NHM Writer எழுதுகருவிக்கு அடுத்தபடியாக NHM Converter என்ற கருவியை வெளியிடுகிறோம்.
தமிழில் ஓர் எழுத்துக் குறியீட்டிலிருந்து மற்றொரு குறியீட்டுக்கு மாற்றிக்கொள்ள இந்தக் கருவி பயன்படும். டிஸ்கி, யூனிகோட், டாம், டாப், பாமினி போன்ற பலவகை குறியீடுகளிலிருந்து வேண்டிய பிற குறியீட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளும் இலவசமே. இது இப்போதைக்கு மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003, விஸ்டா ஆகிய இயக்குதளங்களில் மட்டுமே வேலை செய்கிறது.
மென்பொருளை இறக்கிக்கொள்ள
இந்த மென்பொருள் .NET framework மூலம் எழுதப்பட்டிருப்பதால், இறக்குவதற்கு மிகவும் சிறியதாக இருந்தாலும், உங்களது கணினியில் .NET framework இல்லையென்றால், அதனை மைக்ரோசாஃப்ட் தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளவேண்டும். மென்பொருளை நிறுவும்போது அதுவே தானாக இதைச் செய்துவிடும் - உங்களது அனுமதியைக் கேட்டபிறகு. ஆனால் ஒரு பிரச்னை - இந்த டவுன்லோட் சுமார் 23 எம்.பி ஆக இருக்கும். எனவே இதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
இதே மென்பொருளை சிடி வடிவிலும் கொடுக்கிறோம். அதில் உள்ளேயே .NET framework சேர்த்தே இருப்பதால் டவுன்லோட் எதுவும் தேவையில்லை.
இந்த மென்பொருளும் XML வழியாக எழுத்துக் குறியீடுகளை வைத்துக்கொண்டு வேலை செய்கிறது. எனவே புதிதாக ஓர் எழுத்துக் குறியீட்டைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றால், அதனை நீங்களாகவே செய்துகொள்ளலாம்.
-*-
NHM Writer-ல் சில டைப்ரைட்டர், பாமினி போன்ற உள்ளீட்டு முறைகளில் சில சிறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை சிலர் அஞ்சலில் குறிப்பிட்டுள்ளனர். அவற்றைச் சரி செய்யும் முயற்சியில் உள்ளோம். இந்த மென்பொருள்களுக்கென தனியாக ஃபாரம், வலைப்பதிவு ஆகியவற்றையும் ஆரம்பித்து என்னென்ன மாறுதல்கள் செய்கிறோம் என்ற தகவல்களையும் விரைவில் கொடுக்க உள்ளோம்.
அடுத்ததாக NHM Converter செய்யும் காரியங்களை இணையம் வழியாகவே பெற்றுக்கொள்ளுமாறு ஒரு தளம் வெளியாக உள்ளது. அப்போது, நீங்கள் எதையும் உங்களது கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இருக்காது. அந்தத் தளம் தயாரானதும் தகவல் தெரிவிக்கிறேன்.
இந்த மென்பொருளுக்கும் லினக்ஸ் திறந்த மூல வெர்ஷன் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய தகவலையும், வேலை முடிந்தவுடன் தெரிவிக்கிறேன்.
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
13 hours ago
Badri,
ReplyDeleteVanakkam. This will be useful
for me. Is there an online version
being planned?
Happy New year!
N. Ganesan
Badri,
ReplyDeleteThanks for this converter. Is there
an online version in the pipeline?
Happy New year!
N. Ganesan
நான் ஏற்கெனவே எழுதியதுபோல ஓர் ஆன்லைன் வடிவம் விரைவில் வெளியாகும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா,
ReplyDeleteபாமினி எழுத்துகளிலிருந்து வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு எவ்வாறு மாற்றுவது, மேலும் என்.எச்.எம். கன்வர்டர் எவ்வாறு உபயோகப்பது என்பதை படம் மூலமாக வெளியிட்டால் நல்லதாக இருக்கும். நன்றி அய்யா.
இஸ்மாயில் உசேன். மேலப்பாளையம்