மார்க்கெட்டிங் மாயாஜாலம்
மார்க்கெட்டிங் என்றால் என்ன? பலரும் விற்பனையை (sales) மார்க்கெட்டிங்குடன் குழப்பிக் கொள்கிறார்கள். விற்பனை ஊழியர்களை "மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ்" என்று அறிமுகம் செய்வார்கள். அதேபோல வேறு சிலர் மார்க்கெட்டிங் செய்வது என்றால் விளம்பரம் (அட்வெர்டைசிங்) செய்வது என்று நினைத்துக்கொள்வார்கள்.
தினம் தினமும் நாம் நுகர்வோராக வாங்கும் பொருள்களான சோப்பு, சீப்பு; பெறும் சேவைகளான முடிவெட்டிக்கொள்ளுதல், டை அடித்துக் கொள்ளுதல்; பார்க்கும் கிரிக்கெட் மேட்சுகள்; அதில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்; புதுவருடப் பிறப்பு என்கிற தினம், கிறிஸ்துமஸ் தினம், காதலர் தினம் போன்றவை, தீபாவளி, பொங்கல், அக்ஷய திருதியை, "புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா", "ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்" போன்ற கோஷங்கள் என அனைத்துமே மார்க்கெட்டிங் செய்யப்படும் பல்வேறு விஷயங்கள்.
மார்க்க்கெட்டிங் எனப்படும் செயல்முறையில் பல்வேறு பகுதிகளை மிக எளிதான இந்திய, தமிழக உதாரணங்கள் மூலம் யாரும் புரிந்துகொள்ளக்கூடியவகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
புத்தகத்தை எழுதிய சதீஷ் என்னுடன் கிரிக்கின்ஃபோவில் வேலை செய்தவர். அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்துவிட்டு இந்தியாவில் சில விளம்பர ஏஜென்சிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்தவர். இப்பொழுது சில தனியார் மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துகிறார். சில நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராக உள்ளார். ஒரு முக்கியமான விஷயம் - இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்னர் தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதுவதைத் தவிர சதீஷ் தமிழில் வேறெதுவும் எழுதியதில்லை!
இந்தப் புத்தகத்தை எழுதும் திட்டம் சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பக அரங்கில் நடந்தேறியது. புத்தகம் முடிவடைய ஒரு வருடம் ஆகியுள்ளது.
எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் வறண்ட ஆங்கிலப் பாடப் புத்தகங்களைப் படிப்பதைவிட, இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் மார்க்கெட்டிங் பற்றி எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். எல்லா நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் - அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் சேர்ந்து எப்படி தம் வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது, சந்தோஷப்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தினை நாடலாம். சாதாரண நம்மைப்போன்றோர் நாம் தினம்தினமும் ஒரு பொருளையோ சேவையையோ பெறும்போது எப்படி அந்தந்த மார்க்கெட்டர்களால் வழிநடத்தப்படுகிறோம் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் புத்தகத்தை உருவாக்கியதில் எனக்கு நிறைய மனநிறைவு கிடைத்தது.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் வறண்ட ஆங்கிலப் பாடப் புத்தகங்களைப் படிப்பதைவிட, இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் மார்க்கெட்டிங் பற்றி எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்
ReplyDeletethis sort of hype does no good to you or to the book. For marketing students read more than one book not to speak of the case studies.
This book can at best be an introduction and cannot replace
text books.You should know that
exaggerated claims back fire.
மார்க்கெட்டிங்குக்கு மார்க்கெட்டிங்கா?
ReplyDeleteநல்லதொரு முயற்சி.
ReplyDeleteஎளிதாகத் தெரிந்துகொள்ளலாம்
ReplyDeleteTO anonymous
Please note the words எளிதாகத்
I don't think That is a hype. Text books are difficult and these books are easy to read
இந்தப் பதிவிற்குத் தொடர்பில்லாத மறுமொழிகள்:
ReplyDeleteபத்ரி,
1. நான் ஃபயர்பாக்ஸ் உலவியில் தங்களது பதிவை 'Live Bookmark' செய்துள்ளேன். 'ராமைய்யாவின் குடிசை' பதிவிற்குப் பிறகு தங்களது பதிவின் RSS XML file புதுப்பிக்கப் படவே இல்லை. தயவுசெய்து சரிபார்க்கவும்.
2. தங்களது சென்னைப் புத்தகக் காட்சி சம்பந்தமான வலைப்பதிவை,நேற்றுத் (ஜனவரி 10) தான் www.teakada.com மூலம் தான் தெரிந்து கொண்டேன். சென்னைப் புத்தகக் கண்காட்சி என்று கூகிளில் தேடிய போது இந்தப் புதிய வலைப்பதிவு பற்றி வரவே இல்லை. கூகிளில் தேடுபவர்கள் பெரும்பாலும் 'சென்னைப் புத்தகக் காட்சி' எனத் தேடவும் வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.
பத்ரி,
ReplyDeleteஎனது முந்தைய மறுமொழியில் "கூகிளில் தேடுபவர்கள் பெரும்பாலும் 'சென்னைப் புத்தகக் கண்காட்சி' எனத் தேடவும் வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்" என்று இருந்திருக்க வேண்டும்.
Badri,
ReplyDeleteThese is Mani, from Mumbai. After long time.
It is excellent starting. The best idea would be Bring out books in tamil in the following topics can create a great base for Management in Tamil.
a) Kotler in Tamil (These can be the first and foremost thing to do.. Most of the management students still magging up the same.. Anyway, without kotler management cannot be completed..)
b) After the basic studies, the idle thing to do is creating Case studies in Tamil. We have plenty.. Take up some examples.. and start explaning with management concepts.
The idle target for your books should be a) Vernacular medium student/office goers who aspire to get in to the management studies.. these can be steeping stone for them.
Most of the reading crowd in south is the same. Apart from few cities, still most of the student crowd is from Tamil medium. Same apply to office goers too...
Take serious of good books like a) 22 immutable law of marketing by al ries. b)Bottom of the pyramid by prahalad.. like these hot selling books can come with stripped version.. so that tamil crowd is touch base with modern management theory.. ( I understand going for legal translation may be lenghty process.. but it can concept in capsules sort of pyramid.. ) The combintation of management professor and little touchy writer can make these job.
I am sure you would be knowing Meenu. ( IIM Bangalore, working in infosys.. His blogs contains very good article on these front.. little cleaning would be sufficent for book.. http://tamilmarketing.blogspot.com/)
Good show, excepting similar stuff in future.
//I am sure you would be knowing Meenu. ( IIM Bangalore, working in infosys..) His blogs contains very good article on these front.. little cleaning would be sufficent for book.. http://tamilmarketing.blogspot.com///
ReplyDeleteHi Mani, I am the "Meenu" you are referring to. :-))
I am certainly NOT working in Infosys. Thanks for your comments about my blog.