended the school or did not understand what the lecturer said! In any case he will end up loosing his consciense for that's what Maoism is ultimately about!!!

    ReplyDelete
  16. படித்த மேட்டுக்குடிகள் எப்போதும் இந்தியாவின் அடிநாதத்தை புரிந்து கொள்ளாது என்பதற்கு இது ஒரு உதாரணம். லாஜீக்கலாக செய்யப்படும் போர்டு ரூம் யோசனைகள் இந்த முட்டுச் சந்தில் தான் போய் நிற்கும்.

    மனசு ஏற்காது என்று ஓரு போஸ்டிங். வெற்றி என்றால் அதற்கேற்ப ஒரு போஸ்டிங். கொஞ்சம் தோற்றால் அதற்கு ஒரு போஸ்டிங். இப்படி இணைய தளம் எழுத்து எல்லா பக்கமும் தன் நாக்கு விரித்து ஆடும். வளையும்.

    பேசிக்கொண்டேயிருக்கலாம். ஏசிக்கொண்டேயிருக்கலாம்.

    துரும்பு கிள்ள போட கை வலிக்கிறது.
    பேசி பேசி வாய் வலிக்கிறது.

    யார் ஏதாவது பேசி நல்லது பண்ணினால் நல்லது.
    அடுத்த போஸ்டிங்கில் பாராட்டி விட்டால் போகிறது.

    ReplyDelete
  17. உங்கள் கருத்தை முழுமையா ஏற்கிறேன.

    ”அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன். அவர்மீது அளவுகடந்த மதிப்பு உள்ளது. மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர்.”

    அவர் மீதே டிரஸ்டு பணத்தை தனி மனிதனாக செலவழித்தாக குற்றச்சாட்டு....

    அவர் ஒரு அப்பாவி காமெடியன்...

    கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுத்தால் பின் உள்ளவர் ஓடி ஒழிவார்கள். செய்தால் நல்லது.

    நீதித்துறையை லோக்பால் கீழ் கொண்டு வருவது வேடிக்கை.

    ReplyDelete
  18. Mr. Badri:

    I read your comments with interest.

    Your objections to the LokPal Bill, as per your words, stems from the desire to have a Government to have a small footprint. This reminds me of the Republican/Libertarian arguments in the United States - which routinely ask for a small government without providing a thoughtful solution to the problems.

    Corruption within the Government is a significant problem, and every Indian has experienced it. Existing laws do squat. The Government claim that strengthening currrent laws would solve the problem is ridiculous.

    Your objections (in the link that you have provided) need to be fleshed out. The claim that somehow Mr. Hazare's claims are anti-democratic is absurd. The specifics of the LokPal bill will have to be refined over thecoming decades as we gain practical experience. That is how every major piece of legislation moves forward and gains acceptance among the masses.

    What Hazare has done is to teach people that common people can demand change in the government policy, and if people start to believe that they do have the power, then the refinements of the bill would come in due course.

    Current state of Indian Democracy is very weak - and is in its deathbed. Corruption infiltrates every walk of Indian governance - from Defense, roads, Public Health services, Education, etc. This is not sustainable and India would crumble from within.

    There is NO incenctive within the system to change this, and this bill, while this may be harsh, might exactly be the medicine that India needs.

    If you trust the people, then any refinements can come and people can make the change. After all this is the essence of democracy. A clean govenemtn would have nothing to fear from Lokpal Bill.

    Frankly, it does not require your 'fear' that people's hopes and aspirations may not be met. Sure they won't be met,b ut this would be a step in the right direction. Let us support it, and work to improve it.

    Karikalan

    ReplyDelete
  19. Dear Badri

    I am reading your blogs for couple of years..Good Work.. I love if you keep office (book advt)out the blog and start writing more !! We love read yours.

    Pl read http://www.caravanmagazine.in/Story/1050/The-Insurgent.html

    this will answer your question about anna

    VS Balajee Chennai

    ReplyDelete