Tuesday, July 26, 2005

தமிழ் அணங்கு ரஜினிகாந்த்

நம்ம நண்பர் ரஜினி ராம்கி, சந்திரமுகி பட 100வது நாளை முன்னிட்டு, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு "எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே... உன் சீரிளமை திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!" என்று ஒரேயடியாகப் புகழ, அவரது பதிவில் அடிதடி நடக்கிறது. மவனே, தமிழ்த் தாயை வாழ்த்தும் பாட்டால் ஒரு கன்னடனைப் போயா என்பது முதல் பல கோமாளித்தனமான சிரிப்பு சமாசாரங்கள் அங்கே நடந்தேற...

நாம் சும்மா இருக்கலாமா? சென்னையில் வலைப்பதிவு மீட் என்றாலே மீட் இல்லா தயிர்சாத வுட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் மட்டும்தானா என்று கலகவிரும்பி ரோசாவசந்த் தண்ணியடிக்கும் மீட் ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தார். நமக்குத்தான் பிராப்தி இல்லையே. இகாரஸ் பிரகாஷ், உருப்படாத நாராயணன், கார்டூனிஸ்ட் அருள் செல்வன், ரஜினி ராம்கி ஆகியோர் கலக்கிக்கொண்டிருக்க நான் சடாலென்று உள்ளே புகுந்து ஒரு கிளாஸ் ஆரஞ்ச் ஜூஸை ஒரே கல்ப்பில் (எதுவும் கலக்காமல் ராவாக) அடித்து, சுதி ஏற்றிக்கொள்ள கொஞ்சம் வறுத்த நிலக்கடலை, கார கொண்டக்கடலை சுண்டல் என்று மஜாவாக முழுங்க, கிக் ரொம்ப ஏறியதால்...

அதெப்படி சூப்பர் ஸ்டாரை "அணங்கு" என்று சொல்லலாம் என்று ராம்கியை சண்டைக்கு இழுத்தேன்.

அணங்கு என்பது கொஞ்சம் டேஞ்சரான சமாசாரம். சும்மா ஒரு பெண்ணின் பருவத்தை வைத்து கொடுக்கப்படும் பெயர் என்று பிரகாஷ் நினைக்கிறாப்போல விஷயம் இல்ல.

ஆய், ஊய், அணங்கு பத்தி ஜார்ஜ் ஹார்ட் (நம்மூர்ல எதாவது பெரிய விஷயம் பத்தி சொல்லனும்னா முன்னெல்லாம் ஜார்ஜ் ஹார்ட், காமில் ஸ்வெலபில் அப்பிடின்னு ரெண்டு பேரையாவது எடுத்து வுட்டாத்தான் வேலை செய்யும். வேணுமுன்னா ஏ.கே.47 ராமானுஜத்தையும் அப்பப்ப கூப்டலாம்) என்ன சொல்லிக்கிராரு தெரியுமா என்று ஃபிலிம் காட்ட நினைத்து, பக்கத்தில் அருள் செல்வன் இருப்பதைப் பார்த்து தடாலென பின்வாங்கினேன்.

நாம அருள் செல்வன் எதைப் படிச்சு வச்சிருக்காருன்னு தெரியாம ஜார்ஜ் ஹார்ட் அத்தைச் சொன்னாரு, இத்தைச் சொன்னாருன்னு சொல்லப்போக, வண்டவாளம் வெளில தெரிஞ்சுட்டா என்னாவறதுன்னு, அதெல்லாம் இப்ப வேண்டாம், ரோசாவசந்த் இளையராஜாவோட திறமையைப் பத்தி பேசிக்கிட்டிருக்கறதத் தொடரட்டும்னு, சும்மா ஒக்காந்துட்டேன்.

அப்புறம் பிரகாஷும், ரோசாவசந்தும் இளையராஜாவோட சினிமாப் பாட்டுங்களை பிச்சு எடுத்துகிட்டிருந்தாங்க. கீழ லேடஸ்ட் தீம்தரிகிட இதழ். அதுல நிறைய பியர் சிந்தி இருந்துச்சு! நடுநடுவுல அருள் செல்வன் அமைதியா ஆழமா ஏதோ சொல்லிகிட்டிருந்தாரு. நாராயணன் அமைதியா ரோசாவசந்த் தட்டுல இருக்கற மீன ஒரு கை பாத்துகிட்டிருந்தாரு. ரஜினி ராம்கி தன்னோட சீட்டை எனக்குக் கொடுத்துட்டு கொஞ்சம் குள்ளமான சேர்ல உட்கார்ந்துகிட்டு பேச்சை ரஜினி படம் பாக்கற ஆர்வத்தோட கவனிச்சிகிட்டிருந்தாரு.

திடீர்னு, "பிரேம்-ரமேஷ் இளையராஜாவப் பத்தி என்னதான் சொல்லவரார்"னு பிரகாஷ் கேட்க, ரோசாவசந்த் "இப்படி 'என்னதான் சொல்ல வரார்னு' சாராம்சத்தை கேட்டு பிரேம்-ரமேஷ் இருவரையும் கேவலப்படுத்தாதீங்க. Essense என்னன்னு கேக்கக்கூடாது"ன்னு கண்டிச்சார். பின் நவீனத்துவத்தின் முக்கியமான பாடத்தை பிரகாஷ் அப்பத்தான் கத்துகிட்டார். அங்கேர்ந்து அ.மார்க்ஸ் (கார்ல் மார்க்ஸ் இல்லை), குணசேகரன், இளையராஜா, தேவா, திருவாசகம் ன்னு மிகத் தீவிரமா பேசப்பட்ட விஷயங்களை நான் அரை மணி நேரம் கேட்டுட்டு, "நாளைக்கு ஈகோ-ட்ரிப் ப்ளாக்ல ஜார்ஜ் ஹார்ட் அணங்கு பத்தி என்ன சொன்னார்னு சொல்றேன்"னு இடத்தைக் காலி பண்ணிட்டு வந்துட்டேன்.

அதனால் நண்பர்களே... George Hart சொல்வது என்னவென்றால், "Any woman who had come of age and was sexually attractive was thought to be filled with aNangu. This sacred power was thought to reside in her breasts and, to a lesser extent, in her loins." - The Poems of Ancient Tamil, University of California Press, 1975, (Chapter 5, The Role of Sacred Power in Ancient Tamil Culture).

21 comments:

 1. சென்னையில் இல்லாததால் எதையெல்லாம் இழக்கவேண்டியிருக்கு! ஏதோ, நல்லா இருந்தா சரிதான்.

  படங்கள் இருந்தால் upload பண்ணுங்க. நான் ரோஸாவசந்தைப் பார்க்கணும்!

  ஹ்ம்ம்...

  ReplyDelete
 2. ம்ம்.. நல்லா இருங்கைய்யா!! ;-(

  ReplyDelete
 3. உருப்படாத நாராயணன்,
  கார்டூனிஸ்ட் அருள் செல்வன்,
  ரஜினி ராம்கி

  உருப்படாத கார்டூனிஸ்ட் ரஜினி?

  ReplyDelete
 4. ராம்கியுமா. அடுத்த பார்ட்டிக்கு நம்பளையும் கூப்புடுங்கப்பா?

  ReplyDelete
 5. //கேட்டுட்டு, "நாளைக்கு ஈகோ-ட்ரிப் ப்ளாக்ல ஜார்ஜ் ஹார்ட் அணங்கு பத்தி என்ன சொன்னார்னு சொல்றேன்"னு//

  ஆஹா... thoughtsintamil.blogspot.com வயசுக்கு வந்துடுச்சு...

  ReplyDelete
 6. கீழ லேடஸ்ட் தீம்தரிகிட இதழ். அதுல நிறைய பியர் சிந்தி இருந்துச்சு!
  :)

  ReplyDelete
 7. ரஜினிகாந்த் என்றாலே இந்தியில் நல்ல பெண்மணிகளுக்கு தலைவன் என்றுதான் அர்த்தம். பத்ரியின் விளக்கம் பெண்மையை சிறுமைப்படுத்துகிறது. ஆணை பெண்ணோடு ஒப்பிடுவதில் என்ன கேவலம் இருக்கிறது? இணையத்தில் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா இல்லையா?

  ReplyDelete
 8. அனானிமஸ்,

  //பத்ரியின் விளக்கம் பெண்மையை சிறுமைப்படுத்துகிறது//

  எனக்குத் தெரிஞ்சி அவர் ஜார்ஜ் ஹார்ட் சொன்னதை இங்கே சொல்லியிருக்கிறார்.

  கொஞ்சம் விரிவா எந்த வரிகளில் அவர் பெண்மையை சிறுமைப்படுத்துகிற மாதிரி விளக்குகிறார்னு சொல்ல முடியுமா?

  //ஆணை பெண்ணோடு ஒப்பிடுவதில் என்ன கேவலம் இருக்கிறது?//

  யாருங்க கேவலம் இருக்குன்னு சொன்னது? நீங்க சொல்றீங்களா?

  ReplyDelete
 9. //ஆஹா... thoughtsintamil.blogspot.com வயசுக்கு வந்துடுச்சு...//

  :-))))))

  //(நம்மூர்ல எதாவது பெரிய விஷயம் பத்தி சொல்லனும்னா முன்னெல்லாம் ஜார்ஜ் ஹார்ட், காமில் ஸ்வெலபில் அப்பிடின்னு ரெண்டு பேரையாவது எடுத்து வுட்டாத்தான் வேலை செய்யும். வேணுமுன்னா ஏ.கே.47 ராமானுஜத்தையும் அப்பப்ப கூப்டலாம்)//

  இது எல்லாம் பழசு பத்ரி, புதுசா ஒரு நாலு பேரு சொல்லுங்க. நானும் என் பங்குக்கு என் ஈகோ டிரிப்பை, சூப்பர் ஈகோ டிரிப்பாக்கிக்கறேன். [ஜோசப் கான்ஸ்டாண்டைன் பெஸ்கி [வீரமா முனிவர் இயற்பெயர் சரியா, ஆறாப்புல படிச்சது]கால்டுவெல் இவங்கெல்லாம் காணோம் ;)]

  ReplyDelete
 10. // கீழ லேடஸ்ட் தீம்தரிகிட இதழ். அதுல நிறைய பியர் சிந்தி இருந்துச்சு!
  :)//

  அது தான் நீட்சியலிசம் ;-)))

  ReplyDelete
 11. ஜப்பான் இறக்குமதி, குட்டி பூர்ஷ்வா அவர்களுடன் தொலைபேசியில் அளவளாவ முடிந்தது !!!!
  எ.அ. பாலா

  ReplyDelete
 12. ஆரஞ்சு ஜூஸு சுதி இறங்குறதுக்குள்ள எழுதுன பதிவு மாதிரி இருக்கு. என்சாய் பண்ணீர்களா? நல்லது.

  ReplyDelete
 13. ரஜினி - சப்தமா - சகாப்தமா - புத்தகம் எத்தனை காப்பிங்க வித்துச்சு ? இல்ல அந்த சோகத்தக் கொண்டாடத்தான் எல்லாரும் மீட் பண்ணினீங்களா ?

  ReplyDelete
 14. அனானிமஸ் அண்ணா: அதுல என்ன சோகம் இருக்குது? அதான் மொத ஆயிரம் வித்துப்போட்டு அடுத்த ஆயிரத்த எப்ப வேணா தாண்டிடும் போல இருக்கே? அப்புறம் என்ன?

  அது ரெண்டாயிரம் தாண்டினதும் ஒரு பார்ட்டி கொடுத்துடுவோம். அட்ரஸ் சொன்னா இன்விடேஷன் அனுப்பிடுவோம்ல?

  ReplyDelete
 15. //கீழ லேடஸ்ட் தீம்தரிகிட இதழ். அதுல நிறைய பியர் சிந்தி இருந்துச்சு//

  மீடியாக்களின் புனிதப்பசு இளையராஜா என்ற கட்டுரை வந்திருந்த தீம்தரிகிடவைக் கீழே போட்டு பீர் ஊற்றிவிட்டு இளையராஜாவின் மகத்துவம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள்..அப்படித்தானே.
  திண்ணியம் சம்பவத்திற்குத் திருவாய் மலர்ந்து ஒரு வாசகமும் உதிர்க்காத இளையராஜா என்று ஞாநி எழுதியிருந்தாரே அந்த தீம்தரிகிடவைக் கீழே போட்டு பீர் ஊற்றி.....

  ஞாநிக்கு அர்ச்சனை ஏதும் இல்லையா?

  ReplyDelete
 16. ஓஹோ அதைக் கொண்டாடத்தான் கூட்டமா. தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 17. Congrats Ramki, keep it up

  - Ungal Nanban
  Rajini Annamalai, Salem

  ReplyDelete
 18. :-)))))))

  அடிச்ச ஆரஞ்சு ஜூஸ் சுதி இன்னும் இறங்கலை போல. கலக்குங்க.

  சே, ரொம்ப மிஸ் பண்றோம். அங்கே இருந்திருந்தா உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸிலும் நாராயணனுக்கு மீனிலும் கம்பெனி கொடுத்திருக்கலாம்.

  ReplyDelete
 19. //அது ரெண்டாயிரம் தாண்டினதும் ஒரு பார்ட்டி கொடுத்துடுவோம்

  அவ்வளவுதானா ?
  படிக்க தெரிந்த ரசிக கண்மனிகள் அவ்வளவுதானா ?
  அதுக்கு தான் புத்தகமா போடாம படமாவே எடுத்து இருந்தால் போய் விஸிலாவது அடித்து விட்டு வந்து இருக்லாம்.

  ReplyDelete
 20. ராம்கி அணங்கு
  ரஜினி காந்த பேரிளம் பெண்
  இது சரியான்னு சொல்லுங்க புரொபசர் பத்ரி

  ReplyDelete
 21. E.V. Ramaswamy, who is worshipped as demigod by tamils, is a kannada guy.

  ReplyDelete