புது தில்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கு உலகப் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு பிப்ரவரி 2-10 நடக்கிறது. இந்த ஆண்டு விருந்தினர் ரஷ்யா. ரஷ்யாவின் பதிப்பாளர்களுக்கு என்று சிறப்பாக சில இடங்களை ஒதுக்கியிருப்பர். ரஷ்ய கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் சில நடக்கும்.
இந்தக் கண்காட்சியை நடத்துவது மத்திய அரசு அமைப்பான நேஷனல் புக் டிரஸ்ட். நடைபெறும் இடம் பிரகதி மைதான்.
சில தமிழ் பதிப்பாளர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கண்காட்சி நடந்தபோது காலச்சுவடு + நான்கைந்து தமிழ் பதிப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இம்முறை - முதல்முறையாக - கிழக்கு பதிப்பகம் கலந்துகொள்ளும். மேலும் ஆங்கிலத்தின் Indian Writing பதிப்பும் கலந்துகொள்ளும்.
மிக அதிகமான அளவு புத்தக நிறுவனங்கள் கலந்துகொள்ளும் புத்தகக் கண்காட்சி இந்தியாவிலேயே இதுதான். ஆனால் விற்பனை மற்றும் மக்கள் பங்கேற்பு என்று பார்த்தால் மிகப் பெரியது என்பது கொல்கத்தா கண்காட்சிதான். சென்னை மூன்றாவது இடத்தில் (புது தில்லிக்கு அடுத்து) இருக்கும்.
தில்லி கண்காட்சி நடக்கும் அதே நேரத்திலேயே - ஜனவரி 30 முதல் பிப்ரவரி 10வரை கொல்கத்தாவில் கண்காட்சி நடக்கிறது.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
6 hours ago
No comments:
Post a Comment