Friday, July 22, 2005

கார்ல் மார்க்ஸ்

'தி ஹிந்து'வில் இன்றைய கருத்துப் பத்தி ஒன்றில் (கார்டியனிலிருந்து கடன் வாங்கியது) ஃபிரான்சிஸ் வீன் என்பவர் 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.

சுவாரசியமான கட்டுரை. நம் உள்ளூர் கம்யூனிஸ்டுகளின் தொந்தரவு இல்லாமல் மார்க்ஸ் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.

ஃபிரான்சிஸ் வீன், கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதியுள்ளார். [அமேசான் | ஃபாப்மால்]

5 comments:

  1. பத்ரி,

    இதைப் படித்தேன்.

    இதற்குக் கீழே இருந்த இந்தக் கட்டுரையும் பிடித்திருந்தது. இதை இன்று வலைப் பதிவில் பகிர வேண்டுமென்றிருந்தேன்.

    ReplyDelete
  2. சுட்டிக்கு நன்றி. கட்டுரையை இன்னும் படிக்கவில்லை, போகிறேன்(இன்று அல்லது நாளை).

    // 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.//

    21ஆம் நூற்றாண்டில் வாழாமல் 21 நூற்றாண்டின் சிந்தனாவாதியாக இருக்க வாய்பில்லை.

    மார்கஸிற்கும் அவர் சிந்தனைகளும் அப்படியே நேரடியான முக்கியத்துவம் இந்த நூற்றாண்டில் இருக்க முடியாது. ஆனால் இந்த நூற்றாண்டில் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்யப்பட போகிறவராகவும், மறு கண்டுபிடிப்புக்கு உள்ளாக போகிறவராகவும், மார்க்ஸும் அவர் எழுதுக்களுமே மிக முக்கியமாக இருக்க போகிறது. முதளாளித்துவத்தினுள்(அதன் உள்முரண்பாட்டின் விளைவாய்) மார்க்ஸ் தீர்க்கதரிசித்த உள்வெடிப்பு உண்டாகாமல் தவறிவிட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அது வேறு வடிவத்தில் வெடிக்கத்தான் போகிறது. மேலும் புதிய சந்தை விஸ்தரிப்புகள் முடிவுக்கு வரும் போதும், அதன் விளைவாய் சுரண்டல் என்பது (நமது அரசர்கள், ஜமீந்தார்கள் காலத்தை விடவும்) கட்டுபடுத்த வியலாத ஒரு bruttal இயல்பை அடையும் போதும் அதன் எதிர்வினையாய் பலவை வெடிக்கும் போதும் எல்லோவற்றையும் புரிந்துகொள்ள பேராசான் மார்கஸை விட வேறு துணை இருக்க முடியாது.

    ReplyDelete
  3. பத்ரி, நானும் மார்க்ஸை ரொம்பப் படித்ததில்லை, படிக்க உத்தேசம் மற்றும் ஆசைதான். 'மார்க்ஸிசம் என்பது மனித நேயத்தையும் அன்பையும் போதிக்கிறது' போன்ற பிரச்சார நெடி தூக்கும் வாக்கியங்கள் இல்லாத அணுகக் கூடிய, விமர்சனக் கருத்துக்களையும் கொண்ட, நடுநிலைமையான கட்டுரையோ, புத்தகமோ இருந்து நீங்கள் கண்டுபிடித்தால் நன்றிக்குரியவராவீர்.

    ReplyDelete
  4. Article was excellant. Thanks Badri.

    ReplyDelete
  5. // 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.//

    பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர், ஏழை மேலும் ஏழை ஆகின்றனர் என்ற குரல் தற்போது இனம்,மதம்,மொழி, நாடு வித்தியாசமில்லாமல் சத்தமின்றி எழுந்து கொண்டிருக்கின்றது சொந்த அனுபவித்திலேயே இந்த குரல்களை கேட்டுக்கொண்டிருகின்றேன், எமக்கும் 21ம் நூற்றாண்டில் மார்க்ஸ் சித்தாந்தம் மீண்டும் ஒரு எழுச்சியை உருவாக்குமென்ற நம்பிக்கையுள்ளது, ஆனால் அதையெல்லாம் மிக விரைவில் எதிர்பார்க்க முடியாது அனேகமாக இந்த நூற்றாண்டின் பாதியில் மீண்டும் மார்க்ஸ் சித்தாந்தம் வீறு கொண்டு எழும் என நம்புகின்றேன்

    ReplyDelete