Tuesday, April 17, 2012

மற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை

காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டி (அண்ணா பல்கலைக்கழகம்) மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். சில வாரங்களுக்குமுன் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தேன். இடையில் ஐஐடி சென்னையில் படிக்கும் ஒரு மாணவன்வேறு தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தார்.

இன்றைய தற்கொலையின்பின் படிப்பில் தோல்வி என்பதாகத் தெரிகிறது. காலை பரீட்சைக்குப் பிறகு நேராக ஹாஸ்டல் சென்ற மாணவி சல்வார் துப்பட்டாவால் தூக்கிட்டுக்கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்த மாணவி சிவில் எஞ்சினியரிங் துறையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ் வழிக் கல்வியில்தான் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். ஆனாலும் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

[தமிழ் வழி பொறியியல் வகுப்புகள்மீது எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. சரியான பாடப்புத்தகங்கள் உள்ளனவா, அதனைக் கற்பிக்கக்கூடிய தமிழ் தெரிந்த ஆசிரியர்கள் இருக்கின்றனரா போன்ற கேள்விகளை ஏற்கெனவே நான் ஒரு பதிவில் எழுப்பியிருந்தேன்.]

சென்ற ஆண்டு இதே கல்லூரியில் ஒரு மாணவி, ‘ஆங்கிலம் தெரியவில்லை, கற்றுக்கொடு’ என்று சக மாணவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் பதிலுக்குக் கேலி செய்துள்ளனர். அதனைத் தாங்கமுடியாமல் அவர் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுவிட்டாராம்.

பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் உடனடியாகத் தங்களைக் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டிய நேரம் இது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை டார்ச்சர் செய்வதை விட்டுவிட்டு அவர்களுக்கு ஆதரவு தரவேண்டிய நேரம் இது.

32 comments:

 1. மிகவும் வருத்தமான செய்தி

  தாராள மயமாக்கலின் பக்க விளைவுகள்.

  அனைத்துக் கல்லூரிகளிலும் நீதி போதனை, மன நலம் வகுப்ப்புகளும் கொண்டு வர வேண்டும் போல.

  ஆனால் கல்லூரி மாணவி தற்கொலை , நினைத்து கூட பார்க்க முடிய வில்லை. பல சமூக வலைதளங்களில், இணையங்களில் இலவசமாக தன்னம்பிக்கை கட்டுரைகள், பழமொழிகள், கோட்பாடுகள் கொட்டிக் கிடக்கும் தருணம் இது

  ReplyDelete
 2. So sad ...a big loss for her parents:(

  ReplyDelete
 3. Very disturbing..Students should be told all the Steve jobs and bill gates discontinued their studies.
  Our society is giving undue credit to marks. even if you fail on 80% subjects it does not matter.

  ReplyDelete
 4. மாணவர்களின் மரணம் வருத்தமான விஷயம் என்றால், இந்த விஷயத்தில் Root Cause Anaysis செய்ய அரசாங்கமோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ இன்னமும் முன் வரவில்லை என்பது வேதனையானது.

  - சிமுலேஷன்

  ReplyDelete
 5. The society as a whole has lost respect for each other.Life has become a struggle.There is no energy left for showing compassion to a fellow being.As individuals we pick and choose moments to express compassion and expend resources, only and only if it does not discomfort us.Collectively we fail. The only collective thought that prevails is that its always someone else's problem.Long gone are the days when teachers considered their jobs as noble.There are only a handful who are sincere and they spend time to connect with students emotionally.The rest are not to blame.They are commoners in a struggling society.For them teaching is a profession , a means for survival. The change should start with us individuals, but we need leadership to garner and nourish such collective thoughts.We are still good people. We need a leader - a honest one - to give us direction.Then we will start enjoying life and that will bring about the care and compassion towards fellow beings.That day teachers will be loved. Students will love being in schools and colleges.Suicides will be long forgotten.

  ReplyDelete
 6. இது மிகவும் வருத்தம் தரும் விஷயம். Why so many suicides in the last few years? In CEG, the main changes I can think of in the past few years are the removal of entrance exams and adding Tamil as a medium of instruction. Does the entrance exam make such a difference in obtaining students with matching interests? Are the pressures faced by the Tamil-medium students understood?

  ReplyDelete
 7. hostelil thangi padippavarkalukku sila vithamaana kashtangal undu.athai ellaa students-aalum ethirkollum manapakkuvam illai.
  pala maanavarkal deepavali,pongalukku oorukku pogaathapodu ennudaiya veettirku vanthu, tharaiyil amarnthu,ilai pottu saappittathai inrum ninaivu paduththukiraarkal.
  veettil irunthu padikkum maanavarkalukku intha pirachchinaikalukku perrorkal support seythuviduvathaal samaalikkiraarkal.seekkiram itharku oru mudivai erpaduththa vendiyathu avasiyam.

  ReplyDelete
 8. நான் பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. பல்வேறு முயற்சிகள் செய்து அதே வகுப்பில் தொடர்ந்தேன். பதினோராம் வகுப்பில் எல்லாருமே தேர்ச்சி பெறுவார். நான் அதற்க்கு விதி விலக்கு. பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் என்னை பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்ல வழி வகுக்க வில்லை. பெயில் ஆனவுடன், விவேகானந்தர் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். என் தந்தை அதை கவனித்து என் அருகே வந்து கூறினார். "போனது ஒரு வருஷம் தான். ஆனா பெற்றது பல வருஷம். இதெல்லாம் தூக்கி போட்டு எங்கயாவது போயிட்டு வா." அவர் அதை பொருட்டாகவே மதிக்க வில்லை. ஆனால், இது கல்லூரியிலும் தொடர்ந்தது. ஒரு பத்து வருடம் கழித்து என் அர்ரியர்ஸ் எழுதினேன்.

  இன்று நான் உலகம் முழுவதும் சுற்றும் ஒரு consultant . வீழ்வது பெரிய விடயம் இல்லை, எழுவது மிக முக்கியம். இதற்க்கு உங்கள் மேல் உள்ள தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கைக்கு உழைப்பு அவசியம். இன்றைய உங்கள் படிக்கும் முறை உங்களை மூடராக சித்தரிக்கலாம், ஆனால் நீங்கள் மூடரா இல்லையா என்பது உங்களை பொறுத்தது.

  இத்தனைக்கும் முன்னேறிய சமுதாயம் என்று சொல்லகூடிய பிராமின சமுதாயத்தை சேர்ந்தவன். பாம்பே டொம்பிவில்லேயில் சாப்பிட வசதி இல்லாமல் சிங்கி அடித்து இருக்கிறேன். என் தந்தை அவ்வப்போது ரூபாய் 400 அனுப்பி என்னை காப்பாற்றி உள்ளார்.

  சொல்ல வந்தது இதுவல்ல, உங்கள் மேல் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கைக்கு உழைப்பு மிக முக்கியம். தாமதமாக இருந்தாலும். அது இல்லை என்றால், வீழ்வது நிச்சயம்,

  ReplyDelete
 9. இதில் என்ன சோகம் என்றால் அந்த பெண்ணின் பெயர் தைரிய லக்ஷ்மி :(

  ReplyDelete
 10. Every media is now suggesting colleges to do a retrospective. Every college says that they have a teacher Councillor for every 20 students.I feel, it is idiotic.
  No student will be feeling free to contact the teacher directly for his / her problem. It will be better to have a senior student Councillor for each student (as MIT has), so that a student can share his fears and doubts.
  "Mam bayama irukkunu solvadhai vida Anna Bayama irukku enbadhu" easy.
  The retrospection for colleges will be by engaging the senior student as mentor for juniors. We would of heared < 1 % suicides in colleges, when there was ragging(No attrocities).
  If you feel it might be a right choice please discuss...

  ReplyDelete
  Replies
  1. ////"Mam bayama irukkunu solvadhai vida Anna Bayama irukku enbadhu" easy.
   The retrospection for colleges will be by engaging the senior student as mentor for juniors.////
   very true.

   Delete
 11. We missed the engagement of senior mentor ship for juniors. Each college advertise saying a teacher Councillor for each 20 students. But i feel, this will be of no use.
  No student will have comfort to say " Bayama iruku Mam", but will prefer to say " Bayama irukku anna".
  I think MIT , chrompet is doing such a practice and no suicide case from the campus till date for academic related issues.
  Its a time to retrospect for colleges to allow a form of engagement between senior students and juniors which will really improve the managing skill in the seniors and a secured feeling for a junior.
  If you feel my thoughts are correct, please discuss

  ReplyDelete
 12. இது போன்ற நிகழ்வுகள் அரசுக் கல்லூரியில் நடந்தால் மட்டுந்தான் வெளியே தெரிகிறது. இது போன்ற நிகழ்வுகள் தனியார் கல்லூரிகளில் நடக்கின்றனவா? தனியார் கல்லூரிகள் பெயர் போய்விடும் என்று மூடி மறைக்கின்றனவா?

  ReplyDelete
 13. @ mariappan
  Immaterial of self financing or government college, the attitude of the staff who are almost half baked(Now a days, no one comes with a teaching passion) talk in the class among students and expect an output of the same nonsense.
  The tragedy started when there were notes published for college courses, the students are of course limited to think.
  Hence india produces more developers and no inventors.

  ReplyDelete
 14. என்னைக் கேட்டால் இப்படி ஓர் ஏற்பாட்டைப் பின்பற்றலாம். முதலாண்டில் அரியஸ். ப்ரவாயில்லை இரண்டாம் ஆண்டிலும் அடுத்து மூன்றாம் ஆண்டிலும் அரியஸ். இப்படியான மாணவர்களி தொடர்ந்து படிக்க அனுமத்து கடைசியில் நான்காம் ஆண்டுக் கடைசியில் course completed என்ற சர்டிபிகேட்டை வழங்கலாம். கல்லூரியிலிருந்து வெளியேறிய நான்கு ஆண்டுகளுக்குள் எல்லா அரியர்ஸையும் எழுதி முடித்து பட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்ற விதியை அமல் படுத்தலாம். அரியர்ஸகளுடன் கல்லூரியிலிருந்து வெளியேறுகின்ற நிலையில் நல்ல பக்குவம் வந்து விடும். சற்று பெரியவர்களாகி விடுவர். விடா முயற்சியுடன் அத்தனை அரியர்ஸ்களையும் எழுதி பட்டம் வாங்கி விட வேண்டும் என்ற லட்சிய உணர்வு வ்ரும் போது அது அவர்களுக்கு சாத்தியமாகிற விஷயமாகவும் இருக்கும். ஆக இதுவே சரியான ஏற்பாடாக இருக்கும். எல்லோரும் பாஸ் ஆகவேண்டும் என்பதற்கான பாட்த் திட்டங்களை எளிதாக்குவது சரியாக இராது.

  ReplyDelete
 15. திருவாளர்கள்.சுகி சிவம்,இறையன்பு,சத்யசீலன்,அறிவொளி,
  பாரதிபாஸ்கர்,சாலமன் பாப்பையா போன்றோர்களின் ஆதரவுடன்,கிராமத்திலிருந்து வந்து சேரும் மாணவ மாணவிகளுக்கு முதல் வருடம், வாரம்தோறும சுயநம்பிக்கை குறித்த சொற்பொழிவுகள் நடத்த வேண்டும்.

  இம்மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மாதம் ஒரு முறை சென்னை வந்து போக இலவச பஸ் பாஸ் கொடுத்து உதவலாம்.

  முதல் வருடத்தில் குறைந்தது மூன்று முறை, சீனியர் மாணவர்களுடன் (இவர்களும் கிராமத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்)இன்ப சுற்றுலா செல்ல வைக்கவேண்டும்.

  ReplyDelete
 16. மிகவும் வேதனையான விசயம்.

  எனக்கு இதே அளவு அனுபவம் நான் கல்லூரியில் படிக்கும்

  பொழுது ஏற்பட்டது. பள்ளியில் எந்த காலத்திலும் தேர்வில்

  தோல்வியோ அல்லது குறைந்த மதிப்பெண்ணோ நான்

  வாங்கியது கிடையாது. ஆனால் முதலாம் ஆண்டில் முதன்

  முதலில் வெறும் 100 க்கு 6 மார்க் வாங்கிய போது நான்

  அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

  ஆனால் அடுத்த ஒரு சில

  வருடங்களிலேயே இந்த ஆங்கில பிரச்சனைகளில் இருந்து வெளி

  வந்தேன். வெளியில் வந்த பிறகு நான் சென்ற பல தொழில்

  நுட்ப அலுவலகங்களில் தாய் மொழியில் படித்த மக்கள் தான்

  சிறந்து விளங்குகிறார்கள் என்பதை எனது கண்ணால் கண்டேன்.

  அது மட்டும் அல்ல.. ஜெர்மனி, பிரேசில், சீனா மற்றும்

  ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் ஆங்கிலம் பெரும்பாலான

  மக்களுக்கு ஒழுங்காக பேச தெரியாது. இதை அவர்கள் ஒரு

  பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.

  எனக்கு நேற்று பிரேசில் நாட்டுகாரர் ஒருவரிடம் மின்ன்ஞ்சல்

  ஒன்று வந்தது.

  அதில் " ஆங்கிலம் எனக்கு தாய் மொழி அல்ல...

  அதனால் எனக்கு

  தெரியாது. ஆதலால் மெதுவாக பேசுங்கள் என்று சொன்னார்.

  நமக்கோ இது போன்று அருகில் இருப்பவரிடம் பேசும் துணிவு

  கூட இருக்காது.

  இதற்கு ஒரே வழி மெக்காலே கல்வி முறையை ஒழித்து

  மண்ணின் பெருமையையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்

  கல்வி முறையை உருவாக்க வேண்டும்.

  ReplyDelete
 17. We need to see if the girl understood the lessons including the application knowledge , but couldnt clear the exam or she didnt understand the subject itself ?

  ReplyDelete
 18. ஆனால் அடுத்த ஒரு சில

  வருடங்களிலேயே இந்த ஆங்கில பிரச்சனைகளில் இருந்து வெளி

  வந்தேன். வெளியில் வந்த பிறகு நான் சென்ற பல தொழில்

  நுட்ப அலுவலகங்களில் தாய் மொழியில் படித்த மக்கள் தான்

  சிறந்து விளங்குகிறார்கள் என்பதை எனது கண்ணால் கண்டேன்.//

  தற்கொலை செய்து கொண்ட பெண் தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்தான். ஆகவே இதற்கும் ஆங்கில வழி கல்விக்கும்
  தொடர்பு இல்லை.

  என்னைப் பொறுத்தவரை அறிவியல், கணிதத்தை தமிழில் படிப்பதால் பலன் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே அறிவியலும், கணிதமும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும். Square root என்பதை வர்க்க மூலம் என்று படிப்பது எந்த விதத்தில் பயன்படப்போகிறது?

  ReplyDelete
  Replies
  1. அதை square root என்று அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்வதைவிட வர்க்க மூலம் என்று அர்த்தம் தெரிந்து படிப்பதனால் அதைவைத்து செயலாற்ற முடியும். அர்த்தம் தெரியாமல் மக்கப் செய்து வாந்தி எடுக்கும் இங்கிலீஸ் மீடியத்தவர்களை விட தமிழில் தெரிந்து படித்தவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பது தான் அதில் உள்ள தாத்பர்யம்.

   Delete
  2. கணிதத்துக்கு மொழி கிடையாது! சொல்லப்போனால் கணிதத்தில் நாம் பயன்படுத்தும் பல தேற்றம், சூதுதிங்களைக் கண்டுபிடித்தவர்கள் ஃபிரெஞ்சுக்காரர்கள்! இதேபோல பொறியியலிலும் சமன்பாடுகள், கணித அடிப்படையிலான தீர்வுகள் என்றுதான் இருக்கும். இதில் மொழி ஒரு பெரிய பிரச்சினை என்று தோன்றவில்லை. மொழிப் பிரச்சினை ஹியூமானிட்டி வகுப்புகளில் (வரலாறு, தத்துவம், இலக்கியம், சமூகவியல்) தான் ஏற்படக் கூடும் - பொறியியலில் அல்ல.

   சரவணன்

   Delete
 19. அர்த்தம் தெரியாமல் மக்கப் செய்து வாந்தி எடுக்கும் இங்கிலீஸ் மீடியத்தவர்களை விட தமிழில் தெரிந்து படித்தவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பது தான் அதில் உள்ள தாத்பர்யம்.//

  ஆங்கில வழியில் படிப்பவர்கள் எல்லாம் புரியாமல் படிக்கிறார்கள் என்றோ தமிழ் வழியில் படிப்பவர்கள் எல்லாம் புரிந்து படிக்கிறார்கள் என்றோ சொல்லி விட முடியாது.Square root எங்களுக்கு சொல்லிக் கொடுத்த போது a number which when multiplied twice results in the given number என்று எளிதாகப் புரியும்படிதான் கற்றுக் கொடுத்தார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால் +2 விற்குப் பிறகு எங்கு இதைப் பயன்படுத்தினாலும் square root என்று சொன்னால்தான் உலக அளவில் நிறைய பேருக்குப் புரியும். வர்க்க மூலம் என்று படிப்பது எந்த அளவுக்குப் பயன்படும்?

  ReplyDelete
 20. It seems many people who post comment doesnt understand what's happening in Engineering Colleges. There is a lot of difference between govt grade 1 engineering colleges and other colleges..In govt colleges,campus interview starts at beginning of 4th year with many companies have a criteria of 'no arrears' with 70%..many people who come to DOT 1 colleges are here to get offer from Campus Interview.Many technical companies are very strict in 'no arrears' with more than 70%.So if u get an arrear in any semester, u cant get place in dream company. So there is always a pressure to get good marks to get into good company .In self finance colleges , situation is very different..Except very few prestigious colleges, campus interview is not as bright as DOT 1 colleges. So there is a pressure to get into off campus interview..There u need to excel in all areas to get an offer.Also in many colleges (except my coll) there is a tend of groupism where city people (Peter vidum guys) help city people....Good rank guys be friend with Good rank guys..Arrear guys has to settle with arrear friends..So there is a bit of motivation lost..Also many prof dont take these arrear guys into consideration...Some prof hav the habit of tease those guys(My dept doesnt hav those)...If arrear guys happened to be from very poor family,they would have taken educational loan..if u have arrear banks stop giving loan..so dream is shattered for those poor people..vexed by these, they fell into bad habits or commit suicide..So jus advice,motivational dont improve any situation..Only very few would have beneiftted from motivation but exceptions are not examples...Basic structure has to changed to prevent these suicides as all forms of society play a vital role in it..

  ReplyDelete
 21. இரண்டு சிக்கல்கள் 1) ஆங்கிலம் புரியாததால் கற்பிக்கப்பட்டதை புரிந்து கொள்ள இயலாமல் இருப்பது 2)கற்பிக்கபட்டதையே புரிந்து கொள்ள இயலாமல் இருப்பது (ஆங்கிலம் பிரச்சினையல்ல, பாடமே பிரச்சினை).தமிழில் நடத்தினாலும் இப்பிரச்சினை உள்ளவர்களுக்கு புரியும் என்று உத்தரவாதம் இல்லை.
  இரண்டையும் தீர்க்க முடியும், ஆங்கிலத்தில் நடத்தி தமிழில் விளக்கினால் முதல் பிரச்சினையை பெருமளவிற்கு தீர்க்கலாம்.
  அன்றாட வாழ்க்கையில் நாம் மொழிக்கலப்பினை பயன்படுத்துகிறோம்,அது போல் கற்பிக்கும் போதும்.இங்கு மொழித்தூய்மை முக்கியமில்லை,கற்றலே முக்கியம்.

  இரண்டாவது பிரச்சினையை ஏன் புரியவில்லை, எங்கு குழப்பம்
  வருகிறது/சந்தேகம் வருகிறது என அறிந்து தெளிவுபடுத்துவது.
  இது ஆங்கில மொழி வழியே கற்றவர்களுக்கு எழாத பிரச்சினை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒன்றை square root என்று சொல்லிக்கொடுத்தாலும் வர்க்க மூலம் என்று சொல்லிக்கொடுத்தாலும் அது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.சிக்கல் அந்தப் புரிதலில் இருக்கும் போது அது மொழி சார்ந்த பிரச்சினையாக குறுக்க முடியாது.தமிழ் வழி/ஆங்கில வழிக் கல்வி இரண்டில் எதுவானாலும் மாணவர்கள்
  புரிந்து கொள்கிறார்களா என்பதே முக்கியம்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள்.

   புரியாமல் படிப்பதால் மக்கப் செய்கிறார்கள் என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால், அது தவறு. புரிந்து படிப்பவன் கூட மக்கப் செய்தால் தான் மார்க் வாங்கமுடியும்.

   புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை அப்படியே பயன் படுத்தினால் உயிரியல், சரித்திர பாடத்தில் கூட 100க்கு 100 வாங்க முடியும். இது தான் தமிழ்நாட்டு கல்வித் தரத்தின் நிலை.

   மாணவர்களுக்கு புரியுதா இல்லையா என்பதை எந்தத் தேர்வும் சோதிப்பதில்லை. அவனால் மனப்பாடம் செய்ய முடியுமா என்பதைத் தான் சோதிக்கிறார்கள். கணக்கில் கூட பல கேள்விகள் புத்தகத்திலிருந்தும், கைடிலிருந்தும் ஒரு மாணவனால் மனப்பாடம் செய்ய முடிந்தால் அவனால் 80-90 % வாங்கிவிட முடியும்.

   Delete
 22. தமிழிலும் மக்கப் செய்து படிக்கும் மாணவர்கள் இல்லையா?.

  ReplyDelete
 23. ஆங்கில மீடியம், தமிழ் மீடியம் சாராத பிரச்சினையும் உண்டு. அதாவது பெற்றோர்கள் சமூகத்திலான மதிப்பு உயரும் என்று கருதி படிக்க விருப்பமில்லாத நிலையிலும் தங்கள்து பிள்ளைகளையும் பெண்களையும் வேண்டாத படிப்பில் சேர்ப்பது. இது ஒரு பிரச்சினை. மாணவர்களுக்கு எப்ப்டிப் புரியும் வகையில் சொல்லித் தருவது என்று தெரியாத ஆசிரியர்கள் பாடம் நடத்துவது. இந்த இரு பிரச்சினைகளுக்கும் விடை காணப்பட வேண்டும்.

  ReplyDelete
 24. Language barrier puts students from Tamil medium in a fix

  இந்தக் கட்டுரையில் சில கருத்துகளைப் பற்றி விரிவாக விவாதிக்கவேண்டும்.

  ReplyDelete
 25. விகடனில் ஒரு அன்பர் செய்திருந்த ஆழமான பதிவு. வெட்டி ஒட்டியுள்ளேன்::::::::::::::::::::::::::::::::::::::::: "முதலில் மாணவர்களுக்கு ஏற்ற பாடம்தானா, துறைதானா என்று பெற்றோர்களுக்கு தெரியாது .... சரியான வழிகாட்டிகளும் கிடையாது ... இஞ்சினியர் படிப்பு, டாக்டர் படிப்பு என்ற மந்தை குணம் ... ப்ளஸ்-டீவில் 1100 மார்க் எடுத்தாலும் இஞ்சினியரிங் முதல் பிற படிப்புக்கெல்லாம் அந்த மார்க் மந்திரக்கோல் அல்ல ... இது வேறு உலகம் .... வேறு தளம் ..... இதற்குப்பின் .....வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு சென்னையே முதலில் மிரட்டல் ஏற்படுத்தும் ... பெண், கிராமம், தமிழ் மீடியம் என்றால் கேட்கவே வேண்டாம் ... சில சக மாணவ மாணவிகள் ஆதரிப்பர், பல சக மாணவ மாணவிகள் ஏளனமும் செய்வர்... ஜீன்ஸ் அணிந்த சமூகம் ... பல்சர் பைக்கில் சில மாணவிகள் சகஜமாக இன்னொரு மாணவன் பின் அமர்ந்து போகும் ஆச்சரியம் ....கல்ச்சர் ஷாக் எனப்படும் புதுகலாச்சார திகிலில் செட்டிலாகவே ஒரு வருசம் ஆகும் .... அப்புறம் ஆங்கிலவழிப் பாடம் புரியணும் ... இவ்வளவு நெருப்பாறுகளைத் தாண்டி அப்புறம் பொறியியல் கான்செப்டுகள் புரியணும் ....அப்புறம் அசைமென்டு, இன்டேர்னல், செமெஸ்டர், இன்டஸ்டிரி விசிட்டுன்னு குத்து மேல குத்து விழும் ... அவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் .....பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் இத்தகைய மாணவர்களை அன்புடன் ஆதரித்து, அரவணைத்து, வழி காட்டிச் செல்லும் ஆசிரியர்கள் கிடையாது, கவுன்சலர்கள் கிடையாது, அரசு திட்டம் கிடையாது .... தமிழ் தமிழர் என்று கூவுபவர்களும் இதற்கு எதுவும் செய்வதில்லை .... கிராமத்தில் இருக்கும் அப்பாவி பெற்றோர்கள், " நல்லா படிக்கறவ தாயி நீ.. லோன் கட்டி படிக்க வெக்கறோம் ... கஷ்டப்பட்டு படிச்சிரு தாயின்னு போன்ல அழுவாங்க !!... பெருமைக்காக பொறியியல் படிக்க வைக்கும் பெற்றோர்கள், படிக்கலீனா அவ்ளோதான்னு போன்லயே மெரட்டுவாங்க ...இதைத் தாண்டி சமூக ஏற்றதாழ்வுகள், சில நிகழ்வுகளில் எதிர்பாலார் இனக்கவர்ச்சி - சினிமா தாக்கங்கள், பிற தற்கொலைச் செய்திகள் தரும் எதிர்மறை எண்ணங்கள்...கொஞ்சம் இயல்பிலேயே தைரியம் உள்ள மாணவர்கள் அப்பிடி இப்பிடி போராடி கடந்து விடுவார்கள் .... கண்ணாடி நெஞ்சங்கள் பாவம் நொறுங்கி விடுகின்றனர் :( .....பத்திரிகைகளும், டீவீக்களும் நாலு பத்தி நாலு நாள் செய்தி, நாலு டாக் ஷோ , நியூஸ்ரூம் டிஸ்கசன்னு கல்லா கட்டி அடுத்த பரபரப்பு செய்திகளுக்கு போயிடும் ... அடுத்த தற்கொலையின் போதுதான் திருப்பி வரும் ... பாவம் :("

  ReplyDelete
 26. சூழ்நிலை கைதிகளாக வளரும் இந்த சமுதாயம் மாறி, நான் இதில் சிறந்தவன் அல்லது சிறந்தவள் என்ற மனோபாவம் வளர வேண்டும். அதற்கேற்ப கல்வி முறை மாற வேண்டும். அந்த முறையில் கல்வி கற்றவர் அதை உடைத்து எறிய வேண்டும். நான் எந்த காலத்துல இன்ஜினியரிங் படிச்சேன், இல்ல எந்த பெரிய கம்பெனி என்னை வேலைக்கு எடுத்துச்சு. நான் ஒரு "எஞ்சினீர்" ஆகல!. ஒரு specialist ஆக மாறுங்கள். உழைப்பு தேவை , மிக அதிக உழைப்பு. அது உங்களால் முடியும் என்றால், வழி நடத்த காத்து இருக்கிறேன்.

  ReplyDelete