Friday, January 04, 2008

வரம் புத்தகங்கள்

இதிகாச, புராணங்கள், தலவரலாறுகள் வரிசையில் வரம் வெளியீட்டிலிருந்து நான்கு புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் வெளியாகின்றன.

ராமாயணம், மகாபாரதம் - இரண்டுமே பலமுறை, பலரால் எளிமைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டவை. இவற்றை இன்றைய தமிழில், விறுவிறுப்பாக எழுதியுள்ளார் உமா சம்பத். குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ள இந்தப் புத்தகங்கள் 320 பக்கங்கள் + 16 பக்க கலர் படங்களுடன் கூடியவை. அதே வரிசையில் பாகவத புராணமும் - அதே பக்கங்கள், வண்ணப் படங்களுடன், உமா சம்பத் எழுத்திலேயே வெளியாகியுள்ளது. அனைத்தும் விலை ரூ. 150/-

அதேபோல பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து இப்பொது அச்சில் இல்லாத வேங்கடநாத விஜயம் புத்தகமும் இப்போது கெட்டி அட்டையில் ரூ. 300 என்ற விலைக்கு வெளியாகிறது.




முந்தைய பதிவு: விடுதலைப் புலிகள்

1 comment:

  1. sir,
    your rss feed

    http://www.nhm.in/languagefeed/Tamil/atom.xml

    is accesible neither through bloglines nor google reader.

    please check.

    ReplyDelete