Tuesday, July 19, 2005

சேரன் எக்ஸ்பிரஸ் தீவிபத்து

சென்னை -> கோவை சேரன் எக்ஸ்பிரஸில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் கருகிச் செத்துள்ளார். அவர், ஓடும் ரயிலில் கழிப்பறையில் தன்னைக் கொளுத்தித் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று சந்தேகிக்கிறார்களாம். தொடர்ந்து ரயில் கேரேஜ் பற்றி எரிந்துள்ளது, ஆனால் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தப்பித்துவிட்டனர்.

இரண்டு வாரங்கள் கழித்து திருப்பூர் செல்வதற்காக (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது விழாவுக்காக) நேற்றுத்தான் சேரன் எக்ஸ்பிரஸில் பதிவு செய்துள்ளேன். அய்யா! தற்கொலை செய்ய விரும்புபவர்கள் ஓடும் ரயிலை தயவுசெய்து விட்டுவிடுங்கள். உங்கள் வீடாகப் பார்த்து செய்துகொள்ளுங்கள்! பாவம் பொதுமக்கள்!

1 comment:

  1. தற்கொலையா.. இல்லை லண்டன் ரயிலில் சென்றவர்களின் நண்பரா?

    தற்கொலை என்றால் , இது தான் 75 வருடங்களில் கொளுத்திக் கொண்ட முதல் தற்கொலை.. உங்கள் ரயிலுக்கு ஆபத்தில்லை என்றே தோன்றுகிறது.

    இல்லை என்றால் எனக்குத் தெரியாது. செய்தித்தாள்களில் ஏதும் மிரட்டல்கள் உள்ளனவா என்று பார்த்து விட்டு ரயில் ஏறவும்..

    அன்புடன் விச்சு

    ReplyDelete