Sunday, April 15, 2012

கல்வி உரிமைச் சட்டம்

மத்திய அரசு Right of Children to Free and Compulsory Education Act 2009 (RTE) என்பதனை 2009-ல் சட்டமாக இயற்றியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் தமக்கெனத் தனி விதிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. தமிழகம் 2010-ல் விதிகளை உருவாக்கினாலும் 2011-ல்தான் அதனை அரசிதழில் வெளியிட்டது. இடையில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து சில குழுக்கள் உச்ச நீதிமன்றம் சென்றன. சென்ற வாரம்தான் உச்ச நீதிமன்றம் இதில் 2-1 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்தது.

அதன்படி, அரசின் சட்டம் செல்லும்... ஒரே ஓர் இடத்தைத் தவிர. அரசின் நிதியுதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளில் தவிர.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக யாரும் உடனடியாக நீதிமன்றம் செல்வார்கள் என்று நான் கருதவில்லை. எனவே, இந்தச் சட்டம் எங்கெல்லாம் செல்லுபடியாகும் என்று பார்ப்போம்.

1. சிறுபான்மையினர் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகள் - அப்பள்ளிகள் அரசிடமிருந்து நிதியுதவி பெறுகின்றன என்றால்.
2. சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தும் தனியார் பள்ளிகள் (அரசிடம் நிதியுதவி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி)

உதாரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மேல்நிலைப் பள்ளி ஒரு கிறிஸ்தவ சிறுபான்மைப் பள்ளி. ஆனால் அரசிடம் நிதியுதவி பெறும் பள்ளி. (அரசின் நிதிமூலம்தான் ஆசிரியர்களுக்கான சம்பளம் தரப்படுகிறது.) இந்தப் பள்ளியில் RTE செல்லும். ஆனால், நம் இப்போதைய முதல்வர் ஜெயலலிதா கல்வி கற்ற சர்ச் பார்க் பள்ளிக்கு இந்தச் சட்டம் செல்லாது. அதுவும் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிதான். ஆனால் அரசின் நிதியுதவியைப் பெறவில்லை.

மாறாக, பத்மா சேஷாத்ரி பள்ளிகள், பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளி (என் மகள் படிக்கும் பள்ளி), வித்யா மந்திர் போன்ற பள்ளிகள் எவையும் அரசின் நிதி உதவியைப் பெறுவதில்லை என்றாலும் RTE இங்கெல்லாம் செல்லுபடியாகும்.

ஒருசில பள்ளிகள் சிறுபான்மைப் பள்ளிகளா என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. உதாரணம்: சென்னையில் பஞ்சாபி சமூகத்தினரால் நடத்தப்படும் கில் ஆதர்ஷ், மலையாளி சமூகத்தினரால் நடத்தப்படும் ஆசான் மெமோரியல் போன்றவை. இவை மொழிச் சிறுபான்மையினர் பள்ளிகள் என்றால் இங்கும் RTE செல்லுபடியாகாது.

ராமகிருஷ்ண மடத்தின் பள்ளிகள், ஆரிய சமாஜத்தினர் நடத்தும் டி.ஏ.வி பள்ளிகள் ஆகியவை சிறுபான்மையில் சேரா.

கல்வி உரிமைச் சட்டம் என்பதை வெறுமனே தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்பதாகக் குறுக்கக்கூடாது. ஆனால் அதுதான் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. அது தாண்டி அந்தச் சட்டத்தில் வேறு பலவும் உள்ளன. இச்சட்டம், அரசின் பிற சட்டங்களைப் போலவே முழுமையாகச் சிந்தித்து, ஓட்டைகள் எல்லாவற்றையும் அடைத்து, அழகான முறையில் உருவாக்கப்பட்டதல்லதான். ஆனால் இந்த ஓட்டைகளையெல்லாம் தாண்டி, அதன் அடிப்படையைப் புரிந்துகொள்வது நல்லது.

முதலில் அரசு மக்களுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி, அதுவும் அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில். அருகில் என்றால் என்ன என்பதையும் சட்டம் தெளிவாக்குகிறது. 1-5 வகுப்பு என்றால், மக்கள் இருப்பதற்கு 1 கிமீ தூரத்துக்கு உள்ளாக. 6-8 என்றால் 3 கிமீ தூரத்துக்கு உள்ளாக. அப்படி ஒரு பள்ளி இல்லை என்றால் மக்கள் நீதிமன்றம் சென்று அரசின்மீது வழக்கு தொடுக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் எம்மாதிரியான வசதிகள் இருக்கவேண்டும், அதற்குக் குறைந்தபட்சம் எவ்வளவு பரப்பளவு வேண்டும், அதில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதிகள் என்னென்ன என்று பலவற்றை இந்தச் சட்டம் நிர்ணயிக்கிறது. இந்த வரைமுறைக்குள் வராத பள்ளிகளுக்கான அனுமதியை ஓர் அரசு நீக்கலாம்.

அடுத்து, தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குள் வரும் அனைத்துத் தனியார் பள்ளிகளும் தம் ஆரம்ப வகுப்பில் 25% இடங்களை அரசு தீர்மானிக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். இந்தக் குழந்தைகள் எந்த பொருளாதார மட்டத்தில், எந்தச் சமூக மட்டத்தில் இருப்பார்கள் என்பதற்கான விதிகளை ஒவ்வொரு மாநிலமும் தமக்கென வரையறுத்துக்கொள்ளலாம். பல பத்திரிகைகள் எழுதுவதுபோல, இம்மக்கள் எல்லாம் “ஏழைகள்” அல்லர். குறிப்பிட்ட பலர் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும், பிறர் மட்டும் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலிருந்தும் இருப்பார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பது தொடர்பான ஆவணம் எதையும் நான் இதுவரை பார்க்கவில்லை.

இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அது தவிர, அவர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும். அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் இத்தனை என்று ஏற்கெனவே செலவு செய்துவரும் கட்டணம் அல்லது அந்தக் கல்விக் கூடத்தின் கட்டணம் இரண்டில் எது குறைவோ அதுதான் ஒரு குழந்தைக்கு என்று செலுத்தப்படும். இந்தக் கட்டணத்தை அரசே ஆண்டுக்கு இரு முறை (செப்டெம்பர், ஜனவரி) நேரடியாக பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும். எந்தப் பள்ளியும் இந்தச் சிறார்களை இரண்டாம் பட்சமாக நடத்தக்கூடாது என்று விதி தெளிவாகச் சொல்கிறது.

இது ஏழைகளுக்கு/பிற்படுத்தப்பட்டோருக்கு மாபெரும் வாய்ப்பு என்று சிலரும், இதனால் பெரும் குழப்பம் ஏற்படப்போகிறது என்று சிலரும் சொல்கிறார்கள். இரண்டிலும் உண்மை உள்ளது.

முதலில், சிறுபான்மைப் பள்ளிகளுக்கான விலக்கு என்பதை மத்திய அரசு கொண்டுவரவில்லை. அவர்களுடைய சட்டம் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்குவதாகத்தான் இருந்தது. ஆனால், அப்பள்ளிகள்தாம் உச்ச நீதிமன்றம் சென்று விலக்கு கேட்டு வழக்கில் வென்றுள்ளன. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பின்மூலம் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு ஒருவித சிறப்புச் சலுகை கிடைத்துள்ளதாகவே கருதவேண்டும். டி.ஏ.வி கோபாலபுரம் அல்லது சர்ச் பார்க் கோபாலபுரம் பள்ளியில் தன் மகளைச் சேர்க்க விரும்பும் ஓர் உயர் வகுப்புப் பெற்றோர், ‘கண்ட கண்ட’ குழந்தைகளுடன் தன் குழந்தை வளரக்கூடாது என்று நினைப்பாரேயானால் இனி டி.ஏ.வி பள்ளியைக் கருத்தில் கொள்ளமாட்டார். மாறாக சர்ச் பார்க் போன்ற கிறிஸ்தவப் பள்ளிகளை மட்டுமே கருத்தில் கொள்வார்.

கல்வி வசதிகளை அளிப்பதில் டி.ஏ.வி போன்ற பள்ளிகள் உடனடியாக அதிகக் கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் பெறப்போகும் கட்டணம் குறையும். உதாரணமாக, டி.ஏ.வி ஆண்டுக் கட்டணம் ரூ. 25,000 என்றும் ஆண்டுக்கு 200 புதிய மாணவர்களை எடுத்துக்கொள்வார்கள் என்றும் வைத்துக்கொண்டால் வரும் ஆண்டில் 150 மாணவர்களைத்தான் அப்படி எடுத்துக்கொள்ளலாம். மீதம் 50 மாணவர்கள் அரசின் ஒட ஒதுக்கீட்டில் வருபவர்கள். அவர்களுக்காக அரசு ஆண்டுக்கு ரூ. 8,000 மட்டுமே தரும். எனவே வருமான இழப்பு என்பது 50*(25,000 - 8,000) = ரூ. 8.5 லட்சம். இந்தப் பள்ளி நியாயமாக ‘லாப நோக்கு’ இல்லாமல் நடக்கிறது என்றால், இந்தப் பணத்தை எங்கிருந்தாவது பெற்றாகவேண்டும். அதனை மீண்டும் பிற 150 மாணவர்கள்மீதுதான் போடவேண்டியிருக்கும். அப்படியானால் அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஆண்டுக்கு ரூ. 5,666 அதிகம் தரவேண்டியிருக்கும். அதாவது 25,000 ரூபாய் என்பதற்கு பதிலாக 30,666 ரூபாய் தரவேண்டியிருக்கும். சர்ச் பார்க் போன்ற பள்ளிகளுக்கு அந்தக் கவலை ஏதும் கிடையாது.

அரசு அதிகாரிகளிடமிருந்து டி.ஏ.வி போன்ற பள்ளிகள் இன்ஸ்பெக்‌ஷன் என்ற வகையில் வீண் தொல்லைகளுக்கு ஆளாவார்கள். சர்ச் பார்க் போன்ற பள்ளிகளுக்கு இந்தத் தொல்லை இருக்காது.

தம்மை மைனாரிட்டி பள்ளிகளுடன் ஒப்பிட்டுக்கொள்ளாமல் பார்த்தால், தனியார் பள்ளிகளுக்குக் கீழ்க்கண்ட பிரச்னைகள் உள்ளன:

1. ஆண்டு வருமானத்தில் வரும் குறைபாடு. அதனை எப்படிச் சரிக்கட்டுவது என்ற தெளிவின்மை.
2. மாணவர்கள் சேர்க்கை விஷயத்தில் அரசின் தலையீடு.
3. இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களைப் பிற மாணவர்களோடு சேர்த்துப் படிக்க வைப்பதில் இருக்கும் பிரச்னைகள். இதனை மிகப் பெரியதாகப் பல பள்ளிகளும் பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் என் கருத்தில், இங்குள்ள பிரச்னை என்பது நம் கல்வித்துறையில் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளான ஆங்கில மீடியம் மற்றும் கல்வியை ஆசிரியர்கள் தாம் கற்றுத்தராமல் பெற்றோர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வது ஆகியவையே.

இதில் கடைசி விஷயத்தை மட்டும் பார்ப்போம். இன்று அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுமே ஆங்கில மீடியத்தில் கல்வி கற்பிப்பவை. அதுதான் சிறப்பான கல்வி என்று அவர்களும் சொல்லி நம் மக்களும் நம்பி, அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். ஆங்கில மீடியத்தில் இன்று படிக்கும் பெரும்பாலான தமிழ்க் குழந்தைகளுக்கு ஒன்றுமே புரிவதில்லை. எங்கெல்லாம் பெற்றோர்களே நல்ல ஆங்கிலம் பேசக்கூடிய நிலையில் இருக்கிறார்களோ அந்தக் குழந்தைகள் மட்டுமே ஆங்கிலக் கல்வியின் உண்மையான பயனை அடைகிறார்கள். மீது எல்லோருமே அரைகுறைக் கல்விதான் பெறுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வி இருந்துவருகிறது. அதில் சேர உள்ள பல பிள்ளைகள் இப்போது தனியார் கல்விக்கூடங்களில் ஆங்கில வழிக் கல்விக்குச் செல்வார்கள். அவர்கள் அனைவரது வாழ்க்கையும் மொத்தமாகப் பாழாகப் போகிறது என்பதில் எனக்குத் துளிக்கூடச் சந்தேகம் இல்லை.

அடுத்து, கல்வியைப் பெற்றோர்களுக்கு அவுட்சோர்சிங் செய்வது. இன்று என் பெண் படிக்கும் பள்ளி முதற்கொண்டு எனக்குத் தெரிந்த அனைத்து “உயர்தர” கல்வி நிறுவனமும் சார்ட், ப்ராஜெக்ட், கட்டுரை எழுதுவது என்று பலவற்றையும் பலவந்தமாகக் குழந்தைகள்மீது திணிக்கிறார்கள். அவை அனைத்தையும் இந்தக் குழந்தைகளால் தாமாகவே செய்யமுடியாது என்று அனைவருக்குமே தெரியும். கொஞ்சம்கூடக் கூசாமல், இவற்றையெல்லாம் செய்து தருவது பெற்றோர்கள்தாம். இணையத்தில் படங்களைத் தேடி, அவற்றை வண்ணத்தாளில் அச்சிட்டு, கீழே விளக்கங்களை (ஆங்கிலத்தில்) எழுதித் தருவது பெற்றோர்கள்தாம். கட்டுரைகளை எழுதித் தருவது பெற்றோர்கள்தாம். அவற்றைப் பார்த்து காப்பியடித்து எழுதிச் செல்வது மட்டும்தான் பிள்ளைகள்.

அது தவிர வீட்டுப்பாடம் செய்வதற்கும் பெற்றோர்களின் உதவி தேவைப்படுகிறது. இவற்றில் ஈடுபட முடியாத பெற்றோர், டியூஷன் வைக்கவேண்டியிருக்கும். அப்படி டியூஷன் வைத்தும், தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாததால் சிறு பிள்ளைகள் தடுமாறுவார்கள். அதன் விளைவாக விரக்தி அடையும் ஆசிரியர்கள், வகுப்பில் இப்பிள்ளைகள்மீது கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.

இப்பிள்ளைகள் தம்மீது வேண்டுமென்றே திணிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் இந்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் ஏற்பட்டால், இப்பிள்ளைகள் என்ன பாடு படுவார்களோ என்று அச்சமாக உள்ளது.

***

அனைவருக்கும் தரமான கல்வி என்ற நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதிகம் யோசிக்காமல் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினால் அடுத்த சில வருடங்களில் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும் என்பது என் கருத்து.

35 comments:

  1. //இந்த வரைமுறைக்குள் வராத பள்ளிகளுக்கான அனுமதியை ஓர் அரசு நீக்கலாம்//

    சரி

    நீக்கினால்

    அந்த மாணவர்கள் எங்கு சென்று படிப்பதாம் ??

    (நக்கல் பாணி யில் கேட்டுள்ளேன்

    ஆனால்

    இந்த கேள்வி ஆழமானது )

    ReplyDelete
  2. //அனைவருக்கும் தரமான கல்வி என்ற நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதிகம் யோசிக்காமல் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினால் அடுத்த சில வருடங்களில் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும் என்பது என் கருத்து.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  3. இந்த சட்டமானது எளிதில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை உண்டாக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.இந்த சட்டமே ஓட்டுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம்.அரசினால் அரசாங்கப் பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றின் தரத்தை உயர்த்த இயலவில்லை. ஆகவே நன்கு நடத்தப்படுகிற தனியார் பள்ளிகள் மீது கைவைக்க முற்பட்டனர்.அதன் விளைவு தான் இந்த சட்டம்.
    அடிப்படைக் கோளாறு என்ன்வென்றால் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகம் சரியில்லை. ஆசிரியர் நியமனத்தில் தலையீடு உள்ளது. நல்ல பள்ளிகளில் ஏழைகளுக்கு முதலில் 25 சதவிகித ஒதுக்கிடு இருக்கும்.பின்னர் ஓட்டுக்காக அதை 30 சதவிகிதமாக ஆக்குவார்கள். மொத்தத்தில் பள்ளிக் கல்வியை ஒரு வழி செய்துவிடுவார்கள்.அரசு உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ஏன் விதிவிலக்கு என்பது புரியவில்லை.

    ReplyDelete
  4. //அனைவருக்கும் தரமான கல்வி என்ற நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதிகம் யோசிக்காமல் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினால் அடுத்த சில வருடங்களில் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும் என்பது என் கருத்து.//

    இந்தியா ஒரு வினோதமான நாடு.

    இங்கு அனைவருக்கும் பாயசம் கொடுத்தாலும் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும்

    Poison கொடுத்தாலும் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும்

    இரண்டும் கொடுத்தாலும் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும்

    அல்லது

    ஒன்றுமே கொடுக்காவிட்டாலும் குழப்பமும் வேதனையும்தான் மிஞ்சும்

    ReplyDelete
  5. நீங்கள் அக்கறையாய் எழுதியிருக்கிறீர்கள். நான் திசை திருப்புவதற்கு மன்னிக்கவும்.

    உங்கள் மகள் படிக்கும் பள்ளி என்று சொன்னதால் கேட்கிறேன். பி.எஸ் பள்ளியில் காலையில் பெல் அடித்தவுடன் பிரேயர் ஹாலில் எல்லோரும் சந்தியா வந்தனம் செய்கிறார்களா? அங்கே உயர் வருமானம உடையவர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கிறார்களா? பிராமணர் அல்லாதார் படிக்கவில்லையா? அந்த பள்ளி பார்ப்பனியத்தை போதிக்கிறதா? ஆம் எனில் எந்த விதத்தில்?

    எப்பவும் போல் தமிழர்கள் அசத்துகிறார்கள். என்னமோ பிராமணர்கள் மட்டும் ஏழைகளுடன் கலக்க தயங்குவது போலவும் அவர்களைத் தவிர மற்ற எல்லா தமிழர்களும் அவதார புருஷர்கள் போலவும் பொழுது போக்குகிறார்கள்.

    அதிக வருமானமுள்ள, பிராமணர் அல்லாத, ஏழைகளுடன் கலப்பதை பொருட்படுத்தாத தமிழர்கள் எத்தனை பேர் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் இது வரை சேர்த்திருக்கிறார்கள்?

    அதிக வருமானமுள்ள, பிராமணர் அல்லாத, ஏழைகளுடன் கலப்பதை பொருட்படுத்தாத தமிழர்கள் எத்தனை பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கூலி வேலை செய்கிற குறைந்த வருமானம் உள்ள, பிளாட்பாரத்தில் வாழும் மக்கள் பெற்ற குழந்தைகளுடன் விளையாட தன் பிள்ளைகளை தெருவிற்கு அனுப்பி இருக்கிறார்கள்?

    இந்த விஷயத்தில் முதலில் விமர்சிக்கப் பட வேண்டியது அரசின் நிதி உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப் பட்டதே ஆகும்.

    - கோதை ராகவன்

    ReplyDelete
    Replies
    1. பி.எஸ் சீனியர் பள்ளி ஒரு பார்ப்பனப் பள்ளிக்கூடம்தான். அங்கே ஆவணி அவிட்டத்துக்கு விடுமுறை உண்டு. குட் ஃப்ரைடேக்கு விடுமுறை கிடையாது. என் மகளின் வகுப்பில் எத்தனை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று விசாரித்தேன். ஒருவர்கூடக் கிடையாது. அந்தப் பள்ளியில் மொத்தமாக பிற மதத்தவர் என்று பார்த்தால் 1,000-க்கு 2, 3 இருந்தாலே அதிகம்.

      இந்துக்கள் பிற சாதியினர் இருந்தே ஆகவேண்டும். எவ்வளவு பேர் தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றெல்லாம் என்னிடம் கணக்கு இல்லை. பொதுவாக இந்துக்களுக்குள் வித்தியாசம் அதிகம் பார்க்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்கு என்று வெளிப்படையாகத் தெரியாமல் ஒருவித முன்னுரிமை இருப்பதுபோலத்தான் எனக்குப் படுகிறது. ஆசிரியர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான் என்பது என் கணிப்பு.

      மேலே நான் எழுதியது எதுவும் அழுத்தமான புள்ளிவிவரங்களுடன் எழுதியவை அல்ல. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக என் மகள் அங்கே படிப்பதனால் நான் பார்த்தவை மட்டுமே.

      பி.எஸ் சீனியர் பள்ளி, சென்னையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் ஒன்று. இதை நான் பிற பள்ளிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளேன்.

      பி.எஸ் செகண்டரியைப் பொருத்தமட்டில் மாணவர்கள் கலவையாக இருந்தால் அது படிக்கும் அனைவருக்குமே நல்லது.

      சென்னையில் வேறு சில பள்ளிகளும் உள்ளன. உதாரணமாக KFI நடத்தும் தி ஸ்கூல். இங்கு படிப்போர் எல்லொருமே பெரும்பாலும் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ ரகம். ஒற்றைப் பார்வை கொண்டோர்.

      If one is caste based, the other is predominantly class based.

      ***

      பள்ளிச் சூழல் என்பதில் மாணவர்கள் பலதரப்பட்ட வகுப்பிலிருந்து, சாதியிலிருந்து வந்து கலந்து பழகவேண்டும். அதற்கு இடம் தராத எந்தச் சூழலும் நல்ல சூழல் அல்ல.

      அது நிற்க. மற்றபடி, பார்ப்பனர் அல்லாத பிற தமிழர் எல்லாம் தாம் மட்டும் ஏதோ ஏழைப் பங்காளர்கள் போலத் தம்மைக் காட்டிக்கொள்வதை நீங்கள் சரியாகவே குறிப்பிட்டுள்ளீர்கள். எல்லாம் பாவனைதான். ஆனால் அதை மட்டுமே காரணம் காட்டி, பி.எஸ் போன்ற பள்ளிகளின் ஒற்றைத் தன்மையை நாம் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.

      மற்றபடி சிறுபான்மைப் பள்ளிகளுக்கு விலக்கு அளித்தது அரசு அல்ல. நீதிமன்றம். அதன் காரணம் நம் அரசியல் அமைப்புச் சட்டம் அல்லது அந்தச் சட்டத்தை அதுபோலப் புரிந்துகொண்டுள்ள நீதிமன்றம். எனவே இந்த வகையில் அரசைக் குற்றம் சொல்லக்கூடாது. அவர்களுடைய சட்டத்தில் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை.

      Delete
    2. மெட்ரிக் பள்ளிகளை விட, CBSE பள்ளிகளில் உயர் ஜாதியினர் (மிக அதிக பணக்காரர்கள்) குழைந்தைகள் அதிகமாகப் படிப்பார்கள் என்பது என் எண்ணம். தாங்கள் குறிப்பட்ட PS சீனியர் பள்ளியில், ஜாதி / மதத்தின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறதா என்று விசாரித்து எழுதுங்கள்.

      Delete
    3. ===================
      பள்ளிச் சூழல் என்பதில் மாணவர்கள் பலதரப்பட்ட வகுப்பிலிருந்து, சாதியிலிருந்து வந்து கலந்து பழகவேண்டும். அதற்கு இடம் தராத எந்தச் சூழலும் நல்ல சூழல் அல்ல.
      ===================
      நீங்கள் சொல்வது சரி.

      தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாமே ஒற்றைத் தன்மை உடையவை தான். அந்தந்த நிறுவனர்களின் சார்புக்கேற்ப அந்தந்த பள்ளிகளின் ஒற்றைத் தன்மை வெளிப்படும். பள்ளிகளில் ஒற்றைத் தன்மை கூடாது என்றால் முதலில் பள்ளிக்கல்வி மத அமைப்புகளில் இருந்து விடுபட வேண்டும். கல்லூரிக் கல்வி பண முதலைகளிடமிருந்து விடு பட வேண்டும்.

      - கோதை ராகவன்

      Delete
  6. @Ganpat
    :) :)
    poison vs payasam!

    ReplyDelete
  7. அரசு உதவி பெறாத சிறுபான்மையல்லாத கல்வி நிறுவனங்கள் எந்த முகாந்திரத்தில் இந்த சட்டத்தைக் கடைபிடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. சட்டம் இயற்றப்பட்டவுடனேயே அது எல்லாப் பள்ளிகளையும் கட்டுப்படுத்தும். ஏனெனில் ஒரு பள்ளி நடத்த அனுமதி தரும் உரிமை மத்திய/மாநில அரசுகளிடம் மட்டும்தான் உண்டு. இந்தச் சட்டமும் தமிழ்நாடு விதிகளும் நடைமுறைக்கு வந்தபின் அனைத்துப் பள்ளிகளும் ஒரு குறிப்பிட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து அரசுக்கு அனுப்பவேண்டும். அரசின் கல்வி அலுவலர்கள் இந்தப் பள்ளிகளைப் பரிசீலித்து இப்பள்ளிகள் தொடரலாம் என்று சான்றிதழ் அளிக்கவேண்டும். அந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படையில்தான் இந்தச் சட்டம் இந்தப் பள்ளிகளைக் கட்டாயப்படுத்தப் போகிறது.

      Delete
    2. இதில், எந்த நம்பிக்கையில் சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு வழங்கப்படுகிறது என்று புரியவில்லை.

      Delete
  8. மிகவும் எளிமையான,பல நாடுகளில் நடைமுறையில் உள்ள தீர்வு பள்ளிக்கல்வி இலவசம்,அரசு பள்ளிகள் நடத்தும் அல்லது பள்ளிகளில் இலவசமாக கிடைக்கச் செய்யும்.அமெரிக்காவில்,கனடாவில்,ஸ்விட்ஸ்ர்லாந்தில் இது ஏதோ ஒரு வகையில் சாத்தியமாகும் போது இந்தியாவில் ஏன் அடிப்படை கல்வியை தருவதில் கூட ஏன் இத்தனை குழப்பங்கள்.
    சர்ச் பார்க்குகள்,டான் பாஸ்கோக்கள் மாணவர் சேர்க்கயை அதிகரித்து அதிக கட்டணமும் வசூலிக்கவே இத்தீர்ப்பு உதவும்.சென்னையில் மலையாளிகள்,பஞ்சாபிகள் மொழிவாரி சிறுபான்மையினர் என்பதால் விலக்கு உண்டு, சிந்தி சமூகம்,ஜெயின்கள்,சீக்கியர்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் அதே காரணத்தால் விலக்கு உண்டு.எனவே அப்பள்ளிகளில் சேர போட்டி அதிகமாகும்.அவர்களும் மாணவர் சேர்க்கையை கூட்டி,அதிக கட்டணம் வாங்க முடியும்.வாழ்க மதச்சார்பின்மை :(

    ReplyDelete
  9. இது ஆரம்பம் தான். அடுத்ததாக தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு!

    ReplyDelete
  10. பதிவில் சொல்லியவை மிகச்சரி.
    இருபத்தைந்து சதவீத மாணவர்கள் வேறு அரசு/அரசு முழு உதவி பெற்ற பள்ளிகளிலிருந்து வருவார்கள். அவர்களுக்கு பயிற்று மொழி (மீடியம்) சங்கடம் ஒன்று; தரத்தில் பெரும்பான்மை மாணவர்களின் நிலைக்கு உயர்ந்து அந்த பள்ளியின் படிக்கும் சிறப்புக்களை அடைய செய்ய வேண்டிய ப்ரிபறேஷன். அது தவிர அங்கு படிக்க வருவதென்றால் சீருடை போன்ற செலவுகள்.
    கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்கள் இந்த மாணவர்களை ச்வீகாரம் செய்து கொண்டு சுமார் மூன்று ஆண்டுகள் உழைத்து அவர்களை பிற மாணவர்களின் நிலைக்கு உயர்த்த முயலலாம்.
    இன்னும் சில தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளில் கற்கும் மூன்றாம் தர மாணவர்களை நேரடியாக படிப்பை தொடர்ந்து, முடிக்க உதவி செய்யலாம்.
    குழப்ப நிலை தெளிவு பெற்ற உடன், அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேரும் ஒன்று அல்லது ஆறாம் வகுப்பு மாணவர்களை ச்வீகாரம் செய்துகொண்டு அவர்களுக்காக உழைக்க (முயல) நான் தயார்.

    ReplyDelete
  11. பல்லாண்டு காலமாக் பாறை போல் உறைந்து கிடந்த கல்வித்துறையில் சிறு மாற்றம் என்பது அவ்வளவு எளிதல்ல. இதை ஒரு மற்றதின் தொடக்கமாக பாருங்கள்.
    நன்கு யோசித்து எடுத்த தீருமானம் அல்ல என்பது நூறு சதவீதம் ஒத்துக்கொள்கிறேன்.
    ஆனால் நோக்கம் நல்லது.
    எங்கள் பள்ளி நல்ல தரமான பள்ளி என்று மார் தட்டும் தனியார் பள்ளிகள் இட ஒதிகீட்டில் வரும் குழந்தைகளை முதல் மதிப்பெண் வாங்க வைத்து அவர்களது கல்வி தரத்தை காட்டட்டுமே.
    கற்பித்தல் முறையில் மற்றம் கொண்டுவருவதுதான் உண்மையான் மற்றம் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நோக்கங்களை மட்டுமே வைத்து செயல்களை எடை போட்டால் ஹிட்லர், போல்போட், இசுடாலின் போன்றவர்கள் கூட உன்னத மனிதர்களாகத் தெரிவார்கள். நரகத்திற்கான பாதையும் நல்ல நோக்கத்துடனேயே வகுக்கப்படுகிறது.

      Delete
    2. ஓ, அவர்களின் தரத்தை நிர்ணயிக்க எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கிடைத்ததா? அதுவும் ஒருசாரார் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை. இதற்கு சொட்டைத்தலையன்களின் சப்போர்ட் வேறு. பிரகாசமாக இருப்பவர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.

      Delete
  12. Who will pay the fees of the students admitted under this 25% reservation? State Government or Central Government?

    In Tamil Nadu, Govt prescribed fees for Matriculation Schools and most of them are NOT following. Will these schools accept the fees prescribed by Govt for these students?

    Mr. Badri, in one of your previous postings you strongly mentionted that Schools should be run on profit motives. Do you feel time has come to go for it?

    Most of the private schools will say that admission for 2012-13 year are already over and therefore they will avoid admission of 25% reserved category this year. Is the Supreme Court order or Govt order specific on this point?

    ReplyDelete
    Replies
    1. State government will pay the fees. In turn, they will request and get aid from the central government.

      Control of fees legislation was brought by Karunanidhi government, but has not been strictly followed during Jayalalitha regime, I think. I am against this in principle, as I think customers (parents) have other options. A private unaided school just as much as a restaurant should be allowed to charge whatever it feels like. People can either go to that school or shun that school.

      Yes, the time has come for allowing for-profit schools. It is the only solution to the educational problem we are facing. Plus, the current RTE should be considerably modified. Government should increase its expenditure on education manifold.

      Delete
  13. http://www.vinavu.com/2012/04/16/rte/

    What is your views on the above posting?

    ReplyDelete
    Replies
    1. Vinavu's views are completely antithetical to mine. They do not think of solutions but simply keep complaining.

      They too oppose RTE, but for different reasons. I don;t see much point in a point by point rebuttal of their article. Their view is to completely destroy all the private initiatives. I am not for privatising education completely. In fact, if there is one place where I will have government services, it is education. I am all for massive government funded, high quality educational institutions from primary onwards. Equally I am asking that private sector be allowed to set up profit making educational institutions so that they can make legal profits and are accountable, as opposed to the current model of illegal profit making.

      Delete
  14. 1 ) சில பத்திரிகை கட்டுரைகளில் "சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்" என்றும், மற்ற சிலவற்றில் "பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்" என்றும் குறிப்பிடப் படுகிறது. இதில் எது சரி?

    2 ) யாருக்கு ஒதுக்கீடு, எவ்வளவு ஒதுக்கீடு என்பதை மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாமா? உதாரணமாக தமிழகத்தில் இதை 69 % என நிர்ணயிக்க முடியுமா? "க்ரீமி லேயர்" எனபது "கிருமி லேயர்" எனபது கலைஞரின் கருத்து. இதன்படி "பொருளாதாரத்தில் பின்தங்கியவர்" என்பதை நீக்கி "சமூக அளவில் பின் தங்கியவர்" என தமிழ அரசு சட்டம் இயற்ற முடியுமா?

    3 ) அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவது பற்றி எப்போது சிந்திப்பார்கள்?

    4 ) தமிழகத்தில் கல்வியை விட சரக்கே முக்கியம். எனவே, டாஸ்மாக் விற்பனையில் 25 % "சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு" இலவசமாக அளிப்பார்களா? :-)

    ReplyDelete
    Replies
    1. RTE சட்டத்தின்படி சமூகத்தில் பின்தங்கியவர்கள் + பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் = 25%. இதில் யாருக்கு எத்தனை சதவிகிதம், யார் எந்த வரைமுறைக்குள் வருவார்கள் என்பதை ஒவ்வொரு மாநில அரசும் முடிவு செய்துகொள்ளலாம். இது தொடர்பான தமிழ்நாடு அரசின் விளக்கம் எதையேனும் பார்த்தால் எனக்கு சுட்டி கொடுங்கள்.

      Delete
  15. Sir,
    As per this plan, doesnt the govt schools automatically need to be automatically de commissioned ?

    Thanks,
    Venkat

    ReplyDelete
    Replies
    1. As per the RTE act, there are several norms that every school must follow. As you rightly say, most government schools will fail this. But you cannot decommission any school, given that we do not have enough supply.

      One of the criterion is space available for the school. On this norm alone, many private schools in Chennai will fail.

      Delete
  16. இந்து மதத்தவர்கள் வாழ சற்றும் தகுதியில்லாத நாடாக இந்தியா மாறிவிட்டதற்கு இதைவிட வேறு இன்னமும் என்ன சான்று வேண்டும்?

    ReplyDelete
  17. THERE SHOULD BE ONLY GOVT SCHOOLS. NO PRIVATE SCHOOLS.
    EITHER BY DISTANCE OR BY DENSITY OF POPULATION THE SCHOOLS TO BE LOCATED. THE STUDENTS COMING UNDER THAT AREA OF THE SCHOOL SHOULD JOIN THERE ONLY. (WALKABLE DISTANCE FROM HOME TO SCHOOL). IF HOUSE IS SHIFTED AUTOMATICALLY HE WILL BE ADMITTED IN THE NEARBY SCHOOL. THERE SHOULD BE ONLY ONE SYLLABUS. UPTO 10th STANDARD EDUCATION IS COMPULSORY.
    FOR POOR STUDENTS LUNCH SHOULD BE PROVIDED. THE BOOKS SHOULD BE SUPPLIED BY GOVT. THE TEACHERS SALARY SHOULD BE SAME. THERE SHOULD BE EXAMINATION SYSTEM.
    THIS IS MY SOLUTION TO THE EDUCATION PROBLEM.
    ONLY ONE POINT IS TO BE DISCUSSED IN DETAIL. IF A STUDENT IS ACADAMICALLY WEAK, WHAT TO DO? WHAT IS THE ALTERNATIVE?
    OUR POLITICIANS WILL NOT ALLOW SUCH SINGLE SCHOOL SYSTEM AS THERE WARDS ARE SUPER HUMAN BEINGS!

    GOPALASAMY SAUDI ARABIA

    ReplyDelete
  18. As per Tamil Nadu's rules for implementing the Act, any child whose parent or guardian's annual income is less than Rs. 2 lakh can be admitted under ‘weaker section'. The ‘disadvantaged group' comprises students belonging to SC, ST, BC, MBC categories, in addition to children with HIV, children with disability, children of scavengers or transgender community. While the RTE Act talks of ‘children belonging to weaker section and disadvantaged group in the neighbourhood', Tamil Nadu's rules say ‘weaker section/disadvantaged group'. It would suffice if private schools admitted students from either of the categories, implying that students who may need it the most may not actually benefit, unless schools take it up as a social responsibility.

    http://www.thehindu.com/news/cities/chennai/article3312261.ece

    ReplyDelete
    Replies
    1. Interestingly the heading for this article in The Hindu is "RTE Act: Lack of clarity, not an excuse anymore". But this "weaker section/disadvantaged group" definition is nothing but unclear.

      For example, one school may decide to keep the "poor" (namely "weaker") off its rolls. It may also decide to have SC/ST/MBC off its rolls. So all it has to do is identify enough rich BC folks and admit them, and then say it has fulfilled its obligation.

      The BC so elected in will not have to pay any fees. In return for this "grand offer", the school management can indirectly get good, fat donation from them.

      A win-win for all concerned.

      I can see scope for a nice scam here.

      Delete
    2. If what is there in The Hindu article is right, another scam is also possible. Since 2 lakh income criteria is there for the "weaker" section, a brahminical school can fill its entire quota through brahmin kids whose parents' income is lower than 2 lakhs (that is, Rs. 16,667 a month) and can claim it has fulfilled the obligations.

      Either way, lots of scams possible in this model. It is unclear on how the lottery system will work, who will oversee it for avoiding scams I have explained and how proper and adequate representation can be given to truly poor.

      Rs. 16,667 a month is not exactly poor. There are plenty of people in Chennai who don't even earn 5-6 k a month! This income limit will mean a lot of people in the 15k a month bracket will squeeze through at the expense of those who are more in need of this.

      Delete
    3. Government is foregoing its responsibility of educating the kids by forcing such laws on its subjects. The road to hell is paved with good intentions. This is road to hell and the RTE act is good intention.

      Delete
  19. Either way, lots of scams possible in this model. It is unclear on how the lottery system will work, who will oversee it for avoiding scams I have explained and how proper and adequate representation can be given to truly poor./

    I somewhere read that identification of weaker/disadvantaged sections of students for neighbourhood schools has to be done by the concerned local body responsibles like councillors/ panchyat president etc. There is a very good scope for large scale scams.

    ReplyDelete
  20. Another issue is opening up new front for corruption.

    Politicians & area govt officers will try to gain entry to these good private schools under the new Govt 25% quota. Bribing will take place.

    End of the day, the same creamy layer students continue to study in good private schools wihout paying any money. The bottom students continue to slog in govt & govt aided school.

    -dhana

    ReplyDelete
  21. 9.Reimbursement of per-child expenditure by the State Government
    for the purpose of sub- section (2) of section 12.- (1) The per-child
    expenditure shall be the expenditure incurred by the State Government for
    a child in the Government School or the fee fixed by the Committee
    constituted under the Tamil Nadu Schools (Regulation of Collection of Fee)
    Act, 2009 (Tamil Nadu Act 22 of 2009) in respect of the school where the
    child is admitted whichever is less.
    (2) (a) The school specified in sub-clause (iv) of clause (n) of section 2
    shall, in the month of July, submit to the local authority, a list of students
    admitted in the school, who are provided free and compulsory elementary
    education for reimbursement of per-child expenditure by the State
    Government.
    (b) If any child leaves or absents himself for a period exceeding
    thirty days or leaves the school in the middle of the academic year, the
    same has to be intimated to the local authority and claim has to be made
    accordingly.
    (3) The local authority shall sanction the reimbursement amount for
    each academic year in two installments, namely in the months of
    September and March after verifying or cause to be verified the enrollment
    of those students in the school.
    (4) Every school referred to in sub-clause (iv) of clause (n) of section
    2 shall maintain a separate bank account in respect of the amount
    received by it as reimbursement under sub-section (2) of section 12.
    (5) Subject to the provisions contained in the proviso to clause (a) of
    section 8 and clause (a) of section 9, the reimbursement shall be made
    through electronic clearance system in the separate bank account
    maintained by the school for the purpose.


    Maintenance of records of children by Local Authority.- (1)
    Every local authority shall maintain a record of all children in its
    jurisdiction, through a household survey from their birth till they attain the
    age of 14 years and of children with disabilities till they attain the age of 18
    years and shall maintain such other particulars in respect of each child so
    as to monitor his enrolment, attendance, learning achievement and
    transition to next higher classes.
    (2) The record, referred to in sub-rule (1) shall be updated annually.
    (3) The record referred to in sub-rule (1) shall be maintained
    transparently and kept in a manner accessible to the general public.
    (4) The record referred to in sub-rule (1) shall in respect of every child
    include, -
    (a) name, sex, date of birth, place of birth;
    (b) name, address, occupation of parent or guardian;
    (c) school or anganwadi centre that the child attends;
    (d) present address of the child;
    (e) class in which the child is studying and if education is
    discontinued the cause for such discontinuance;
    (f) whether the child belongs to weaker section;
    (g) whether the child belongs to disadvantaged group;
    (h) whether the child requires special facilities or residential
    facilities on account of (i) migration and sparse population; (ii)
    age appropriate admission; and (iii) disability.


    http://www.tn.gov.in/gosdb/gorders/sed/sedu_e_173_2011.pdf

    ReplyDelete