வை. ராமச்சந்திரன் என்பவர் எழுதியிருக்கிறார். தங்கம் விலை ஏறுவதால் மக்கள் எல்லாம் கலங்கிப்போயிருக்கிறார்களாம். கல்யாணம் என்று மட்டும் இல்லாமல் பல்வேறு குடும்ப விழாக்களிலும் தங்க நகை செய்துபோடவேண்டுமாமா. ஆனால் இப்போது விலை ஏற்றத்தால் அதனைச் செய்யமுடியாமல் ஏழைகள் தடுமாறுகிறார்களாம். காரணம்?
இது மிகவும் வசதியானது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் சாதாரண ஏழைகூட இதனைச் செய்யலாம். என்ன வசதி? கழுத்தில் போட்டுப் பார்க்கமுடியாதே தவிர, தேயாது. தொலையாது. செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. விற்கும்போது சேட்டு உரசிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. 100% சுத்தமான தங்கம். அதற்கான அன்றைய சந்தை விலை உங்களுக்குக் கிடைத்துவிடும். இன்ஷூர் செய்யவேண்டாம். வங்கி லாக்கர் தேடி ஓடவேண்டிய அவசியம் இல்லை.
அடுத்தது தங்க ஃபியூச்சர்ஸ் (Gold Futures). அனைத்துவித கம்மாடிட்டிகளும் (பண்டங்கள்) அவற்றின் எதிர்கால விலைகளும் MCX எனப்படும் Multi Commodity Exchange-ல் விற்பனைக்கு வருகிறது. இவற்றுக்கு அடியில் உண்மையான தங்கம் என்பது இல்லை. எதிர்காலத்தில் தங்கம் இன்ன விலைக்கு இருக்கலாம் (அதனால்தான் அதன் பெயர் ஃபியூச்சர்ஸ்) என்று சில வியாபாரிகள் தங்களுக்குள் பேரம் பேசிக்கொள்கிறார்கள். அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. சிலர் விலை அதிகமாகும் என்றும் சிலர் நீங்கள் சொல்லும் அளவுக்கு அதிகமாகப் போகாது என்றும் பேசி முடிவு செய்துகொள்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல அவர்களுக்குள் ‘பெட்’ கட்டிக்கொள்கிறார்கள். தோற்றால் தோற்றவர் ஜெயித்தவருக்குப் பணம் தரவேண்டும். இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்னை? இது வெறும் சூதாட்டமல்ல. இதில் கொஞ்சம் தேவையும் அவசியமும் சேர்ந்தே இருக்கிறது. தன் கையில் நிறையத் தங்கம் வைத்திருப்பவர் அதன் விலை சடாரெனச் சரிந்துவிட்டால் அதனைச் சரிக்கட்ட விலைக்கு எதிர்த்திசையில் போட்டு வைத்துக்கொள்ளும் ஃபியூச்சர் உபயோகமானது. அதற்குள் இங்கு நாம் புகவேண்டாம்.
இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் தங்கம் விலை எந்தவிதத்திலும் உயரவோ தாழவோ செய்யும் என்று நான் நம்பவில்லை. இது ஒரு ஜீரோ சம் கேம். இதில் யார் பணம் பெறுகிறார்களோ, அதே அளவுக்கு யாரோ தோற்கிறார்கள். இருவருமே ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பேரம் பேசுபவர்கள். அது நாமல்ல. நாம் கையில் இருக்கும் உபரிப் பணத்தை உண்மையான தங்கமாக (என்னைக் கேட்டால் டீமாட் தங்கமாக) வாங்கி வைத்துக்கொள்வோம். பலனடைவோம்.
ஐயோ, ஏழைகள் வயிற்றில் அடிக்கிறார்களே என்று காரணமே இல்லாமல் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது. ஏன் ஒரு பொருளின் விலை ஏறுகிறது? அதன் சப்ளை குறைவு. டிமாண்ட் ஜாஸ்தி. இப்போது பங்குச்சந்தைகள் கொஞ்சம் டகால்டியாக மேலும் கீழுமாக யோயோவாய்ப் போய்க்கொண்டிருப்பதால், சேஃப்டி என்பதைக் கருத்தில் கொண்டு பலரும் தங்கத்தில் உண்மையான முதலீட்டைச் செய்கிறார்கள் (ஊக பேர வணிகம் அல்ல!) என்பதால் தங்கத்தின் விலை சரசரவென ஏறுகிறது. நாளை பங்குச்சந்தைகள் சீராகிவிட்டால் தங்கத்தில் போட்ட பணத்தை எடுத்து பங்கில் போடுவார்கள். தங்கம் கொஞ்சம் சரியும்.
அவ்வளவுதான். இதற்காக ஆன்-லைன் வர்த்தகத்தை ஏன் நிறுத்தவேண்டும்?
அவ்வப்போது வெள்ளையன் கோஷ்டிகள், உணவுப்பொருள் தொடர்பான ஆன்-லைன் வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லிப் போராடுவார்கள். அதுபோலத்தான் இதுவும். ஆன்-லைன் வர்த்தகத்தில், என் ஆன்-லைன் ஃபியூச்சர்ஸில்கூட, பிரச்னை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்தப் பொருளுக்கும் சும்மா விலையை ஏற்றிவிட முடியாது. ஒன்று அதற்கு நிஜமாகவே கிராக்கி அதிகமாக இருக்கவேண்டும். இரண்டு, வேண்டிய அளவைவிடக் குறைவாக அதன் உற்பத்தி இருக்கவேண்டும். இல்லாமல் விலையைத் தொடர்ந்து ஏற்றுவது சாத்தியமே அல்ல.
குறைந்த அளவில் ‘மார்ஜின்’ பணம் செலுத்தி, அதிக அளவில் தங்கம் வாங்கும் வசதி ஆன்-லைனில் உள்ளது. அதாவது, ஒருவர் 100 கிராம் தங்கம் கடையில் வாங்க வேண்டுமானால், தங்கத்தின் அன்றைய விலைக்கு ஏற்ப மொத்தப் பணத்தையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், ஆன்-லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு ‘மார்ஜின்’ பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம். இது ஆன்-லைன் வர்த்தகத்தில் மட்டுமே சாத்தியம்.தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்தியாவில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தங்க யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட்போல யூனிட் யூனிட்டாக (ஒரு கிராம் = ஒரு யூனிட்) வாங்கி வைத்துக்கொள்ளலாம். வேண்டியபோது விற்கலாம். இது டீமாட்டட் தங்கம். நீங்கள் ஒரு கிராம் வாங்கினால் அது உங்கள் வீட்டுக்கு வராது. மாறாக எங்கோ எதோ பாதுகாப்பான கோடவுனில் தங்கம் இருக்கும்; அதை நீங்கள்தான் வாங்கி இருக்கிறீர்கள் என்பதற்கான பத்திரம் மட்டும் உங்கள் பெயரில் டிஜிட்டலாக இருக்கும். இங்கே அடியில் இருப்பது நிஜமான தங்கம். முழுப் பணத்தையும் கொடுத்தால்தான் ஒவ்வொரு கிராமையும் வாங்கமுடியும். இதனை பங்குச்சந்தைகளில் வாங்கலாம். கிட்டத்தட்ட 12 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதனை இந்திய பங்குச்சந்தைகளில் (மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை) அளிக்கிறார்கள்.
ஆன்-லைனில் தங்கம் வாங்குவோர் அவர்களது தேவையைத் தாண்டி பல கோடி ரூபாய்க்கு ஆன்-லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகி தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது.
இது மிகவும் வசதியானது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் சாதாரண ஏழைகூட இதனைச் செய்யலாம். என்ன வசதி? கழுத்தில் போட்டுப் பார்க்கமுடியாதே தவிர, தேயாது. தொலையாது. செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. விற்கும்போது சேட்டு உரசிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. 100% சுத்தமான தங்கம். அதற்கான அன்றைய சந்தை விலை உங்களுக்குக் கிடைத்துவிடும். இன்ஷூர் செய்யவேண்டாம். வங்கி லாக்கர் தேடி ஓடவேண்டிய அவசியம் இல்லை.
அடுத்தது தங்க ஃபியூச்சர்ஸ் (Gold Futures). அனைத்துவித கம்மாடிட்டிகளும் (பண்டங்கள்) அவற்றின் எதிர்கால விலைகளும் MCX எனப்படும் Multi Commodity Exchange-ல் விற்பனைக்கு வருகிறது. இவற்றுக்கு அடியில் உண்மையான தங்கம் என்பது இல்லை. எதிர்காலத்தில் தங்கம் இன்ன விலைக்கு இருக்கலாம் (அதனால்தான் அதன் பெயர் ஃபியூச்சர்ஸ்) என்று சில வியாபாரிகள் தங்களுக்குள் பேரம் பேசிக்கொள்கிறார்கள். அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. சிலர் விலை அதிகமாகும் என்றும் சிலர் நீங்கள் சொல்லும் அளவுக்கு அதிகமாகப் போகாது என்றும் பேசி முடிவு செய்துகொள்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல அவர்களுக்குள் ‘பெட்’ கட்டிக்கொள்கிறார்கள். தோற்றால் தோற்றவர் ஜெயித்தவருக்குப் பணம் தரவேண்டும். இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்னை? இது வெறும் சூதாட்டமல்ல. இதில் கொஞ்சம் தேவையும் அவசியமும் சேர்ந்தே இருக்கிறது. தன் கையில் நிறையத் தங்கம் வைத்திருப்பவர் அதன் விலை சடாரெனச் சரிந்துவிட்டால் அதனைச் சரிக்கட்ட விலைக்கு எதிர்த்திசையில் போட்டு வைத்துக்கொள்ளும் ஃபியூச்சர் உபயோகமானது. அதற்குள் இங்கு நாம் புகவேண்டாம்.
இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் தங்கம் விலை எந்தவிதத்திலும் உயரவோ தாழவோ செய்யும் என்று நான் நம்பவில்லை. இது ஒரு ஜீரோ சம் கேம். இதில் யார் பணம் பெறுகிறார்களோ, அதே அளவுக்கு யாரோ தோற்கிறார்கள். இருவருமே ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பேரம் பேசுபவர்கள். அது நாமல்ல. நாம் கையில் இருக்கும் உபரிப் பணத்தை உண்மையான தங்கமாக (என்னைக் கேட்டால் டீமாட் தங்கமாக) வாங்கி வைத்துக்கொள்வோம். பலனடைவோம்.
ஐயோ, ஏழைகள் வயிற்றில் அடிக்கிறார்களே என்று காரணமே இல்லாமல் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது. ஏன் ஒரு பொருளின் விலை ஏறுகிறது? அதன் சப்ளை குறைவு. டிமாண்ட் ஜாஸ்தி. இப்போது பங்குச்சந்தைகள் கொஞ்சம் டகால்டியாக மேலும் கீழுமாக யோயோவாய்ப் போய்க்கொண்டிருப்பதால், சேஃப்டி என்பதைக் கருத்தில் கொண்டு பலரும் தங்கத்தில் உண்மையான முதலீட்டைச் செய்கிறார்கள் (ஊக பேர வணிகம் அல்ல!) என்பதால் தங்கத்தின் விலை சரசரவென ஏறுகிறது. நாளை பங்குச்சந்தைகள் சீராகிவிட்டால் தங்கத்தில் போட்ட பணத்தை எடுத்து பங்கில் போடுவார்கள். தங்கம் கொஞ்சம் சரியும்.
அவ்வளவுதான். இதற்காக ஆன்-லைன் வர்த்தகத்தை ஏன் நிறுத்தவேண்டும்?
அவ்வப்போது வெள்ளையன் கோஷ்டிகள், உணவுப்பொருள் தொடர்பான ஆன்-லைன் வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லிப் போராடுவார்கள். அதுபோலத்தான் இதுவும். ஆன்-லைன் வர்த்தகத்தில், என் ஆன்-லைன் ஃபியூச்சர்ஸில்கூட, பிரச்னை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்தப் பொருளுக்கும் சும்மா விலையை ஏற்றிவிட முடியாது. ஒன்று அதற்கு நிஜமாகவே கிராக்கி அதிகமாக இருக்கவேண்டும். இரண்டு, வேண்டிய அளவைவிடக் குறைவாக அதன் உற்பத்தி இருக்கவேண்டும். இல்லாமல் விலையைத் தொடர்ந்து ஏற்றுவது சாத்தியமே அல்ல.
//ஒன்று தங்க யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட்போல யூனிட் யூனிட்டாக (ஒரு கிராம் = ஒரு யூனிட்) வாங்கி வைத்துக்கொள்ளலாம். வேண்டியபோது விற்கலாம். இது டீமாட்டட் தங்கம். நீங்கள் ஒரு கிராம் வாங்கினால் அது உங்கள் வீட்டுக்கு வராது. மாறாக எங்கோ எதோ பாதுகாப்பான கோடவுனில் தங்கம் இருக்கும்; அதை நீங்கள்தான் வாங்கி இருக்கிறீர்கள் என்பதற்கான பத்திரம் மட்டும் உங்கள் பெயரில் டிஜிட்டலாக இருக்கும். இங்கே அடியில் இருப்பது நிஜமான தங்கம். முழுப் பணத்தையும் கொடுத்தால்தான் ஒவ்வொரு கிராமையும் வாங்கமுடியும். //
ReplyDeleteDo they maintain the gold stock on 1:1 basis?
Read in a rediff article's comment that the funds may not really stock 1:1 quantity of physical gold and may stockpile statistical average of 20% to 30%. This is the average quantity units holders would like to convert paper unit to physical gold over a period of time.
This according to the comment on normal times would work fine. But during a extrodinary times like recession or global meltdown, if everyone throngs the company seeking physical gold, they'll be busted.
Hence really not sure if this is a real 100% safe investment.
http://www.rediff.com/getahead/slide-show/slide-show-1-money-e-gold-now-a-novel-way-to-buy-and-sell-gold/20101130.htm
Look at the comments from Arun Swaminathan in page 2.
As those discussions say, e-gold is different from ETF. I am not sure exactly what the ETF companies are doing. They may not have fully covered the entire stock they should be having. If they do so, that is entirely their risk. On the given day, when I cash out, they should pay me the full money. I can then go to the market and buy the gold that I want.
ReplyDeleteஆன்-லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு ‘மார்ஜின்’ பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம்.
ReplyDeletei think it can easily lead to a (false)demand that leads to a price hike.
பத்ரி,
ReplyDeleteஉங்கள் கருத்து ஓரளவுக்கு உண்மை. Commodities Futures வர்த்தகத்தினால் நிஜ மார்க்கெட்டில் விலை ஏறும்/இறங்கும் என்பதுவும் உண்மை. அமெரிக்காவில், பெட்ரோலியம் பொருட்கள் விலை ஏற்றம் பெரும்பாலும் Commodities Futures வர்த்தகத்தினால் ஏற்படுவதுதான். அதனால்தான், ஒபாமா கூட அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்கிறார். (http://www.nytimes.com/2011/05/25/business/global/25oil.html?_r=1).
இன்னொரு சுட்டி இதை விளக்குகிறது (http://useconomy.about.com/od/supply/p/oil_gas_prices.htm)
ஆனால், தங்கம் விலை இந்த மாதிரி தகிடுதத்தங்களால் ஏறுகிறதா அல்லது உண்மையிலேயே தேவை அதிகரித்துள்ளதா, என்பது எனக்குத் தெரியவில்லை.
- முருகன் கண்ணன்
http://en.wikipedia.org/wiki/Gold_exchange-traded_product
ReplyDeleteFees
Typically a commission of 0.4% is charged for trading in gold ETFs and an annual storage fee is charged. U.S. based transactions are a notable exception, where most brokers charge only a small fraction of this commission rate. The annual expenses of the fund such as storage, insurance, and management fees are charged by selling a small amount of gold represented by each share, so the amount of gold in each share will gradually decline over time.
This comment has been removed by the author.
ReplyDeleteதக்க நேரத்தில் சரியான பதிவு.
ReplyDeleteஆன்லைன் வர்த்தகத்தை குறைகூறுவது ஆதாரமற்றது. இன்றைய உலக வணிக சந்தை பற்றிய அடிப்படையறிவு இல்லாதவர்களால் மட்டுமே குறை சொல்ல முடியும். ஒருவர் 10% மார்ஜின் பணத்தில் தங்கம் வாங்கும்போது, அதே 10% மார்ஜின் பணத்தில் ஒருவர் அதை விற்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளவும். அசல் ஜீரோ சம் கேம்தான். இதனால், செயற்கை விலையேற்றம் எல்லாம் கிடையாது.
பிறகு ஏன் தங்கம் ஏறுகிறது?.. உலக நாடுகளிலிருந்து, பெரும் பண முதலைகள் வரை, கஷ்ட காலத்தில் அவர்களிடம் உள்ள உபரிப்பணம் மற்றும் உலக அளவில் செய்துள்ள முதலீடுகளை கரைத்து அவற்றை தங்கத்தில் பார்க் செய்கின்றனர். எப்பொழுதெல்லாம் ஓவர் கஷ்டகாலமோ அப்போதெல்லாம் தங்கம் ஏறும்.. கடந்த இரு வார ஏற்றத்திற்கு காரணம் கீழ்காண்பவை..
1. அமெரிக்கா அதன் கடன்வாங்கும் சீலீங்கை மேலும் உயர்த்தி இன்னும் கடன் வாங்க போகிறது.. இதை முதலீட்டாளர்கள் நெகடிவ்வாக பார்க்க, உலக பங்கு சந்தைகளில் அடி. ஏனெனில் அதிக கடனில், அமெரிக்க எகானமி இன்னும் கீழே போகும்.
2. மேற்கண்ட முடிவை அமெரிக்கா எடுத்தவுடன், s&p ரேட்டிங் நிறுவனம் முதன்முறையாக அமெரிக்காவின் கடன் நம்பகதன்மை (credit rating) ரேட்டிங்கை குறைத்து விட்டது. 1917 ல் இருந்து அமெரிக்கா வைத்திருந்த AAA ரேட்டிங்கை இழந்து AA+ ரேட்டிங்கை பெற்றுள்ளது.
3. ரேட்டிங் டவுன்க்ரேடுக்கு பிறகு அனைத்து அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள் 10% முதல் 20% வரை சரிவை சந்தித்துள்ளன. இங்கிருந்து வெளியேறிய பணத்தின் சிறு பகுதி தங்கத்துக்கு சென்றாலே போதும் தங்கத்தின் விலை தாறுமாறாக ஏற.
4. க்ரீஸ் நாட்டை போலவே, நிறைய ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் உள்ளது. மேலும், அமெரிக்காவை தொடர்ந்து மேலும் சில வளர்ந்த நாடுகளின் கடன் நம்பகதன்மை (credit rating) ரேட்டிங் குறைக்கபடலாம் என எதிர் பார்க்க படிகிறது. உலக சந்தைகள் அனைத்தும் நிறைய தடுமாற்றங்களுடன் ஸ்திரதன்மை இல்லாத நிலையில் உள்ளது. அதானால், இப்போதைக்கு தங்கத்தின் தேவை அதிகமாகுமே ஒழிய குறையாது.
நரேன் இங்கு பின்னூட்டமிட்டால் பொருத்தமாக இருக்கும்:)
தங்கத்தின் விலையேற்றத்தை ராகின் மிக சரியாக அனுகியிருக்கிறார்
ReplyDelete