(கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக தமிழ்நாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து ஒரு கமெண்டரி அளிக்கலாம் என்று உள்ளேன். இன்றுமுதல் தொடரும்.)
தினமணியில் ராமதாஸ் சொன்னதாக வெளியாகியுள்ள செய்தி:
இதுவரையிலான உயர் கல்வி இட ஒதுக்கீட்டில் இடத்துக்கு மட்டும்தான் ஒதுக்கீடு இருந்தது. அனைவரும் ஒரே கட்டணத்தைத்தான் கட்டவேண்டும். (அட்டவணை சாதியினர் கட்டணத்தை தமிழக அரசு கட்டுகிறது. முதல்முறை கல்லூரிக்குப் போவோர் கட்டணத்தையும் தமிழக அரசுதான் கட்டுகிறது என்று நினைக்கிறேன்.) ஆனால் பள்ளிக் கல்வியில் சில மாற்றங்கள் இருக்கும்போலத் தெரிகிறது. அப்படி ஆனால் இது மிகப்பெரும் துரதிர்ஷ்டம். இது குறித்து ஒரு தெளிவை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.
பள்ளிகள் வேண்டுமென்றே ஏமாற்றும் என்கிறார் ராமதாஸ். அது அவ்வளவு எளிதல்ல. பள்ளிகள் தம் இருப்புக்கு அரசின் கருணையை நம்பியுள்ளன. அரசு உதவி பெறாத பள்ளிகளும்தாம்! எனவே துளிக்கூடப் பிடிக்கவில்லை என்றாலும் பள்ளிகள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
அடுத்து, சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே இந்தப் பள்ளிகளை நடத்தவேண்டும் என்கிறார் ராமதாஸ். அரசால் இந்தப் பள்ளிகளை நடத்தமுடியாது என்பதால்தான் தன் வேலையை இவர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யத் தீர்மானித்துள்ளது அரசு.
தினமணியில் ராமதாஸ் சொன்னதாக வெளியாகியுள்ள செய்தி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.ரியாலிடிசெக் இந்தியா தளத்தில் தெளிவாக விளக்கியிருப்பதுபோல, இது “ஏழைகளுக்கான” இட ஒதுக்கீடு இல்லை. “பின்தங்கிய மற்றும் ஏழைகளுக்கான” இட ஒதுக்கீடு. இதில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதன்படி, பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தோர் ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் சம்பளம் பெற்றாலும் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி கிடைக்கலாம். ஆனால் முற்படுத்தப்பட்டோர் (உ.ம்: பார்ப்பனர்கள்) ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய் என்றாலும் கட்டணம் கட்டித்தான் படிக்கவேண்டும். (அப்படித்தான் இருக்கிறது சட்டத்தின் லட்சணம்.)
கல்விபெறும் உரிமைச் சட்டத்தை எப்படியும் முடக்கிவிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் முயற்சிக்கும். இதனை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே முடிந்து விட்டன. இதனைக் காரணம் காட்டி ஏழை மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவதை தவிர்க்க தனியார் பள்ளிகள் முயலும்.
எனவே, தனியார் பள்ளிகளில் இதுவரை செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இதுவரையிலான உயர் கல்வி இட ஒதுக்கீட்டில் இடத்துக்கு மட்டும்தான் ஒதுக்கீடு இருந்தது. அனைவரும் ஒரே கட்டணத்தைத்தான் கட்டவேண்டும். (அட்டவணை சாதியினர் கட்டணத்தை தமிழக அரசு கட்டுகிறது. முதல்முறை கல்லூரிக்குப் போவோர் கட்டணத்தையும் தமிழக அரசுதான் கட்டுகிறது என்று நினைக்கிறேன்.) ஆனால் பள்ளிக் கல்வியில் சில மாற்றங்கள் இருக்கும்போலத் தெரிகிறது. அப்படி ஆனால் இது மிகப்பெரும் துரதிர்ஷ்டம். இது குறித்து ஒரு தெளிவை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.
பள்ளிகள் வேண்டுமென்றே ஏமாற்றும் என்கிறார் ராமதாஸ். அது அவ்வளவு எளிதல்ல. பள்ளிகள் தம் இருப்புக்கு அரசின் கருணையை நம்பியுள்ளன. அரசு உதவி பெறாத பள்ளிகளும்தாம்! எனவே துளிக்கூடப் பிடிக்கவில்லை என்றாலும் பள்ளிகள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
அடுத்து, சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே இந்தப் பள்ளிகளை நடத்தவேண்டும் என்கிறார் ராமதாஸ். அரசால் இந்தப் பள்ளிகளை நடத்தமுடியாது என்பதால்தான் தன் வேலையை இவர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யத் தீர்மானித்துள்ளது அரசு.
/ஆனால் முற்படுத்தப்பட்டோர் (உ.ம்: பார்ப்பனர்கள்) ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய் என்றாலும் கட்டணம் கட்டித்தான் படிக்கவேண்டும். (அப்படித்தான் இருக்கிறது சட்டத்தின் லட்சணம்.)/
ReplyDelete“Child belonging to weaker section” means a child belonging to such parents or guardians whose annual income is lower than Rs.2,00,000/- (Rupees Two lakh only ).
Rajasekaran: RTE says students from "disadvantaged" section and "weaker" section will be included in the 25% reservation. In the former, there is no income criteria. In the latter, there is an income criteria.
ReplyDeleteIn other words, a brahmin kid with family income of less than 2 lacs will be eligible for admission under "weeker section"
Delete