The Hindu: The literary world of Swadesamitran, Deepam
கலைஞன் பதிப்பகம் சிற்றிதழ் தொகுப்புகளை வெளியிடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சுதேசமித்திரன், தீபம் இதழ்களின் தொகுப்புகள் வெளியானதையொட்டி தி ஹிந்து இரண்டாம் பக்கத்தில் வந்திருக்கும் செய்தியே மேலே உள்ளது.
ஹிந்து கூட தமிழ் இலக்கியம் பக்கம் எட்டிப்பார்க்கிறது, படம் போடுகிறது என்பது சந்தோஷமான விஷயம்!
இதுவரையில் கணையாழி, சரசுவதி, சுபமங்களா போன்ற இதழ்களுக்கும் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்னமும் பலவற்றுக்கும் தொகுப்புகள் உண்டு.
தீபம் இதழைத் தொகுத்தவர் வே.சபாநாயகம்.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
Badri,
ReplyDeleteMorning i was thinking to write about it. But you made it. It should be a good start for Hindu
Badri, I wrote this last year.
ReplyDeleteதிருவாளர் தமிழ்ப் பதிப்பாளர்
முன்னைக்கிப்போது தமிழ்ப் பதிப்பாளர்கள் கொஞ்சம் பூசினது மாதிரிக் கூடுதல் செழுமையோடு இருப்பதாகக் கேள்வி. மத்தளராயனின் பதிப்பாளர், பதிப்பாசிரியர் ஆகியோர் ஏற்கனவே ரெட்டைநாடி சரீரம் கொண்டவர்கள் ஆனதால் இந்த வட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
தலையணை கனத்துக்கு நாவல்களை மட்டுமில்லை, தொகுப்புகளையும் வாங்க உள்நாட்டில் ஒரு பெரிய வாசகர் கூட்டமும், கல்லூரி, பல்கலை நூல்நிலையங்களும் புலம் பெயர்ந்த இளைஞர்களும் தயாராக இருப்பதால், பதிப்பாளர்கள் மேட் ·பினிஷ் அட்டை, இறக்குமதி காகிதம் போன்றவற்றிலும், கட்டுமானத்திலும், போனால் போகிறதென்று விஷய கனத்திலும் மும்முரமாக இறங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். அப்படியே எழுதுகிறவர்களையும் கவனித்துக் கொண்டால் - வந்துட்டான்'யா ·பேவரைட் சப்ஜெக்டுக்கு.
விஷயம் ஒன்றும் பிரமாதம் இல்லை. அதாவது புத்தகம் போடுகிறவர்களுக்கு. பழைய இலக்கியப் பத்திரிகைகளில் (சரிப்பா சரி, இலக்கியம் பற்றிப் பழைய பத்திரிகைகளில்) வந்ததை எல்லாம் சிரத்தையாகக் கவிதை, குறுநாவல், சிறுகதை, கட்டுரை, பேட்டி என்று வகை பிரித்து அட்டவணை இட்டுத் தொகுப்பாகப் போட்டு முன்னூறும் நானூறும் விலைவைத்து விற்பதெல்லாம் சரியோ சரிதான். அப்படி வெளியிடும்போது எழுதியவர் இருக்காரா, சிவலோக பதவி அடைந்தாரா என்று விசாரித்து அறிந்து, அவர் இன்னும் ஜீவித்திருக்கும் பட்சத்தில் ஒரு போஸ்ட் கார்டாவது போட்டுத் தகவல் தெரிவித்து, புத்தகம் வெளிவந்தபிறகு அன்னாருக்கு ஒரு காப்பி பதிவுத் தபாலிலோ, சாதா அஞ்சலிலோ ஸ்டாம்ப் ஒட்டியோ ஒட்டாமலோ அனுப்பினாலே போதும். ஏமாளித் தமிழ் எழுத்தாளன் சிக்கிம் பம்பர் லாட்டரியில் ஒன்றுக்குப் பக்கம் ஏகப்பட்ட சை·பர் போட்ட தொகை கிடைத்தது போல மகிழ்ந்து போவான். இந்த இலக்கியத் தேங்காய்மூடிக் கச்சேரி நடக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
உலகச் சிறுகதைகள் என்று தொகுதி போட்டு அதில் நண்பர் பா.ராகவனின் கதையைச் சேர்த்து, புத்தகம் முழுக்க விற்றுப் போனதற்கு அப்புறம் தான் மூன்றாம், முப்பதாம், முன்னூறாம் மனிதர் மூலம் தனக்கு விஷயம் தெரிய வந்ததாகப் பா.ரா சொன்னார். சாரி சார் என்று வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு பதிப்பாளர் தன் கார் பக்கம் நடக்க இவர் பான்பராக்கை மென்றபடி வெறுங்கையோடு மோட்டார்சைக்கிளை உதைத்திருக்கிறார் - உதைக்க வேறே என்ன இருக்கு?
மத்தளராயனுக்கும் இந்த அனுபவம் உண்டு.
இரண்டு வருடத்துக்கு முன்னால் சுபமங்களா தொகுப்பைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, என்னடா, நாம எழுதின மாதிரி இருக்கே என்று பார்த்தால் அதேதான். கதை மற்றும் கவிதை. போனவாரம் சென்னைக்குப் போனபோது புக்லேண்டில் கணையாழி புதுத் தொகுப்பைப் புரட்டினால் குறுநாவல், சிறுகதை - அட இதுவுமதே ரகம்.
சம்பந்தப்பட்ட பதிப்பகமும் மாம்பலத்திலேயே இருப்பதால் சனிக்கிழமை மத்தியானம் உச்சிவெய்யில் நேரத்தில் அங்கே அழையா விருந்தாளியாக நுழைய, மிரண்டு போன விற்பனையாளர் பெண்மணி 'ஓனர் மண்டேதான் சார் வருவார். அவர் கிட்டே பேசிக்குங்க ப்ளீஸ்' என்று கெஞ்ச, வெற்றிகரமான வாபஸ்.
திங்கள்கிழமை அந்தப் பெண்ணைக் காணோம். உள்ளே சரித்திர நாவல் குவியல்களுக்கு இடையே இருந்து பெரிய பழுவேட்டரையருக்குப் பேண்ட் மாட்டிய மாதிரி வந்தவர் என்ன விஷயம் என்று விசாரிக்க, அடியைப் பிடிப்பா ஆழ்வார்க்கடியா என்று ஆரம்பிக்க, பழுவேட்டரையர் பாதியிலேயே நிறுத்தி ஒரு எம்பு எம்பி மேல் அலமாரியிலிருந்து கணையாழித் தொகுதியை எடுத்துக் கவரில் போட்டுப் பவ்யமாக நீட்டினார்.
வாங்கிக் கொண்டு நன்றி சொன்னபடி மத்தளராயன் விசுமத்தனமாகக் கேட்டது - 'அது சரி, இப்படி சட்டமா வந்து நின்னு கேட்டா, உடனே கொடுத்திடுவீங்களா? இதை நான் தான் எழுதினதுன்னு எப்படித் தெரியும்? நாளைக்கு ஒருத்தர், நாளை மறுநாள் ஒருத்தர் இதை எழுதினது நான்தான்னு வந்து நின்னா அவங்களுக்கும் கிடைக்குமா?'.
ஒரு நம்பிக்கைதான் சார். எழுத்தாளர்களோட எல்லாம் மோதலே வச்சுக்கறதில்லே.
பரவாயில்லே, மோதுங்க சார். கலகம் பிறந்தால் நியாயம் வருமோ என்னமோ ராயல்டியாவது மணியார்டர்லே வரும்.
//வாங்கிக் கொண்டு நன்றி சொன்னபடி மத்தளராயன் விசுமத்தனமாகக் கேட்டது - 'அது சரி, இப்படி சட்டமா வந்து நின்னு கேட்டா, உடனே கொடுத்திடுவீங்களா? இதை நான் தான் எழுதினதுன்னு எப்படித் தெரியும்?//
ReplyDeleteசரி அது நிஜமாலுமே நீங்க எழுதினதுதானே? ;-)